Thursday, 16 February 2017

அன்றைய ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும்

Naseer Misbahi:
السلام عليكم ورحمة الله

அன்றைய ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும்

👇👇👇

 முன்னுரை – எத்தனையோ விஷயங்களில் முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு இல்லாதது போன்று அரசியல் விஷயத்திலும் விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. அதனால் நாட்டை ஆள வேண்டிய நாம் பிறரின் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம். மற்றொரு புறம் நம்முடைய இறையச்சத்தில், அமல்களில் உள்ள குறைபாடு நம்மை இந்துத்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கிறது

وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139ال عمران)

மூஸா அலை அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்று அல்லாஹ்விடம் கேட்டு எங்களிடம் கூறுங்கள். அதன்படி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் கேட்க அல்லாஹ் கூறினான். நான் மக்கள் மீது திருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் நல்ல ஆட்சியாளர்களை நான் அமர்த்துவேன். நான் மக்கள் மீதுஅதிருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் அவர்களை கெட்ட ஆட்சியாளர்களின் மூலம் சோதிப்பேன். என்று அல்லாஹ் கூறினான்.

 இவ்வாறே நபி ஈஸா அலை அவர்களும் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நீ மக்கள் மீது திருப்தியுடன் இருப்பதற்கும், அதிருப்தியுடன் இருப்பதற்கும் என்ன அடையாளம் என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான் திருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் இறக்குவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை நிறுத்தி விடுவேன். மேலும் நல்ல ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். ஆனால் நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் நிறுத்தி விடுவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை இறக்குவேன். மேலும் கெட்ட ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். என்று அல்லாஹ் கூறினான்.

நல்ல ஆட்சி அமைவதின் அவசியம்

 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னிடம் ஒரேயோரு பிரத்தியேகமான துஆவை அல்லாஹ் வழங்கி நீ விரும்பியதைக் கேள் என்றால் யாஅல்லாஹ் நல்ல ஆட்சியாளரைக் கொடு என்று தான் கேட்பேன். ஏனெனில் மற்ற விஷயங்கள்   எனக்கு மட்டுமே பயன்தரும். ஆனால் நல்ல ஆட்சியாளர் அமைந்தால் மக்கள் அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்றார்கள்

நீதம் நிறைந்த அன்றைய ஆட்சியாளர்கள்

                தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குடும்பம் பசியோடு இருப்பது கண்டு மிகவும் கவலைப்பட்டு உமர் ரழியல்லாஹு அன்ஹுஎடுத்த நடவடிக்கையும், அந்த ஏழைக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை அங்கிருந்து நகராமல் இருந்ததும்..

عن أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقةوأخذ غرارة  وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي (كنز العمال)

உதவிக்கு ஆளில்லாமல் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்த போது உமர் ரழியல்லாஹு அன்ஹு உடனே தன் மனைவியை அழைத்து வந்த சம்பவமும்,  அச்சமயத்திலும் தன்னை யார் என்றே காட்டிக் கொள்ளாத எளிமையும்

عن أنس بن مالك بينما أمير المؤمنين عمر يعس ذات ليلة إذ مر بأعرابي جالس بفناء خيمة فجلس إليه يحدثه ويسأله ويقول له: ما أقدمك هذه البلاد؟ فبينما هو كذلك إذ سمع أنيناً من الخيمة فقال: من هذا الذي أسمع أنينه؟ فقال: أمر ليس من شأنك، امرأة تمخض، فرجع عمر إلى منزله وقال: يا أم كلثوم شدي عليك ثيابك واتبعيني، قال: ثم انطلق حتى انتهى إلى الرجل فقال له: هل لك أن تأذن لهذه المرأة أن تدخل عليها فتؤنسها، فأذن لها فدخلت فلم يلبث أن قالت يا أمير المؤمنين بشر صاحبك بغلام، فلما سمع قولها أمير المؤمنين وثب من حينه فجلس بين يديه وجعل يعتذر إليه فقال: لا عليك!! إذا أصبحت فائتنا فلما أصبح أتاه ففرض لابنه في الذرية وأعطاه(تاريخ الاسلام

பைத்துல்மால் அலுவலகத்தை சுத்தம் செய்த போது கீழே கிடந்த ஒரு வெள்ளி நாணயம் தன் மகன் கையில் இருந்ததால் பதறிப்போன உமர் ரழியல்லாஹு அன்ஹு

عن هشام بن حسان قال:كسح أبو موسى بيت المال فوجد فيه درهما

فمر به ابن لعمر بن الخطاب فأعطاه إياه فرأى عمر الدرهم مع الصبي فقال:من أين لك هذا؟ فقال: أعطانيه أبو موسى فأقبل عمر على أبي موسى فقال:أما كان لك في المدينة أهل بيت أهون عليك من آل عمر؟ أردت أن لا تبقيأحد من أمة محمد صلى الله عليه وسلم إلا طالبنا بمظلمة في هذا الدرهمفأخذ الدرهم فألقاه في بيت المال(كنز العمال

சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் போட்டா போட்டி

أن عمر بن الخطاب كان يتعاهد عجوزا كبيرة عمياء فى بعض حواشى المدينة من الليل فيستسقى لها ويقوم بأمرها فكان إذا جاءها وجد غيره قد سبقه إليها فأصلح ما أرادت فجاءها غير مرة فلا يسبق إليها فرصده عمر فإذا هو بأبى بكر الصديق الذى يأتيها وهو خليفة فقال عمر أنت لعمرى [كنز العمال]

ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் சில...

மக்களில் ஒரு சமூகத்திற்கு தலைமை ஏற்பவர் அந்த சமூகத்தின் பணியாளரைப் போன்றாவார்

أن الأحنف بن قيس قدم على عمر في وفد من العراق قدموا عليه في يوم صائف شديد الحر وهو متحجز بعباءة يهنأ بعيرا من إبل الصدقة فقال: يا أحنف ضع ثيابك وهلم وأعن أمير المؤمنين على هذا البعير فإنه من إبل الصدقة فيه حق اليتيم والأرملة والمسكين فقال رجل يغفر الله لك يا أمير المؤمنين فهلا تأمر عبدا من عبيد الصدقة فيكفيك هذا؟ فقال عمر: يا ابن فلانة وأي عبد هو أعبد مني ومن الأحنف بن قيس هذا إنه من ولي أمر المسلمين فهو عبد للمسلمين يجب عليه لهم ما يجب على العبد لسيده من النصيحة وأداء الأمانة.

பதவியை விரும்புபவராக இருக்கக் கூடாது. பதவியை மிகவும் விரும்புபவர் நீதம் செலுத்த மாட்டார்

قَالَ عُمَرُ رضي الله عنه:مَا حَرَصَ رَجُلٌ كُلَّ الْحِرْصِ عَلَى الإِمَارَةِ فَعَدَلَ فِيهَا.(مصنف ابن ابي شبية)عن عَبْد الرَّحْمَنِ بْن سَمُرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ لَا تَسْأَلْ الْإِمَارَةَ فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا(بخاري)

மக்கள் பிரதிநிதிகள் இலஞ்சம் பெறுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்த விதம்

عن أَبي حُمَيْدٍ السَّاعِدِيُّ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي أَسْدٍ يُقَالُ لَهُ ابْنُ الْأُتَبِيَّةِ عَلَى صَدَقَةٍ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ قَالَ سُفْيَانُ أَيْضًا فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ مَا بَالُ الْعَامِلِ نَبْعَثُهُ فَيَأْتِي يَقُولُ هَذَا لَكَ وَهَذَا لِي فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ فَيَنْظُرُ أَيُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْتِي بِشَيْءٍ إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ (بخاري)

மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை கூறிய உமர்ரழியல்லாஹு அன்ஹு

عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان)

அன்றைய ஆட்சியாளர்களைப் போல் இன்றைய ஆட்சியாளர்கள் எவரும் இல்லை என்பதே உண்மையாகும். இருப்பினும் எவரேனும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதாவது எந்த ஆட்சியாளர்களும் சரியில்லை என்றெண்ணி நாம் ஓட்டுப் போடாமல் புறக்கணித்தாலும் நமக்கு ஆபத்து தான். ஏனெனில் அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடும். அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்ததாக ஆகி விடும். ஆகவே ஓட்டுப் போட வேண்டும் என்கிற நிர்பந்தமான சூழ்நிலையில் எதிரிகளில் எந்த எதிரி மிக மோசமான எதிரி.. எவர் சுமாரான எதிரி என்பதை கவனித்து மோசமான எதிரியை விட்டும் தப்பிக்க சுமாரான எதிரிக்கு வாக்களிக்கலாம்.  எவர் முதுகில் குத்துவார், எவர் வயிற்றில் என்பதை கவனித்து வயிற்றில் குத்த வருபவரிடமிருந்து முடிந்த வரை தப்பிக்க முடியும். ஆனால் முதுகில் குத்துபவரிடமிருந்து நாம் சுதாரித்துக் கொள்ள முடியாது. ஆகவே இரண்டாமவரை விட முந்தியவரே மேலானவர் என்றெல்லாம் யோசித்து வாக்களிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுப் போட பணம் வாங்கலாமா ?

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَ

هْدَى لَهُ هَدِيَّةً فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ الرِّبَا(احمد)

ஊழல் அரசியல்வாதி தருவது கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தெரிந்தும் அதை வாங்குவது அவருடைய பாவத்தில் கூட்டு..

عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنهعَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ:مَنِ اشْتَرَى سَرِقَةً وَهُوَ يَعْلَمُ أَنَّهَا سَرِقَةٌ فَقَدْ شْرَكَ فِى عَارِهَا وَإِثْمِهَا(سنن الكبري)

தனக்கு ஹலாலாக இல்லாத பணத்தைப் பெறுவதில் அந்தக் காலத்தில் நல்லவர்களின் மனதில் இருந்த பயம்

மக்காவில் வசித்த ஒரு ஏழைக் கணவன், மனைவி இருவருமே ஒரு நேரத்தில் உண்ண உணவின்றி வறுமையில் இருக்கும்போது கணவன் தன் மனைவியிடம் நான் இப்போது கஃபாவுக்குச் சென்று தவாஃப் செய்வேன். அல்லாஹ் எனக்கு ஏதேனும் ரிஜ்க் வழங்குவான் என்று கூறிச் சென்றார்.  சொன்னது போல் தவாஃப் செய்து முடித்தவுடன் காலுக்கு அடியில் 100 தீனார்கள் கொண்ட ஒரு பை இருந்தது. அல்லாஹ் தான் தந்துள்ளான் என்றெண்ணி வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆனால்  இந்தக் காலத்துப் பெண்களைப் போல் அக்காலத்துப் பெண்கள் இல்லை. இவ்வளவு சிரமத்திலும் கூட அந்த மனைவி கூறினார். இது நமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. நல்ல முறையில் இதை எங்கே எடுத்தீர்களே அங்கேயே கொண்டு போய் வைத்து விடுங்கள். என்றவுடன் அவரும் உடனடியாக அதை கஃபாவுக்கு கொண்டு சென்றார். அந்த நேரத்தில் தான் ஒரு செல்வந்தர் அங்கு நின்று கொண்டு என்னுடைய 100 தீனார் பணப்பையைக் காணவில்லை. யாராவது எடுத்தீர்களா என்று அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார். உடனே இவர் அருகில் சென்று இதோ உங்களுடைய பை. அதை நான் தான் எடுத்தேன் என்றவுடன் அந்த மனிதர் அந்த 100  தீனார்களுடன் இன்னும் 900 தீனார்கள் சேர்த்து ஆயிரம் தீனார்களாக இவரிடமே கொடுத்து இதை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பணத்தை காணவில்லை என்று அறிவிப்புச் செய்தவர் அதை திரும்பக் கொண்டு வந்து வந்தால் அதை ஆயிரமாக என்னிடம் தருகிறாரே என்றெண்ணி அவரிடமே அதைப்பற்றிக் கேட்க அவர் கூறினார். நான் எகிப்தில் இருந்து வருகிறேன். என்னிடம் ஒரு செல்வந்தர் இந்த ஆயிரம் தீனார்களை கஃபாவில் நாணயமான யாரேனும் ஒருவருக்கு தர்ம ம் செய்து விடுங்கள் என்றார். அவரிடம் நான் அவ்வளவு கூட்டத்தில் நாணயமானவரை நான் எவ்வாறு தேடுவது என்று கேட்க, அவர் தான் இந்த யோசனையை என்னிடம் கூறினார் அதாவது நீங்கள் முதலில் 100 தீனாரை கீழே போட்டு விடுங்கள். அதை யார் எடுத்து விட்டு திரும்ப உங்களிடமே கொண்டு வந்து ஒப்படைக்கிறாரோ அவர் தான் நாணயமானவர் அவரிடமே முழுவதையும் ஒப்படைத்து விடுங்கள் என்றார்.....

 

👇👇👇

Tamilnadu Jamaathul Ulama Sabai
http://ulama.in/JummaUrai/336

👇👇👇

velimedai: நல்லாட்சி மலரட்டும்.
http://velimedai013.blogspot.in/2014/05/blog-post_9255.html?m=1

👇👇👇

Tamilnadu Jamaathul Ulama Sabai
http://ulama.in/JummaUrai/220

👇👇👇

Vellimedai: ஆட்சி அல்லாஹ்வுடையதே!
http://vellimedai00.blogspot.in/2014/05/blog-post_702.html?m=1

No comments:

Post a Comment