#மஹான்களின்
#வரலாற்றில்ஒரு
#மீன்மஹான்..!
~~~~~~~~~~~`````````````````````````
அந்த மிஸ்ரு நாட்டு மஹான்
கப்பலில் பயணம்
செய்தார்கள்...
"திடீரென
அந்தக் கப்பலில்
பயணம் செய்த
ஒரு வியாபாரி
விலையுயர்ந்த
என் முத்துமணியை
காணவில்லை..!"
என
அலறினான்.
"எல்லோருடைய
பையையும்
சோதனை செய்யப்பட்டது
ஆனால்
அந்த முத்துமணி
கிடைக்கவில்லை..!"
கடைசியாக
அந்த மஹானின்
தோற்றத்தைப்
பார்த்து... இவர்தான்
எடுத்து
இருப்பார் என சந்தேகப்பட்டனர்..!"
திருடனே!
கொடுத்து விடு
எனக் கேட்டனர்
நான் எடுக்கவில்லை
என சொல்லியும்...
"மஹானை
எல்லோரும் சேர்ந்து
கடுமையாக அடித்தனர்..!"
"யா அல்லாஹ்
எல்லாம்
அறிந்தவன் நீ
ஏன் எனக்கு
இந்த சோதனை..?"
என
அல்லாஹ்விடம்
இறைஞ்சினார்கள்.
"அப்போது
ஓர் அதிசயம்
நடந்தது..!"
"மஹானை
அடித்தவர்கள்
திரும்பி கடலை
ஆச்சரியமாக
பார்த்தார்கள்..!"
"ஆயிரக்கணக்கான
மீன்கள்
கப்பலை சுற்றி
நின்றன..!"
இன்னொரு
அதிசயம்
நடந்தது...
"எல்லா மீன்களின்
வாய்களிலும் முத்துமணி
மின்னியது..!"
"ஒரு மீனின்
வாயிலிருந்து
ஒரு முத்துமணியை
எடுத்து
வியாபாரியிடம்
அந்த மஹான் கொடுத்தார்கள்...!"
"எல்லோரும்
தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்டனர்..!"
அன்று முதல்
மிஸ்ர் நாட்டு மஹானை
#துன்னூன்-
(#மீன்மஹான்)
என அழைத்தனர்.
அவர்கள் தான்
#துன்னூனுல்மிஸ்ரி
#ரஹ்மத்துல்லாஹி
அலைஹி ஆவார்கள்.
by abuthahir
faizee baqavi.com
Kumbakonam
9443061063
No comments:
Post a Comment