அபூ குபைஸ் மலையின் அந்தரங்கம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹஸ்ரத் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஸையிதா ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கடைசியாக வந்து மக்காவில் குடியேறினார்கள்.
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்தவுடன் அவர்கள் ‘அபூ குபைஸ் மலையிலிருந்த குகையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஸையிதா ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் மரணத்தைத் தழுவிய பின், அவர்களும் அவர்களுக்குப் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அப்படியானால், இந்த அபூ குபைஸ் மலையின் விசேடம்தான் என்ன?
இந்த மலைதான் புனித கஃபா அமைந்திருக்கும் இடத்தை அடுத்து காணப்படும் மலை. அந்த மலையை அடிவாரத்திலேயே பனூ ஹாஷீம் கோத்திரத்தார் பரந்து விரிந்து, காலம் காலமாக வாழ்ந்து வந்தனர்.
இங்குதான் ஸையிதா ஆமினா அம்மையார் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லம் இருந்தது. அங்கேயே எங்கள் கண்மணிகளார் புனித மாநபிகளார் ﷺ அன்னவர்களின் உதயம் நடந்தேறியது.
புனித மாநபிகளார் ﷺ அன்னவர்களின் முன்னோர்களுக்கு சொந்தமான இல்லங்களுள் ஒன்றே ‘தாருன்னத்வா’. இங்கேயே எங்கள் எஜமானர் ﷺ அன்னவர்கள் பிறந்தார்கள். தனது பிள்ளை பருவத்தை இங்கேயே அன்னவர்கள் ﷺ கழித்தார்கள். தன் வாலிபப் பருவத்தையும் இங்கேயே அடைந்தார்கள். இந்த மலையில் நின்றுக்கொண்டு இருக்கும்போதே பரிசுத்த மாநபிகளார்ﷺ அன்னவர்கள், பால் நிலவை இரண்டாகப் பிளந்தார்கள்.
இந்த காரணங்களுக்காகவே ஸையுதுனா நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இப்பகுதியில் வந்து குடியேறினார்கள். தான் இதன் புற சூழலில் நல்லடக்கமாக வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
-ஷைக் கலாநிதி முஹம்மத் தாஹிர் அல்-காதிரி
No comments:
Post a Comment