#மஹான்களுக்கும்
#மனிதர்களுக்கும்
#இதுதான்வித்தியாசம்..!?
^*^*^*^*^*^*^*^*^*
அது ஒரு அழகான
பிரமாண்டமான
திஜ்லா
நதிக்கரை ஓரம்..!
"ஒரு மஹான்
சீடர்களுடன் செல்கிறார்கள்..!"
"அப்போது
ஒரு காட்சியைப்
பார்க்கிறார்கள்...!"
சில "இளைஞர்கள்
குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர்..!"
உடனே சீடர்கள்
"எஜமானே!
திஜ்லா நதியை பொங்கசெய்துஇவர்கள் அழிந்து போக
அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்..!"
என்றனர்.
அப்படியா!
"சரி..கையை தூக்குங்கள்..!
என்றார்கள்.
யா அல்லாஹ்!
"இந்த இளைஞர்களை
இவ்வுலகில் சந்தோஷமாக
வைத்திருப்பது போல்...
அவ்வுலகிலும் சந்தோஷமாக வைப்பாயாக..!"
என துஆ கேட்டதும்
என்ன எஜமானே!
ஒன்றும்
புரியவில்லையே..!"
என்றனர்
"உங்களுக்கு புரியாது
படைத்த ரப்புக்கு புரியும்..!"
என்றார்கள்.
"அப்போது
ஓர் அதிசயம் நடந்தது..!"
"அந்த இளைஞர்கள்
மதுப்பானைகளை
உடைத்தனர்..!"
"மஹான் முன்
பணிவாக நின்று...
எங்களையும்
உங்கள் சீடர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்..!"
என்றனர்.
#மாபெரும்
#இறைநேசராகிய
#மஃரூஃபுல்கர்கீ
ரஹ் அவர்கள் சொன்னார்கள்
"சீடர்களே..!
நாம் கேட்கும் துஆ
எவருக்கும்
துன்பத்தை தரக்கூடாது...
இன்பத்தை தரவேண்டும்..!"
"அழிக்க அல்ல
வாழ வைக்க வேண்டும்..!"
என்றார்கள்.
சீடர்கள்
தலை கவிழ்ந்து
கண்கலங்கி நின்றனர்..!
No comments:
Post a Comment