Saturday, 11 February 2017

காதலர் தினம் அதன் பின்னனி

காதலர் தினம்  அதன் பின்னனி உண்மைகள்

லூசிபர் எனும் சாத்தானை வணங்குபவர்கள் சாத்தானுக்கு பலி கொடுக்கும் தினத்தை காதலர் தினம் என்ற பெயரில் விபச்சாரத்தை பொது மக்கள் மத்தியில் பரப்பி அதை விழாவாக கொண்டாடுகின்றனர்.

கி.மு 296 ஆம் ஆண்டுகளில், பிப்ரவரி மாதம், 14 மற்றும் 15 ஆம் தியதிகளில் ரோமர்களால் (Lupercus) லூபர்கஸ் அல்லது க்யுபிடோ அல்லது லூசிபர் என்ற நரி வேடன் கடவுளுக்கு பலி கொடுக்கும் விழாக்கள் கொண்டாடப்பட்டது.

லூபர்கேலியா என்று அழைக்கப்பட்ட அந்த நாட்களில், பலி பூஜைகள் செய்யும் மந்திரவாதி ஆட்டினுடைய தோலை ஆடையாக அணிந்துகொண்டு நாய்களையும், ஆடுகளையும் பலிகொடுத்து அதன் இரத்தத்தை நரிக்கடவுளின் சிலையின் மீது வீசி, தன் மீதும் தேய்த்து பின்னர் (Palatine) பாலடைன் என்ற குன்றை சுற்றிலும் ஓடுவார்.

அப்போது பெண்கள் அந்த குன்றின் அடிவாரங்களில் காத்திருப்பார்கள். காத்திருக்கும் பெண்களின் மீது பூசாரி பலி கொடுக்கப்பட்ட ஆடு மற்றும் நாயின் தோலைக்கொண்டு அடிப்பார்,
அப்படி அடி வாங்கும் பெண்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

பின்னர் அந்த நகரத்தில் உள்ள கன்னிப்பெண்கள் அனைவரும் கூடி தங்கள் பெயர்களை ஒரு பெட்டிக்குள் எழுதிப் போடுவார்கள் அதனை பில்லேட்ஸ் என்று அழைப்பார்கள்.

பின்னர் ஆண்கள் அந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு பெயராக எடுப்பார்கள். எந்த ஆணுக்கு எந்த பெண்ணுடைய பெயர் வருகிறதோ அவர் அந்த பெண்ணுடன் பூசாரியின் முன் உடலுறவு கொள்வார் பின்னர் அந்த பெண் அடுத்த பிப்ரவரி 14 ஆம் தியதி வரை அந்த நபருடன் உடலுறவு வைத்துக்கொள்வார்.

சிகப்பு வண்ணம் என்பது இரத்தத்தின் புனித வண்ணமாக கருதப்பட்டது

மேலும் இதயத்தின் வடிவம் என்பது கன்னிப்பெண்களின் கன்னித்திரையாக கருதப்பட்டது.

அம்புக்குறியானது ஆண்உறுப்பை குறிக்கின்றது

-
அஹமது பாஸித் பாலிக்-

No comments:

Post a Comment