ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 15 September 2017

மரணம் என்பது இன்பமா ? துன்பமா ?

மரணம் என்பது . . .

இன்பமா ?

துன்பமா ?

"குல்ளு நப்சின் தாயிக்ககத்துள் மவ்த்"

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் ?
மரணம் என்பது இன்பமா ? துன்பமா ?
காரணம் அல்லாஹ் இங்கே சுவை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான் .

இங்கே வரும் சுவை என்ற வார்த்தையை எப்படி நாம் புரிந்து கொள்வது ?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரண நிகழ்வை பற்றி இரண்டு விதமாக சொல்கிறார்கள் .
ஒன்று கெட்டவர்களுக்கு ஏற்படும் நிகழ்வு .

கெட்டவர்களுக்கு மரண வேதனை என்பது ஒரு மெல்லிய துணியை படர்ந்த முள்ளின் மீது போட்டு இழுத்தால் அந்த துணி எப்படி கிழியுமோ அதைபோலவே தீயோர்களுக்கு மரண வேதனை ஏற்படும் என்று சொல்கிறார்கள் .

நல்லோர்களுக்கு ஏற்படும் நிகழ்வு : அந்தக்கால அரபிகள் தண்ணீர் குடிப்பதற்க்காக தோல் பையை பயன்படுத்துவார்கள் .அந்த தோல் பைக்கு இரண்டு வாய் இருக்கும் ஒன்று மிக அகலமாக (அதாவாது தண்ணீரை தோல் பைக்குள் ஊற்ற வசதியாக தோல் பையின் மேல் புற வாய் சற்று அகலமாகவும் ) மற்றொன்று குறுகிய வாயாக (அதாவாது தண்ணீர் குடிக்க வசதியாக தோல் பையின் அடிப்பாகத்தில் சற்றே குறுகிய வாயாகவும் ) இருக்கும். (அப்படிப்பட்ட தோல் பையை சிந்தனையில் வைத்துக்கொள்ளுங்கள் . இப்போது ஹதீசிற்க்கு வருவோம் ..)
அப்படிப்பட்ட தோல் பையின் அகலமான வாயை திறந்து தண்ணீரை கீழே ஊற்றினால் நீர் எவ்வளவு வேகமாக வெளியேறுமோ அவ்வளவு வேகமாக நல்லோர்களின் உயிர் வேகமாக இலகுவாக பிரிந்து விடும் .
இன்னும் சில பெரியார்கள் இப்படி சொல்கிறார்கள் .

மரண வேதனை என்பது நல்லோர்கள் தீயோர்கள் அனைவர்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் நல்லோர்களுக்கு இலகுவாக உயிர் போகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது

நல்லோர்களின் உயிரை கைப்பற்றும்போது மரணத்திற்க்கு பின் அவர்கள் வாழும் வாழ்க்கையை அல்லாஹ் அவர்களின் கண் முன்னே காட்டிவிடுவான் .அந்த இன்பத்தில் அவர்கள் மூழ்கி இருக்கும்போது அவர்களின் உயிர் கைப்பற்றப்படும் .ஆபரேசன் செய்யும்போது மயக்க மருந்து கொடுத்து எப்படி ஆபரேசன் செய்கிறார்களோ அதை போல.

நல்லோர்கள் மரணத்திற்க்கு பின் தன்னுடைய தங்குமிடத்தை கண்டு மெய்மறந்து இருப்பார்கள் அப்போது அவர்களின் உயிர் கைப்பற்றப்படும் எனவே அவர்களுக்கு வேதனை தெரியாது. .

அல்லாஹ் சுவை என்று சொன்னதின் காரணம்
கசப்பும் ஒரு வகையான சுவைதான் ,இனிப்பும் சுவைதான்
நாம் வாழும் வாழ்வில்தான் எந்த சுவையை அனுபவிக்கப்
போகிறோம் என்பது இருக்கிறது?

வல்ல இறைவன் நம் அனைவரையும் நல்லவர்களாக வாழச்செய்து
நல்லவர்களாகவே மரணிக்க செய்து,,

சொர்க்கத்தை பரிசளிப்பானாக-ஆமீன்
யாரப்பில் ஆலமீன் . . . .

#Ameen_Ameen_Ya_Rab  . . . .

No comments:

Post a Comment