ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Wednesday, 30 May 2018

பத்ரின் அரசியல்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *பத்ர் குறிப்பு 01-06-18*🌼

🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹
            
     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்
 

 
🌹🌹 *தலைப்பு:-*
   *"பத்ரின் அரசியல்"*

💐💐 *ஆக்கம்:-*
வழுத்தூர்.காம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
  
  *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*

https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

 *"பத்ரின் அரசியல்"*

நாற்காலிக்காக இருகாலிகள் நாற்காலி ஆகிறார்கள் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வார். பதவிக்காக் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிற இன்றைய அரசியல் அவலத்தை அந்த வரிகள் படம்பிடிக்கின்றன. 

பத்ரு யுத்தம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசியல் நடவ்டிக்கைகளில் காணப்பட்ட பிரமிப்பூட்டும் நுட்பத்தையும் நாகரீகத்தையும் அடையாளப் படுத்துகிறது. பத்ரு யுத்ததின் அரசிய்ல் கூறுகளில் உலக அரசியலுக்கு எழுதப்படாத பாடங்கள் ஏராளமாக இன்றளவும் கிடைக்கின்றன.

ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624 மார்ச் 14 ம் தேதி) ரம்லான் மாதத்தின் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி சூரியன் சுடத் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்து போன அந்த யுத்தத்த்தின் நிகழ்வுகளையும் அதன் நாயகர்களையும் அதில் களப்பலியானவர்களயும் ஒவ்வொரு ஆண்டும் உலக முஸ்லிம்கள் ரமலான் 17 ம் நாள் அன்று நினைவு கூறுகிறார்கள். இன்றும் கூட அந்தப் பொட்டல் வெளியில் அதே தினத்தன்று திரளாக கூடுகிற முஸ்லிம்கள் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த நிகழ்வை உணர்வுப் பூர்வ்மாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபிகள் நாயகத்தோடு கலந்து கொண்ட நபிதோழர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். மலேஷியாவில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.

ஒரு பாலை வனப் பிரதேசத்தில் இரண்டு பழங்குடி இனத்தவரின் மோதல் அல்லது ஒரு சகோதர யுத்தம் என்பதை தாண்டி வரலாற்றை கவர்ந்திழுக்கிற சிறப்பம்சங்கள் எதுவுற்ற அந்த சண்டை, வரலாற்றை தலை கீழாகப் புரட்டிப் போட்டது. மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியலை மட்டுமல்ல உலக அரசியலின் போக்கிலும் அது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்ற்குப் பின்னால் ஏற்பட்ட எழ்ச்சியில் அன்றை இரு பெரும் வல்லரசுகளான பாரசீகத்தின் சாசானியப் பேரர்சும் ரோமின் பைஜாந்தியப் பேரரசும் சபதமில்லாமல் சாய்ந்தன.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கண்டுபிடிக்கப் ப்டுவதற்கு முன்னாள் அன்றை உலகம் என்பது ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா என்ற மூன்று கண்டங்களை மட்டுமே கொண்டிருந்தது. அன்றைய அந்தபூமியின் நிலப்பரப்பில் சுமார் 70 சதவீத பரப்பிற்கு இஸ்லாம் பரவியது என்றால் அதற்கு மூல வித்தாக அமைந்தது பத்ரு யுத்தம்

அதனால் தான் ஆசியக் கண்டத்தின் வரலாற்றை திசை திருப்பிய இருபது யுத்தங்களை வரிசைப் படுத்துகிற வர்லாற்றாய்வாளர்கள் பத்ரு யுத்ததிற்கு இரண்டாவது இடத்தை தருகிறார்கள். .

இந்த வரிசையில் முதல் யுத்தமாக ம்கா அலக்ஸாண்டர் பாரசீகத்தின் மீது நடத்திய யுத்தம் குறிப்பிடுகிற்து. அதற்கு காரணம் அது காலத்தால முந்தியது என்பது மாத்திரமே! அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யுத்தம் என்று எடுத்துக் கொண்டால் பத்ரு யுத்தம் தான் ஆசிய வரலாற்றின் பெரும் திருப்பு முனையான யுத்தமாகும்.

ஒரு உள்ளூர் சண்டயாக நடைபெற்ற அந்த யுத்தம் உலக யுத்தங்களை விட வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அதிக தாக்கத்தை செலுத்தியது.

பானிபட் யுத்தம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு வழி கோலியது. பிளாசிப் போர் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவை கைகொள்ள காரணமாகியது முத்துது துறை முகத்தின் மீது ஜப்பான் தொடுத்த தாக்குக்தல் ஜப்பானின் சித்தைவுக்கு வழிவகுத்தது. இந்த யுத்தங்களும் இது போன்ற இன்னும் சில யுத்தங்கள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றாலும் அவற்றின் தாக்கம் அதிகபட்சமாக இருநூறு வருடங்களை தாண்டவில்லை. ஜப்பான் 50 ஆண்டுகளில் மீண்டெழுந்தது விட்டதை இன்றைய தலை முறை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பத்ரு யுத்தத்தின் புறத் தாக்கம் 15 ஆண்டுகள் தங்களிடையே இருந்தது என்று நபிதோழர்கள் கூறுகிறார்கள். அதன் அகத்தாக்கமோ கால வரையறைக்கு அப்பாற்பட்டு விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

யுத்தம் தொடங்குவத்ற்கு சற்று முன்னதாக யுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்து விட்டு தனது கூடாரத்திற்கு திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனையின் வாசகத்தை கவனித்துப் பார்த்தால் .அன்றைய சூழ்நிலையின் கையறு நிலையையும் அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிய்ன் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.
“இறைவா! இந்தச் சிறு கூட்டத்தை இப்போது நீ அழித்து விட்டால இனி இந்த பூமியில் உன்னை வணங்க யாரும் மிஞசமாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்த்னை செய்தார்கள்.

தனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்திருக்கிற மூன்னூறு நண்பர்களை பாதுகாக்கிற ஒரு தலைவரின் பொறுப்புணர்வும் கவலையும் அக்கறையும் அந்த இறைஞ்சுதலில் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல அந்த யுத்தத்தில் கிடைக்கிற வெற்றி இந்தப் பூமியில் ஏற்படுத்தப் போகும் மாற்றத்தையும் அது பிரதிபலித்தது.

இப்போது மெல்போர்ன் நக்ரத்தின் தெருக்கலில், சிகாகோவின் வீதிகளில் மாஸ்கோவின் மைதானங்களில் அல்லாஹு அக்பர் என்ற சப்தம் ஒலிக்கிறது என்றால் அதற்கு பத்ரின் வெற்றி தான் காரணம். இந்த வெற்றியில் நபிகள் நாயகத்தின் அரசியல் முதிர்ச்சியும் நேர்மையும் மறைந்திருக்கிறது. 

ஒரு மாபெரும் தலைவரின் அரசியல் வாழ்வில் போராட்டங்களும் யுத்தங்களும் சகஜம். அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதிலும் அவற்றுக்கு பின் கிடைத்த வெற்றி தோல்விகளை அவர் எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதும் அவரை வரலாற்றின் சிறபான உய்ரங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

பத்ரு யுத்தத்திற்கான ஆயத்தங்களின் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கையாண்ட நெறி முறைகளில் நாகரீகம் மிளிர்ந்தது. 

பின்னாட்களில் நபிகள் நாயகத்தின் உளவாளி என்று பெயர் பெற்ர ஹுதைபா பின் யமான் (ரலி) கூறுகிறார் :

நானும் அபூ ஹுசைலும் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து பத்ரில் பங்கேற்ப்பதற்காக ரக்சியமாக மதீனாவுக்குப் புறப்பட்டோம். மக்காவின் எதிர்கள் எங்களை இடை மறித்து தடுத்து முஹம்மதுடன் சேர்ந்து கொள்ளத்தானே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்காக அல்ல வேறு ஒரு வேளையாக நாங்கள் மதீனாவுக்கு செல்கிறோம் என்று சொன்னோம். அப்படியானால் முஹம்மதுவுடன் சேர்ந்து யுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று வாக்குறுதி தருமாறு கேட்டார்கள். வேறு வழியின்றி வாக்குறுதி கொடுத்து விட்டு புறப்பட்டோம். நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து நடந்த வற்றைச் சொன்னோம் . பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்: (இன்சரிஃபா! நபீ லஹும் பி அஹ்திஹிம் வ நஸ்தஈனுல்லாஹ அலைஹிம்) “நீங்கள் இருவரும் திரும்பிச் செல்லுங்கள். எதிரிகளுக்கு கொடுத்த வாக்கை நாம் நிறைவேற்றுவோம். யுத்தத்தில் வெற்றி பெற அல்லாஹ்விடம் உதவி கேட்போம். என்றார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 3342)

பத்ரின் அரசியல் என்பது முதலில் அதன் நேர்மையான அனுகுமுறைகளாலேயே அதிக பொலிவு பெற்றுத் திகழ்கிறது. புற வெளியில் வெற்றி வாய்ப்பு சாத்தியமற்றயதாக தோன்றிய அந்த சூழலில் நபிகள் நாயகத்தின் அந்த அகஎழில் அவரை மட்டுமல்ல அவரது நண்பர்களையும் காப்பாற்றியது. மாத்திரமல்ல; அவர்களது இருப்பை உறுதியாக நிலைப்படுத்தியது. 

அரசியலில் இத்தகைய நேர்மை எல்லோருக்கும் சாத்தியமா? எனக் கேட்கத் தோன்றலாம். வரலாற்றில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அது சாத்தியமே!

இற்கு நேர்மாறான ஆர்ப்பாட்ட அரசியல் வாதியான அபூஜஹ்ல் தானும் அழிந்து தனது சமூகத்தையும் அநாதையாக்கியதையும் பத்ரு சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.

அபூஜஹ்லுக்கு நபிகள் நாயகம் உன்மையானவர் என்பது தெரிந்தே இருந்தது. அவனே ஒப்புதல் வாக்கு மூலமும் வழங்கி இருக்கிறான் ( இன்னா லா நுகத்தீபூக வலாகின் நுகத்திபு பிமா ஜிஃத பிஹி ) முஹம்மதே ! உம்மை பொய்ய்ரென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் உனது கொள்கையை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று சொன்ன அவன் அதற்கான காரணத்தையும் கூறினான் குறைஷிகளின் உட் பிரிவான உங்களது ஹாசிம் குடும்பத்திற்கும் எங்களது அப்து ஷம்சு குடும்பத்திற்கு தலைமை யாருக்கு உரியது என்பதில் கடும் போட்டி இருக்கிறது. இந்தச் சூழலில் உம்மை இறைத் தூதர் என்று ஒப்புக் கொண்டால் எங்களால் அது விசயத்தில் போட்டி போட இயலாதல்லவா ? எனவே உம்மை நான் ஒத்துக் கொள்ள முடியாது என்று அவன் கூறினான்.
முஹம்மது (ஸல்) அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியிம் அவனுக்குள் பழைய போட்டி பொறாமை உணர்வையே கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. அதனாலேயே மக்காவிலிருந்து வெளியேறிய முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தலைமக்கான தளம் அமைந்ததை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவரை அழித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருதவனுக்கு அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்திற்கு ஆபத்து என்ற செய்தி பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதை வைத்து மக்காவின் மக்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டு பன்னி அவர்களை திரட்டிக் கொண்டு வந்திருந்தான். அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாப்பதை விட தனது போட்டியாளரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சுய வஞ்சமே மேலோங்கியிருந்த்து.

இத்தகைய தலைவர்கள் அமைவதை விட ஒரு சமூகத்திற்கு பெரிய துரதிஷ்டம் வேறு இருக்க முடியாது.

பத்ரு யுத்தம் தொடங்கு வதற்கு முதல் நாள் ஒரு பெரும் அழிவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு யுத்தத்திலிர்ந்து தன் சமூக மக்களை காப்பாற்றூவதற்கு அபூஜஹ்லுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.

வியாபாரிகளின் தலைவர் அபூசுப்யானின் கடிதம் அன்று அவனுக்கு வந்து சேர்ந்தது. தனது வியாபாரக் கூட்டம் செங்கடலின் கரையோர மார்க்கமாக பத்திரமாக திரும்பி விட்டது. என்வே மக்காவுக்கு திரும்பி வருமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டிருந்தார். 

எவரையும் அழித்தொழிப்பதற்கு முன்னாள் இறைவன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கத் தவறுவதில்லை. அபூஜஹ்ல் அந்த வாய்ப்பை வீணடித்தான்.

கடித்தத்தின் செய்தியை அறிந்து கொண்ட மக்காவிம் இன்னொரு தலைவரான் அஹ்னஸ் பின் ஷுரைக் அபூஜஹ்லிடம் எவ்வள்வோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்!

அபுல் ஹிகம்! உங்களது சகோதரரின் மகன் உண்மையானவர் என்று உங்களுக்கு தெரியும் என்று நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வியாபார்ககூட்டத்தை பாதுகாக்கத்தானே வந்தோம் அது பத்திரமாக வ்ந்து சேர்ந்து விட்டது வாருங்கள் திரும்பி விடுவோம் என்று அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் மசியவில்லை. தனது கருத்தை மறுப்பவர்கள் அத்தனை பேர்ரையும் கோழைகள் என்று ஏசினான். அவனது இந்தப் போக்கை ஏற்ற்குக் கொள்ளாத அஹ்னஸ் தனது ப்னூ சுஹ்ரா குடும்பத்தை சார்தோரை சுமார் 100 நப்ர்களை பத்ருக் களத்திலிருந்து திரும்ப அழைத்துச் சென்று விட்டார். அதனால் பனூ சுஹ்ரா குடும்பத்தினர் எவரும் பத்ரில் பலியாகாமல் தப்பினர்.

அபூஜஹ்லின் சுய வஞ்சம் அவனையும் அவனோடிருந்த பலரையும் மோசமாக பலி கொண்டது. அவனது சமூகத்தின் முதுகெலும்பை முறித்து போட்டது.

சாதாரணாமாக அரபு தீபகற்பத்தில் மக்காவின் குறைஷியருக்கு எதிர்ப்பே கிடயாது. மத ரீதியாக மிக பாதுகாப்பான பகுதியில் அவர்கள் வசித்தார்கள். அவர்கள் இருக்கிற இடம் தேடி யானைகளோடு வந்த படைகளே கூட சின்னபின்னமாகி சிதறிப்போனது என்பது தான் அதுவரைக்குமுண்டான வரலாறு.

அப்துல் முத்தலிபின் பண்பினால் பாதுகாக்கப் பட்ட மக்காவின் மக்கள் அபூஜஹ்ல் என்ற மோச்மான அரசியல் தலைமையினால் வரலாறு காணாத சோகத்தை முதல் முறையாக அனுபவித்தார்கள். மக்காவில் ஒரு மாத காலம் ஓலம் ஓயவில்லை

தன் சொந்த வெறுப்பை பிரதானப்படுத்திய ஒரு தவறான அரசியல் தலைமையின் அழிவும், அவனது சமூகத்திற்கேற்பட்ட கோரமான முடிவும் பத்ரின் அரசிய்ல பாடங்களில் மறந்துவிடக் கூடாது ஒரு பாடமாகும்.

யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்க்ள் தன் தோழர்களோடு ஆலோசனை கலந்தார்கள். ஒரு இறைத்தூதராக அவர் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இல்லைதான் என்றாலும் ஒரு சிற்ந்த அரசியல் தலைவருக்கு முன்னுதாரமான தனது நடைமுறையை நபிகள் நாயகம் அமைத்துக் கொண்டார்கள். தனது கருத்தை தொண்டர்கள் மீது வலிந்து திணிக்கும் மலிவான ஆதிக்க மனப்பான்ம்மை அவரிடம் இருக்கவில்லை. ஒரு களத்தில் எதிரிகளை சந்திக்க நேர்ந்த பிறகு அவர்களை எதிர்கொள்ளாமல் புறமுதுகிட்டுச் செல்வது சரியல்ல என்ற நபிகள் நாயகத்தின் கருத்துக்கு தொண்டர்கள் அமோகமாக இசைவு தெரிவித்தார்கள்.
தன்னுடைய யோசனைக்கு மற்றவர்கள் இணங்கியது போலவே மற்றவர்களது யோசனைக்கு பெருமானாரும் இணங்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் பிரதேசத்திற்குள் நுழைந்த போது அதன் ஓரு ஒரத்தில் உள்ள நீர்நிலைக்கு அருகில் தங்குவதற்கு முடிவு செய்தார்கள். அப்போது குறிக்கிட்ட ஹப்பாப் பின் முன்திர் (ரலி) என்ற தோழர் “இல்லை. இன்னும் உள்ளே சென்று எதிர்களுக்கு நெருக்கமான இடத்திலிருக்கிற நீர் நிலைக்கு அருகே சென்று தங்குவோம் அப்போது நம்மிடம் தண்ணீர் இருக்கும் எதிரிகளிடம் தண்ணீர் இருக்காது என்று ஆலோசனை சொன்ன போது அந்த யோசனையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதோடு நல்ல யோசனை என்று பாராட்டவும் செய்தார்கள்

இத்தகைய நடவடிக்கைகளால் தொண்டர்களின் முழு ஈடுபாடும் பெருமானாருக்கு கிடைத்தது.

யுத்தம் தொடங்கிய போது போர் முனையின் வாசலில் நின்று கொண்டு குறைஷியரான உதபா ஷைபா, வலீத் பிப் உத்பா ஆகியோர் தங்களோடு சண்டையிட வருமாறு கொக்கரித்தனர். அப்போது மதீனாவைச் சார்ந்த அன்சாரித் தோழர்களான அவ்பு முஆத் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் அவர்களை எதிர்கொள்ளச் சென்றார்கள்.

யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை அது காட்டியது. இஸ்லாத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது என்ற உணர்வு பிரதானப்பட்டு விட்டதை அது வெளிப்படுத்தியது.

ஆனால் மதீனாவீன் வீரர்களை கண்ட எதிரிகள் தம்முடம் மோதுவதற்கு தமது சொந்தக் குலத்தவர்களை அனுப்புமாறு கோரினர். அவர்கள் குலப் பெருமையின் அடிப்பாடையில் யுத்தத்தை எதிர்கொண்டார்கள் என்பதை அது காட்டியது.

பத்ரி யுத்ததில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றத்ற்கு அதுவே பிரதான காரணம். கொள்கை வழியில் போராடியவர்கள் ஜாதிய உணர்வில் போராடியவர்களை வென்றார்கள் என்பது பத்ரின் அரசியல் தரும் பிரதானச் செய்தியாகும்.

குறுகிய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது இன்றைய அரசியலின் சூத்திரமாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் உன்னதமான பண்புகள் தருகிற வெற்றியே அதன் களப்பகுதிகளை கடந்து வரலாற்றில் வாழும் என்பதே பத்ரின் அரசியலாகும்.

 ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *"பத்ர் குறிப்பு 01-06-18"*🌼

🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹
            
     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்
 

🌹🌹 *தலைப்பு:-*
      *"பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்"*

🌸🌸 *ஆக்கம்:-*
https://sufimanzil.org/பத்ரு-ஸஹாபாக்களின்-சிறப்/

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
  
  *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*

https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

*"பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்"*

ஷுஹதாக்களின் மகத்துவம்:

وَلَا تحسبن الذين قتلوا فى سبيل الله اموانا بل احيآء عند ربهم يرزقون

‘அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில் உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம் கேட்;ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும் ஹதீதை குறிப்பிட்டார்கள்:

‘ஷுஹதாக்களுடைய உயிர்களானது சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிற பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு, சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை சுற்றி வரும். பிறகு இறைவனின் சிம்மாசனத்தில் தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று கூறினார்கள். இத்தகைய மாபெரும் பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும் கிடைத்தது.

நூல்: புகாரி, முஸ்லிம்.

மேலும் ஷுஹதாக்களைப் பற்றி நபிகளார், ‘ ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான். அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த நபிமாரும் பெறவில்லை. அவையாவன:

1.எல்லா நபிமார்களின் உயிர்களையும் மௌத்தின் அதிபதி இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை அல்லாஹ்வே கைப்பற்றுவான்.

2.அனைத்து நபிமார்களும் மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும் குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட காயங்களுடன் அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர் பக்கம் அவர்கள் தேவையாக மாட்டார்கள்.

3. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு கஃபனிடப்படுவார்கள். நானும் கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில் அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.

4. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு அவர்களை மரணித்தவர்கள் என்று கூறப்படும். நானும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள் மரணித்து விட்டால் அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என்று ஒரு திருமறைவசனத்திலும், மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று மேற்கூறிய வசனத்திலும் இறைவனே கூறுகிறான்.

5. எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு இருக்கிறார்கள் என நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். –நூல்: தப்ஸீர் குர்துபி 1518ஃ3

சிறிது நேரம் இறைவன் பாதையில் சண்டை செய்வது 50 தடவை நபிலான ஹஜ்ஜு செய்வதை விட சிறந்தது. – அல்ஹதீது.

பத்ரு போர் நடக்க காரணங்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருந்த போது அவர்களுடன் முனாபிக்குகள் என்னும் நயவஞ்சகர்கள் (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள்) ஸஹாபாக்கள் போல் நடித்து கொண்டு இருந்தார்கள். இவர்கள் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை நோக்கி படை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொய்யான செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் மக்கத்து குறைஷிகள் போருக்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதுசமயத்தில் குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யான் மக்காவாசிகளான முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்தார். அவரது குழுவை வழிமறித்து முஸ்லிம்கள் கொள்ளை அடிக்கப் போவதாக வதந்தி நிலவியது. இதனையறிந்த அபூசுப்யான் மக்காவிற்கு தூதனுப்பி பாதுகாப்பு கேட்டிருந்தார். இவர்கள் மக்காவிற்கு மதீனாவின் வழியாக செல்லும் வழமையான வழியை விட்டு வழியை மாற்றி செங்கடல் வழியாக சென்று மக்காவை சென்றடைந்தனர்.

வர்த்தகக் குழுவிற்கு பாதுகாப்பு தேவை என்ற செய்தி குறைஷி காபிர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைய ஆயிரம் பேர் கொண்ட படையை திரட்டி வர்த்தக பாதுகாப்புக் குழு என்ற பெயரில் புறப்பட்டார்கள். எவ்வித இடையூறுமின்றி வழியை மாற்றி மக்கா சென்றடைந்த அபூசுப்யான் ‘மக்காவிற்கு திரும்பி விடுங்கள்’ என்று செய்தியனுப்பினார். அபூஜஹல் அதை நிராகரித்து பத்ரில் படையை இறக்கினான்.

குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்பாதுகாப்புக்காக 313 ஸஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி புறப்பட்டார்கள். படை பத்ரில் பாளையம் இறங்கியது. இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17 அன்று நடைபெற்றது. இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர் இது.

முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாளாயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.

எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.

இரண்டு தரப்பினர்களின் பலங்களையும் சீர்தூக்கி பார்த்து விட்டு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான். இப்போரில் சொந்த பந்தம் என்று பார்க்காமல் முஸ்லிம்கள், காபிர்கள் என்றே பார்க்கப்பட்டது.

நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். போhக்களத்தில் ஐவேளைத்தொழுகை,திக்ரு, பிக்ரு, தராவீஹ் தொழுகை மற்ற இபாதத்துக்கள் தவறாமல் நடைபெற்று வந்தன.

இப்போரில் அல்லாஹ் வெற்றியை முஸ்லிம்களுக்கு கொடுத்தான். முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். அவர்களின் திருநாமங்கள்:

1. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு
2. ரபீஃஉ இப்னு முஅல்லா ரலியல்லாஹு அன்ஹு
3. ஸஃது இப்னு கய்சமா ரலியல்லாஹு அன்ஹு
4. யஜீது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
5. உபைதா இப்னு ஹாரிது ரலியல்லாஹு அன்ஹு
6. ஆகில் இப்னு புகைரு ரலியல்லாஹு அன்ஹு
7. உமைர் இப்னு ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு
8. முஅவ்விது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
9. திஷ்ஷிமாலைன் இப்னு அம்து அம்ரு ரலியல்லாஹு அன்ஹு
10. மிஹ்ஜா இப்னு சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு
11. உமைர் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
12. ஹாரிஸா இப்னு சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு
13. சஃப்வான் இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு
14. அவ்ஃப் இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு.

குறைஷிக் காபிர்களில் 70 பேர் மடிந்தார்கள். இந்த சடலங்களை பத்ரு என்ற கிணற்றில் போட்டு மறைக்கும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கிணற்றுக்கு சென்று செத்த மய்யித்துகளிடம் பேசினார்கள்.

அபூஜஹலே, உமையாவே, உத்பாவே எங்களுக்கு எங்கள் நாயன் சொன்ன வாக்குறுதியை உண்மையாகவே பெற்றுக் கொண்டோம். உங்களின் கடவுள்களின் வாக்குறுதியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? நீங்கள் எங்களுக்கு செய்த பலவித இன்னல்கள் துன்பங்கள் இவைகளுக்குரிய தண்டனையை இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுதாவது என்னைப் பற்;றியும் நான் சொன்ன ஆண்டவனைப் பற்றியும் விளங்கிக் கொண்டீர்களா? என்று கேட்ட போது,

அவர்கள் அருகில் நின்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகமே! மரணித்து விட்டவர்கள் எப்படி உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள்? என்று வினவ அதற்கு நாயகம் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல முடியும். அவர்களுக்கு பதிலுரைக்க முடியாது. இதுதான் உங்களிருவருக்கும் உள்ள வித்தியாசம் என்று சொன்னார்கள்.

பத்ரில் ஏற்பட்ட சம்பவங்கள்:

ஹழரத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு யுத்தம் நிகழ்வதற்கு முன் அந்தப் போரில் இறந்து போகக் கூடிய சிலரின் பெயர்களையும் அவர்கள் பத்ரு களத்தில் இன்ஷாஅல்லாஹ் இன்னின்ன இடங்களில் இறப்பார்கள் என்பதையும் தங்களின் கையிலுள்ள அசாவினால் கோடு போட்டுக் காட்டினார்கள்.

இதை ஹழரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முதல் நாள் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளில் யார் யார் எவ்விடங்களில் கொல்லப்படுவார்கள் என்பதைக் கோடு போட்டுக் காண்பித்தார்களோ அவரவர்கள் அவ்வவ்விடங்களில் கொல்லப்பட்டார்கள். இதை என் கண்ணால் பார்த்தேன் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு துரும்பளவாவது கூட கொல்லப்பட்ட இடங்கள் மாறவில்லை. இதுவும் பத்ரு யுத்தத்தில் நடந்த மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாகும். – முஸ்லிம்.

பத்ரு யுத்தத்தின் போது நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தமது தோழர்களை நோக்கி, ‘எழுந்திருப்பீராக! வானத்தையும், பூமியையும் விட விசாலமானதும் தக்வா கொண்டவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டதுமான சுவர்க்கத்தின்பால் விரைவீராக!’ என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஹழ்ரத் உமைர் இப்னு ஹம்மாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஆஹா, ஆஹா’ என்றனர். அண்ணலார் அவர்கள் உமைரை நோக்கி, எதற்காக ஆஹா ஆஹா என்று கூறினீர் என்றார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அத்தகையவர்களில் நானும் ஒருவனாக இருக்க விருப்பப்படுகின்றேன்’ என்று பதில் கூறினார். உடனே அண்ணலார் அவர்கள் நீரும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்’ என்றார்கள்.

ஹஜ்ரத் உமைர் ரலியல்லாஹு அன்ஹு ஒரு பையிலிருந்து சில பேரீத்தங்கனிகளைப் பசியின் கொடுமையைத் தணிக்கத் தின்றார்கள். ஓரிரண்டு கனிகளைத் தின்றதும் அவர்கள் கையிலிருக்கும் கனிகளைத் தின்று தீர்க்கும் வரை காத்திருப்பதென்பது இவ்வுலகில் நீண்ட காலம் ஜீவித்திருப்பதைப் போலிருக்கிறது. எனக்கு அதுவரை என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்’ என்று கூறியவாறு கையிலிருந்த கனிகளை தூர எறிந்து விட்டு கரத்திலே வாளேந்தி பத்ரு போரிலே உடலை விட்டு உயிர் பிரியும் வரை போராடி ஷஹீதாய் விட்டார்கள்.

பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாகும். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள். 1. எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி 2. லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம். 3. பிலால் ரலியல்லாஹு அன்ஹு 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் எனக் கூறினார்கள். – நூல்: தப்ஸீர் இப்னு கதீர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய மகனான ஸஃது இப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள். அதற்கு ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப் பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை. சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் புறப்பட்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.

பத்ரீன்களின் திருநாமத்தின் பிரயோஜனங்கள்:

இமாம் புகாரி நாயகம் அவர்கள் தங்கள் புகாரி கிரந்தத்தில் பத்ரு போர் பற்றிய பாடத்தில் அந்தப் போரில் கலந்துகொண்டவர்கள் அனைவர்கள் பெயரையும் தொகுத்து வழங்கியுள்ளார்கள். அந்தப் பெயர்களை நாம் படிக்கும் பொழுது நம்முடைய நாட்டங்களும், கேட்கும் துஆக்களும் உடனே ஒப்புக் கொள்ளப்படும். இது அனுபவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

                                                                                      -நூல்: தாரீகுல் கமீஸ் 402/1

முஅவ்விது இப்னு அஃப்ராவு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ரு போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யி உபின்த் முஅவ்விது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் ஒரு நாள் லுஹருக்கு முன்பு ‘கைலூலா’ தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன். அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது. என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில் விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது. அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின் ‘இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான (பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லை’ என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.

இந்த ஹதீதை பைஹகீ இமாம் தன்னுடைய நூலில் குறிப்பிட்’டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள்.                                                நூல்: பைஹகீ 115/7

பத்ரு ஸஹாபாக்களின் பெயர்கள் இருக்;கும் இடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்றும், அவர்களின் திருநாமங்களை அவ்ராதாக விடாமல் முறையாக ஓதி வருபவருக்கு விலாயத்தின் அந்தஸ்து கிடைக்கிறது என்றும் மகான்கள் கூறியிருக்கிறார்கள். ஏராளமான சம்பவங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் பத்ரு ஸஹாபாக்களின் பொருட்டால் அனைத்து நாட்டங்களையும் நிறைவேற்றித் தருவானாக! ஆமீன்.

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ