ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 11 December 2018

கௌஸுல் அஃலம் வாலிபத்தில் நடந்த சம்பவம்

🌷விலாயத் பெற்றவர்களுடன் விளையாடாதீர்..🌷

அப்துல்லாஹ் இப்னு அபீ இஸ்ரூன்  (رحمة الله عليه ), தமது காலத்தில் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த சட்டக்கலை வல்லுனர்களில் சிரேஷ்டமானவர்களாகத் திகழ்ந்தவர். இவர் தனது வாழ்வில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வை பின்வருமாரு கூறுகிறார்.

✏.சன் மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வதற்காக நான் பக்தாதுக்கு வந்த போது இப்னுஸ் ஸகா என்பவரைக் கண்டேன். அக் காலத்தில் புகழ் பெற்ற சன் மார்க்கக் கல்வி நிலையமான நிழாமிய்யாவில் அவருடன் சேர்ந்து கல்வி கற்று வந்தேன். நாங்கள் நல்லடியார்களைச் சந்திக்கச் செல்வது வழக்கம். அந் நேரத்தில் பக்தாத் நகரில் "அல்கௌஸ்" என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பெரியார் இருந்தார்.
ஒரு முறை நானும் இப்னுஸ் ஸகாவும் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானீ (رحمة الله عليه)  அவர்களும் (அவர் வாலிபராக இருக்கும்) போது மூவரும் அப் பெரியாரை சந்திப்பதற்காகச் சென்றோம். அவ் வழியில் இப்னுஸ் ஸகா பின்வருமாரு கூறினார்: நான் அப் பெரியாரிடம் அவர் பதில் கூற முடியாத ஒரு கேள்வி கேற்கிறேன் என்றார்.
நானோ "நான் அன்னாரிடம் ஒரு கேள்வி கேற்கப் போகிறேன். அவர் என்ன பதில் சொல்வார்" என்று பார்ப்போம் என்றேன். அடுத்தாக அப்துல் காதிர் ஜீலானீ  (رحمة الله عليه) அவர்களோ "அப் பெரியாரிடம் ஏதும் கேள்வி கேற்பதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். அன்னாரின் தரிசிப்பை எதிர்பார்த்தவனாக அன்னாரின் முன்னிலையில் நிற்பேன்" என்றார்.

பிறகு நாம் அன்னார் இருக்கும் இடம் அடைந்தோம். கொஞ்ச நேரம் கழித்த பின்பே அன்னாரைப் பார்க்க முடிந்தது. அப்பெரியோர் முதலில் இப்னுஸ் ஸகாவை கோபித்ததன் பின்னால் அவரைப் பார்த்து உனக்கு கேடு உண்டாகட்டும். என்னால் பதில் கூற முடியாத ஒரு சிக்கலான ஒரு கேள்வியை என்னிடம் கேற்க நினைத்தாய். அதற்குறிய பதில் இவ்வாறு தான் என்று பதிலைக் கூறிவிட்டு உன்னிடத்தில் இறைமறுப்பு - குப்ரு - எனும் தீ கொழுந்து விட்டெரிவதைக் காண்கிறேன். என்று கூறிவிட்டு அடுத்ததாக என்னிடம் , " என்ன கூறப்போகிறேன் என்று பார்க்க நினைத்தாய். அதற்கான பதில் இவ்வாறு தான் என்று பதிலைக் கூறிவிட்டு உனது ஒழுக்கக் கேட்டள் உலகத்தின் மீதுள்ள பற்று உன்னை முழுமையாக ஆட்கொள்ளட்டும்!" என்று கூறினார்.
  
பின்பு கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களைப் பார்த்து அவரைத் தன் அருகே இருக்கச் செய்து கூறினார்கள்: "அப்துல் காதிர் உமது நல் ஒழுக்கத்தின் காரணமாக அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும்      (صلى الله عليه وسلم) திருத்திப் படுத்தி விட்டீர்.
பக்தாத் நகரிலே மக்களுக்கு மத்தியில் நீர் ஓர் கதிரையில் அமர்ந்து " எனது இப்பாதம் அனைத்து இறை நேசர்களின் பிடரியின் மீதும் இருக்கிறது." எனறு நீர் சொல்வதையும் அந்ச நேரத்தில்  வலிமார்கள் அனைவரும் தமது பிடரியை வளைப்பதையும் நான் கான்கிறேன்" என்று கூற அதன் பிறகு எங்களை விட்டும் சென்று விட்டார். பின்பு அவரை நாம் காணவில்லை.

பிறகு அப்துல் காதிர் ஜீலானீ  (رحمة الله عليه) அவர்களது விலாயத்துடைய அடையாலங்கள் வெளியாகின்றன. அனைவரும் அவரை ஓர் இறை நேசர் என்று கருத்தொருமித்துக் கூறினார்கள்.
அப் பெரியார் கூறியது போன்று அப்துல் காதிர் ஜீலானீ (رحمة الله عليه) அவர்கள் கூற ஏனையோர் அங்கீகரித்துக் கொண்டார்கள். இப்னுஸ் ஸகாவோ அவரது காலத்தில் அறிவுத் துைறயில் அநேகமான அறிஞர்களை விடவும் மேலோங்கி இருந்தார். தன்னுடன் விவாதிப் போரை முறியடிப்பதில் பிரபல்யம் பெற்று விளங்கினார். எனவே அவரை கலீபாவாக அவர்கள் தன் அருகில் வைத்துக் கொண்டார். பின்பு ரோம் தேசத்து மன்னரிடம் தூதுவராக அனுப்பினார்.
அவரது அறிவுத் திறனைக் கண்டு வியந்த மன்னர் அவருடன் விவாதம் புரிவதற்காக வேண்டி கறிஸ்தவ மதகுரு மார்களையும் அறிஞர்களையும் ஒன்று கூட்டினார். தனது வாதத் திறமையால் இப்னுஸ் ஸகா, அவர்களை வெற்றி கொண்டார். எனவே ரோம் மன்னனிடம் அவரின் மதிப்பு மேலும் அதிகரித்தது. இப்பொழுது அவருக்கு நாச காலம் ஆரம்பிக்கிறது. அரசருடைய மகள் அவர் கண்களில் படவே அவள் அழகில் வசீகரிக்கப்பட்டார். ஒரு நாள் அவராகவே அரசரிடம் அப் பெண்னை திருமணம் முடித்துத் தருமாறு வேண்டிக் கொண்டார். ஆனாலும் அரசரோ " நீர் ஒரு கிறிஸ்தவராக மாறினாலே உமக்குத் திருமணம் முடித்துத் தருவேன்" என்பதாகக் கூறினார். அப் பெண்னின் அழகில் மயங்கிய இவரோ மார்க்கத்தை விட்டு கிறிஸ்தவராக மாறி அப் பெண்னைத் திருமணம் முடித்துக் கொண்டார்.
     அதன்பின் அவரது நிலமை மாறி விட்டது அல்லாஹ்வின் சாபம் இறங்க ஆரம்பித்து விட்டது. பிறகு நோய்வாய்ப்படவே வீதியில் தூக்கி எறியப்படுகிறார். 🌺🌺🌺🌺🌺🌺

இவர் தற்போது கடை வீதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் கை நீட்டினாலும் கொடிப்பதற்கு ஆளில்லை. மிகவும் கருத்துப்போய் கவலையுடனேயே பாதையோரமாக இருப்பார். புனித குர்ஆனில் ஒரே ஒரு ஆயத்தைத் தவிர அனேகமான வற்றை மறந்து விட்டார். (அந்த ஆயத்தோ இது தான்: "காபிர்கள் தாங்களும் (கியாமத் நாளில்) முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்ரு விரும்புகிறார்" 2-15).

   இப்பொழுது இப்னுஅபீ இஸ்ரூன் (رحمة الله عليه) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு நாள் அவரைப் பாதையோரமாகக் கண்டேன். அப்போது அவரோ மரண தருவாயில் இருந்தார். நான் அவரை கிப்லாவின் பக்கமாகத் திருப்பி வைத்தேன். அவரோ கிழக்குப் பக்கமாக திரும்பிக் கொண்டார். அவரோ நாம் முன்னால் சந்தித்த அப் பெரியாரைப் பற்றி நினைவு காட்டிக் கொண்டிருந்தார். தனக்கு நிகழ்ந்தது அப் பெரியைரின் சாபமே என்பதை உறுதி கொண்டார்.

      இப்னு அபீ இஸ்ரூனாகிய நானோ திமஷ்குக்கு வந்த போது ஸுல்தான் நூருத்தீன் ஷஹீத் என்பவர் என்னை வக்பு இலாகாவுக்கு கட்டாயப் படுத்தி அமர்த்தினார். இப்போது நான் உலக விடயங்களிலே மூழ்க ஆரம்பித்து விட்டேன். அப்பெரியார் எங்கள் மூவர் விடயத்திலும் கூறியது உண்மையாகி விட்டது. இச் சம்பவத்தை உறுதியும் நீதமும் மிக்க பலர் ரிவாயத் செய்துள்ளதால் இது "முதவாதிர்" உடைய அந்தஸ்தை எத்தியுள்ளதாக ஷாபி மத்ஹபின் பிரபலமான சட்டக்கலை வல்லுனரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் அஹ்மத் பின் ஹஜர் அல் தஹதமீ (رحمة الله عليه) அவர்கள் தங்கள் "பதாவா ஹதீஸிய்யா"வில் குறிப்படப்பட்டுள்ளார்கள். பக்கம் 316.

🍀🍀விடயம் புரிகிறதா..........?🍀🍀
☝🏻தறபோது பாரிய தோள்விகளைச் சந்தித்து வரும் வஹ்ஹாபிகள் பல பாகங்களில் இருந்தும் தாமும் ஷாபி மத்ஹபினரே எனறு ஷாபி மத்ஹபினை ஆதாரம் காட்டத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் ஷாபி மத்ஹபின் பத்வாவுக் குறிய கிதாபுகளுடையோரால் இப்படிப்பட்ட விலாயத்து,.கராமத்து எல்லாம் எழுதப்படும் போது வஹ்ஹாபிய ஏஜென்டுகளால் என்ன தான் செய்ய முடியும்......☝🏻

Moulavi irshad (najahi)

🌹🌹🌹 Beruwala🌹🌹🌹

No comments:

Post a Comment