Friday, 30 March 2018

ஔரங்கசீபும் அஜ்மீர் காஜாவும்

வலிமார்கள் வாழ்வினிலே

அவர்  பேரரசர் ஷரி அத் பேணுவதில் மிகத் தீவிரமானவர் அவரின் அவை அன்று மிக முக்கியமான பிரச்சனையை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தது.

இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்ற பல ஆலிம் பெருந்தகைகள் மன்னரிடம் குற்றசாட்டை வைத்தார்கள்.

இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமாக அந்த இறைநேசரின் தர்ஹாவில் செயல்கள் நடப்பதாகவும் அதனால் அந்த தர்ஹா ஷரீபை தகர்க்க வேண்டும் என்றும்,

இதற்கு முன் ஆட்சி செய்த மன்னர்கள் போல் நீங்கள் இல்லை என்றும், நீங்கள் ஷரி அத்தை பேனுவதில் அதை நிலை நாட்டுவதில் முனைப்பு மிக்கவர்  ஆகவே நீங்கள் மனது வைத்தால் தான் எதிர்கால இஸ்லாமிய நலன் கருதி இதை சொல்கின்றோம் எனக் கூறினார்கள்.

பேரரசரும் யோசிக்க துவங்கினார், பேரரசரும் சாதாரண மானவர் அல்ல ஒரு இறைநேசர் ஆவார், என்றாலும் பல முக்கிய உலமாக்கள் சொன்னதால் அந்த தர்ஹா ஷரீஃப் இல அப்படி என்னதான் நடக்கின்றது என அரசர் நேரில் பார்க்க சென்றார்கள்.

அந்த தர்ஹா ஷரீஃப் வந்த பேரரசர் அங்கு நடப்பதை பார்த்தார்கள் மக்கள் கூட்டம் கூடமாக வந்து அந்த இறைநேசரின் மஜார் ஷரீஃப் இல் கூடை கூடையாக ரோஜாக்களை கொட்டினார்கள் .

அங்கு சுற்றியும் பலர் அமர்ந்து மெய்ஞானக் கவிதைகளை பாடிய வண்ணம் அமர்ந்து இருந்தார்கள்

சுற்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் தேவைகளை கூறி தங்களுக்காக இறைவனிடம்  துவா செய்யுமாறு கோரி நின்றார்கள்.

இதை முற்றுமாக கவனித்த அரசர் அந்த தர்ஹா ஷரீஃப் இன் நிர்வாகியை அழைத்தார்கள் .

அரசர் முன் பணிந்து நின்ற அந்த தர்ஹா ஷரீஃப் இன் நிர்வாகி, அரசர் வந்த விவரத்தை கேட்டார், அரசர் கேட்டார்கள் இங்கு என்ன நடக்கின்றது என்று கேட்டார்கள்.

இது எப்போதும் நடக்கும் நிகழ்வு என்றார்கள,

இது ஏன் இங்கு நடக்கின்றது என்று கேட்டார்கள்.

இங்கு அடக்கமாகியுள்ளவர்கள் ஒரு மாபெரும் இறைநேசர் என்றார்.

அப்படியா இறைநேசர் என்றால் எப்படி என கேட்டார் அரசர்

அதற்கு நிர்வாகி கூறினார் குர் ஆனில் உள்ள ஒரு ஆயத்தை ஓதி அதன் பொருளாக இறைநேசர்கள் மரணிக்க மாட்டார்கள் என்றார்,

அரசர் கேட்டார் அப்படியா அந்த மண்ணரையில் அடக்கமான இறைநேசர் மரணிக்க வில்லையா எனக் கேட்டார் மன்னர்

ஆம் அப்படித்தான் இறைவசனமும் சொல்கின்றது என்றார் நிர்வாகி.

அப்படியா உயிரோடு இருப்பவர்களிடம் சலாம் உரைத்தால் பதில் சலாம் சொல்வார்கள் இந்த மஜார் ஷரீஃப் இல் அடக்கமாகி உள்ள இறைநேசரிடம் சலாம் உறைத்தால் பதில் சலாம் வருமா என்றார் அரசர்,

சற்று தயங்கிய நிர்வாகி அரசரின் அகமியம் அறிந்த தால் பதில் வரும் என்று கூறினார்கள்.

அதற்கு அரசர் சொன்னார் நான் முன்று முறை சலாம் உரைப்பேன் பதில் சலாம் வந்தால் நான் அமைதியாக சென்று விடுவேன் இல்லை என்றால் இந்த மண்ணரையை சாதாரண மக்கள் அடக்கம் செய்யப்பட்ட கப்ர் போன்று மாற்றி விட்டு சென்று விடுவேன் என உரைத்து நிர்வாகியின் பதிலை எதிர் பார்க்காமல் மன்னர் அந்த மஜார் ஷரீஃப் இன் முன் நின்று அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

என முதல் முறை சொன்னார்கள் பதில் வரவில்லை

மீண்டும் இரண்டாவது முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனச் சொன்னார்கள் பதில் வரவில்லை

தொடர்ந்து முன்றாவது முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனச் சொன்னார்கள்

இம்முறை வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹித் தால வ பரக்காத்தஹு எனும் பதில் சத்தம் அந்த மஜார் ஷரீஃப் இல் இருந்து வந்தது இது அந்த பேரரசர் மற்றும் இன்றி அங்கு சுற்றி நின்ற அனைவரும் கேட்டார்கள்.

இப்படி இறைநேசர் தர்பாரின் மகத்துவத்தை வெளிக் கொண்டுவந்த அந்த அரசர் தான் இந்திய தேசத்தை முழுமை படுத்தி கட்டி ஆண்டு ஷரி அத் சட்ட திட்டங்களை அனுவந்தனையும் மாறாமல் பின்பற்றி வாழ்ந்த ஹழ்ரத் ஔரங்கசீப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் ஆவார்கள்.

அரசரின் சலாத்திற்கு பதில் சலாம் உரைத்து இறைநேசர்களுக்கு மரணம் இல்லை என உலகிற்கு காட்டிய அந்த இறைநேசர் தான் ஏழைப் பங்காளர் அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா ஹழ்ரத் க்வாஜா முய்னுத்தீன் சிஸ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் ஆவார்கள்

இந்த சம்பவத்திற்கு பிறகு இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஹழ்ரத் ஔரங்கசீப் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு உயரிய விளக்கு ஒன்றை அஜ்மீர் தர்ஹா ஷரீஃப் இற்கு அன்பளிப்பு செய்தார்கள் .

தொடரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment