** நான்தான் "கஃபா " **
**பூமியில் உயிரினங்கள் படைக்கப் படுவதற்கு முன்
பூமி முழுவதும் நீரால் நிரம்பி இருந்தது,அதன்
ஓரிடத்தில் நுரை தோன்றியது,-அவ்விடத்தில்தான்-
நான் நிர்மாணிக்கப்பட்டேன்,
ஆதம் நபி படைக்கப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு
முன்பே மலக்குகள் என்னை நிர்மாணித்து,என்னை
வலம் வந்து இறைவனை வணங்கி வந்தனர்,
அதன் பின் என்னை முதல் மனிதர் ஆதம்[அலை]
என்னை கட்டினார்,பின்னர் வெள்ள பிரளயத்தில்
[நூஹ்[அலை]காலத்தில் ]நான் சேதமுற்றேன்,
**நபி இப்றாஹிம்[அலை]அவர்கள்,தன் மகன்
இஸ்மாயில்[அலை]அவர்களுடன் சேர்ந்து என்னை
மீண்டும் நிர்மாணித்தார்கள்,
**பின்னர் "அமாலிகா"எனப்படும் "ஜூர்ஹூம்"
குலத்தார் என்னை புதுப்பித்தார்கள்,அதன்
பின்னர் நபி[ஸல்]அவர்களின் ஐந்தாம் தலைமுறை
பாட்டனார் "குஸை பின் கிலாப் "என்னை கட்டினார்,
நபி[ஸல்]அவர்களுக்கு நபித்துவம் வருவதற்கு
முன்பு அவர்களின் 35 ஆம் வயதில் குறைஷிகள்
என்னை கட்டினர்,அதன் பின்னர் அப்துல்லாஹ்
பின் ஜூபைர்[ரலி]என்னை கட்டினார்,அதன்
பின்னர் கலிபா அப்துல் மலீக் பின் மர்வான்
காலத்தில் கவர்னராக இருந்த "ஹஜ்ஜாஜ் பின்
யூசுப்"என்னை கட்டினார்,
** நான் சதுர வடிவ கட்டிடம்,
**சவூதியில் உள்ள "ஹிஜாஜ்"மாநிலத்தில் உள்ள
"மக்கா"என்ற மாநகரை உடைய பகுதியில் நான்
அமைந்திருக்கிறேன்,இவ்வூர் சவூதியின் மேற்கு
திசையில் செங்கடலிலிருந்து 70 மைல் தொலைவில்
கடல் மட்டத்திற்கு 330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது,
உலகின் தொப்புள் ஆகவும்,உலகின் மைய பகுதி
யாகவும் இந்நகர் திகழ்கிறது,
**அல்லாஹ் எனக்கு சூட்டிய பெயர்கள் ;
"அல் கஃபா"
"அல் பைத்"
"பைத்துல்லாஹ்"
"அல் பைத்துல் ஹரம்"
"அல் பைத்துல் அதீக்"
"கிப்லா"
**எனது மொத்த உயரம்; 53 அடி(14 மீட்டர்)
எனது நீளம் மேற்கில் ;45 அடி,
கிழக்கில்;49 அடி,
வடக்கு மற்றும் தெற்கில்;31 அடி,
**எனது தென் கிழக்கு மூலைக்கு" ருக்னுல் ஹிந்த்"
**வடகிழக்கு மூலைக்கு "ருக்னே யமானி"
**வடமேற்கு மூலைக்கு "ருக்னே ஷாமீ"என்றும் பெயர்,
**எனது தென்கிழக்கு மூலையில் தவாப் செய்யும்
இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி
வளயத்தில்"ஹஜ்ருல் அஸ்வத்"என்ற சுவனத்
திலிருந்து ஆதம்[அலை]அவர்கள் கொண்டு வந்த
கல் பதிக்கப்பட்டுள்ளது,-ஹிஜ்ரி 319 இல் ஏற்பட்ட
ஒரு சம்பவத்தில் அது உடைந்துபோய் பெரியதும்,
சிறியதுமாக எட்டு துண்டுகளாகின,அதற்கு அடுத்து
2.25 மீட்டர் உயரத்தில் என்னுள் நுழைவதற்கான
வாசல் அமைக்கபட்டுள்ளது, இதன் கதவு "தங்கத்தால்"
ஆனது,-இந்த கதவு வருடத்திற்கு 3 முறை திறக்கப்
பட்டு எனது உள் பகுதியில் "ஜம் ஜம்"நீரால்
சுத்தம் செய்யப்படும்,
**"ஹஜ்ருல் அஸ்வத்"க்கும் எனது வாயிலுக்கும்
இடையேயுள்ள 4அடி அகலமுள்ள சுவற்றிக்கு
"முல்தஜம்"என்று பெயர்,
** இந்த சுவற்றில் வலது கன்னத்தையும்,நெஞ்சை
யும் பதித்து துஆ கேட்பின் உடனே ஒப்புக்கொள்ளப்படும்,
** 700 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த யமன் நாட்டு
மன்னன் "துப்பஉல் அஸத்" என்பவர்தான்
முதன்முதலில் எனக்கு" போர்வையை போர்த்தி"
என்னை கௌரவப் படுத்தினார்,
அந்தக் கருப்பு போர்வைக்கு "கிஸ்வா"என்று பெயர்,
**என்மீது போர்த்தப்பட்ட துணியின் எடை;
670 கிலோ,உயர்ரக பட்டில் ஆனது,இதன்மீது
தங்கத்தாலும்,வெள்ளியாலும் திருமறை
திருவசனம் எழுதப்பட்டுள்ளது,
**என் இரு மூலைகளுக்கும் எதிரில் அரை வட்ட
வடிவில் 1.32 மீட்டர் உயரமுள்ள சுவருக்கு"ஹதீம்"
என்று பெயர், இதற்கு "ஹிஜ்ரே இஸ்மாயீல்"
என்ற பெயருமுண்டு,இந்த சுவற்றின் சுற்றளவு
21.57 மீட்டர் நீளமாகும்,ஆரம்பத்தில் இதுவும்
என்னுடைய உட்பகுதியாகத்தான் இருந்தது,
"குறைஷிகள்"என்னை கட்டியபோது போதிய
பணவசதி இல்லாததால் முன்பு நானிருந்த
அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தை
குறைத்து விட்டார்கள்,குறைக்கப்பட்ட அப்பகுதியும்
என்னில் சேர்ந்ததே!
** தினமும் 120 ரஹ்மத்துகள் என்னில் இறங்குகிறது,
உலகத்திலுள்ள மனிதர்கள் சுற்றி வருவதற்கு
அனுமதிக்கப்பட்ட ஒரே கட்டிடம்"கஃபாவாகிய"
நான் மட்டும்தான் என்பதை நினைக்கும்போது
எனக்கு பெருமையாக இருக்கிறது,
**நற் காரியங்களை வலது பக்கமாக துவங்கச்
சொல்லும் இஸ்லாம்,மிக உயர்ந்த கடமையான
என்னைச் சுற்றும்போது "இடது பக்கமாகச்
சுற்றி வரச் சொல்கிறது,
**தொழுகை நேரம் நீங்கலாக, இரவிலும்,பகலிலும்
மனிதர்கள் என்னை சதா வலம் வந்துகொண்டே
இருக்கிறார்கள்,தொழுகை நேரங்களில்கூட
மலக்குகள் என்னை "தவாப்"செய்கின்றனர்,
** என்னைப்போல்,என்னைச் சுற்றியுள்ள,
"மகாமே இப்ராஹிம்" -"ஜம் ஜம்"-"ஸபா
மர்வா"மலைக்குன்று,"மினா" -அரபா" -"முஸ்தலிபா"
"ஹிரா" -"தௌர்"-"ஹூதைபிய்யா"போன்ற
சிறப்புக்குரிய இடங்கள், என்னைக்கண்ட
மகிழ்வில் "ஹாஜிகள்"இவற்றையும் கண்டு
மகிழ்கின்றனர்,*
**ஓ! "கஃபாவே" உன்னிடம் வருவதற்கு நாங்களும்
ஆசை கொண்டுள்ளோம்! எங்கள் இறைவனிடம்
தினம் துஆ செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!
No comments:
Post a Comment