ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 20 January 2020

ஷரீஅத்திற்கும் , தரீக்கத்திற்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு

*بسم الله الرحمن الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله صلى الله عليه وسلم خذ بيدي قلت حيلتي ادركني يا سيدي يا شفيع المذنبين صلى الله عليه وسلم*

*"தூக்கு தூக்கி"...*
~~~~~~...~~~~~~

 *ஆக்கம் : 'ஆலிம் கவிஞர்' மவ்லானா, செய்யது அஹமது அலி பாகவி ஹள்ரத் அவர்கள்.*
இமாம் : மதீனா மஸ்ஜித், சித்தாலபாக்கம், சென்னை.

❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*ஒரு நாள் ஆன்மீகப் பேரரசர் மாமன்னர் அவுரங்கசீப் பாதுசா அன்னவர்களின் மாளிகையின் மேல் மாடியில் அரச சபை கூடியிருந்தது.*

*அங்கே ஆன்மீக விவாதம் ஒன்று சபையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.*

*ஆன்மீக சொற்றொடர்களில் ஒன்றான "ஷரீஅத் ,  தரிக்கத் , மஃரிபத்" என்றால் என்ன..? அதன் வித்தியாசங்கள் என்ன என்கிற  விளக்கத்தை தெரிந்து கொள்கிற விவாதம் அது.*
*எல்லாம் இறைவனை அடைகிற, இறை நெருக்கத்தை பெறுகிற வழி என்று சொல்லப்பட்டாலும் மன திருப்தியை பெறுகிற விளக்கம் அந்த விவாதத்தில் எட்டப்படவில்லை.*

*அப்போது அவுரங்கசீப் பாதுஷா  அன்னவர்கள் டில்லியில் வந்து தங்கி இருக்கிற ஞான மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவர்களை அழைத்துவர அரண்மனை ஆட்களை அனுப்புகிறார்கள்.. ஆனால் அவர்களை கண்ணியமான முறையில் அழைத்து வரவேண்டும் என்பதற்காகவும், அவர்கள் அரச சபைக்கு விரைந்து வரவேண்டும் என்பதற்காகவும் "பல்லக்கிலே தூக்கி வாருங்கள், மாளிகையில் படிக்கட்டு வழியாக வராமல் "தூக்குத்தூக்கி" (இன்றைய லிஃப்ட் போல் அன்று கூடை போன்ற ஒன்றை வைத்து மேலே தூக்கும் முறை) வழியாக அவர்களை மேலேற்றி அழைத்து வாருங்கள்"... என்று கட்டளையிட்டார்கள்.*

*அதுபோன்று சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் அழைத்துவரப் படுகிறார்கள். அவர்களிடத்திலே அவுரங்கசீப் பாதுஷா அன்னவர்கள் "ஷரீஅத்திற்கும் , தரீக்கத்திற்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு என்ன"..? என்று கேட்டபோது சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் அழகாக பதில் கூறினார்கள்.*
*இந்த சபைக்கு  நான் நடந்து வந்து படிக்கட்டின் வழியாக மேலேறி வருவதற்கும் , நான் உங்களிடம் விரைவில் வந்து சேரவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களின் பணியாளர்கள் மூலம் பல்லக்கில் தூக்கி வந்து "தூக்குத்தூக்கி" மூலம் மேல் மாடிக்கு என்னை அழைத்து வந்ததற்கும் மத்தியில் என்ன வித்தியாசமோ அதுதான் ஷரீ அத் திற்கும் , தரீகத் திற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் என்றார்கள்.*

*அதாவது... இரண்டும் இறைவனை அடைகிற, நெருங்குகிற வழி என்றாலும் "ஷரீ அத் என்பது படிக்கட்டில் ஏறி இறைவனை அடைவது போன்றது . தரீகத் என்பது  தூக்குத்தூக்கி மூலம் இறைவனை விரைவில் நெருங்குவது" போன்றதாகும்.. முன்னது இலக்கை அடைகிற தூரம் நீளமானது .. பின்னதில் இலக்கை அடைகிற தூரம் சுருக்கமானதும் இலகுவானதும் ஆகும்.,  என்று நடந்த நிகழ்வை கொண்டே ஆன்மீக விளக்கத்தை அழகாய் புரிய வைத்தார்கள் அந்த சபைக்கு...*
❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈•••❈
*🌏 ஆன்லைன் மஸ்லஹி 🌏*

No comments:

Post a Comment