ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 8 December 2017

டிரம்பின் தீவிரவாதம்

*தலைப்பு-:-*
        *"டிரம்பின் தீவிரவாதம்"*

                     *ஆக்கம்:-*
  *மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி       ஹஜ்ரத்*

        *"டிரம்பின் தீவிரவாதம்"*

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنْ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பெயர் விரும்பி. அவர் திடீரென தேவையற்ற ஒரு பொறியைபற்ற வைத்துள்ளார்.

ஜெரூசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப் போவதாகவும்,அமரிக்க தூதரகத்தை தற்போதை டெல்அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்திற்குஇடம் பெயரச் செய்யும் ஏற்பாடுகளைகவனிக்குமாறு அரசுத்துறைகளுக்குஉத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜெரூசலம் முஸ்லிம்களின்பெருந்தன்மைக்கும்மனிதாபிமானத்திற்கும் எடுத்துக்காட்டாகதிகழும் நகரம். இப்போது அதை வைத்தேமுஸ்லிம் உலகை பதட்டத்திற்குஉள்ளாக்கும் வேலையை அமெரிக்கஇஸ்ரேலுடன் சேர்ந்து செய்துகொண்டிருக்கிறது. 

அன்றாடம் மிக மோசமான சித்தரவதை சூழலில், எந்த வித உரிமைகளும் அற்றவர்களாக, உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாழ்வுக்கு சாவுக்கும் இடையே தினசரி போராடிக் கொண்டிருக்கிற பாலஸ்தீன மக்களுக்கு மிகப் பெரும் அநீதியை வெளிப்படையாக டிரம்ப் செய்துள்ளார்.

இனி வரும் காலங்களில் பாலஸ்தீன் மக்களின் வாழ்வு மேலும் சிக்கலாகி விடக் கூடாது என்பதே நம்முடைய முதல் பிரார்த்தனையாகும்.

பாலஸ்தீனில் நீதியற்ற முறையில் ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டை அல்லாஹ் இல்லாது ஆக்குவானாக. முழு பாலஸ்தீனமும் சுதந்திரம் பெற்று பழையபடி முஸ்லிம்களின் கட்டுப் பாட்டிற்குள் வருவதற்கு அல்லாஹ் சீக்கிரமே வழி செய்வானாக!

இதற்கு காரணம் டிரம்ப் மற்றும்அவர்களுடை சகாக்களின். கிருத்துவவெறியுணர்வே யாகும்.

பாலஸ்தீனில் கை வைப்பது உலகில் வாழும் 150 கோடி முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுவதற்கு சமானமாகும்.

டிரம்ப் ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்ற தகுதியை தவறவிட்டு மிக கீழ்த்தரமான ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளார்.

முஸ்லிம்கள் இன்றைய பரிதாபச் சூழல் நம்மை என்ன செய்து விடும் என்ற மனோ தைரியத்தை அவருக்கு தந்திருக்கலாம்.

ஆனால் வல்லைமை மிக்க அல்லாஹ் சதிகாரர்களை மிக திறமையாக எதிர் கொள்ளும் மிகப் பெரும் சதிகாரன்.

அல்லாஹ் இந்தச் சதியிலிருந்தும் பாலஸ்தீன மக்களை, முஸ்லிம் உலகை அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஜெரூசலம் முஸ்லிம்களின் புனித பூமியாகும்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنْ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

இந்த வசனம் முஸ்லிம்களுக்கு மிஃராஜின் வரலாற்றை மட்டும் எடுத்துச் சொல்வதில்லை

மஸ்ஜிதுல் ஹராமிற்கும் பைத்துல் முகத்தஸிற்கும் இடையே உள்ள நுட்பமான தொடர்பையும் புலப்படுத்துகிறது. மஸ்ஜிதுல் அக்ஸாவின் பரக்கத்தை பாதுகாக்கும் பொறுப்பும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறது என திருக்குர் ஆனிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

الَّذِي بَارَكْنَا حَوْلَهُ

பைத்துல் முகத்தஸின் சுற்று புரம் என்பது அன்றைய பழை சிரியா முழுவதையும் குறிக்கும் என்கின்றனர் முபஸ்ஸிர்கள்.

أن البركة تشمل بلاد الشام بأكملها. قال زهير بن محمد التميمي: «إن الله تبارك و تعالى، بارك ما بين العريش و الفرات و فلسطين، و خَصّ فلسطين بالتقديس

இந்த பரக்கத் என்ன வகையானது என்பதற்கு முபஸ்ஸிர்களின் தீர்க்கமான விளக்கம், ஏரளமான நபிமார்கள் இங்கு அனுப்பப் பட்டுள்ளதே என்கின்றனர்.

و هي بلاد نبوات و رسالات، و هي مباركة بركة إيمانية قديمة و معاصرة و مستقبلية. فتاريخها الأصيل هو تاريخ للإسلام و الإيمان و العبودية لله،

அந்த நபித்துவத்தின் ஜோதியை தொடர்ந்து எடுத்துச் செல்லும் பணிக்குப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் சமுதாயம் பைத்துல் முகத்திஸின் நலனிலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பைத்துல் முகத்தஸ் விசயத்தில் எதிரிகளின் சதித்திட்டங்கள் , குறும்புத்தனங்களில் மிக எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைய்யும் இந்த வசனம் தருகிறது. யார் பைத்துல் முகத்தஸில் கை வைக்கிறார்களோ அவர்களது அடுத்த திட்டம் மஸ்ஜிதுல் ஹரமாகவும் மஸ்ஜிதுன் னபவியாகவும் இருக்கும். நபித்துவத்தின் ஜோதியை அழிக்கும் முயற்சியாகவும் இருக்கும் என முஸ்லிம் அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிலுவை யுத்த காலங்களில் ஜெரூசலமை கைப்பற்றிய மன்னர் அர்னாத் அதை தொடர்ந்து ஹிஜாஸை கைப்பற்ற திட்டமிட்டார். நூருத்தீன் ஜன்கீ. சலாஹுத்தீன் அய்யூபி போன்ற பெருமக்களால் அந்த திட்டம் தகர்க்கப் பட்டது என்கின்றனர்.

. تحذير المسلمين من المؤامرات المعادية ضد المسلمين ، و من أطماع الأعداء الكافرين في المسلمين ، و أن الخطر الذي يتهدد المسجد الأقصى، هو الخطر الذي يتهدد المسجد الحرام. فلما أخذ الصليبيون الأقصى و ما حوله، و استقرو فيه، توجهت أنظارهم و برامجهم و مطامعهم نحو المسجد النبوي في المدينة المنورة، و المسجد الحرام في مكة المكرمة،

فقام " أرناط -ملك الكرك الصليبي- بعدة محاولات لاحتلال بلاد الحجاز، كادت تنجح لولا أن الله هيأ لهذه الأمة نور الدين الزنكي و صلاح الدين الأيوبي.

இந்தப் பழைய எச்சரிக்கை சாமாணியமானதல்ல. இன்று வரை தொடர்கிறது.

1967ல் ஜெரூசலத்தை கைப்பற்றிய பென்குரியன் (தாவூத் பின் கூரியன்) ஜெரூசலத்தை கைப்பற்றிய பிறகு கூறிய வார்த்தையும் கவனிக்கத் தக்கதாகும்.

لقد وقف دافيد بن غوريون زعيم اليهود، بعد دخول الجيش اليهودي القدس، يستعرض جنوداً وشباباً من اليهود، بالقرب من المسجد الأقصى، ويلقي فيهم خطاباً نارياً، يختتمه بقوله: لقد استولينا على القدس ونحن في طريقنا إلى يثرب.

டொனால்ட் டிரம்பின் தற்போதையஅறிவிப்பு ஜெரூசலம் பாலஸ்தீனம்சிரியா விவகாரங்களில் முஸ்லிம்களின்தொடர்ந்து ஆழ்ந்த  கவனிப்பையும்அக்கறையையும் செலுத்த வேண்டும்என்பதை புலப்படுத்துகிறது.

இது விசயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக அல்லது தைரியமற்றவர்களாக இருப்பது பெரும் ஆபத்தாக முடியக் கூடும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ் பாதுகாப்பான்.

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

No comments:

Post a Comment