Saturday, 5 October 2019

ஸதகத்துல்லாஹ் அப்பா

*கீழக்கரை மாதிஹூர் ரஸூல் ஷரஹூப் புலி ஸதகத்துல்லாஹ் அப்பா காஹிரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி புனித உரூஸ் முபாரக் ஸஃபர் 5*

அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அளப்பரிய காதல் கொண்டு மாதிஹூர் ரஸூல் என்று காரணப் பெயர் பெற்ற ஷரஹூப் புலி ஸதகத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் புனித உரூஸ் முபாரக் தினம் (நேற்றைய இரவு) இன்றைய தினம் ஸஃபர் 5.

ஈருலக ஸர்தார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புகழ் பாடி யாத்தளித்த வித்ரிய்யா ஷரீஃப் முதல் அப்பா அவர்கள் இஸ்லாத்திற்கு அளித்த ஞானப் பொக்கிஷங்களும், ஷரஹூ(சட்ட)ப் பொக்கிஷங்களும், இறை நேசச் செல்வர்கள் புகழ் பாடி அளித்த கஸீதாக்களும் கணக்கற்றவை.

அமீருல் முஃமினீன் அபுபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹூ அன்ஹூ வம்சத்தில் உதித்த காயல்பட்டினம் ஷெய்கு ஸுலைமான் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் அலைஹியின் புத்திரராய் உதித்த 5 மாணிக்கங்களும் இறை நேசச் செல்வர்களே.

நாகூர் எஜமான் ஷாஹூல் ஹமீத் பாதுஷா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஆசி பெற்று ஐவரில் மூன்றாவதாய் உதித்து அதிராம்பட்டினம் ஷெய்கு ஸின்னீனா அல் மக்தூம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்வி கற்க கீழக்கரை வந்தடைந்து, அதையே தன்னூராய்த் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

முகலாய சக்ரவர்த்தி ஆலம்கீர் ஔரங்கசீப் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஞான ஆசிரியராகத் திகழ்ந்தார்கள்.

வங்காளத்திற்கு கவர்னராகச் செல்ல வேண்டுகோள் வைத்த பாதுஷாவிடம், அரசவைப் பணி அவ்லியாக்களுக்கு உகந்ததல்ல என உரைத்து, தனக்குப் பதிலாக #சீதக்காதி_மரைக்காயரை அனுப்பி வைத்தனர். வங்காளத்திற்குக் கவர்னராகச் சென்ற #இராஜகோபாலாச்சாரியார் இதனால் தான் #வங்காளத்திற்குக்_கவர்னராக_வந்திருக்கும்_இரண்டாம்_கவர்னர்_என அவரது பதவியேற்பு விழா உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துக்கீசியர்களால் தமிழ்நாட்டில் நொறுங்கிப் போயிருந்த முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் கட்டி எழுப்பியதிலும், தமிழ் முஸ்லிம்களிடையே காணாமல் போயிருந்த இஸ்லாமிய நடைமுறைகளை மீண்டும் மக்களிடத்திலே உயிர்ப்பித்ததிலும், சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு மற்றும் திருமணச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தியதிலும், பல்வேறு முஸ்லிம் வட்டாரங்களுக்கு மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்தியதிலும், மக்தப் எனப்படும் குர்ஆன் பயிற்சிப் பள்ளிகளும், மத்ரஸாக்கள் எனப்படும் மேற்படிப்புக்குரிய அரபிக் கல்லூரிகளும் தமிழ்நாடு முழுவதும் தழைத்தோங்கச் செய்ததிலும் அப்பா அவர்களின் பங்கு மிகப் பெரியது.

தமிழக மஸ்ஜித்களை #இறைவணக்கத்திற்காக_உட்பள்ளி_மஹல்லா_விஷயங்களுக்காக_வெளிப்பள்ளி என பள்ளிவாசல்களின் நிர்மாணத்தை அமைத்தவர்களும்  அப்பா அவர்களே.

உமறுப் புலவர் அப்பா அவர்கள் சீறாப் புராணம் இயற்ற ஆசியளித்து உரை கொடுத்தவர்களும் அப்பா அவர்களே.

காயல் பட்டினம் உமர் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி முதல் எண்ணற்ற வலிமார்கள் அப்பா அவர்களின் சந்ததியினரே.

அப்பா அவர்களின் மக்பராவை அழகிய முறையில் எழுப்பியவர்கள் முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி.

#நம்மையா_ளுடையோன்வேத_நபிதிரு_வசனம்_தீனோர் #சம்மதித்_திடப்பா_ரெல்லாம்_தழைக்கவே_விளக்கம்_செய்தோர்
#இம்மையும்_மறுமையும்பே_றிலங்கிடும்_சதக்கத்துல்லாஹ் #செம்மலர்_அடியிரண்டும்_சிந்தையில்_இருத்தினேனே
என உமறுப் புலவர் அவர்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா) அவர்களைப் புகழ்ந்து பாடுகின்றார்கள்.

*அவர்களால் ஏகத்துவத்தை சுவாசிக்கும் கோடிக்கணக்கான மக்களில் ஒரு குடும்பத்தினராகச் சிறு காணிக்கை*

No comments:

Post a Comment