**
عَنْ حَكِيْمِ ابْنِ حِزَامِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَمَا بَعَثَنِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اِلٰى اليمن قال :لَاتَمْس القُرْآنَ اِلَّا وَاَنْتَ طَاهِرٌஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொட வேண்டும். (இல்லையென்றால் தொடக்கூடாது)’நூற்கள்: ஹாகிம் எண்: 6066, தப்ரானி (கபீர்) எண்: 306, தார குத்னீ எண்: 366)
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِي الله عنه قَالَ: قَالَ النَبِيُّ صلى الله عليه وسلم لَايَمَسَّ الْقُرْآنَ اِلَّاطَاهِرٌஇறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்: ‘பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுநூற்கள்: தாரகுத்னீ 383, தப்ரானி (ஸஙீர்) 1160
عَنْ عُثْمَانِ بِنِ اَبِي العَاصِ قَالَ: وَفَدْنَا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فوجدُوْنِيْ اَفْظَلَهُمْ اَخَذًا لِلْقُرْآنِ وَقَدْ فَظَلْتَهُمْ بِسُوْرَةَ البَقَرة قَالَ النَّبِيُ صلى الله عليه وسلم قَدْ اَمَّرْتُكَ عَلٰى اَصْحَابِكَ وَاَنْتَ اَصْغَرُهُمْ وَلَا يَمَسَّ الْقُرْآنَ اِلا وانت طاهر (رواه التبراني فى الكبيرஉத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘நாங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக் கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்னிடம் சொன்னார்கள். ‘நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும்போது தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’(நூல்: தப்ரானி (கபீர்) 8255)
عن عبد الله بن ابي بكر ابن محمدبن عمرو بن حزم عن ابيه عن جدّه قال: كان فى كتاب النبي صلى الله عليه وسلم لعمروبن حزم: لا يمس القرآن الّا علٰى طهر(رواه مالك وابن حبان والدار مي والبيهقى والدار قطنيஇறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது. ‘து|ய்மையானவரான நிலையில்;தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’நூற்கள்: முஅத்தா 466, தாரமி 2195, பைஹகி 376, தாரகுத்னி 385, இப்னு ஹிப்பான் 6703
No comments:
Post a Comment