குப்பியில் காணுவதுபோல் மனதில் இருப்பதை கண்ட கௌது நாயகம் ஷேகு முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( رضي الله عنه )
மிஸ்ரு நாட்டின் பேச்சாளர் ஷேகு அபுல் ஹஸனுல் ஹம்பலி ( رحمة الله عليه ) கூறுகிறார்கள் :-
நானும் என்னுடைய ஒரு நண்பரும் பக்தாதுக்கு சென்றோம். நாங்கள் இதற்கு முன்பதாக அங்கு சென்றதில்லை. அங்குள்ளவர்களை யாரையுமே எங்களுக்கு தெரியாது. எங்களிடம் ஒரு கத்தி மட்டும்தான் இருந்தது. அந்த கத்தியை விற்று சோறு வாங்கி சாப்பிட்டோம். அது எங்களுக்கு பிடிக்கவேயில்லை. எங்களுக்கு வயிறு நிறம்பவுமில்லை.
அப்படியிருக்கவே நாங்கள் ஷேகு முஹியிதீன் அப்துல் காதிர் ( رضي الله عنه ) வுடைய மஜ்லிஸுக்கு வந்தோம்.
நாங்கள் அங்கு சென்று அமர்ந்தவுடன் ஷேகு அவர்கள் பயான் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.
அதை தொடர்ந்து _ஹிஜாஸில் இருந்து வெளிநாட்டு பயணிகள் இங்கு வந்திருக்கிறார்கள் ! அவர்களிடம் ஒரு கத்தியல்லாமல் வேறொன்றும் இருக்கவில்லை, அதை விற்று சோறு வாங்கி சாப்பிட்டார்கள், ஆனால் அது அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதைக்கொண்டு அவர்களுக்கு வயிறு நிறம்பவுமில்லை !_ என்று ஷேகு அவர்கள் மஜ்லிஸில் சொன்னார்கள் .
இதை கேட்டபோது நான் மிகவும் வியப்படைந்தேன்.
ஷேகு அவர்களுடைய பேச்சு முடிந்தவுடன் உணவு உண்ணுவதற்காக ஸுப்ரா விரிக்க கட்டளையிடப்பட்டது .
நான் என்னுடைய நண்பரிடம் _நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்கள் என ரகசியமாக கேட்டேன் !_ எனக்கு *கிஷ்க்* (தானிய மாவும் தயிரும் கலரந்து உண்டாக்கப்பட்ட ஒரு உணவு வகை) வேண்டும் என்று சொன்னார்.
எனக்கு *ஷஹ்த்* (தேன் உணவு) வேண்டுமென்று என்னுடைய மனதில் நினைத்துக்கொண்டேன்.
உடனேயே இந்த இரண்டையும் (கிஷ்க் & ஷஹ்த்) கொண்டுவர ஷேகு அவர்கள் ஹாதிம்களிடம் (பணிவிடை செய்பவர்கள்) கட்டளையிட்டார்கள் .
அந்த இரண்டையும் ஹாதிம்கள் கொண்டுவந்தபோது , எங்கள் பக்கம் விரலை சுட்டிக்காண்பித்து _அதை அவர்களுக்கு முன் வையுங்கள் !_ என்று ஷேகு அவர்கள் அந்த ஹாதிம்களிடம் சொன்னார்கள்.
ஆனால் ஹாதிம்கள்
எனக்கு முன் கிக்ஷ்க் வைத்தார்கள் , நண்பருக்கு ஷஹ்த் வைக்கப்பட்டது.
உடனே ஷேகு அவர்கள் அந்த ஹாதிம்களிடம் _"அவைகளை ஒன்றோடு ஒன்றை மாற்றி வையுங்கள் அப்போது தான் அது சரியாக இருக்கும்" !_ என்று கட்டளையிட்டார்கள் !
இவ்வளவும் என் கண்ணால் கண்டவுடன் இதற்குமேல் என்னை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை !
நான் சப்தம் உயர்த்திக்கொண்டே மஜ்லிஸிருக்கும் ஜனங்களை தாண்டிக்கடந்து ஓடி ஷேகிடம் சென்றுவிட்டேன் !
அப்போது _மிஸ்ரு நாட்டின் பேச்சாளரை வரவேற்கிறேன் !_ என்று ஷேகவர்கள் சொன்னார்கள் !
( ஆதாரம் பஹ்ஜத்துல் அஸ்ரார் , பக்கம் 73)
No comments:
Post a Comment