Monday, 20 February 2017

ஜுபைதா அவர்களுக்கு கொடுத்த முத்தலாக்

*மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தன் மனைவி ஜுபைதா அவர்களுக்கு கொடுத்த முத்தலாக் ஒரு இறைநேசரால் முறிக்கப்பட்ட நிகழ்ச்சி*                   
புத்தக அறிவிற்கும், சூஃபியாக்களின் இல்மிற்கும் உள்ள வித்தியாசம்.
ஒரு முறை மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தங்கள் மனைவியின் முக அழகையும், அன்று இரவு வானில் தவழ்ந்து கொண்டிருந்த முழு நிலவையும் மாறி மாறி பார்க்கின்றார்கள்.
இதை கவனித்த சுபைதா ஹாத்தூன் அவர்கள் காரணத்தை கேட்கின்றார்கள்.
அதற்கு மன்னர், ஒன்றுமில்லை, எமக்கு ஒரு சந்தேகம் அதாவது என் மனைவியின் முகம் அழகா, அல்லது வானில் தவழும் நிலவு அழகா !!
உடனே, சுபைதா அவர்கள் அதிலென்ன சந்தேகம், நிலவை விட என் முகம் தான் அழகு என்று கூறினார்கள்.
அதற்கு மன்னர், அப்படியானால் எனக்கு தலீல் அதாவது ஆதாரம் கொடுக்கமுடியுமா என்று கேட்டார்கள். அதற்கு சுபைதாவால் உடனே எந்த ஆதாரமும் கொடுக்க முடியவில்லை. ஆனால் மன்னர் அவர்களோ, சுபைதாவிடம் நீங்கள் எனக்கு நாளை சூரியன் அஸ்தமத்திற்குள் ஆதாரத்தை தராவிட்டால் உங்களுக்கு என்னுடைய முத்தலாக் உறுதியாகிவிட்டது என்று சொல்லி விட்டார்கள்.
விளையாட்டு விபரீதம் ஆகிவிட்டது என்ன செய்வதென்று அறியாமல் இருவரும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். மறு நாள் காலை எல்லா உலமாக்களும் அழைக்கப்பட்டார்கள், குர்ஆனை ஒரு பக்கம் விடாமல் புரட்டி ஆதாரத்தை தேட ஆரம்பித்து விட்டார்கள். அஸர்வக்து முடிந்து விட்டது. ஊரெல்லாம் ஒரு பதட்டம், எங்கு பார்த்தாலும் தாலாக் விஷயம் தான் பேசப்பட்டது.
உடனே, அரசி சுபைதா அவர்கள், அங்கு வாழ்ந்த மஜ்தூப் பைலூல் தானாவிடம் சென்று நடந்ததை சொல்லி அழுகின்றார்கள்.
இறை நேசர் அவர்களோ, அரசவைக்கு வந்து, ஹாரூன் ரஷீதிடம் தாம் அதற்கான தலீல் தருகின்றோம் அதற்கு முன் சில குர் ஆன் ஆயத்துக்களை ஓதிகின்றேன் தவறாக இருந்தால் தவறு என்று மட்டும் என்று சொல்லவும் என்று கட்டளையிட்டார்கள்.
பைலூல் தானா அவர்கள் வத்தீனி வஜ்ஜைய்த்தூனி, என்ற சூராவை ஓத ஆரம்பித்து லகத் கலக்னல் ஷம்ஸ ஃபீ அஹ்ஸனி தக்வீம் என்று ஓதினார்கள்,
உடனே, மன்னரும் அங்கு கூடி தலீல் கொடுக்க முடியாத ஆலிம்களும், தவறு என்று கூறினார்கள்.
பிற்கு மீண்டும் லகத் கலக்னல் கமற ஃபீ அஹ்ஸனி தக்வீம் என்று ஓதினார்கள்.
உடனே, மன்னரும் அங்கு கூடி தலீல் கொடுக்க முடியாத ஆலிம்களும், தவறு என்று கூறினார்கள்.
பைலுல் தானா அவர்களோ மூன்றாவது முறையாக ஓதுவதற்கு முன் என் ஓதுதலில் என்ன தவறு கண்டீர்கள் என்று கேட்டார்கள்.
உடனே அங்கு கூடி இருந்த அனைவரும் ஒன்றாக "லகத் கலக்னல் இன்ஸான ஃபீ அஹ்ஸனி தக்வீம் என்று ஓதினார்கள்.
உடனே பைலுல் தானா அவர்கள் மன்னர் ஹாரூன் ரஷீதிடம் அவ்ர்களிடம் உங்கள் மனைவி சொன்னது தான் உண்மை, அதாவ்து அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்லிவிட்டான், அதாவது எல்லாப் படைப்புகளை விட மனிதன் தான் அழகான படைபு என்று.
ஆகையால், உங்களின் முத்தலாக் செல்லாமல் ஆகிவிட்டது. என் முரீது சுபைதா ஆரிஃபீன்களை தேடி தலீல் கேட்டதால் பிழைத்துக்கொண்டார்கள்.
சுப்ஹானல்லாஹ்... வலிமார்களை அடைந்து வாழக்கற்றுக் கொள்வோம்.            

*ஸூபிஸ ஞானம்*

No comments:

Post a Comment