நபிமார்கள் வரலாறு 24
( நம் இரத்த நாளங்களில் இப்லீஸ் எப்படி புகுந்தான் ? )
ஆதம் (அலை) அவர்கள் வெளியே சென்றிருந்த போது , தனியாக இருந்த ஹவ்வாவிடம் , இப்லீஸ் தன் சின்னஞ் சிறு மகன் ஹன்னாஸை ஒப்படைத்து விட்டு , " நான் முக்கியமான அலுவலின் காரணமாக வெளியே செல்ல வேண்டியதுள்ளது .எனவே நான் திரும்பி வரும் வரை என் மகனை உம்மோடு வைத்திரும் ! என்று கூறிவிட்டு சென்றான்,
வெளியே சென்றிருந்த ஆதம் (அலை) அவர்கள், தம் மனைவி ஹவ்வா யிடம்
" யார் இது ...?" என்று கேட்க ,
"இப்லீஸின் மகன் ஹன்னாஸ் .தான் திரும்பி வந்து கூட்டிச் செல்வதாக கூறினான் " என்றார்கள் ஹவ்வா
(குர்ஆனில் கடைசி சூரா الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் (ஹன்னாஸ்) விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)
(அல்குர்ஆன் : 114:4-5)
"ஏன் சம்மதித்தாய் ? " என்று ஆதம் மனைவியை கண்டித்து விட்டு , ஹன்னாஸ் மீது பாய்ந்து அவனைக் கண்ட துண்டமாக வெட்டி மரக்கிளைகளில் தொங்க விட்டார்கள்
திரும்பி வந்த இப்லீஸ் , ஹவ்வாயிடம்
" எங்கே என் மகன் ஹன்னாஸ் ?"
நடந்ததை கூறினார்கள் உடனே இப்லீஸ்
" ஹன்னாஸ்....! என்று ஒரு சப்தமிட்டான் .
ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த சதையும் , எலும்பும் ஒன்று சேர்ந்து ஹன்னாஸ் உருப்பெற்றான் .
அதன் பின் இப்லீஸ் ஹவ்வா யிடம், " "மீண்டும் எனக்கு அலுவல் இருப்பதால் , ஹன்னாஸை உம்முடன் சற்று நேரம் வைத்திரும் "என்று சொல்லிவிட்டு ஹவ்வா வின் பதிலை எதிர்ப்பார்க்காமல் மறைந்தான் .
சற்று நேரத்தில் ஆதம் (அலை) அவர்கள் வந்து விபரம் கேட்க , ஹவ்வா "என் பதிலைக் கூட கேட்காமல் இப்லீஸ் மகனை ஒப்படைத்து மறைந்தான் ." என்று கூற ...
ஹவ்வாவை வன்மையாக கண்டித்தார்கள் . பின் ஹன்னாஸை கொன்று அவனுடைய உடலை எரித்துச் சாம்பலாக்கி பாதியை கடலில் கரைத்தும் மீதியை காற்றிலும் தூவி விட்டார்கள் .
சற்று நேரத்தில் இப்லீஸ் வந்து மகனை கேட்க ஹவ்வா விபரம் சொல்ல ...
" ஹன்னாஸ் ..!" என்று கூப்பிட
மீண்டும் உருப்பெற்று ஹன்னாஸ் வந்தான் .
அதன் பின் ஹன்னாஸை செம்மறியாட்டின் உருவில் மாற்றி ஹவ்வா அவர்களிடம் பொய் சத்தியங்களெல்லாம் செய்து அவனை அவரிடம் ஒப்படைத்துச் சென்றான்.
இல்லம் மீண்ட ஆதம் (அலை) அவர்கள் செம்மறியாட்டின் உருவில் உள்ள ஹன்னாஸை கண்டதுண்டமாக வெட்டி , இனிமேல் மீண்டும் அவன் உயிர்ப் பெற்று வந்து விடக் கூடாதென்று கருதி , அச்செம்மறியாட்டின் இறைச்சிக் கறி வைத்து சமைத்து தாம் ஒரு பாதியையும் மற்றொரு பாதியைத் தம் மனைவியுமாக உண்டனர் .
இதனை அறிந்த இப்லீஸ் " நான் விரும்பியது நிகழ்ந்து விட்டது. ஆதம் ஹவ்வா இரத்தத்துடன் கலந்து இதயத்தில் நான் நிலையான இருப்பிடம் பெற்றுவிட்டேன் " என்று மகிழ்ச்சி பொங்க பகர்ந்தான் .
இப்படிதான் ஆதத்தின் தம்பதிகளின் இரத்த அணுக்களோடு அணுக்களாக கலந்து அவர்களின் வம்சவளிகளின் ஒவ்வொருவரின் இரத்த அணுக்களின் புகுந்து ஓட ஆரம்பித்து விட்டான் .
ஆதாரம் : திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் .
ஆதத்தின் மக்களின் இரத்த நாளங்களில் இரத்தத்தோடு இரத்தமாக இப்லீஸ் ஓடிக் கொண்டுள்ளான் என்று கருத்துப் பட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கதாகும்.
4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்).
#ரஹ்மத்ராஜகுமாரன்
No comments:
Post a Comment