சீறாப்புராணம் எழுதியவர் உமறுப் புலவர்
தமிழில் முதன் முதலில் "அசன்பே சரித்திரம்" என்ற நாவலை எழுதியவர் சித்தி லெப்பை மரைக்காயர் .
சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்து, “நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்” என்று சிறப்பிக்கப்பட்ட குலாம் காதிர் நாவலர் .
இராமத்தேவராக இருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி வைத்திய நூல் எழுதிய யாக்கோபு சித்தர்
நற்றமிழில் நான்கு காப்பியங்கள் எழுதிய காயல் சேகனாப்புலவர்
முத்தமிழில் மூன்று இலக்கியங்கள் படைத்த வண்ணக் களஞ்சியப் புலவர்
மிஃராஜ் மாலை எழுதிய ஆலிம் புலவர் .
பெண் எழுத்தாளர்களின் முன்னோடி நாகூர் சித்தி ஜுனைதா பேகம்
யூசுப்-ஜுலைகா காவியம் வரைந்த (கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடல் எழுதிய ) சாரண பாஸ்கரணார் .
இராமேசுவரம் உத்திரகோச மங்கை கோவிலை கட்டிய வள்ளல் சீதக்காதி .
மசலா (புதிர்-வினா). நாமா (வரலாற்றுக்கதை) , கிஸ்ஸா (கதை வடிவம்), முனாஜாத்து (இறைவேட்கை பாடல்), படைப்போர் (போர் நிகழ்ச்சிகள்), திருமண வாழ்த்து (திருமண பழக்க வழக்கங்களைக் கூறுவது) , நொண்டி நாடகம் (சிற்றிலக்கிய நாடக வகைகளில் ஒருவகை).
என்றெல்லாம் எழுதிக் குவித்து தமிழ் இலக்கியங்களுக்கு புதுப்பொலிவு ஏற்றிய இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழ்நாட்டவர்கள்.
தமிழ் இலக்கியத்திற்கு புது வடிவங்களும் பல பங்களிப்புகளும் செய்து வந்தவர்கள் மொழிப்பற்று மிக்க இஸ்லாமியர்கள்.
No comments:
Post a Comment