Thursday, 3 October 2019

ஈமானின் சுவை

*بسم الله الرحمن الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله صلى الله عليه وسلم خذ بيدي قلت حيلتي ادركني يا سيدي يا شفيع المذنبين صلى الله عليه وسلم*

*​​​​🗓 ​04-10-2019 வெள்ளி மேடை:*
❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈•••❈

*மெளலானா, அல்ஹாஜ்.  A.அப்துல் அஜீஸ் பாகவி ஹள்ரத் அவர்கன்.*

*தலைப்பு : ஈமானின் சுவை.*

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ (24)

இன்றைய காலகட்டத்தை  The World Of Taste என்கிறார்கள்.

இது சுவைகளை விரும்பும் காலம்.

சுவைமிகு உணவகங்களை தேடி பத்துஇருபது கிலோ மீட்டர்களுக்கு பயணிக்கிறோம்.

சில வெளிநாடுகளில் இன்னும் கூடஅதிக தூரம் பயணித்து சுவையானஉணவுகளை தேடி உண்கிறார்கள்.

வழக்கமான உணவுகளை கூட பல் வேறுபுதிய சுவைகளுக்கு மடை மாற்றித்தரப்படுகின்றன.

பிரதான உண்வில் சுவை, பாணங்களில்சுவை, துணைக்கறிகளில் சுவை, பலகாரங்களில் சுவை, என பலசுவைகளையும் நாம் தேடிச் செல்கிறோம்.

முஹம்மது நபி (ﷺ) அவர்கள், ஈமானுக்கும் ஒரு சுவை உண்டு. முஃமின்கள் அந்த ஈமானியச் சுவையைஉணர்ந்திருக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார்கள்.

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «ثلاثٌ من كنَّ فيه وجدَ حلاوة الإيمان، أن يكون الله ورسولُهُ أحبَّ إليه مما سواهما، وأن يُحبَّ المرءَ لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يُقذفَ في النار». أخرجه الخمسة إلا أبا داود.

இஸ்லாமி அறிஞர்கள் முஸ்லிம்களில் இரண்டு பிரிவினர் உண்டு என்கிறார்கள்.

ஈமானின் சுவை உணர்ந்தவர்கள். இவர்கள் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருப்போர்.

ஈமானின் சுவை அறியாதோர், இவர்கள்சொர்க்கத்தில் இறுதியாக இருப்போர்.

இவ்விரண்டு வகை குறித்தும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

(அல்லாஹ் நம்மை ஈமானிச் சுவை உணர்ந்தோரில் சேர்ப்பானாக)

ஒன்றின் சுவை அறிந்தோருக்குத் தான்அதன் மரியாதை புரியும்,

மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில்டுரியான் பழம் என்று ஒன்று உண்டு. அதன் வாடை பக்கத்திலே கூட செல்லவிடாது. ஆனால் அதன் சுவைஅறிந்தவர்களோ விட மாட்டார்கள். என்னவிலை கொடுத்தும் வாங்குவார்கள்.

சுப்யானுஸ் ஸவ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது சிறு வயது அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்கள்.

நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை எனக்கு ஒரு வெள்ளி மோதிரம்வாங்கித் தந்தார். எங்களது தெருவில் ஒரு திருடன் என்னிடம் ஒரு மிட்டாயைகொடுத்து அதை சுவைக்கச் சொன்னான். பிறகு மோதிரத்தை சுவைக்கச் சொன்னான்.  பிறகு என்னிடம் மிட்டாயைக் கொடுத்து விட்டு மோதிரத்தை எடுத்துச்சொன்று விட்டார். எனது சிறு வயதில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் இது.

ஒன்றின் சுவை தெரிந்தால்  தான் நாம் அதை உணரவும் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

ஈமனின் சுவை உணர்ந்த நம்முன்னோர்கள் மிகச் சிறப்பாக தமது வாழ்வில் அதை வெளிப்படுத்தினார்கள்,

பாலை வெளியில் சுடு மணலில் வெற்றுடம்பில் படுக்க வைக்கப்பட்ட போதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் "அஹத் அஹத்" என்றார்கள்.

 وروى عامر الشعبي أن موالي بلال من بني جمح كانوا يضجعونه على بطنه، ويعصرونه، ويقولون له قُل دينك اللات والعزى، ] وكان الذي يعذبه أمية بن خلف، فيخرج به إذا حميت الظهيرة، فيطرحه على ظهره في بطحاء مكة، ثم يأمر بالصخرة العظيمة على صدره، ثم يقول: «لا يزال على ذلك حتى يموت أو يكفر بمحمد»،  فيأبى بلال ويقول: «ربي الله، أحدٌ أحد، ولو أعلم كلمة أحفظ لكم منها لقُلتُها»،

அதே போல அவரது மரணத் தருவாயில்அருகிலிருந்த மனைவி,

فقالت امرأته: «واويلاه!»، فقال: «وافرحاه!» غدا نلقى الأحبة محمدًا وحزبه

ஈமானிய சுவையை உணர்ந்த்தின் விளைவு இது.

ஒரு நபித்தோழரின் குதிரை இரவில் களவாடப்பட்டது. அடுத்த நாள் அவர் தொழுது கொண்டிருக்கும் போது ஒருவன் அந்த குதிரையை இழுத்துச் செல்வதைப் பார்த்தார். ஆனால் அவர் தொழுகையை விடவில்லை. எனக்கு தொழுகையை விட குதிரை பெரிதாக தெரியவில்லை என்றார்.

இதுவும் ஈமானியச் சுவை உணர்ந்த்தன் விளைவே

இரண்டு நபித்தோழர்க்ள் பெருமானாரின் படையை இரவு நேரத்தில் காவல் காத்து நின்றனர். அவர்களில் ஒரு ஓய்வெடுக்கச் செல்ல மற்றவர் தொழுகைக்கு நின்றார், மறைந்திருந்து கவனித்த எதிரிகள் அவர் மீது அம்பெரிந்தனர். அவர் தொழுகையை விட வில்லை. இரண்டாவது அம்பு விழுந்தும் தொழுகையை விடவில்லை, மூன்றாவது அம்பு விழுந்த போதே அவர் தொழுகையை விட்டு விட்டு மற்ற தோழரை எழுப்பினார். அப்போது அவர் சொன்னார்.

لولا أني خفت علي المسلمين ما قطعت صلوتي

இவை எல்லாம் ஈமானியச் சுவையை உணர்ந்தன் விளைவுகளே

நமது ஈமானுக்கு சுவை இருக்கிறதா ? அது எந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதில் மேம்பட முயற்சிக்க வேண்டும்.

ஈமானியச் சுவைக்கு மூன்று அடையாளங்களை பெருமானார் (ﷺ) கூறினார்கள்.

أن يكون الله ورسولُهُ أحبَّ إليه مما سواهما، وأن يُحبَّ المرءَ لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يُقذفَ في النار

எதார்த்த்தில் முதலில் சொல்லப் பட்ட ஒன்றிலேயே பிந்தய இரண்டும் அடங்கிவிடும்.

முதலில் சொல்லப் பட்ட்து தான் தத்துவம். பிந்தய இரண்டும் அதன் அடையாளங்களே

ஒரு முதல் பார்வையில் இந்த வழிகாட்டுதலை பார்க்கிற போது ஈமானிய சுவையை அறிவது மிக கஷ்டமான விசயம் போல தோன்றலாம்.

ஆனால் ஒன்றை நாபகத்தில் வைத்துக் கொள்வோம். இது உச்ச நிலை.

நம் எல்லோராலும் உச்ச நிலையை அடைய முடியும் என்பதில்லை,

ஆனால் நாம் உச்சத்தை தொட முயற்சிக்க வேண்டும்.

அதை நோக்கி நகர வேண்டும்.

நாம் யாரை எல்லாம் எப்படி எல்லாம் நேசிக்கிறோம். இந்த உலகில் ?

சிந்திப்போம்.

அவர்களால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன ?

அல்லாஹ்வாலும், இறைத்தூதராலும் நமக்கு கிடைக்கிற ந்ன்மைகள் என்ன ?

இவர்களை நாம் அதிகம் நேசிக்க வேண்டாமா? என்ற திக்கில் நாம் சிந்திப்போமானால்... உண்மையாக – அல்லாஹ் ரசூலின் நேசம் நமக்கு பிரதானமாகி விடும்.

இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட மூன்று விஷயங்களில் மூன்றாவதிலிருந்து நாம் நமது செயல்களை தொடங்க வேண்டும்.

குஃப்ரு, ஷிர்கின் அனைத்து அம்சங்களையும் வெறுக்க வேண்டும்  ஈமானுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளை விட்டும் விலகி ஓட வேண்டும்.

ஜோசியம் பார்த்தல், சகுனம் பார்த்தல், தப்பான இடங்களில் மந்திரிக்க செல்லுதல், நவீன சாமியார்களான தப்பான மனிதர்களிடம் செல்லுதல் அனைத்தையும் நெருப்பில் விழுவதைப் போன்று பயப்பட வேண்டும்.

அடுத்து நல்லவர்களை நல்ல விஷயங்களை நேசிக்க வேண்டும்.

நல்லது என்பதற்காக ஒன்றை நாம் நேசித்த்தாலே அது அல்லாஹ்விற்காக நேசித்தாகி விடும்.

மரம் வளர்ப்பதை நேசிக்கிறீர்கள் என்றால் – நல்லது என்பதற்காக நேசித்தால் அது அல்லாஹ்வை நேசிப்பதே

நல்லவர்கள் இறை நேசர்களை நேசிப்பதும் அல்லாஹ்வின் நேச்த்திலே கொண்டு போய் விடும்.

இப்படி சன்னம் சன்னமாக நாம் ஈமானியச் சுவையை ருசித்துப் பார்த்து விட முயலவேண்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானக!

❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈•••❈
*🌏 ஆன்லைன் மஸ்லஹி 🌏*

No comments:

Post a Comment