SYED MOHAMED / 10:44 AM
20 ரக்கத்துக்களே!
மவ்லவி ஹாபிழ் M.அப்துல் காதிர் மஸ்லஹூ(சஹான்பூரி)
புனிதமிகு ரமழானை முன்னோக்கி கொண்டு இருக்கிறோம்.இந்த மாதச் சிறப்பான மாதம் இதில் தான் குர்ஆன் இறங்கியது ஆயிரம் மாதங்களை விட சிறப்பான லைலதுல்கத்ரு எனும் புனித இரவு இருக்கிறது. இந்த மாதம் ஒரு பயிற்சி மாதம். இந்த மாதத்தில் அமல் மாதங்களிலும் பிரதிபலிக்கும். இந்த மாதத்தை நாம் நல்ல முறையில் கழிக்க வேண்டும். ஒரு ரமழானி்ல் இருப்பவர் மறு ரமழானில் இருப்பது உறுதியில்லை. இந்த சூழலில் சிலர் தானும் குழம்பிப்போய் பிறரையும் இந்த ஆபத்தில் அதிகம் சிக்கியிருப்பவர்கள் இளைஞர்கள். எனவே உலமாக்களாகிய ஒவ்வொருவருக்கும் தராவீஹ் போன்ற இதர விஷயங்களை மக்களுக்கு மத்தியில் தெளிவுப்படுத்தி, குழப்பவாதிகளின் பிடியில் மாட்டியிருக்கும் மக்களை நேர்பாதையில் கொண்டு வருவதற்கு எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்வது மிக அவசியமாக இருக்கிறது. அந்த வகையில் தராவீஹ் விஷயத்தில் தெளிவான விளக்கத்தை வெளியில் கொண்டுவர ஹதீஸ்களை ஆராயும் போது பல்விளக்கங்கள் இறையருளால் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் விரும்புகிறவர்களையெல்லாம் நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழியை காட்டுவான் என்று குர்ஆன் கூறிகிறான்.28வ56 உலமாக்களாகிய நாம் சரியான வழியை ஹதீஸின் ஒளியில் காட்டுவோம் அறிவாளிகள் பிழைத்துக் கொள்வார்கள்.
தராவீஹ் துவக்கம்
நபிஸல் காலத்திலிருந்தே தராவீஹ் ஆரம்பமாகிவிட்டது. நபிஸல் அவர்கள் மூன்று நாள் ஜமாத்தோடுதொழுது வந்தார்கள். சமுதாயத்தின் ஆர்வத்தை பார்த்து இறைவன் கடமையாக்கி அது மக்களுக்கு சிரமமாகி விட்டால் என்ற பயத்தில் ஜமாத்தோடு தொழுவதை விட்டுவிட்டார்கள். சஹாபக்கள் தனியாக தராவீஹ் தொழுது வந்தார்கள். உமர்ரலி அவர்கள் காலத்தில் ஜமாத்தாக தொழுவது மீண்டும் ஆரம்பமானது. காரணம்,இந்த உம்மத்தின் மீது கடமையாகிவிடும் என்ற பயம் இப்போது இல்லை. அன்று முதல் இன்று வரை அல்ஹம்துலில்லாஹ் தராவீஹ் தொழுகை நபியின் சுன்னத் என்பதைப் போல் தராவீஹ் ஜமாஅத் தொழுகையும் நபியின் சுன்னத்தே, நபிஸல் அவர்களின் சுன்னத்தான தராவீஹை ஜமா அத்தாக தொழுவது அது ஒரு சில காரணத்திற்காக இடையில் நின்று போன போது உமர்ரலி அவர்கள் அந்த காரணம் இனி இல்லை-இருக்காது என்ற போது மீண்டும் அதை தொடர்ந்தார்களே தவிர புதிதாக தொடங்கவில்லை.
ரமழான் மாதத்தில் பகல் வணக்கமாக நோன்பு இருக்கிறது. ரமழானின் இரவு வணக்கங்கள் இருக்கிறது.
ரமழானில் மற்ற மாதங்களை விட அதிகமாக தொழுவது:
நபி முஹம்மது ஸல் அவர்கள் ரமழான் மாதத்தில் பிரத்தியேகமாக தொழுதுள்ளார்கள் என்பது நபிஸல் அவர்களின் சொல் செயல்களிலிருந்து தெரிய வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.
1.நபி ஸல் அவர்கள் இரவின் மத்திய பகுதியில் நின்று தொழுதார்கள். பல சஹாபாக்கள் நபிஸல் அவர்களுடன் தொழுதார்கள். இவ்வாறு தொடர்ந்து கடமையாக்கப்பட்டு விடுமோ என பயந்து நான்காவது நாள் நபிஸல் அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை.
அறிவிப்பாளர்:ஆயி்ஷாரலி
நூல்:புகாரி,முஸ்லிம்
2. நபி(ஸல்) அவர்கள் ரமழானில் இரவில் தொழும்படி ஆர்வமூட்டுவார்கள் என்று அபுஹூரைரா ரலி அவர்கள் கூறினார்கள்.
நூல் முஸ்லிம்1/259.
3. ரமழானில் கடைசி பத்து வந்து விட்டால் நபிஸல் அவர்கள் இரவில் நின்றுவணங்குவார்கள்.
அறிவிப்பாளர்:ஆயிஷா(ரலி)
நபிஸல் தராவீஹ் எத்தனை ரக்அத் தொழுதார்கள்?
நபிஸல் எத்தனை ரக்அத்தொழுதார்கள் என்று பார்க்கையில் 20,8 என்று இரண்டுவகையான ரிவாயத்துகள் வருகிறது.நபிஸல் எங்களுக்கு ஒர் இரவு8ரக்அத்தையும் வித்ரையும் தொழ வைத்தார்கள். இரண்டாம் நாளும் நாம்பள்ளியில் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்த்தோம், நபிஸல் வரவில்லை.
அறிவிப்பாளர்:ஜாபிருப்னுஅப்துல்லாஹ்ரலி
நூல்:ஸஹிஹ்இப்னுகுஸைமா
8ரக்அத்துடைய இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வரிசையில் ஈஸப்னு ஸாரியா என்பவர் இடம் பெறுகிறார். இவரை அதிகமான அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இவரின் ஹதீஸ் மறுக்கப்பட்ட வேண்டியவை என்கிறார்கள். குறை கூறியவர்களில் மாபெரும் அறிஞர்களான இமாம் நஸாயி,அபூதாவூது யஹ்யா இப்னு முயீன் போன்றவர்களும் உண்டு என்பது குறிப்படத்தக்கது.
8ரக்அத் என வரும் இந்த ரிவாயத்தில் நபிஸல் இந்த தொழுகை ஜமாஅத்திற்கு தொழுவரும் முன் தனியாக தொழதுவிட்டு வந்திருக்கலாம் என்ற கருத்திற்கும் வாய்ப்பு உள்ளது.(மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பிருந்தால் அதை ஆதாரமாகக் கொள்வது கூட்டாக என்பது பொதுச்சட்டம்)
20 ரக்அத் நபிஸல் தொழுததாக வரும் ஹதீஸ்:
நபிஸல் ரமழானில் 20 ரக்அத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்:இப்னுஅப்பாஸ்,
நூல்:பைஹகி,தப்ரானி
ஹதீஸ் இரண்டு விதமாக வருகிறது இரண்டு ஹதீஸூம் பலவீனமானதாகும். எனவே சஹாபாக்களின் அவை பார்க்க வேண்டும். சஹாபாக்களின் அமல் 8 ரக்அத் தொழுததாக இருந்தால் அந்த ஹதீஸ் வலுவடையும் இப்பொழுது சஹாபாக்களை நாம் பார்க்கும்போது அவர்கள் 20 ரக்அத் தொழுததாக இருந்ததால் பல சஹீஹான ஹதீஸ் மூலம் நாம் தெரியமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ் இது போக நபி(ஸல்) ரமழானில் அதிகம் அமல் செய்ய ஏவினார்கள். எனவே நபிஸல் அதிகமாகத்தான் தொழுது.
இருக்க வேண்டும். சொல் ஒன்று. செயல் பிரிதொன்று என்ற வழக்கம் நபிஸல் அவர்களிடம் கிடையாது. எதைச்சொல்வார்களோ அதைத்தான் செய்வார்கள். எதைச் செய்தார்களோ அதைத் தான் சொல்வார்கள்.”நீங்கள் செய்யாததை ஏன் நீங்கள் சொல்வார்கள்!” என்ற இறை வசனத்திற்கு நிச்சயமாக மாற்றமாக செயல்பட்டிருக்க மாட்டார்கள். எனவே ரமழானில் மற்றவர்களை அதிகமாக தொழும்படி ஆர்வமூட்டிவிட்டு தாங்கள் மட்டும் மற்ற மாதத்தை போல் 8+3=11 ரக்அத் தொழுதிருப்பார்களா? சிந்திக்க வேண்டமா?
குழப்பவாதிகள் ஆதாரம் பிடிப்பது சரியா? தவறா?
அபூஸல்மா பின் அப்துர்ரஹ்மான் ரலி கூறியதாவது நபிஸல் அவர்களின் தொழுகை ரமழானில் எவ்வாறு இருந்து என்று ஆயிஷாரலி அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர் ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்தைவிட அதிகமாக தொழ மாட்டார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே. பின்னர் மூன்று ர்கஅத் தொழுவார்கள் என்று கூறினார். மேலும் ஆயிஷாரலி கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதரே வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே என்று நான் கேட்டேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவே என் கண்கள் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை.
நூல்:புகாரி
மேற்குரிய இந்த ஹதீஸை குழப்பவாதிகள் எடுத்து கொண்டு தராவீஹ் 8ரக்அத்து தான் 20 ரக்அத் என்பது சரியல்ல என கூறினார்கள் மேலோட்டமாக இந்த ஹதீஸை பார்க்கும் போது நமக்கு உண்மை நிலை புரியாது. ஆழ்ந்து ஆய்வு செய்யும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது.
இங்கே இரண்டு விஷயத்தை கவனிப்பது அசியம் 1.இந்த ஹதீ்ஸ் தராவீஹ் சம்பந்தப்பட்டதா? 2.குழப்பவாதிகள் தங்களுக்கு ஆதரமாக காட்டும் இந்த ஹதீஸ்படி அமல் செய்கிறார்களா?
நம்பர் 1
ஆய்வு செய்யும் அறிஞர்களில் யாரும் இந்த ஹதீஸில் கூறப்படும் தொழுகை தராவீஹ் என கூறவில்லை. நான்கு இமாம்களில் யாரும் தராவீஹ்8ரக்அத் எனக் கூறவில்லை. இந்த ஹதீஸில் தராவீஹ் பற்றித்தான் 8ரக்அத் என வருகிறது. என்றால் நான்கு இமாம்களில் யாராவது ஒருவராவது தராவீஹ் 8ரக்அத்தான் என கூறிருப்பார்கள். மேலும்,
ஹதீஸ்கலை வல்லுனரில் ஒருவரான இமாம் திர்மிதி(ரஹ்) தன் கிதாபில் தராவீஹ் எத்தனை ரக்அத் என்பது பற்றி உள்ள அறிஞர்களின் சொல்லை எடுத்து கூறுகிறார்கள். அதில் 8 ரக்அத் என்ற சொல்லை அறிஞர்களில் யாரின் பக்கமும் இணைத்து கூறவில்லை. ஹதீஸ்கலை வல்லுனர்களுக்கு விளங்காத விளக்கம் இவர்களுக்கு மட்டும் எப்படி விளங்கியதோ!
நம்பர் 2
பெரும்பாலான ஹதீஸ்கலை வல்லுனர்கள் இமாம் முஸ்லிம் ரஹ் இமாம் திர்மிதி ரஹ் இமாம் அபூதாவூது ரஹ் இமாம் நஸயீ ரஹ் இமாம் மாலிக் ரஹ் இமாம் அப்துர்ரஜ்ஸாக் ரஹ் குஸைமா ரஹ் இமாம் தராமி ரஹ் இமாம் அபூநஸ்ர் மர்வஸி ரஹ் இது போன்றவர்கள் தங்கள் தங்களின் ஹதீ்ஸ்கிதாபில் இந்த ஹதீஸை கியாமுல்லைல் தஹஜ்ஜத் தொழுகை என்பதற்கு தனி தலைப்பு அமைத்தும் உள்ளார்கள் அந்த ஹதீஸ் இந்த தலைப்பி்ல் இடம் பெறவில்லை.இப்படி இவர்கள் அமைத்து இருப்பது மேற்கூறிய வல்லுனர்களிடம் ஹதீஸில் கூறப்பட்ட தொழுகை தஹஜ்ஜத்து தானே தவிர தராவீஹ் இல்லை என்பதற்கு வலுவான தெளிவான ஆதாரமாக இருக்கிறது. ஹதீஸ்கலை வல்லுனர்களான இமாம் புகாரி ரஹ் இமாம் முஹம்மதுரஹ் இந்த ஹதீஸை கியாமு ரமழான் என்ற தலைப்பிலும் கொண்டு வந்துள்ளார்கள், என்றாலும் ஹதீஸைக் கொண்டு நோக்கம் தராவீஹ்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் மேற்கூறப்பட்ட இரு இமாம்களில் யாரும் தராவீஹ் 8 ரக்அத் தான்என்று கூறியதாக எங்கும் இல்லை. கியாமு ரமழான் என்ற தலைப்பி்ல் கொண்டு வந்ததன் நோக்கம் தஹஜ்ஜத் ரமாழனிலும் தொழ வேண்டும் அது 8 தான் ரமழான் தஹஜ்ஜத் என்பதால் அதில்பகூடுதல் இல்லை என்பதாக இருக்கலாம்.
[5/17, 5:49 PM] Habibullah Siraji 2: குழப்பவாதிகள் அமல் செயல்வதில்லையே. . . . .
ஆயிஷாரலியின் இந்த ஹதீஸ்படி இமாம்களை பின்பற்றாதவர்கள் அமல் செய்கிறார்களோ என்பதைப் பார்ப்போம். அமல் செய்கிறோம் என்ற பெயரில் அதற்கு மாற்றம் செய்கிறார்கள் நியாயமான கண்கொண்டு பார்க்கும்போது இந்த உண்மை தெரியும்,
நம்பர்1: நபி (ஸல்) 4 ,4 ரக்அத்தாக தொழுததாக ஹதீஸில் வருகிறது. 2 ,2 ரக்அத்தாக தொழுததாக வரவில்லையே ஆனால் குழப்பவாதிகள் 2 ,2 ஆக தொழுகிறார்கள்
நம்பர்2:நபி(ஸல்) தனியாக தொழுதார்கள் நபிஸல் தொழுதாகத்தான் ஹதீஸில் வருகிறது. தொழுவைத்ததாக வரவில்லை. ஆனால் குழப்பவாதிகள் வருடா வருடா இந்த தொழுகையை ஜமத்தாக தொழுகிறார்கள்
நம்பர்3:நபி(ஸல்) வீட்டில் தொழுததாக வருகிறது. அதற்கு ஆதாரம் ஹதீஸிலேயே வருகிறது. ஆயிஷாரலி அறிவிக்கிறார்கள். நான் நபியிடம் வித்ரு தொழுமுன் தூங்குகிறீர்களே என்று கேட்டேன். ஒழுமுறியும் என்ற எண்ணத்தில் நபிஸல் கூறினார்கள், என் கண் தூங்கினாலும் உள்ளம் தூங்காது. இந்த நிகழ்ச்சியில் நபிஸல் வீட்டில் தானே தூங்குவார்கள். புகாரியில் ரிவாய்த் வருகிறது நபி(ஸல்) தஹஜ்ஜத்தை வீட்டிலேயே தொழுவார்கள். நபிஸல் வீட்டில் தொழுதார்கள். இது தான் நபி வழி குழப்பவாதிகள் பள்ளியில் தொழுகிறார்களே?
நம்பர்4:இந்த ஹதீஸில் நபிஸல் தூங்கி எழுந்து விட்டு வித்ரு தொழுததாக வருகிறது. ஆனால் இவர்கள் தராவீஹை தொடர்ந்து வித்ரு தொழுகிறார்களே………!
நம்பர்5:நபிஸல் வித்ரை தனியாக தொழுததாக வருகிறகது. ஆனால் இவர்கள் ஜமாத்தோடு தொழுகிறார்கள்.
தராவீஹ் VS தஹஜ்ஜத்
ஆயிஷாரலி ஹதீஸில் தராவீஹ் பற்றி வரவில்லை. தஹஜ்ஜத் பற்றிதான் வருகிறது. என்று கூறினால் தஹஜ்ஜத்தும் தராவீஹூம் ஒன்றும்தான் என குழப்பவாதிகள் கூறுவார்கள் இவர்களின் கூற்று உண்மை என்றால் நபிஸல் சஹாபாக்கள் பெரியவர்களான நல்லவர்கள் தராவீஹ்ஹுக்கு பின்பு தஹஜ்ஜத் தொழுததற்கு என்ன பதில் கூறுவார்கள்.
தராவீஹ் தஹஜ்ஜத் இவ்விரண்டும் ஒன்றல்ல. தனித் தனித் தொழுகையாகும். தராவீஹுடன் தஹஜ்ஜத்தையும் நபிஸல் தொழுதுள்ளார்கள். அனஸ் ரலி கூறுவதாவது, நபிஸல் ரமழானில் ஒரு நாள் தொழுது கொண்டிருந்தார்கள் நான் வந்து நபியோடு நின்று கொண்டேன். பின்பு இன்னொருவர் வந்தார், அவரும் நபியோடு சேர்ந்து நின்றார். இப்படிய ஒரு கூட்டம் ஆகிவிட்டது,பின்னால் ஒரு கூட்டம் நிற்பதை உணர்ந்த நபிஸல் தொழுகையை கருக்கமாக முடித்தார்கள். பின்பு தங்களின் அறைக்கு சென்று தொழுதார்கள். அது எங்களுடன் தொழாத தொழுகை. (நூல்:முஸ்லிம்)
அனஸ் ரலியின் ஹதீஸ் மூலம் தெளிவாகுவது.
பள்ளியில் சஹாபாக்களோடு தொழுத தொழுகை வேறு, வீட்டில் தொழுத தொழுகை வேறு பள்ளியில் தொழுதது தராவீஹ் வீட்டில் தொழுதது தஹஜ்ஜத்தாகும்.
நபியின் வழக்கம் தஹஜ்ஜத்தை வீட்டில் தொழுவதாக இருந்தது. என ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள் (நூல்:புகாரி)
தல்கி இப்னு அலி(ரலி)
தஹஜ்ஜத் தராவீஹ்
தொழுதார்கள்:
கைஸ் இப்னு தல்க்(ரலி) கூறுகிறார்கள் எனது தந்தை தல்கிப்னு அலிரலி ஒரு நாள் வீட்டிற்கு வந்தார்கள். மாலையில் எங்களோடு நோன்பு திறந்தார்கள். இரவில் எங்களோடு தொழ வைத்தார்கள்.வித்ரும் தொழவைத்தார்கள். பிறகுபள்ளிக்குசென்றார்கள்.தோழர்களுக்கு தொழவைத்தார்கள். ஒரு தோழரை வித்ருக்காக முன்நிறுத்தினார்கள் நான் நபி(ஸல்) இடம் கேட்டு இருக்கிறேன்.
ஒரே இரவில் 2 வித்ரு கூடாது என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். தல்க் இப்னு அலி முதலில் தொழுதது தராவீஹ் ஆகும்
பள்ளியில் வந்து 2-வது முறையாக தொழுதது தஹஜ்ஜத்தாகும்.
இமாம் புகாரி(ரஹ்) தராவீஹ் அதற்கு பின்பு தஹஜ்ஜத் தொழுதுள்ளார்கள்
இமாம் புகாரி ரஹ் ரமழான் பிறை பார்த்து விட்டால் அவர்களின் தோழர்கள் இமாம் புகாரி ரஹ்யிடம் ஒன்று கூடுவார்கள். தோழர்களுக்கு தொழ வைப்பார்கள். ஒவ்வொரு ரக்அத்திலும் 20 ஆயத்துகள் ஓதுவார்கள். இப்படியே குர்ஆன்முடிக்கும்வரைதொடரும்.இமாம்புகாரி(ரஹ்)சஹருடைய நேரத்தில் எழுந்து தொழுவார்கள். அதில்குர்ஆன் ஓதுவார்கள். மூன்றுநாளில்ஒருகுர்ஆன்முடிப்பார்கள்(ஹத்யுஸ்ஸாரி-முகத்திமா ஃபத்ஹுல்பாரீ)
தஹஜ்ஜத் தராவிஹ்
மத்தியிலுள்ள வித்தியாசம்
1.வ மினல் லைலி ஃபதஹஜ்ஜத் பிஹீ நாஃபிலதன்லக் தஹஜ்ஜத் குர்ஆன் மூலம் நிரூபணமானது. தராவீஹ் ஹதீஸ் மூலம் நிரூபணமானது. ஹதீஸில் வருகிறது நபி ஸல் ரமழானைப் பற்றி கூறினார்கள். அப்போது சொன்னார்கள். ரமழான் மாதம் நோன்புபிடிப்பதைகடமையாகஅல்லாஹ்விதித்துள்ளான்.தராவீஹ்தொழுவதைசுன்னத்தாகநான்ஆக்கியுள்ளன். (இப்னு மாஜா)
2. நபி (ஸல்) தஹஜ்ஜத்தை எப்போதும் இரவில்.கடைசி.பகுதியிலேயேதொழுவார்ள்.மஸ்ரூக்(ரலி)ஆயிஷாரலியிடம் கேட்டதன் பதிலில்.அதை.காண.முடிகிறது.(நூல்:புகாரி)ஆனால்,தராவீஹ்(ஸல்)அவர்கள்,சஹாபாக்கள்,தாபிஈன்கள்,அதற்கு.பிறகு.வந்த.நாதாக்களான நல்லவர்கள் இந்த சமுதாயத்தின் உலமாக்கள்,எப்போதும்.இரவின் ஆரம்பத்திலேயே தொழுகிறார்கள்.
3. நபிஸல் தராவீஹ் பெரிய ஜமாத்தோடு தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத் தனியாக தொழுவார்கள். தஹஜ்ஜத் தனியாக தொழுவார்கள்.நபிஸல் தனியாக தொழும்போது யாராவது வந்து சேர்ந்து கொண்டும் தொழுதிருக்கலாம்.
4. தூங்கும் முன் இஷாவிற்கு பின் தொழுவதற்கும் தராவீஹ் எனவும்,தூங்கி எழுந்த பின் தொழும் தொழுகைக்கு தஹஜ்ஜத் எனவும் முஸ்லிம்களின் வழக்கில் சொல்லப்படும்.
5. ரமழான் தராவீஹில் ஏழு குர்ஆனையும் கேட்பது நேர்வழி பெற்ற கலிபாக்களின் சுன்னத்தாகும் ஆனால் தஹஜ்ஜத்தில் குர்ஆனை முழுமையாக கேட்பது குறித்து எந்த அளவும் குறிப்பிடப்படவில்லை.
6. தஹஜ்ஜத் 12 மாதமும் தொழப்படும் தராவீஹ் வருடத்தில் ஒரு மாதம் தான் தொழப்படும்.
7. தராவீஹ்க்கு.பின்பு.வித்ரு ஜமாத்தோடு
தொழுவது நேர்வழி பெற்ற கலீபாக்களின் சுன்னத்தானகும். வித்ரு ஜமாத்தோடு தஹஜ்ஜத் பின்பு தொழுவது சரியில்லை.
8. தராவீஹ் தொழுகை மற்ற தொழுகையை போல வெளிப்படையான அடையாளத்தில் உள்ளதாகும். ஆனால் தஹஜ்ஜத் தொழுகை மறைவான அடையாளத்தில் உள்ளதாகும்.
சஹாபாக்கள் தொழுவது 20 ரக்அத்து தான்
நாம்மேலே கூறினோம். 20—8 என்ற இரண்டு விதமான ஹதீஸ் வருகிறது. இரண்டும் பலவீனமானது. எனவே சஹாபாக்களின் அமல் எப்போதுமே நபிஸல் அடிச்சுவற்றை பின்பற்றியே இருக்கும். எனவே அவர்கள் எத்தனை ரக்அத் தொழுகின்றார்கள் அதை வைத்து அந்த ரிவாயத்து வலுப்பெறும் சஹாபாக்களில் நேர்வழி பெற்ற கலீபாக்கள் காலத்தில் தராவீஹ் 20 ரக்அத் நடந்துள்ளது.
உமர் (ரலி) காலம்:
1.உமர்ரலி அவர்கள் ஒரு மனிதரை 20 ரக்அத் தொழ வைக்க உத்திரவிட்டார்கள்
(நூல்:முஸன்னப் இபனு அபீஷைபா 2)
2.ஹள்ரத் ஹஸன் ரலி அறிவிக்கிறார்கள் உமர் ரலி மக்களை உபையிப்னு கஃபுரலி தலைமையில் ஒன்று கூட்டினார்கள். அவர்கள் 20 ரக்அத் தொழவைத்தார்கள்.
நூல். அபூதாவூது 1
3. நாங்கள் உமர் ரலி காலத்தில் 20 ரக்அத் தொழுது வந்தோம். வித்ரு தொழுது வந்தோம் என ஸாயிப்னு யஜீத் அறிவிக்கி
றார்கள். (நூல்: பைஹகி மஸரிபதுஸ் ஸுனனி வல்ஆஸார் 4)
உஸ்மான் (ரலி) காலம்:
1,உஸ்மான் ரலி காலத்தில் தராவீஹ் 20 உமர் ரலி காலத்தில் ஜனங்கள் 20 ரக்அத் தொழுதுவந்தார்கள். 100-100 ஆயத்துகள் கொண்ட சூராவை ஓதினார்கள். உஸ்மான் ரலி காலத்தில் எந்தளவு தொழுவார்கள் என்றால். நிற்பதன் சிரமத்தினால் குச்சியின் மீது தாங்கி இருப்பார்கள்.
(அறிவிப்பாளர் ஸாஸிபிப்னு யஜீத்,
நூல் பைஹகி)
அலி (ரலி) காலம்:
அலி ரலி அவர்களுடைய காலம் ஹள்ரத்
அபுல் ஹஸ்மா ரலி அறிவிக்கிறார்கள். அலிரலி அவர்கள் மக்களுக்கு 20 ரக்அத் தொழுகைக்க ஒருவரை ஏவினார்கள்.
(நூல். முஸ்னப் இப்னு அமீஷைபா)
இப்னு மஸ்ஊது (ரலி) தராவீஹ்:
ஹள்ரத் இப்னு மஸ்ஊது ரலி தராவீஹ் 20 ரக்அத் தொழுதுள்ளார்கள். ஜைத்ப்னு வஹப் அறிவிக்கிறார்கள். அப்துல்லா இப்னு மஸ்ஊது எங்களோடு தொழுவார்கள். இரவு இருக்கும் போதே திரும்புவார்கள். அஃமஷ் ரலி கூறுகிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது 20+3 தொழுபவர்களாக இருந்தார்கள். மேற்கூறப்பட்ட விஷயங்களின் மூலம் சஹாபாக்களின் அமல் தராவீஹ் 20 ரக்அத்தாகவே இருந்தது. எனவே 20 ரக்அத் என்பது நபிஸல் யின் வழிகாட்டுதலின் மூலமாகத்தான் உமர் ரலி காலத்தில் உருவானதே தவிர நபிஸல் அவர்களின் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் ஆரம்பிக்கபிக்கப்ட்டது. அல்ல என்று தெளி
வாகிறது.
சஹாபாக்களை பின்பற்றுவதும் நபிவழியே
நபி(ஸல்) அவர்களே சஹாபாக்களை பின்பற்ற சொல்லியுள்ளார்கள். குழப்பமான காலங்களில் என்னுடைய வழி முறையையும் புன்பற்றுங்கள் (மிஷ்காத்)
இப்போது யோசித்துப் பாருங்கள்.நபிஸல்
சொல்லைக் கேட்பதா அல்லது இந்த குழப்
பவாதிகளின் சொல்லைக் கேட்பதா நபி
ஸல் கலீபாக்களை பின்பற்ற சொல்கிறார்.
அவர்கள் தராவீஹ் 20 ரக்அத்துதான்
தொழுதுள்ளார்கள்.
SHARE:
[5/17, 5:49 PM] Habibullah Siraji 2: நம்பர் 3
1. ரமழானின் இரவில் ஜமாத்தோடு தொழுதற்கு தராவீஹ் என சொல்லப்படும் ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ் எழுகிறார்கள். (ஃபத்ஹுல்பாரீ 4/250)
ஆயிஷா ரலி ஹதீஸில் கூறப்படக்கூடிய தொழுகை ரமழான், இன்னும் ரமழான் அல்லாத காலங்களில் 12 மாதங்களிலும் தொழப்படுவது ரொம்ப தெளிவான விஷயம். இது தஹஜ்ஜதுதான் தராவீஹ் அல்ல. தராவீஹ் அது ரமளானின் இரவில் மட்டும் தானே தொழப்படும்.
2.தராவீஹ் ஒரு ஸலாமினால் 2 ரக்அத் தொழப்படுகிறது. இந்த ஹதீஸில் ஒரு ஸலாமினால் 4 ரக்அத் தொழததாக வருகிறது. நபிஸல் 11 ரக்அத் தனியாக தொழுததாக இந்த ஹதீஸில் வருகிறது தராவீஹ் ஜமத்தாக தொழப்படும். இதிலிருந்த ஹதீ்ஸில் வரும் தொழுகை தஹஜ்ஜத்துதானே தவிர தராவீஹ் இல்லை எனத் தெரிகிறது.
நம்பர் 4
இந்த நிகழ்ச்சி கேள்வி பதிலாக அமைந்துள்ளது. எனவே கேள்வியை வைத்துதான் பதியை புரிய வேண்டும். கேள்வியை விட்டுவிட்டு பதிலின் ஒரு பகுதியையோ அல்லது கேள்விக்கு சம்பந்தமில்லாமல் மேலதிகமாக கூறப்பட்ட ஒன்றை மட்டுமோ எடுப்பது ஒரு நல்ல ஆய்வாளருக்கு அழகான செயல் அல்ல. அரபியில் “கைப”(எப்படி) என்பது எண்ணிக்கையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும்(கம்)எத்தனை என்பது எண்ணிக்கையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வினாச்சொல் இந்த ஹதீஸில் அபூஸலமா(ரலி) அவர்கள் ரமழானுடைய காலத்தில் நபிஸல் அவர்களின் தொழுகையின் அமைப்பு (நீள அகலம்) எவ்வாறு இருந்தது என்று தான் அன்னை ஆயிஷா(ரலி)யிடம் வினவுகிறார்கள். இதற்கு பதில் கூறிய ஆயிஷா(ரலி) அதிகப் படியாக எண்ணிக்கை சம்பந்தமாகவும் கூறிவிட்டு அசல் கேள்வியின் பதிலுக்கு வருகிறார்கள். இவர்கள் பதிலாக சொன்னதை விட்டு விட்டு எதார்த்தமாக சொன்னதை(எண்ணிக்கையை) எடுத்துக் கொண்டார்கள். எண்ணிக்கையை வேண்டுமானால் கூறலாம். ஆனால் அதன் அமைப்பை அழகை விவரிக்க இயலாது. எனவே அதைப் பற்றி கேட்காதீர்கள். அந்நளவுக்கு நீண்ட நேரம் தொழுவார்கள் என்பதே கருத்தாகும். ஆக இந்த ஹதீஸை தராவீஹ் 8 ரக்அத் என்பதற்கு ஆதாரமாக கொள்ள முடியாது. அதற்காக இந்த ஹதீஸ் கொண்டு வரப்படவும் இல்லை.
நம்பர் 5
அதிகமான சஹாபாக்கள் 20 ரக்அத் தொழுதுள்ளார்கள். நேர்வழிப்பெற்ற கலீபாக்கள் காலத்தில் 20 ரக்அத் தராவீஹ் நடந்துள்ளது.மஸ்ஜிதே நபவியிலும்20 ரக்அத் நடந்துள்ளது.கலீபாக்களின் ஆட்சியில் ஆயிஷா(ரலி)யும் இருந்தார்கள். ஆயிஷாரலி அறிவித்த ஹதீஸ் தராவீஹ் சம்பந்தப்பட்டது என்றால் நபிஸல் தராவீஹ்8ரக்அத் தொழுதுள்ளார்கள். நீங்கள் ஏன் இருபது ரக்அத் தொழுகின்றார்கள் என்று தடுத்து இருக்க மாட்டார்களா? சும்மா/இருப்பார்களா! பொதுவாக குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக யார் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கமால் சஹாபாக்கள் இருந்ததில்லை. இரண்டாம் கலீபா உமர்ரலி அவர்களையே மின்பரில் நிற்கும்போது பொது மக்கள் முன்னிலையில் தன்னந்தனியாக ஒரு பெண்மணியே கூடதட்டிக் கேட்ட செய்திகள் பிரசித்தி பெற்றது. அந்த அளவுக்கு கருத்து சுதந்திரம் மிகுந்திருந்த நீதத்திருக்கு பேர் போன கலீபா உமர்ரலி ஆட்சியில் அவர்கள் நபி வழிக்கு மாற்றமாக 20 ரக்அத் தொழுதிருந்தால் ஆயிஷாவோ அல்லது மற்ற நபித்தோழர்களோ தட்டிக் கேட்காமல் இருந்திருப்பார்களா? ஆனால் எந்த ஸஹீஹான அல்லது பலஹீனமான ஹதீஸில் கூட ஆயிஷாரலி யோ அல்லது வேறு சஹாபியோ,20ரக்அத் தொழுதவர்களை தடுத்தாக வரவில்லை இதுவே ஆயிஷாரலி ஹதீஸின் நோக்கம் தஹஜ்ஜத்துதான் தராவீஹ் இல்லை என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
No comments:
Post a Comment