ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Wednesday, 15 May 2019

அர்ரஹ்மானுக்கு பிடித்த நான்கு

அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கிறது. அதிலேயே உயர்வானது
அல்லாஹ் ......!!

அல்லாஹ் என்ற திருநாமத்தை உலகெங்கிலும் ஒவ்வொரு நொடியும் அழைப்பொழி பாங்கோசை மூலம் ஒலிக்கச் செய்திருக்கிறானே. ...
அந்த அல்லாஹ்வின் எண்ணிக்கை
நான்கு எழுத்துகளில் அமைந்துள்ளது. ....அரபி எழுத்தின் கணக்கு படி...!!!
சிறப்பான பிஸ்மியில் இடம்பெற்ற
அல்லாஹ் ...... 4 எழுத்துக்கள்
ரஹ்மான் ....... 4 எழுத்துக்கள்
ரஹீம் ........ 4 எழுத்துக்கள்

வானுலகில் அர்ஸூ , குர்ஸூ , லவ்ஹூ கலம் 4 படைத்திருக்கிறான். ....

அருள்மறையில் அல்லாஹ்வைபற்றி
அல் அவ்வலு , அல் ஆகிறு
அல் லோஹிரு , அல் பாத்தினு

ரஸூல்லுல்லாஹ் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் திருநாமம்
1. மீம் - முனீர் - பிரகாசம்
2. ஹ - ஹபீப் - நேசித்தல்
3. மீம் - மஃஸிம் - பாவத்தை விட்டு பேணுதல்
4. தால் - சன்மார்க்கம்

அவர்களின் வழிமுறைகள்
1.ஷரீஅத் - ரஸூலின் அமுதமொழி
2.தரீகத் - ரஸூலின் செயல்முறை
3.ஹகீகத் - ரஸூலின் அந்தரங்க நிலை
4.மஃரிபத் - ரப்பை அறியும் விதம்..!

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
யா அல்லாஹ்! .இறந்தோரை எப்படி
உயிர்ப்பிப்பாய் என்று கேட்டபோது
நான்கு பறவைகளை கொண்டு காட்டினான்.

குர்ஆனில் சொன்ன சங்கையான மாதம்
1.துல் கஃதா ,2. துல் ஹஜ்
3 .முஹர்ரம் , 4. ரஜப் ......!!!

அல்லாஹ் படைத்த படைப்பினங்கள்
ஆலம் என்ற பெயரும் நான்கெழுத்து ...!!!

நான்கு வகை அனாசிரை கொண்டு அல்லாஹ் படைத்து இருக்கிறான். ..!!
1.மண் , 2.தண்ணீர், 3.காற்று, 4 நெருப்பு....!!!!

சிறப்பான மலாயிக்கத்மார்கள்
நான்கு பேர்......!!!
1.ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்
2.மீக்காயில் அலைஹிஸ்ஸலாம்
3.இஸ்ராயில் அலைஹிஸ்ஸலாம்
4.இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம்

வேதங்கள் நான்கு. ....!!!!

வேதங்கள் கொடுக்க பட்ட நபிமார்கள்
நான்கு. .....!!!
1.நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் - தவ்ராத்
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் - ஸபூர்
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் - இன்ஜீல்
நபி ரஸூல்லுல்லாஹ் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் - அல்குர்ஆன். ..!!!

திக்ருகள் நான்கு. .....!!!!
1. தஹ்லீல் - லாயிலாஹ இல்லல்லாஹூ
2. தஸ்பீஹ் - சுப்ஹானல்லாஹ் 3 . தஹ்மீது - அல்ஹம்துலில்லாஹ்
4. தக்பீர் - அல்லாஹூ அக்பர்

தொழுகையின் அம்சங்கள் நான்கு
1. கியாம்.... நிலை
2. ருகூஃ .... குனிதல்
3. ஸூஜூது. .. சிரம்பணிதல்
4. அத்தஹியாத்து - இருத்தல்

அருள் பெற்ற மலைகள் நான்கு
1.ஜபல்........தூர்ஸினா
2.ஜபல்...... ஜூதுமலை
3.ஜபல்....... அரபாமலை
4.ஜபலுல்... நூர் மலை

சுவனத்தில் ஓடும் ஆறுகள் நான்கு
1.பாலாறு
2 தேனாறு
3.மதுவாறு
4.தண்ணீராறு......!!!

சிறப்பான நதிகள் நான்கு
1.ஸல்ஸபீல் , 2. கவ்லுல் கவ்ஸர் ,சுவனத்திலும். .....
3.நைல் நதி எகிப்து
4.புராத்து நதி கூபா...
இவ்வுலகிலும் ஓடுகிறது. ...!!!

சிறப்பான கலிபாக்கள் நான்கு
1 .அபுபக்கர் ரலியுல்லாஹூ அன்ஹூ
2 .உமர் ரலியுல்லாஹூ அன்ஹூ
3. உதுமான் ரலியுல்லாஹூ அன்ஹூ
4.அலி ரலியுல்லாஹூ அன்ஹூ. ....!!!

அங்கீகரிக்கபட்ட இமாம்கள் நான்கு
இமாமும் அஃலம் அபூஹனிபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி. ..
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
இமாம் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி. ....!!!

மனிதனின் முகத்தில் அறிகுறிகள் நான்கு
1.பார்த்து அறிதல்.... கண்
2.கேட்டு அறிதல்...காது
3.சுவைத்து அறிதல்...நாக்கு
4.முகந்து அறிதல்.... மூக்கு

மார்க்க அறிஞர் ஆலிம் 4 எழுத்து
அல்லாஹ்வை அறிந்த ஆரிஃப் 4 எழுத்து

அல்லாஹ் என்ற எழுத்திலும்
அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரிலும் 4 எழுத்துக்கள் அமைந்துள்ளதால்
இத்தகைய மகத்துவங்கள் அமைந்துள்ளன.

அல்லாஹ்வின் அற்புதமான விளக்கம். ...
இன்னும் எவ்வளவோ இருக்கிறன..ரொம்ப நாட்களாக தேடி எடுத்தது. முயற்சி செய்து எடுத்த விளக்கம். .....!!!!
அல்லாஹ்வின் கிருபையால் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ...!!

அல்ஹம்துலில்லாஹ். ....!!!!
அல்ஹம்துலில்லாஹ். ....!!!!

No comments:

Post a Comment