Monday, 26 November 2018

நான்தான் "கஃபா

** நான்தான்  "கஃபா " **

**பூமியில் உயிரினங்கள் படைக்கப் படுவதற்கு முன்
பூமி முழுவதும் நீரால் நிரம்பி இருந்தது,அதன்
ஓரிடத்தில் நுரை தோன்றியது,-அவ்விடத்தில்தான்-
நான் நிர்மாணிக்கப்பட்டேன்,

ஆதம் நபி படைக்கப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு
முன்பே மலக்குகள் என்னை நிர்மாணித்து,என்னை
வலம் வந்து இறைவனை வணங்கி வந்தனர்,
அதன் பின் என்னை முதல் மனிதர் ஆதம்[அலை]
என்னை கட்டினார்,பின்னர் வெள்ள பிரளயத்தில்
[நூஹ்[அலை]காலத்தில் ]நான் சேதமுற்றேன்,
**நபி இப்றாஹிம்[அலை]அவர்கள்,தன் மகன்
இஸ்மாயில்[அலை]அவர்களுடன் சேர்ந்து என்னை
மீண்டும் நிர்மாணித்தார்கள்,

**பின்னர் "அமாலிகா"எனப்படும் "ஜூர்ஹூம்"
குலத்தார் என்னை புதுப்பித்தார்கள்,அதன்
பின்னர் நபி[ஸல்]அவர்களின் ஐந்தாம் தலைமுறை
பாட்டனார் "குஸை பின் கிலாப் "என்னை கட்டினார்,
நபி[ஸல்]அவர்களுக்கு நபித்துவம் வருவதற்கு
முன்பு அவர்களின் 35 ஆம் வயதில் குறைஷிகள்
என்னை கட்டினர்,அதன் பின்னர் அப்துல்லாஹ்
பின் ஜூபைர்[ரலி]என்னை கட்டினார்,அதன்
பின்னர் கலிபா அப்துல் மலீக் பின் மர்வான்
காலத்தில் கவர்னராக இருந்த "ஹஜ்ஜாஜ் பின்
யூசுப்"என்னை கட்டினார்,

** நான் சதுர வடிவ கட்டிடம்,

**சவூதியில் உள்ள "ஹிஜாஜ்"மாநிலத்தில் உள்ள
"மக்கா"என்ற மாநகரை உடைய பகுதியில் நான்
அமைந்திருக்கிறேன்,இவ்வூர் சவூதியின் மேற்கு
திசையில் செங்கடலிலிருந்து 70 மைல் தொலைவில்
கடல் மட்டத்திற்கு 330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது,
உலகின் தொப்புள் ஆகவும்,உலகின் மைய பகுதி
யாகவும் இந்நகர் திகழ்கிறது,

**அல்லாஹ் எனக்கு சூட்டிய பெயர்கள் ;
"அல் கஃபா"
"அல் பைத்"
"பைத்துல்லாஹ்"
"அல் பைத்துல் ஹரம்"
"அல் பைத்துல் அதீக்"
"கிப்லா"

**எனது மொத்த உயரம்; 53 அடி(14 மீட்டர்)
எனது நீளம் மேற்கில் ;45 அடி,
கிழக்கில்;49 அடி,
வடக்கு மற்றும் தெற்கில்;31 அடி,

**எனது தென் கிழக்கு மூலைக்கு" ருக்னுல் ஹிந்த்"
**வடகிழக்கு மூலைக்கு  "ருக்னே யமானி"
**வடமேற்கு மூலைக்கு "ருக்னே ஷாமீ"என்றும் பெயர்,
**எனது தென்கிழக்கு மூலையில் தவாப் செய்யும்
இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி
வளயத்தில்"ஹஜ்ருல் அஸ்வத்"என்ற சுவனத்
திலிருந்து ஆதம்[அலை]அவர்கள் கொண்டு வந்த
கல் பதிக்கப்பட்டுள்ளது,-ஹிஜ்ரி 319 இல் ஏற்பட்ட
ஒரு சம்பவத்தில் அது உடைந்துபோய் பெரியதும்,
சிறியதுமாக எட்டு துண்டுகளாகின,அதற்கு அடுத்து
2.25 மீட்டர் உயரத்தில் என்னுள் நுழைவதற்கான
வாசல் அமைக்கபட்டுள்ளது, இதன் கதவு "தங்கத்தால்"
ஆனது,-இந்த கதவு வருடத்திற்கு 3 முறை திறக்கப்
பட்டு எனது உள் பகுதியில் "ஜம் ஜம்"நீரால்
சுத்தம் செய்யப்படும்,

**"ஹஜ்ருல் அஸ்வத்"க்கும் எனது வாயிலுக்கும்
இடையேயுள்ள 4அடி அகலமுள்ள சுவற்றிக்கு
"முல்தஜம்"என்று பெயர்,

** இந்த சுவற்றில் வலது கன்னத்தையும்,நெஞ்சை
யும் பதித்து துஆ கேட்பின் உடனே ஒப்புக்கொள்ளப்படும்,

** 700 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த யமன் நாட்டு
மன்னன் "துப்பஉல் அஸத்" என்பவர்தான்
முதன்முதலில் எனக்கு" போர்வையை போர்த்தி"
என்னை கௌரவப் படுத்தினார்,
அந்தக் கருப்பு போர்வைக்கு "கிஸ்வா"என்று பெயர்,

**என்மீது போர்த்தப்பட்ட துணியின் எடை;
670 கிலோ,உயர்ரக பட்டில் ஆனது,இதன்மீது
தங்கத்தாலும்,வெள்ளியாலும் திருமறை
திருவசனம் எழுதப்பட்டுள்ளது,

**என் இரு மூலைகளுக்கும் எதிரில்  அரை வட்ட
வடிவில் 1.32 மீட்டர் உயரமுள்ள சுவருக்கு"ஹதீம்"
என்று பெயர், இதற்கு "ஹிஜ்ரே இஸ்மாயீல்"
என்ற பெயருமுண்டு,இந்த சுவற்றின் சுற்றளவு
21.57 மீட்டர் நீளமாகும்,ஆரம்பத்தில் இதுவும்
என்னுடைய உட்பகுதியாகத்தான் இருந்தது,
"குறைஷிகள்"என்னை கட்டியபோது போதிய
பணவசதி இல்லாததால் முன்பு நானிருந்த
அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தை
குறைத்து விட்டார்கள்,குறைக்கப்பட்ட அப்பகுதியும்
என்னில் சேர்ந்ததே!

** தினமும்  120 ரஹ்மத்துகள் என்னில் இறங்குகிறது,
உலகத்திலுள்ள மனிதர்கள் சுற்றி வருவதற்கு
அனுமதிக்கப்பட்ட ஒரே கட்டிடம்"கஃபாவாகிய"
நான் மட்டும்தான் என்பதை நினைக்கும்போது
எனக்கு பெருமையாக இருக்கிறது,

**நற் காரியங்களை வலது பக்கமாக துவங்கச்
சொல்லும் இஸ்லாம்,மிக உயர்ந்த கடமையான
என்னைச் சுற்றும்போது "இடது பக்கமாகச்
சுற்றி வரச் சொல்கிறது,

**தொழுகை நேரம் நீங்கலாக, இரவிலும்,பகலிலும்
மனிதர்கள் என்னை சதா வலம் வந்துகொண்டே
இருக்கிறார்கள்,தொழுகை நேரங்களில்கூட
மலக்குகள் என்னை "தவாப்"செய்கின்றனர்,

** என்னைப்போல்,என்னைச் சுற்றியுள்ள,
"மகாமே இப்ராஹிம்" -"ஜம் ஜம்"-"ஸபா
மர்வா"மலைக்குன்று,"மினா" -அரபா" -"முஸ்தலிபா"
"ஹிரா" -"தௌர்"-"ஹூதைபிய்யா"போன்ற
சிறப்புக்குரிய இடங்கள், என்னைக்கண்ட
மகிழ்வில் "ஹாஜிகள்"இவற்றையும் கண்டு
மகிழ்கின்றனர்,*

**ஓ! "கஃபாவே" உன்னிடம் வருவதற்கு நாங்களும்
ஆசை கொண்டுள்ளோம்! எங்கள் இறைவனிடம்
தினம் துஆ செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!

Sunday, 18 November 2018

நம்மைப்போன்ற மனிதரென நாயகத்தை

#நம்மைப்_போன்ற_மனிதரென நாயகத்தை எண்ணாதே !

பொய்மையும் உண்மையும் , நன்மையும் தேய்மையும்
பொதுவென்று சொல்லாதே !

அல்லாஹ்வின் தூதரை நீ அறியாமல் பேசாதே !
நாவாலே பிழை பேசி சாபத்தை வாங்காதே !

பன்னீரும் தண்ணீரும் சமமாக முடியாது !
பன்னீரின் வாசமெல்லாம் தண்ணீரில் கிடையாது !

கண்ணீரும் கடல் நீரும் கரிப்பதுதான் என்றாலும்
கண்ணீரின் துளிகளிலே கப்பல்கள் ஓடாது !

அன்னையும் பெண்தானே !
அவளைப் போல அமுதூட்ட
கன்னிப் பெண் நினைத்தாலும்
கதை இங்கு நடக்காது !

கள்ளிப்பூ பூவினந்தான் !
காண்பதற்கு அழகேதான் !
மல்லிகை போல் சூடென்றால்
மனைவிக்கு பிடிக்காது !

எழுத்தெல்லாம் அல் குர்ஆனின்
எழுத்தாக முடியாது !
புழு எல்லாம் வண்ணத்துப் பூச்சி என்றாகாது !

கல் எல்லாம் ஹஜருல் அஸ்வத் கல் என்றாகாது !
வில் எல்லாம் வானத்து வில்லாக சிறக்காது !

மூளையும் அங்கம்தான் !
முடியும் ஓர் அங்கம் தான் !
மூளையின் செயல் எல்லாம்
முடி செய்ய முடியாது !

நம் வீட்டு கிணற்றினிலே
ஸம்ஸம் நீர் சுரக்காது !
நமதூரின் மஸ்ஜித் எல்லாம்
நபவி போல் ஆகாது !

நபித்தோழர் கூட ஒரு நபியாக முடியாது !
அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு போல நாம் ஆகி விட முடியாது !

நபியவர்கள் காலம் போல் நம் காலம் இருக்காது !
நபி ஸஹாபி என்ற பெயர் நம் தோழர்களுக்கேது ?

அஞ்சல் தரும் சேவகராய் அருள் நபியை உருவகித்தாய் !
அஞ்சலுக்குள் இருந்ததென்ன ?
அனைத்தும் நபி புகழ் தானே !

வஹி அருளப்படுகின்ற மனிதர்தான் என்றாலும்
வஹி இறங்கா மனிதர் நாம்
வள்ளலுக்கு நிகராமோ ?

உம்மி நபி மனைவியர்கள்
உம்மு ஹாத்து முஃமீன்கள்.!
நம்மவரின் துணைவியரோ
நாம் இறந்தால் மணப்பெண்கள்..!

பண்பு நபி குடும்பத்தை பரிசுத்தமாக்கி வைத்தான்
பின் தொடரும் நமக்கெல்லாம் பேரிறைவன்
என்ன தந்தான் ?

கலிமாவில் முஹம்மது எனும் கருப்பொருளை நீக்கி விட்டு
இழிந்தவனே உன் பெயரை இணைத்து வைக்க முடியாது !

முன்கர் நகீர் கபுறினிலே மூர்க்கத்துடன் வரும் போது
"அண்ணலைப் போல் நான்" என்று அலட்டி நிற்க முடியாது !

உன் புதிய வாதம் இதை
உமர் ஃகத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) கேட்டிருந்தால்.!

தன் வாளால் உன் தலையை தலைசீவி முடித்திருப்பார் !

அலி ரலியல்லாஹு அன்ஹுவோ உன் வழக்கிற்கு
அதிசயமாய் தீர்ப்புரைப்பார் !

கலிகால அபூஜஹலாய் கஃபு ரலியல்லாஹு அன்ஹு உனை வர்ணிப்பார் !

நம்மைப் போன்ற மனிதரென நாயகத்தை எண்ணாதே !

அல்லாஹ்வின் தூதரை நீ அறியாமல் பேசாதே !
நாவாலே நீ பேசி நரகத்தை வாங்காதே.!!

صلى الله على محمد صلى الله عليه و سلم
صلى الله على محمد صلى الله عليه و سلم

இஷ்கே ரசூல்

#
#மாநபிமீது
#மகத்தானகாதல்..!
[][][][][][][][][][][][][][][][]
அம்ருப்னு ஆஸ்
ரலியல்லாஹு அன்ஹூ
அவர்கள்

....தேசத்தின்
கவர்னராக ஆட்சி
செய்து வந்தார்கள்.

"ஒருநாள்
கிறிஸ்தவ மக்கள்
வாழும் பகுதியில்
ஒரே பரபரப்பு..!"

"கிறிஸ்துவர்கள்
கொதித்து போய்விட்டார்கள்..?"

"சில கிறஸ்துவ பாதிரியார்கள்
கவர்னரை சந்திக்க
வந்தார்கள்..!"

"அம்ருப்னு ஆஸ்
அவர்கள்
அன்போடு வரவேற்று
என்ன விஷயம்..?"
என விசாரித்தார்கள்.

"உங்கள் முஸ்லிம்
மதத்தை சேர்ந்தவன்
எங்கள் சர்ச்சிலுள்ள
இயேசுவின் மூக்கை
உடைத்து விட்டான்..!"

"அவனைக்
கண்டுபிடித்து
கடுமையான
தண்டனை
தர வேண்டும்..!"
என கோபமாக சொன்னார்கள்.

"உடனே
அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்கள்..!"

"நாட்கள் ஓடின
குற்றவாளியை
கண்டுப்பிடிக்க
முடியவில்லை..!

மீண்டும் பாதிரிகள்
முறையிட்டார்கள்.

குற்றவாளி
கிடைக்கவில்லை,
என்ன எதிர் பார்க்கிறீர்கள்.? என
அம்ருப்னு ஆஸ்
ரலியல்லாஹு
கேட்டார்கள்.

"உங்கள்
முஹம்மதை(ஸல்)
சிலை செய்து
மூக்கை
உடைப்போம்..!"
என்றதும்

"அம்ருப்னு ஆஸ்
துடித்து போய்
விட்டார்கள்..!"

"என் உயிர் இருக்கும் வரை
ஒரு போதும்
இதை அனுமதிக்க
மாட்டேன்..!"
என்றார்கள்.

"ஒருவாரம்
அவகாசம் தாருங்கள்
கண்டுபித்து விடுகிறேன்..!"

"குற்றவாளி
கிடைக்கா விட்டால்..
பொது மக்கள்
முன்னிலையில்
என் மூக்கை
அறுத்துக் கொள்கிறேன்.!"என்றார்கள்.

ஒருவாரம்
கழிந்து விட்டது
அம்ருப்னு ஆஸ்
ரலியல்லாஹு
அவர்கள்

"மக்களின் முன்
தங்களின் மூக்கை அறுக்க
தயாராகிவிட்டார்கள்
மக்கள்
கண்சிமிட்டாமல்
பார்த்தார்கள்..!"

"மூக்கில்
கத்தியை வைத்து
அறுக்கும் நேரம்.."

"கூட்டத்திலிருந்து
அலறியபடி
ஓருவன்
ஓடி வந்தான்..!"

"நான் ஒரு
கிறிஸ்துவன்
நான் தான்
இயேசுவின் மூக்கை
உடைத்தேன்..!"

"உங்கள் ஆட்சிக்கு
களங்கம் ஏற்படுத்த
என் கடவுளான
இயேசுவின் மூக்கை
என் கையால்
உடைத்தேன்.."

ஆனால்
"நீங்களோ
முஹம்மத் அவர்களுக்கு
பகரமாக
உங்கள் மூக்கையே அறுக்க
முன் வந்தீர்கள்.."

"முஹம்மத் அவர்களின்
மீது நீங்கள்
வைத்திருக்கும்
பிரியத்தை பார்த்து
பிரமித்துப் போய்
விட்டேன்..!" என்றான்.
by மவ்லவி
U.அபூதாஹிர்
ஃபைஜி பாகவி.

Saturday, 17 November 2018

நபிகளாரின் சரீர சக்தி!

அதிசயம் ...ஆனால் உண்மை!

கண்மணி நாயகம் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் சரீர சக்தி!                                  
ஒரு நபிக்கு 500 மனிதர்களின்
சக்தி உண்டு, காரணம் வஹியைத்
தாங்க அதிக சக்தி வேண்டும்.
ஆனால் நம் கண்மணி நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் 40 நபியின் சக்தியை
கொடுக்கப்பட்டவர்கள்.
சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார்
ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்.

1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்கள்
முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப்
பார்ப்பது போன்றே,
பின்னாலும் தொலைவிலும்
இருப்பதையும் ஏக காலத்தில்
ஒன்றாகவே பார்ப்பவர்களாக
இருந்தார்கள்.

2. பகலிலும், வெளிச்சத்திலும்
பார்ப்பதைப் போன்றே, இரவிலும்,
இருளிலும் சிறியன - பெரியன
யாவையும் பார்ப்பார்கள்.

3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட
உவர்ப்பு நீர் இனிமையானதாக
மாறிவிடும்.

4. பாலருந்தும் பாலர்களின் வாயைத்
தங்களின் முபாரக்கான உதட்டுடன்
இணைத்து முத்தமிட்டால் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் உமிழ் நீர் பட்ட
அக் குழந்தை அன்று முழுவதும்
பசி தீர்ந்திருக்கும்.
தாயைப் பாலுண்ணத் தேடாது.
இதனைத் தங்கள் வீட்டுக் குழந்தைகள்
விஷயத்தில் அனுபவ ரீதியாக
காணப் பட்டிருக்கிறது.

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்.அவர்களின் 'அக்குள் '
பகுதி வெண்மையாகவும்
நறுமணம் கமழுவதாகவுமிருக்கும்.

6. அவர்கள் வெளியிடும் சப்தம்
அருகிலிருப்பவர்களுக்கு,
உரத்ததாகத் தோன்றாது.
ஆனால் தொலை தூரம் வரை
சென்று கேட்கும்.

7. அது போன்றே மற்றவர்களால்
கேட்க முடியாத, வெகு
தொலைவிலிருந்து வரும் சப்தத்தை
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் மிகத் தெளிவாக கேட்பார்கள்.

8. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் தூக்கத்தின்
போது உடல் மட்டும் தூங்கும்,
உள்ளம் விழித்தே இருக்கும்.
கண்கள் உறங்கும்.
கல்பு ( இதயம் ) உறங்காது.

9. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு வாழ்வில் எப்பொழுதும் கொட்டாவி
ஏற்பட்டதில்லை.

10. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் உடலிலிருந்து
வெளிப்படும் வியர்வை,
அம்பர் கஸ்தூரி போன்ற நறுமணத்
திரவியங்களை நாணச் செய்து
விடும் அளவுக்கு சிறந்த
மணமுள்ளதாக இருக்கும்.

11. நபி ஸல்லல்லஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் திரு
மேனியிலிருந்து நறுமணம்,
அவர்கள் சென்ற வழியிலுள்ள
காற்றில் கலந்து நின்று, அவர்களை
சந்திக்கத் தேடி வருபவர்களுக்கு
வழி காட்டும்.

12.நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்தபோது
தொப்புள் கொய்யப்பட்ட
நிலையில் பிறந்தார்கள்.

13. அது போன்றே கலிமா விரலை
வானின் பால் உயர்த்தியவர்களாக,
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.

14. காத்தமுன் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கத்னா ( சுன்னத் )
செய்யப்பட்டவர்களாகப்
பிறந்தார்கள்.

15. அவ்வாறே தொழுகையின்
உச்சகட்டமான சுஜூதுடைய நிலையில்
கிப்லாவை முன்னோக்கியவர்களாக,
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.

16. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் சரீரத்தில்
(மலம் ஜலம் ) போன்ற அசுத்தங்கள்
எதுவும், எப்பொழுதும் பட்டதில்லை.

17. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் பால்குடித்த
பருவத்திலேயே மற்றவ(மனித)ர்களிடம்
வசனித்திருக்கிறார்கள்.

18. எப்பொழுதும் வெயில்
காலத்தில் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
தலைக்கு மேல் மேகம் நிழல் தரும்.

19. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் உடைகள்,
ஆடைகள் மீது எப்பொழுதும்
ஈக்கள் உட்காருவதில்லை.

20. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் சிறு நீரில்
வாடையே ஏற்படுவதில்லை.

21. ஆத்ம உலகில்
(ஆலமுல் அர்வாஹில்) முதன்
முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆத்மா
(ரூஹ் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் ஆத்மாவே
ஆகும்.

22. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு ஒருபோதும்
உறக்கத்தில் ஸ்கலிதம்
ஏற்பட்டதில்லை.

23. ஒரு கூட்டத்தின் மத்தியில்
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் அமர்ந்தால்
அவர்களின் இரு புஜங்களும்
மிக உயர்வாக க் காட்சி தரும்.

24. ஆத்ம உலகில்
'அலஸ்து பிரப்பிகும்' நான்
உங்கள் இறைவனல்லவா?
என்று இறைவன் வாக்குறுதி
கேட்ட போது '' பலா '' --
ஆம்! என முதன் முதலில் ஒப்புதல்
அளித்தவர்களும், நபி
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாகும்.
-மீள்-