ராத்திப் (ஹத்தாத்)
*********************
ராத்திப் - நிலை மாறாதது, ஸ்திரமாக இருத்தல், நேரானது என்றெல்லாம் இதற்கு பொருள்கள் உள்ளன.
ஒரு கிராமம் அல்லது ஓர் ஊரினைப் பாதுகாக்கும் படைவீரர் என்னும் பொருளும் ராத்திப் என்னும் சொல்லுக்கு வழங்கப்படுகிறது.
முஅதஸிலாக்கள், கத்ரியாக்கள் போன்ற பித்அத்வாதிகள் ஹழரமெளத் பிரதேசத்தில் ஊடுருவியபோது ,மக்களை பித்அத் கொள்கை குழப்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஹழரமெளத்தில் வாழ்ந்த பெரியார்கள் ஹத்தாது இமாமை அணுகி குர்ஆன், ஹதீஸ் வாக்கியங்களில் இருந்து அவ்ராது ஒன்றை நீங்கள் தொகுக்க வேண்டும், அந்த ராத்திப் சபைக்கு வருகிற மக்களிடம் பித்அத் கொள்கைகளை மறுத்தும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை எடுத்துரைக்கவும் வழி ஏற்படும் என்று கூறினர்.
பெரியோர்களின் வேண்டுதலுக் கேற்ப குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆக்கம் செய்யப் பட்டதே ஹத்தாது ராத்திப் ஆகும்.
ஹிஜ்ரி 1072-ல் திரியம் பட்டணத்தின் பகுதியான ஹாவி பள்ளிவாசலில் இந்த ராதிப் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹழரமெளத் பிரதேசத்திலும் பின்னர் யமன்தேசம் முழுவதும் இந்த ராத்திப் பரவிற்று.பின்பு ஓமன், கத்தார், மலேசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆசியா, மிஸ்ரு, ஷாம், இந்தியா, ஈராக் முதலிய நாடுகளிலும் இதனை ஓதும் வழமை ஏற்பட்டது.
இதனை இயற்றிய ஹத்தாது இமாம் அவர்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் இஷா தொழுத பின்பும், ரமலான் மாதத்தில் மட்டும் இஷா தொழுகைக்கு முன்பும் ஓதிவந்தார்கள்
இன்றும் கேரளாவின் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு நாளும் இஷாவுக்கு முன்பு அல்லது பின்பு ஓதப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment