#நம்மைப்_போன்ற_மனிதரென நாயகத்தை எண்ணாதே !
பொய்மையும் உண்மையும் , நன்மையும் தேய்மையும்
பொதுவென்று சொல்லாதே !
அல்லாஹ்வின் தூதரை நீ அறியாமல் பேசாதே !
நாவாலே பிழை பேசி சாபத்தை வாங்காதே !
பன்னீரும் தண்ணீரும் சமமாக முடியாது !
பன்னீரின் வாசமெல்லாம் தண்ணீரில் கிடையாது !
கண்ணீரும் கடல் நீரும் கரிப்பதுதான் என்றாலும்
கண்ணீரின் துளிகளிலே கப்பல்கள் ஓடாது !
அன்னையும் பெண்தானே !
அவளைப் போல அமுதூட்ட
கன்னிப் பெண் நினைத்தாலும்
கதை இங்கு நடக்காது !
கள்ளிப்பூ பூவினந்தான் !
காண்பதற்கு அழகேதான் !
மல்லிகை போல் சூடென்றால்
மனைவிக்கு பிடிக்காது !
எழுத்தெல்லாம் அல் குர்ஆனின்
எழுத்தாக முடியாது !
புழு எல்லாம் வண்ணத்துப் பூச்சி என்றாகாது !
கல் எல்லாம் ஹஜருல் அஸ்வத் கல் என்றாகாது !
வில் எல்லாம் வானத்து வில்லாக சிறக்காது !
மூளையும் அங்கம்தான் !
முடியும் ஓர் அங்கம் தான் !
மூளையின் செயல் எல்லாம்
முடி செய்ய முடியாது !
நம் வீட்டு கிணற்றினிலே
ஸம்ஸம் நீர் சுரக்காது !
நமதூரின் மஸ்ஜித் எல்லாம்
நபவி போல் ஆகாது !
நபித்தோழர் கூட ஒரு நபியாக முடியாது !
அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு போல நாம் ஆகி விட முடியாது !
நபியவர்கள் காலம் போல் நம் காலம் இருக்காது !
நபி ஸஹாபி என்ற பெயர் நம் தோழர்களுக்கேது ?
அஞ்சல் தரும் சேவகராய் அருள் நபியை உருவகித்தாய் !
அஞ்சலுக்குள் இருந்ததென்ன ?
அனைத்தும் நபி புகழ் தானே !
வஹி அருளப்படுகின்ற மனிதர்தான் என்றாலும்
வஹி இறங்கா மனிதர் நாம்
வள்ளலுக்கு நிகராமோ ?
உம்மி நபி மனைவியர்கள்
உம்மு ஹாத்து முஃமீன்கள்.!
நம்மவரின் துணைவியரோ
நாம் இறந்தால் மணப்பெண்கள்..!
பண்பு நபி குடும்பத்தை பரிசுத்தமாக்கி வைத்தான்
பின் தொடரும் நமக்கெல்லாம் பேரிறைவன்
என்ன தந்தான் ?
கலிமாவில் முஹம்மது எனும் கருப்பொருளை நீக்கி விட்டு
இழிந்தவனே உன் பெயரை இணைத்து வைக்க முடியாது !
முன்கர் நகீர் கபுறினிலே மூர்க்கத்துடன் வரும் போது
"அண்ணலைப் போல் நான்" என்று அலட்டி நிற்க முடியாது !
உன் புதிய வாதம் இதை
உமர் ஃகத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) கேட்டிருந்தால்.!
தன் வாளால் உன் தலையை தலைசீவி முடித்திருப்பார் !
அலி ரலியல்லாஹு அன்ஹுவோ உன் வழக்கிற்கு
அதிசயமாய் தீர்ப்புரைப்பார் !
கலிகால அபூஜஹலாய் கஃபு ரலியல்லாஹு அன்ஹு உனை வர்ணிப்பார் !
நம்மைப் போன்ற மனிதரென நாயகத்தை எண்ணாதே !
அல்லாஹ்வின் தூதரை நீ அறியாமல் பேசாதே !
நாவாலே நீ பேசி நரகத்தை வாங்காதே.!!
صلى الله على محمد صلى الله عليه و سلم
صلى الله على محمد صلى الله عليه و سلم
No comments:
Post a Comment