ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 26 September 2017

சிங்கம் அசிங்கமான கதை

ஒரு காட்டுல மானு ஒண்ணு இருந்துச்சு. மானுன்னா மானு அப்டி ஒரு அழகான மானு. அந்த மானுக்கு ஒரு மக. அது அத விட அழகு.

அந்தக் காட்டுல சிங்கம் ஒண்ணு இருந்துச்சு. அதுக்கு ஒரு ஆசை, அந்த மானோட மகள கண்ணாலம் முடிக்கணும்னு.

தாய் மான்ட்டப் போயி தன்னோட விருப்பத்த மெதுவா சொல்லுச்சு. உன்னோட இனத்துலயே நீ கண்ணாலம் பண்றதுதான் நல்லதுன்னு சொல்லுச்சு தாய்மானு. ஆனா அதக் கேக்காம, கெட்டுனா உம் மகளத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னுச்சு சிங்கம்.

மானு கொஞ்சம் சாதுர்யமானது; காரியம் சாதிக்கக் கூடியது. 'சிங்க ராசாவே! உன்னோட பலம் எனக்குத் தெரியும். உன்ன மருமகனா அடைய எனக்கு கொள்ளை ஆசதான். ஆனா உன்ன எம் மவளுக்கு புடிக்கலயே' என்றது மானு.

'ஏன் என்ன காரணம், எனக்கு அழகில்லயா' என்றது சிங்கம். 'அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன்னோட கால் விரல்ல கூர்மையான நகங்க இருக்கு. அதப் பாத்து எம் மக பயப்படுறா. அத வெட்டிட்டீன்னா மக பய தெளிஞ்சுடும்' னு சொன்னது மானு.

அதுக்கென்ன... இப்பவே கால் நகங்கள வெட்டிடுறேன்னு சொன்னதோட உடனே அத வெட்டிட்டு, இப்ப உம் மவளுக்கு ஓக்கேயாவான்னு கேளு என்றது சிங்கம்.

உடனே அந்த மானு, உன்னோட பல்லு ரொம்ப கூர்மையானது. அதப் பாத்து எம் மக பயப்படுவாளே என்றது. இதோ என்னோட அந்த பல்லையும் எடுத்துடுறேன்னு சொல்லி பல்லப் புடுங்கிப் போட்டுட்டு, இப்ப ஓக்கேயாவான்னு கேட்டுச்சு சிங்கம்.

உடனே அந்த மானு கோவத்துடன், 'அறிவு கெட்ட சிங்கமே! உனக்கு என்ன தகுதி இருக்குது, என்ன தைரியம் இருந்தா, என்னிடத்திலேயே வந்து எம் மகளைக் கேட்பாய்' என்றது.

இதக் கேட்டதும் சிங்கம், 'என்ன, பேச்சு ஒரு மாதிரியாப் போவுது. என்னப் பகச்சுக்காதே. அப்புறம் நீ சிரமப்படுவாய் ஆமா' என்றது.

உடனே மானு, உன்னால இப்ப என்ன பண்ண முடியும்?  உன்னோட கூர்மையான நகத்தையும் இழந்துட்ட; கூர்மையான பற்களையும் இழந்துட்ட. இனி உன்னால என்ன செய்ய முடியும், தைரியம் இருந்தா என்னோட மோதிப்பார் என்றது.

சிங்கம் பயந்தது. தனது வலிமையே கூரிய நகங்களும் பற்களும்தான். அவற்றை இழந்து விட்டோமே என்று கவலைப்பட்டது; கண் கலங்கியது.

     • எதுக்கு இப்ப இந்தக் கதை..?

     இந்தச்சமூகத்தின் வலிமையே...
     சமூக ஒற்றுமையும்
     இறைநம்பிக்கையும்தான்.

அவற்றைச் சுத்தமாய் இழந்து விட்டு, எதிரிகளிடம் அடகு வைத்துவிட்டு, நாம் தனித்தனியே நின்று  போராடி, முழக்கமிட்டு என்ன பயன்..?

🔘 நீங்களே பதில் சொல்லுங்கத்தா...!

No comments:

Post a Comment