ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 31 December 2018

ஆமீனின் தத்துவம்

ஆமீனின் தத்துவம் அறிந்து சொல்லுவோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருநாள் பொழுதில் பூமான் நபி ﷺ அன்னவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அன்னவர்களைக் காண வந்தார்கள். பரிசுத்தமாக, அழகாக இருந்தார்கள். சலாம் கூறினார்கள். நபிகளார் ﷺ அன்னவர்கள் கேட்டார்கள், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" அவர்கள் பதில் கூறினார்கள். "நீண்ட நெடுங்காலமாக வருகிறோம். நாங்கள் நெடுங்காலமாய் அல்லாஹ்வை வணங்கி வந்தோம். இதுவரை வந்த வேத வசனங்களிலும் சிறந்த, அழகான வேத வசனம் வந்திருப்பதை கேள்வியுற்றோம். 124,000 நூல்களிலும் இவையே அழகானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி காலத்தில் வெளியாகும், இறுதி நூலாக வெளியாகும் என்று அறிந்தோம். அல்லாஹ் உங்களுக்கு என்ன பரிசு தரவேண்டும் என்று கேட்கும்வரை ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். நாங்கள் சூரா அல்- பாத்திஹாவின் அந்த அழகிய திருவசனங்களையே கேட்க வேண்டும் என்று வேண்டி நின்றோம். அல்லாஹ் எந்த பதிலையுமே கூறவில்லை. நாங்கள் மேலும் ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். அல்லாஹ் கூறினான், 'இந்த சூரா எனது நேசர் முஹம்மத் ﷺ அன்னவர்களுக்கும் அன்னவர்களின் உம்மத்தவர்களுக்கும் மாத்திரமே." 

"நாங்கள் மேலும் ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். அல்லாஹ் மீண்டும், 'உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.'  'சூரா பாத்திஹா எங்களுக்கு தர முடியாது என்று இருப்பதால், நாங்கள் அன்னவர்களின் ﷺ உம்மத்தவர்களாக ஆகும்வரை நீண்ட காலம் வாழ வேண்டும். அன்னவர்களுக்கு சலாம் கூற வேண்டும்; ஒரே ஒருமுறையாவது அல்-பாத்திஹா சூராவைக் கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் மரணிப்பதில் திருப்தி அடைவோம்."

ஹிழுரு அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரே இவர்கள் இருவரும்.

அவர்கள் மாநபிகளார் ﷺ அன்னவர்களிடம் ஷஹாதா சொல்லிக் கொண்டார்கள். அத்துடன் திருப்தி அடைந்துக் கொண்டார்கள். இதன் பிறகு அவர்கள் நபிமார்கள் அந்தஸ்தை விட்டுவிட்டு முஹம்மத் ﷺ அன்னவர்களின் உம்மத் என்ற அந்தஸ்தை அடைந்தார்கள்.

"எங்களுக்காக சூரா பாத்திஹாவை ஒருமுறை ஓதுங்கள் நாயகமே." என்று கேட்டார்கள். அன்னவர்கள் ஓத அதைத் தொடர்ந்து அவர்களும் ஓதினார்கள். இறுதியில், "ஆமீன்" என்று மொழிந்தார்கள்.

அவர்கள் கேட்டார்கள், "யா ரஸூலல்லாஹ், சூரா அல்-பாத்திஹா ஓதுவதால் கிடைக்கக்கூடிய நற்கூலிகள் என்ன?"

நபிகளார்ﷺ அன்னவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் எனக்கு இறுதிநாள் வரை ஆயுளைத் தந்து நான் அதன் நற்கூலிகளை உங்களுக்கு விபரித்தாலும்கூட என் ஆயுள் போதாது. ஆகவே 'ஆமீனின்' நற்கூலிகளை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன்."

"அலிப்' அவனது அர்ஷிலும் 'லாம்' அவனது குர்ஷியிலும்  'யா' லவ்ஹிலும் 'நூன்' கலத்திலும் எழுதப்பட்டுள்ளன. 'ஆமீனில்' இவை நான்கும் ஒன்றாக வருகின்றன."

"யா ரஸூலல்லாஹ், எங்களுக்கு இன்னும் கூறுங்கள்."

"அலிப்' இஸ்ராfபீல் அவர்களின் நெற்றியிலும்  'மீம்' இஸ்ராயீலின் நெற்றியிலும் 'யா' ஜிப்ரீலின் நெற்றியிலும் 'நூன்' அஸ்ராயீலின் நெற்றியிலும் எழுதப்பட்டுள்ளது. 'ஆமீன்' என்று யாராவது ஒருவர் கூறும்போது இந்த நான்கு வானவர்களிலிருந்தும் நற்கூலிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்."

"இன்னும் சொல்லுங்கள் நாயகமே."

"அலிப்' தவ்ராத் வேதத்திலும் 'மீம்' ஸபூரிலும் 'யா' இன்ஜீலிலும் 'நூன்' குர்ஆனிலும் எழுதப்பட்டுள்ளது. யாரொருவர் பயபக்தியோடு பாத்திஹா சூராவை ஓதி 'ஆமீன்' என்று சொல்கிறாரோ அவர் இந்த நான்கு வேதங்களையும் ஓதிய நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்."

"இன்னும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா?"

"ஆம் நாயகமே, சொல்லுங்கள்."

"அலிப்' ஸையுதுனா அபூபக்ரின் நெற்றியிலும் 'மீம்' ஸையுதுனா உமரின் நெற்றியிலும் 'யா' ஸையுதுனா உதுமானின் நெற்றியிலும் 'நூன்' ஸையுதுனா அலியின் நெற்றியிலும் எழுதப்பட்டுள்ளது. யாரொருவர் 'ஆமீன்' என்றுக் கூறுவாரோ அவர் இந்த நான்கு ஸஹாபாக்களிடமிருந்தும் நற்கூலிகளைப் பெற்றுக்கொள்வார்கள்."

இந்த இருவரின் ஆசை பூர்த்தியாகிவிட்டமையால், இருவரும் அல்லாஹ்விடம் தம் உயிரை எடுத்துவிடுமாறு பிரார்த்தனைபுரிய எத்தனித்தப்போது மாநபிகளார் ﷺ அன்னவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கூறினார்கள், "அல்லாஹ்வே உங்களிருவருக்கும் நீண்ட ஆயுளையும் வல்லமையும் தந்துள்ளான். என்னுடைய உம்மத்தவர்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு உங்களின் உதவி தேவை."

ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்களின் உம்மத்தவர்களுக்கு உதவி ஒத்தாசை புரியத்தான் அவர்களிருவருக்கும் நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுத்துள்ளான். இல்லியாஸ் அலைஹிஸ்ஸலாம் கடலில், ஹிழுரு அலைஹிஸ்ஸலாம் நிலத்தில் உதவி புரிவார்கள்.

-ஹஜ்ஜா ஆமினா ஆதில் கத்தசல்லாஹு சிர்ராஹ்
நன்றி: Ahmed Dede Pattissahusiwa
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

Saturday, 29 December 2018

பாதுகாப்பான வேதம்

⭐🌹⭐🌹⭐🌹⭐🌹⭐
*அஸ்ஸலாமு அலைக்கும்*
  *29/12/2018🔹 சனி*
*فكرة اليوم🔸இன்றையச் சிந்தனை*
......................................................
                   ➡3⃣7⃣7⃣⬅

*(தன் பேறாற்றலால் யூத அறிஞரை இஸ்லாத்திற்கு ஈர்த்த இறைமறை குர்ஆன்)*

كان للمأمون مجلس نظر ، فدخل في جملة الناس رجل يهودي حسن الثوب حسن الوجه طيب الرائحة ، قال : فتكلم فأحسن الكلام والعبارة ، قال : فلما تقوض المجلس دعاه المأمون فقال له : إسرائيلي ؟ قال نعم . قال له : أسلم حتى أفعل بك وأصنع ، ووعده . فقال : ديني دين آبائي ! وانصرف . قال : فلما كان بعد سنة جاءنا مسلما ، قال : فتكلم على الفقه فأحسن الكلام ; فلما تقوض المجلس دعاه المأمون وقال : ألست صاحبنا بالأمس ؟ قال له : بلى . قال : فما كان سبب إسلامك ؟ قال : انصرفت من حضرتك فأحببت أن أمتحن هذه الأديان ، وأنت تراني حسن الخط ، فعمدت إلى التوراة فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت ، وأدخلتها الكنيسة فاشتريت مني ، وعمدت إلى الإنجيل فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت ، وأدخلتها البيعة فاشتريت مني ، وعمدت إلى القرآن فعملت ثلاث نسخ وزدت فيها ونقصت ، وأدخلتها الوراقين فتصفحوها ، فلما أن وجدوا فيها الزيادة والنقصان رموا بها فلم يشتروها ; فعلمت أن هذا كتاب محفوظ ، فكان هذا سبب إسلامي . قال يحيى بن أكثم : فحججت تلك السنة فلقيت سفيان بن عيينة فذكرت له الخبر فقال لي : مصداق هذا في كتاب الله - عز وجل - . قال قلت : في أي موضع ؟ قال : في قول الله - تبارك وتعالى - في التوراة والإنجيل : بما استحفظوا من كتاب الله ، فجعل حفظه إليهم فضاع ، وقال - عز وجل - : إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون فحفظه الله - عز وجل - علينا فلم يضع

(الكتاب : تفسير قرطبي  سورة الحجر الآية : ١٥)

*கலீஃபா மஃமூன் அவர்களின் அவையில் ஆய்வரங்கம் நடப்பது வழக்கம். அதில் (மதம் கடந்து) பலரும் பங்கெடுப்பர். அதில் அழகிய முகமும், நறுமணம் பூசி, அழகிய ஆடையணிந்த யூத அறிஞர்‌ ஒருவரும் பங்கெடுத்தார். அவர் மிக அழகிய முறையில் உரையாடினார்.*

*சபை நிறைவுற்றப்போது கலீஃபா மஃமூன் அவர்கள் அவரை அழைத்து “நீங்கள் யூதரா? என்று கேட்டார்.*

*அதற்கு அவர் “ஆம்” என்றார்.*

*அப்போது கலீஃபா மஃமூன் அவர்கள் “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி ஏற்றால் நான் உங்களுக்கு இன்னன்னதை (உதவிகளை) செய்வேன்” என்று வாக்குறுதியளித்தார்.*

*அதற்கு அந்த யூதர் : “என் முன்னோர்களின் மார்க்கமே என் மார்க்கம்” என்று கூறி சென்று விட்டார்.*

*ஒருவருடம் கழித்து அந்த யூதர் முஸ்லிமாக வந்து ஆய்வரங்கில் இஸ்லாமிய சட்டம் குறித்து அழகிய முறையில் உரையாற்றினார். சபை நிறைவுற்றப்போது கலீஃபா மஃமூன் அவர்கள் அவரை அழைத்து “ நம்மிடம்  கடந்த ஆண்டு வந்தவர் தானே நீங்கள்?” கேட்டார்.*

*அதற்கு அந்த மனிதர் “ஆம்” என்றார்.*

*“நீங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கு காரணம் என்ன?” கலீஃபா மஃமூன் கேட்டார்.*

*அதற்கு அந்த மனிதர் “உங்கள் சபையிலிருந்து திரும்பியவுடன் மதங்கள் குறித்து பரிசோதனை செய்ய விரும்பினேன்.*

*நான் அழகிய முறையில் எழுதுபவன் என்ற விஷயம் உமக்கு தெரியும்.*

*நான் தவ்ராத் வேதத்தை கூடுதல் , குறைவு செய்து மூன்று பிரதிகள் எழுதி கிரிஸ்துவ ஆலயத்திற்கு எடுத்துச் சென்றேன். என்னிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டனர்.*

*அதே போன்று இன்ஜீல் வேதத்தையும் கூடுதல், குறைவு செய்து மூன்று பிரதிகள் எழுதி யூத ஆலயத்திற்கு எடுத்துச் சென்றேன். என்னிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டனர்.*

*அதே போன்று குர்ஆனையும் கூடுதல், குறைவு செய்து , இரண்டு தாள்களை நுழைத்து எடுத்துச் சென்றேன். அவற்றை முஸ்லிம்கள் ஆய்வு செய்தனர். அவற்றில் கூடுதல் ,குறைவு இருப்பதை கண்டு அவற்றை வாங்காமல்  தூக்கி எறிந்து விட்டனர்.*

*அப்போது தான் “நிச்சயமாக இது பாதுகாக்கப்பட்ட வேதம்” என்று புரிந்து கொண்டேன். இது தான் நான் இஸ்லாத்தை ஏற்றதற்கு காரணம்” என்றார்.*

*யஹ்யா பின் அக்சம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : அதே ஆண்டு நான் ஹஜ்ஜிக்கு சென்றேன். அப்போது சுப்யான் இப்னு உயைனா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை சந்தித்து இந்த தகவலை கூறினேன்.*

*அதற்கு அன்னார் “இதற்கு சான்று குர்ஆனிலே இருக்கிறது” என்று கூறினார்கள்.*

*அப்போது நான் “குர்ஆனில் எந்த இடத்தில் வருகிறது?” என்றேன்.*

*அதற்கு அன்னார் “தவ்ராத் , இன்ஜீல் வேதங்கள் சம்பந்தமாக அல்லாஹ் கூறும்போது அவர்கள் (கிருஸ்துவ, மற்றும் யூத அறிஞர்கள்)  அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் (5-44) என்று கூறி அந்த இரு வேதங்களை பாதுகாக்கும் அவர்களிடமே ஒப்படைத்தான். ஆனால் அவர்கள் அதனை வீணடித்து விட்டனர்.*

*இன்னும் அல்லாஹ் “நிச்சயமாக நாம் தான்  இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்” (15-9)என்று கூறிவிட்டான். அதனால் தான் குர்ஆன் பாதிப்படைய வில்லை.” என்று கூறினார்கள்.*

🖊மௌலவி
*மு.அபூ அமீன் ஃபாஜில் பாகவி.* 
*பேராசிரியர் : மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி. நீடூர்.*
🌹☀🌹☀🌹☀🌹☀🌹

Wednesday, 26 December 2018

இறைநேசர்களை இறைவனேகண்ணியப்படுத்துகிறான்

இஷ்கேஅவ்லியா16

டெல்லியிலுள்ள
அலிகார் யுனிவர் சிட்டிக்கு

"அமெரிக்காவின்
புகழ்பெற்ற பேராசிரியர்
அர்னால்ட் என்பவர்
வருகை தருகிறார்..!"

பின்பு
"இந்தியாவை ஆட்சி செய்த
மொகலாய மன்னர்களின்
மண்ணரைகளை
சுற்றிப் பார்த்துவிட்டு
அமெரிக்கா
சென்ற பின்.."

இந்தியாவைப்
பற்றிய
ஒரு வரலாற்று நூலை எழுதினார்..

அதில்
இவ்வாறு எழுதியுள்ளார்.

"இந்தியாவில்
நான் ஒரு
அதிசயத்தை பார்த்தேன்..!"

"இந்தியாவை
ஆட்சி செய்த
புகழ்பெற்ற
பெரும் பெரும்
மொகலாய
மன்னர்களின்
மண்ணரைகள்
எல்லாம்
தூசிகளும்...
குப்பைகளுமாக..
காட்சியளித்தன..!"

"அவர்களின் தர்பாரை மக்கள்
செருப்பு காலோடு
சுற்றி
பார்க்கின்றனர்.!"

ஆனால்
"எந்த ஒரு கோட்டையும்
ஆட்சி... அதிகாரமும்
இல்லாமல்..
எளிமையாக வாழ்ந்த...

கரீபே நவாஸ்
ஹஜ்ரத்
காஜா முயீனுத்தீன்
ஜிஷ்தி
ரலியல்லாஹு
அன்ஹூ அவர்களை

#சுல்தானுல்இந்த்
இந்தியாவை ஆளும் மன்னர்
என
மக்கள் எல்லோரும்
புகழ்கின்றனர்
..!"

"அவ்வளவு
மரியாதை செய்து
கொண்டாடுகின்றனர்..!"

"இதைப் பார்த்து
நான் பிரமித்து
போய்விட்டேன்..!"
என எழுதியுள்ளார்.
.... மௌலானா
மேலப்பாளையம்
காஜா முயீனுத்தீன்
பாகவி ஹஜ்ரத்
அவர்கள் பயானிலிருந்து...
by
U.அபூதாஹிர்
ஃபைஜி பாகவி
கும்பகோணம்
9443061063
Abuthahir Faizee baqavi.com

ஃபாத்திமா(ரழி)

🌹🌹அபூ ராபியா மஹ்ழரி 🌹🌹
சுவனத்து பெண்மணியான அன்னை  ஃபாத்திமா(ரழி) அவர்களைப் பற்றிய  அரிய பல தகவல்கள்💐💐💐
*நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன*

1.நபி(ஸல்) நான்காவது பிள்ளை பாத்திமா (ரலி).

2.பாத்திமா(ரலி) நபி(ஸல்) 41 ஆம் வயதில் பிறந்தார்கள்.

3. நபி (ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஆகா இளையவர் பாத்திமா (ரலி).

4.பாத்திமா(ரலி) திருமண வயது 15 ஆண்டுகள் 5 மாதங்கள்.

5.பாத்திமா(ரலி) கணவர் பெயர் அலி(ரலி).

6.ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு பாத்திமா(ரலி)க்கு திருமணம் நடந்தது.

7.பாத்திமா என்றால் "நரகத்தை விட்டும் தடுக்கப்பட்டவர்" என்று பொருள்.

8.பாத்திமா என்ற பெயர் நபிக்கு இல்ஹாம் மூலம் அறிவிக்கப்பட்டது.

9.பாத்திமா(ரலி) அவர்கள் சொர்கத்து பெண்களின் தலைவி ஆவார்கள்.

10.நபி(ஸல்) அவர்களுக்கு நுபுவத்திற்கு பின் பாத்திமா(ரலி) பிறந்தார்கள்.

11.பாத்திமா(ரலி) மீது தான் நபி(ஸல்) அதிகம் அன்பு வைத்தார்கள்

12.நபி(ஸல்) பயணம் செய்யும் போது கடைசியாக செல்லும் வீடு பாத்திமா(ரலி) வீடு.

13.பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள்.

14.பாத்திமா(ரலி) 3 பெண் குழந்தைகள் பெற்றார்கள்.

15.பாத்திமா(ரலி)க்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

16.நபி(ஸல்) பரம்பரை பாத்திமா(ரலி) மூலமாக பரவியது.

17.பாத்திமா(ரலி) சிறு வயதில் தாயை இழந்தார்கள்.

18.பாத்திமா(ரலி) அவர்களின் தாயார் பெயர் கதீஜா(ரலி).

19.பாத்திமா(ரலி)யை நபி(ஸல்) ஈரக்குலைத் துண்டு என்றார்கள்.

20.பயணத்திலிருந்து நபி(ஸல்) திரும்பியதும் முதல் சந்திப்பு பாத்திமா(ரலி).

21.நபி(ஸல்) இறந்து 6 மாதங்கள் சென்ற பின் பாத்திமா(ரலி) இறந்தார்கள்.

22.பாத்திமா(ரலி) முதல் குழந்தை ஆண் குழந்தை ஆகும்.

23.பாத்திமா(ரலி) இரண்டாவது பெண் குழந்தை பெயர் -உம்மு குல்தூம்(ரலி)

24.பாத்திமா(ரலி)யின் பிரபலமானகுழந்தைகள் ஹஸன், ஹுஸைன்(ரலி).

25.பாத்திமா(ரலி) முதல் பெண் குழந்தை பெயர்- ருகையா(ரலி).

26.ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.

27.பாத்திமா(ரலி)க்கு 2 வருடம் கழித்து குழந்தை பிறந்தது.

28.பாத்திமா(ரலி) முகத்தோற்றம் நபி(ஸல்) அவர்கள் போன்றே இருந்தது.

29.பாத்திமா(ரலி)யின் மூன்றாவது பெண் குழந்தை ஜெய்னபு(ரலி).

30.பாத்திமா(ரலி)க்கு முதலில் பிறந்த குழந்தை ஹஸன்(ரலி).

31.பாத்திமா(ரலி)யின் மூன்றாவது குழந்தை முஹ்ஸின்(ரலி).

32.பாத்திமா(ரலி)யின் இரண்டாவது குழந்தை ஹுஸைன்(ரலி).

33.முஹ்சின்(ரலி) குழந்தை பருவத்தில் இறந்தது.

34.பாத்திமா(ரலி) ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் நோன்பு பிடிப்பார்கள்.

35.பாத்திமா(ரலி) ரமலான் பிறை 20-யில் பிறந்தார்கள்.

36.பாத்திமா(ரலி)யின் சிறப்பு பெயர் ஸஹ்ரா ஆகும்.

37.ஸஹ்ரா என்றால் பிரியமானவர் எனப் பொருள்.

38.பாத்திமா(ரலி)க்கு 8 சிறப்பு பெயர்கள் உண்டு.

39.சித்தீ்கா-சிறப்பு பெயர்களில் ஒன்றாகும்
40.ஷியாக்கள் பிஆதிம(ரலி)க்கு 69 பெயர்கள் சூட்டியுள்ளார்கள்.

41.பாத்திமா(ரலி) மதீனாவில் பருவமெய்தினார்கள்.

42.பாத்திமா(ரலி) திருமணம் அல்லாஹ்வின் உத்தரவு படி தான் நடந்தது.

43.பாத்திமா(ரலி)யை அபுபக்ர்(ரலி) பெண் கேட்டார்கள்.

44.பாத்திமா(ரலி)யை அப்துர் ரஹ்மான் இப்னு அவுஃப் பெண் கேட்டார்கள்.

45.பாத்திமா(ரலி) பெரிதும் நாணமுள்ளவராக இருந்தார்கள்.

46.பாத்திமா(ரலி)யை உமர்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.

47.பாத்திமா(ரலி) திருமணம் எளிமையாக நடந்தது.

48.பாத்திமா(ரலி)யை உஸ்மான்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.

49.பாத்திமா(ரலி) மிகவும் இரக்க குணம் உள்ளவர்கள்.

50.பாத்திமா(ரலி) ஒருபோதும் கடுஞ்சொல் பேசியது இல்லை.

51.பாத்திமா(ரலி) வீட்டு வேலை செய்வதில் ஒரு போதும் சோம்பல் கொண்டதில்லை.

52.பாத்திமா(ரலி) ஒரேய நேரத்தில் 5 வேலை செய்வார்கள்.

53.பாத்திமா(ரலி) வீட்டு வேலை செய்யும் போது குர்ஆன் ஓதுவார்கள்.

54.பாத்திமா(ரலி) வேலைக்காரியுடன் முறை வைத்து கொள்வார்கள்.

55.பாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

56.பாத்திமா(ரலி) பழைய ஆடைகளை விரும்பி அணிவார்கள்.

57.பாத்திமா(ரலி) ஓட்டுப்போட்ட துணிகளையே அணிந்துள்ளார்கள்.

58.உலகில் ஏழைப் பெண்களில் கொடையாளி பாத்திமா(ரலி).

59.பாத்திமா(ரலி) வீட்டை விட்டு வெளியேறுவது மிக குறைவு.

60.பாத்திமா(ரலி) வியாழன்,சனி ஜியாரத் செய்வார்கள்.

61.நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு பாத்திமா(ரலி) ஒரு போதும் சிரிக்கவே இல்லை.

62.நபி(ஸல்) இறந்த பின் பாத்திமா(ரலி) இரவு பகல் அழுது கொண்டே இருந்தார்கள்.

63.உலகில் அதிகம் அழுதவர்களில் 8-வது நபர் பாத்திமா(ரலி).

64.பாத்திமா(ரலி) 29-வது வயதில் வஃபாதானார்கள்.

65.சுவனப் பெண்களில் பாத்திமா(ரலி)யே சிறந்த பெண் ஆவார்கள்.

66.மறுமையில் பெண்களுக்கு பாத்திமா(ரலி) சிபாரிசு செய்வார்கள்.

67.பெண்களில் முதன்முதலில் சுவனம் புகுபவர் பாத்திமா(ரலி) தான்.

68.பாத்திமா(ரலி)க்கு காத்தூனே ஜன்னத் என்ற புகழ் பெயர் உண்டு.

69.பாத்திமா(ரலி) உடல் இரவில் அடக்கம் செய்யப் பட்டது.

70.ஜன்னத்துல் பகீயில் பாத்திமா(ரலி)யை அடக்கம் செய்யப்பட்டது.

71.பாத்திமா(ரலி) மக்காவில் பிறந்து மதினாவில் இறந்தார்கள்.

72.பாத்திமா(ரலி) இறந்து 7-வது நாள் அலி(ரலி) திருமணம் புரிந்தார்கள்.

73.பாத்திமா(ரலி) அவர்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர்கள்.

74.பாத்திமா(ரலி)க்கு 3 சகோதரிகள்,3 சகோதரர்கள் இருந்தார்கள்.

75.பாத்திமா(ரலி) மூத்த சகோதரி பெயர்-ஜய்னபு(ரலி)
இரண்டாவது சகோதரி-ருக்கையா(ரலி)
மூன்றாவது சகோதரி-உம்முகுல்தூம்(ரலி).

76.மூன்று சகோதரர்கள்:-
●காசிம்
●இப்ராஹிம்
●அப்துல்லாஹ்

77.பாத்திமா(ரலி) எப்போதும் உளூ உடனே இருப்பார்கள்.

78.பாத்திமா(ரலி) தன் கணவன் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.

79.பாத்திமா(ரலி) பற்றி அல்லாஹ் குர்ஆன் வசனம் இறக்கி உள்ளான்.

80.பாத்திமா(ரலி) தன் மாமியாருடன் ஒரு போதும் சண்டையிடவில்லை.

81.பாத்திமா(ரலி) பெரும்பாலும் சோள ரொட்டி தான் சாப்பிட்டார்கள்.

82.பாத்திமா(ரலி)க்கு ஜாகியா,ராலியா என்ற பெயர்கள் உண்டு

83.பாத்திமா(ரலி) அதிகமாக பட்டினியாக இருந்துள்ளார்கள்.

84.பாத்திமா(ரலி) நாள் தவறாமல் இரவு வணக்கம் செய்வார்கள்.

85.பாத்திமா(ரலி) சில சமயம் கால் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள்.

86.பாத்திமா(ரலி) தனது வாழ்நாளில் பொய் சொன்னதில்லை.

87.பாத்திமா(ரலி) பிறர் தன்னை புகழ்வதை ஏற்க மாட்டார்கள்.

88.பாத்திமா(ரலி) சுஜுதில் இருக்கும் போது ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.

89.ஹஸன்(ரலி) விஷம் வைத்து கொல்லப்பட்டார்கள்.

90.ஹுஸைன்(ரலி) சுஜுதில் இருக்கும் போது வாழால் வெட்டப்பட்டார்கள்.

91.பாத்திமா(ரலி) அவர்கள் சரியான பதில் கூறுபவர்களாக இருந்தார்கள்.

92.பாத்திமா(ரலி) உமாமாவை மருமணம் செய்து கொள்ள கணவரிடம் வசியத் செய்தார்கள்.

93.பாத்திமா(ரலி) தன்னிடம் உள்ள சிறந்த பொருளையே தானம் செய்வார்கள்.

94.பாத்திமா(ரலி) சுபுஹுக்கப் பின்னர் தூங்க மாட்டார்கள்.

95.பாத்திமா(ரலி)யும் அலி(ரலி)யும் அரபுக் கவிதைகளில் உரையாடிக் கொள்வார்கள்.  
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲.                                                🌹அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப்பற்றிய அரிய தகவல்:🕋அல்குறைஷி ஹஜ் சர்வீஸ்🌷🌷🌷🌷7418850699, 9894736985, 9943218849, 9655588856

பிஷ்ருல்ஹாஃபி (ரஹ்)

#இஷ்கேஅவ்லியா15
#இறைநேசர்கள்
#எப்படி
#உருவாகிறார்கள்..?
(*(*(*(*(*(*(***)*)*)*)*)*)*)

அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்களிடம்
ஒரு பெண்மணி
வந்து கேட்டார்..

"நாங்கள்
நிலவின்
வெளிச்சத்தில்
மொட்டை மாடியில்
நூல் தயாரிப்பவர்கள்..!"

"எங்கள் ஊரில்
ஏதாவது ஒரு
விஷேசம் நடந்தால்..."

"எங்கள் தெருவழியாக
லாந்தர் விளக்குகளை
தூக்கி செல்வார்கள்.."

"அந்த
வெளிச்சத்தில்
நாங்கள்
சீக்கிரம் நூல்
திரித்து விடுவோம்..!"

"அந்த வெளிச்சத்தில்
நூல் திரிப்பது
ஹலாலா..?
மார்க்கத்தில்
அனுமதி உண்டா..?" என
அப்பெண்மணி
கேட்தும்

"என் காலத்தில்
இப்படிபட்ட
சீதேவிகளா..?என
ஹன்பல்
ரஹ்மத்துல்லாஹி
தேம்பித் தேம்பி
அழுதார்கள்..!"

பிறகு
من انت  ?..நீ யார்
என்று கேட்டார்கள்.

انا اخت بشر
பிஷ்ர் அவர்களின்
சகோதரி என்றதும்..

ஹன்பல்-ரஹ்
சொன்னார்கள்

"உன்னுடைய வீட்டில்
ஆன்மீகத்தின்
பேரொளி பிறக்கும்..
இறைநேசர்கள்
வந்து போகும்
இடமாக.. தங்கும்
இடமாக..
உன்வீடு மாறும்..!"
என்றார்கள்.

"அதேபோல்
ஆன்மீகத்தின்
பிரகாசமாக
ஆஷிகே ரசூல்
மாபெரும்
இறைநேசச் செல்வர்
#பிஷ்ருல்ஹாஃபி
ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள்
ஜொலித்தார்கள்..!"

"அவர்களிடம்
முரீதாக-சீடராக
மண்டியிட்டு
அல்லாஹ்வை அறியும்
ஆன்மீக ஞானத்தை...
இமாம் ஹன்பல்
(ரஹ்) அவர்கள்
படித்தார்கள்..!"
..........

"இறைநேசராக
அல்ல
இறைநேசர்களின்
குடும்பத்தினராக கூட
நம்மால்
வாழ முடியாது!"

"அல்லாஹ்
அவர்களைப் போல்
வாழும் பாக்கியத்தை
நம் எல்லோருக்கும்
அருள் புரிவானாக..!"
..... மௌலானா
S.S.ஹைதர் அலி
மிஸ்பாஹி ஹஜ்ரத்
அவர்கள் பயானிலிருந்து...
by
அபூதாஹிர்
ஃபைஜி பாகவி
கும்பகோணம்
9443061063
Abuthahir Faizee baqavi.com

Saturday, 22 December 2018

دعاء الخضر عليه السلام

* بسم الله ما شاء الله لا يسوقُ الخير إلا الله.

* بسم الله ما شاء الله لا يصرف السوءَ إلا الله.

* بسم الله ما شاء الله ما كانَ من نعمةٍ فمن الله.

* بسم الله ما شاء الله ولا حول ولا قوة إلا بالله. [يقال ثلاث مرات].

فائدة: دعاء الخضر عليه السلام ينفع بإذن الله لتيسير الرزق وللحفظ من المكروه، قال ابن عباس رضي الله عنه: "من قالهنَّ حين يُصبح وحين يمسي ثلاث مرات ءامنه الله من الغرق والحرق والسرق ومن الشياطين والحية والعقرب".