ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 1 June 2019

கியாமுல்லைல் தொழுகை

கியாமுல்லைல் தொழுகை
என்றால் என்ன ?
-------------------------       
       கலீபத்துல் . காதிரி அல்ஹாஜ் . பாஸில் ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி.
----------------------------
--------------
கியாமுல்லைல் என்பதும்
தறாவீஹ் என்பதும் ஒரே தொழுகைதான். இப்பெயர் பின்
வரும் ஹதீதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

من قام رمضان ايمانا واحتسابا غفرله ما تقدم  من ذنبه  ۔مسلم شريف

மேற்படிஹதீதில்  من قام  என்ற சொல்லைவைத்து தறாவீஹ் தொழுகைக்கு கியாமுல்லைல் என்று பெயர்வந்தது.

இமாம்நவவி றஹ்மதுள்ளாஹி அலைஹி ஷறஹுமுஸ்லிமில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.

والمراد بقيام رمضان صلاة التراويح
                شرح  مسلم  باب الترغيب في قيام رمضان

இரவுத்தொழுகை என்பது
ஒவ்வொரு இரவும் தொழுகின்ற வித்றையும், தஹஜ்ஜுதையும் குறிக்கும்.

இதனை பின்வரும் ஹதீத்
சுட்டிக்காட்டுகின்றது.

عن  عاێشة ان رسول الله  صلى الله عليه  وسلم كان  يصلي  بالليل  إحدى عشرة ركعة  يوتر  منها  بواحدة ۔۔
مسلم شريف .

றஸுலுள்ளாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் இரவில்  11 றகாஅத்துக்கள் தொழுவார்கள். அதில் ஒருறகாஅத்தை ஒற்றையாகத் தொழுவார்கள்.

இந்த ஹதீதில் வரும் இரவுத் தொழுகை என்பது வித்று என்று இமாம் நவவி றஹ்மதுள்ளாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
அதனால் தான் இந்த ஹதீதை வித்றுடைய பாடத்தில் சேர்த்து

باب صلاة  الليل  وعدد ركعات  النبي  صلي الله عليه وسلم  في الليل 
" وان  الوتر  ركعة وأن الركعة صلاة صحيحة "

"இரவுத்தொழுகை , இரவில் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் இரவுத்தொழுகையின் றகாஅத்தின் எண்ணிக்கைகள். " என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

பத்ஹுல்பாரியில்  இரவுத்
தொழுகை صلاة  الليل என்பது
தஹஜ்ஜுது என்று குறிப்பிடுகின்றார்கள்.

அனைத்து முஹத்திதுகளும்
தங்களின் நூற்களில் கியாமுல்லைலை தறாவீஹ் என்றும். ஸலாத்துல்லைலை வித்று அல்லது தஹஜ்ஜுது என்றும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

11றகாஅத் பற்றிய அன்னைஆயிஷா சித்தீகா ரழியல்லாஹுஅன்ஹா அவர்களின் அறிவிப்பை தறாவீஹின் பாடத்தில் சேர்க்கவில்லை. வித்று அல்லது
தஹஜ்ஜுதின் பாடத்திலேயே சேர்த்திருக்கின்றனர்.

இப்போது நடைமுறையிலிருக்கும் கியாமுல்லைல் புதிதாக உருவாக்கப்பட்டது. வித்று பற்றிய ஹதீதை ஆதாரமாகக்கொண்டு புதிய பித்அத்தான நடைமுறையை வஹாபிகள் சதித்திட்டமாக ஆரம்பித்துள்ளனர்.

தறாவீஹை அவசரமாகத் தொழவேண்டும் என்று அவசரப்படுபவர்கள் இத்தொழுகையில் ஆர்வம்காட்டுவது ஆச்சரியமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment