1) நாயகத்தின் பெரிய தந்தையின் மகனார்.
2) கருவிலேயே தாயாரை சிலை வணக்கத்தை விட்டும் தடுத்தவர்கள்.
3) பிறந்தது கஃபாவிற்குள்ளே.
4) கண் விழித்து முதலில் பார்த்தது நாயகத்தின் திருவதனத்தை.
5) அலீ என பெயரும் சூட்டியதும் எம் பெருமானார்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களே! .
6) வளர்ந்தது நாயகத்தின் திருமடியில்.
7) வளர்த்தது அன்னை கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா ).
8) ஹிராக் குகையின் ஊழியர்.
9) இஸ்லாத்தை ஏற்ற முதல் சிறுவர்.
10) இஸ்லாத்தை ஏற்ற இரண்டாவது முஸ்லிம்.
11) நாயகத்துடன் முதல்முதலாக தொழுத ஆண்.
12) சிறுவராயினும் குரைஷியர் மத்தியில் உயிர் உள்ளவரை உங்களுக்கு உதவுவேன் என்று மும்முறை வீரமுழக்கமிட்ட வேங்கை.
13) ஷுஃபே அபீதாலிபில் உதவி செய்த இளைஞர்..
14) உயிரை துச்சமாய் நினைத்து ஹிஜ்ரத்தின் இரவு பெருமானாரின் படுக்கையிலே படுத்த மாவீரர்.
15) சுவனத்துப் பேரரசி அன்னை பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா ) அவர்களை மனைவியாக வஹி மூலம் பெற்றுக் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்.
16) சுவனத்து தலைவர்களான இமாம் ஹஸன்(ரலியல்லாஹு அன்ஹு),இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் தந்தை.
17) பத்ர் களத்தில் முஹாஜிர்களின் தளபதி.
18) உஹத் களத்தின் சோதனை நேரத்தில் நாயகத்துக்கு அரணாக நின்றவர்கள்.
19) அகழ்போரில் ஆயிரம் வீரர்களுக்கு சமமான அம்ர் என்பவனை ஒரே வெட்டில் வீழ்த்தியவர்கள்.
20) கைபர் போரின் வெற்றி நாயகர்.
21) பூமான் நபியின் புனித உமிழ்நீரால் நோய் நீங்கியவர்கள்.
22) ஹுதைபியாவில்
உடன்படிக்கை எழுதிய புனிதர்.
23) மக்கா வெற்றியின்போது, நபிகளாரின் புனித முதுகிலே ஏறி
கஃபாவின் சிலைகளை உடைத்தெறிந்த புனித கால்களுக்கு சொந்தக்காரர்.
24) இறுதி ஹஜ்ஜின்போது,"நான் யாருக்கு எஜமானோ அவருக்கு அலியும் எஜமான்" என்று சோபனம் சொல்லப்பட்டவர்கள்.
25) ஹுனைன் போரின் சமயம் மூஸாவுக்கு ஹாரூனைப் போல எனக்கு நீர் என சோபனம் கூறப்பட்டவர்கள்.
26) நபிகளாரை நீராட்டி, கபனிட்டு, பூஞ்சோலையில் வைத்தவர்கள்.
27) அஹ்லுல் பைத்களின் தலைவர்.
28) முஃமின்களின் வலீ (தலைவர்).
29) அறிவின் தலைவாசல்.
30) அலி நாயகத்தை பார்ப்பதும் வணக்கம்.
31) அலி நாயகத்தை நேசித்தவர் ரஸுலுல்லாஹ்வை நேசித்தவர்; அல்லாஹ்வை நேசித்தவர்.
32) அலி நாயகத்தை வெறுத்தவர் ரஸுலுல்லாஹ்வை வெறுத்தவர்; அல்லாஹ்வை வெறுத்தவர்.
33) அலி நாயகத்தை நோவினை படுத்தியவர் ரஸுலுல்லாஹ்வை நோவினை படுத்தியவராவார்.
34) மறைந்த சூரியன் மீண்டும் திரும்பியது.
35) மறுமையில் "ஹபீபுல்லாஹ்" என்று அழைக்கப்படுபவர்கள்.
36)உலகிலும் ஆகிராவிலும் நாயகத்தின் சகோதரர்.
37) அலியையும் குர்ஆனையும் ஹவ்ழுல் கவ்தர் வரை பிரிக்க முடியாது என்று பூமான் நபியால் புகழப்பட்டவர்கள்.
38) சுவனம் விரும்பும் சுந்தர புருஷர்.
39) அவ்ரத்தைப் பார்க்காத சங்கைக்குரிய முகம்.
40) கைபர் போரிலே நபிகளார் தடவிய புனிதக் கண்கள்.
41) கைபர் கதவை தனியே சுமந்த கைகள்.
42) யா அல்லாஹ் அலியின் உள்ளத்திற்கு வழிகாட்டுவாயாக என்று துஆ செய்யப்பட்ட நெஞ்சம்.
43) நாயகத்துடன் அதிகமாக
தொழுத முஸ்லிம்.
44) அம்பெடுத்த போதும் தொழுகையின் நிலைமாறாத வணக்கசாலி.
45) தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு துறக்கும் வேளையில்,
மிஸ்கீனுக்கும்,அனாதைக்கும்,கைதிக்கும் உணவைக் கொடுத்த கணவன் மனைவி.
46) பாதிரிமாரிடம் முபாஹலா செய்வதற்கு நாயகத்தால் அழைத்துச் செல்லப்பட்ட குடும்பம்.
47) "கர்ரமல்லாஹு வஜ்ஹு" என்று ஸஹாபாக்களில் தனித்துவத்துடன் அழைக்கப்படுபவர்கள்.
48) அலி (ரலியல்லாஹு அன்ஹு) கோபத்தின் மூலமாக நயவஞ்கர்களை ஸஹாபாக்கள் அறிந்து கொள்வார்கள்.
49) நாயகத்துக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆயத்தை அமல் செய்த ஒரே ஸஹாபி.( பின் இந்த சட்டம் மாற்றியமைக்கப் பட்டது).
50) நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் கோபத்தில் இருக்கும் சமயம் பேசக்கூடிய ஒரே ஸஹாபி.
51) "அல்லாஹ் உங்களை நேசிப்பதாக" நாயகம் கூறியதாக அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் வாழ்த்து சொல்லப்பட்டவர்கள்.
52) அலி ( ரலியல்லாஹு அன்ஹு ) இல்லையேல் இந்த உமர் ( ரலியல்லாஹு அன்ஹு ) தவறிழைத்திருப்பேன் என உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கூறிய உத்தமர்.
53) உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கு தன் மகன்களை மெய்காப்பாளர்களாக நியமித்தவர்கள்.
54) யூசுப் அலைஹிஸ்ஸலாம் போன்ற அழகைப் பெற்றவர்கள்.
55) மூஸா அலைஹிஸ்ஸலாம் போன்ற தொழுகையாளி.
56) ஈஸா அலைஹிஸ்ஸலாம் போன்ற உலக பற்றில்லாதவர்கள்.
57) நாயகத்தின் குணங்களைப் பெற்றவர்கள்.
58) நான்காம் கலீபா.
59) அறபு இலக்கணத்தை ஒன்று திரட்டியவர்கள்.
60) குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்.
61) நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் வயதைப்போலவே 63 வயதில் ஷஹீதாகி மறைந்தவர்கள்.
62) மஹ்ரிஃபா ஞானங்களை மானிடருக்கு சொல்லித் தந்த ஞானத்தின் வாசல் .
No comments:
Post a Comment