ஜும்மா சிந்தனைகள்..
ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்..!?
அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும்..!?
உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும்..!?
வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும்..!?
உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும்..!?
என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது நபி(ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும்..!?
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன்: 33:21)
மிக அருமை
ReplyDelete