ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 23 March 2018

குத்புத்தீன் பக்தியாரே காஃகி {ரஹ்}

அஜ்மீர் நாயகம் ஹாஜா முஹைனுத்தீன் சிஸ்தி {ரஹ்மத்துல்லாஹி அன்ஹு} அன்னவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் .பக்தியாரே காக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அன்னவர்கள் மூன்று வயது பாலகராய் இருந்த சமயம் அவர்களின் தாயார் அவர்கள் ..பிள்ளையை பிஸ்மி சொல்லி ஓத வைக்க வேண்டும் ஆலிம் பெருமக்களை கூப்பிட்டு வாருங்கள் என தன் கணவரிடம் கூறினார்கள் .
அவர்கள் சென்று அஜ்மீர் நாயகம் அன்னவர்களை வீட்டிற்கு அழைத்தார்கள் . அன்னவர்கள் சஹா க்கள் சிலருடன் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்தார்கள் .

மூன்று வயது சிறுவராக இருந்த பக்தியாரே காக்கி அன்னவர்களுக்கு பிஸ்மி சொல்லி தேனை தொட்டு வாயில் வைத்து ஆரம்பித்துவைத்தார்கள் .பிஸ்மில்லாஹி சொல்லியவுடன் பாலகர் பக்தியாரே காக்கி அவர்கள் உஸ்தாத் நான் சூரத்து பாத்திஹா ஒத ட்டுமா...என கேட்க்க ...அஜ்மீர் நாயகம் அன்னவர்கள் ஓதுங்கள் பார்க்கலாம் என சொல்ல ..சூரா பாத்திஹா ஏழு ஆயத்துகளையும் மிக அழகாக ஓதினார்கள் .அஜ்மீர்நாயகம் அன்னவர்கள் பாலகரை நெற்றியில் முத்தமிட்டார்கள் .வேறு சூராக்கள் ஏதும் தெரியுமா என வினவ பாலகர் அவர்கள் ''சூரத்து பக்கரா '' ஒதட்டுமா எனக் கேட்க ஓதுங்கள் என அஜ்மீர் நாயகம் அவர்கள் பணிக்க.ஒரு பிழையும் இல்லாமல் அழகாக ஒதிமுடித்தார்கள்.உடனே பாலகர் பக்தியாரே காக்கி அவர்களை கட்டிப்பிடித்து நெஞ்சோடு அனைத்து முத்தமிட்டார்கள். ''ஆல இம்ரான் '' ஓதட்டுமா ..''சூரத்து நிஷா '' ஒத ட்டுமா எனக்கேட்டு பதினெட்டு ''ஜுஷ்வு கள் ஒதிமுடித்தார்கலாம்.

மகனே எப்படி மனனம் செய்தீர்கள் என அஜ்மீர் நாயகம் அன்னவர்கள் கேட்க ..என் தாயார் அவர்கள் என்னை மடியில் போட்டுக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள் ஓத ஓத அதைக்கேட்டு நான் மனனம் செய்துகொண்டேன் .எனக்கூறினார்களாம்.தாயார் அவர்கள் ஓதியதை கேட்டு கேட்டு மனனம் செய்துள்ளார்கள் என்றால் ,,தாயார் அவர்கள் எந்த அளவிற்கு ஓதி திலாவத் செய்திருப்பார்கள் எனவும் ...தற்போதைய தாய்மார்களின் நிலைகளையும் நாம் சிந்திக்கக்கடமைபட்டுள்ளோம்..பக்தியாரே காக்கி {ரஹ்} அன்னவர்கள் சிறந்த மார்க்க வல்லுனராகவும் விலாயத் மிகுந்த மஹானாகவும் சிறந்து விளங்கினார்கள்.

அன்னவர்கள் வபாத்தாகும் போது நிபந்தனை பிறப்பித்தார்கள் .எனது ஜனாஸாவை தொழவைப்பவர் ..பால்ய பருவம் அடைந்ததுமுதல் இன்றுவரை ''தக்பீர் தஃரீமாவை விட்டவராக இருக்கக்கூடாது ,பால்ய பருவமுதல் இன்று வரை தஹஜத் தொழுபவராய் இருத்தல் வேண்டும்.அஸருடைய முன் சுன்னத்தை தொழுதவராய் இருத்தல் வேண்டும் ..பால்ய பருவமுதல் இன்று வரை அன்னிய பெண்களை பார்த்திராதவராய் இருத்தல் வேண்டும் எனவும் கூறி வபாத்தாகி விட்டார்கள்
அன்னவர்களின் ஜனாஸா டெல்லி .ஜும்மா மஸ்ஜிதில் வைக்கப்பட்டிருந்தது ..லுஹர் தொழுகை முடிந்தது ,அஸர் தொழுகை முடிந்து ,மஃரீப் தொழுகையும் முடிந்தது .யாரும் முன் வரவில்லை ...எல்லோரும் மஸ்வரா செய்து தொழுகை வைக்காமல் அடக்கம் செய்துவிடலாமென முடிவெடுத்தார்கள் .அதுசமயம் ஒரு பேருருவம் எல்லோரையும் விலக்கிக்கொண்டு ஜனாஸா அருகில் சென்று மூடப்பட்டிருந்த துணியை உதட்டால் விளக்கி என்னுடைய ஷெய்கு அவர்களே உங்களுக்கும் எனக்கும் இறைவனுக்கும் மத்தியிலுள்ள மறைவான விஷயத்தை வெளிப்படுத்தி விட்டீர்களே ..! எனக்கூறிவிட்டு ஜனாஸா தொழுகையை நடத்தி முடித்தார்கள் .எல்லோர் கண்களும் இவர் யாராக இருக்கும் என நோக்கியது .அவர்கள் யார் எனப்பார்த்தார்கள் அன்னவர்கள் தான் டெல்லியை ஆண்ட சிற்றரசர்களில் ஒருவரான ''சம்சுதீன் அல்தமிஸ் {ரஹ்} அன்னவர்கள்.

அவர்களுக்கு முரீதீன்கள் மட்டும் தொண்ணூறு ஆயிரம் பேர்கள் என்று குறிப்பிடப்படுகிறது . சிறப்பிற்குரிய பெரியார்களின் வாழ்வில் அவர்களின் தாய்மார்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ...காரணம் பிள்ளை ளுக்கு தாய்பால் கொடுக்கும்போது ஒதுவுடன் இருந்தும் .. குர்ஆன் சலவாத் ஓதிக்கொண்டும்,தாலாட்டும்போது கலிமா தஸ்பீக் ஓதியும் வந்ததாக நாம் வரலாற்றில் காண்கிறோம்.அப்போதைய நம் சமுதாயம் தலை சிறந்து விளங்கியது .இப்போது பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதென்பது அரிது .பிள்ளைக்கு தாலாட்டு என்பது டிவி ரேடியோ ,செல்போன்களே ...!! தாய் மார்க ளிடத்தில் மார்க்ககல்வி குறைந்து விட்டது ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்விரிவிற்கு அஞ்சி விடுகிறேன்,

.தற்போதைய நம் சமுதாயத்தில் சிலதுகள் சீர்க்கெட்டு அலைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மனைவி மக்களை கண்ணிற்கு குளிர்ச்சியாகவும் எதிவரும் நம் சந்ததிகளையும் ,,,நம் சமுதாயத்தையும் அல்லாஹ்வின் திருபொருதத்தை அடைந்த பெருமக்களாக வாழ நற்கிருபையும் ரஹ்மத்தும் செய்தருள் வானாக ஆமீன் ..ஆமீன் யாரப்பில் ஆலமீன் ..!!!..**

No comments:

Post a Comment