Sunday, 24 December 2017

நபித்தோழர் ஜுலைபீப்

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*அன்பே...*

*அண்ணலே...!*

=============== =========

*அகம் மகிழ்ந்த அஹமது நபி صلي الله عليه و سلم அவர்கள்!*

நபித்தோழர்
ஜுலைபீப் رضي الله عنه
அவர்கள் தன்னைப் பற்றி தாழ்வு
மனப்பான்மை கொண்டிருந்தார்.
காரணம்
அவ்வளவாக அழகாக இருக்கமாட்டார்.

ஒரு முறை நபி صلي الله عليه و سلم  அவர்கள்,ஜுலைபீப்
அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று
கேட்டார்கள்.அதற்கு ஜுலைபீப் அவர்கள்
”அருவருப்பான தோற்றம் கொண்ட
எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன்
கேட்டார்”. தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர்  ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை.
ஊரின் இந்த பகுதியில் உள்ள {ஒரு இடத்தை சுட்டிக்காட்டி}இன்ன
மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண்
கேட்டதாக சொல்லுங்கள்.என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி صلي الله عليه و سلم   அவர்கள்.

அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார்
சொன்ன அந்த விஷயத்தைக்
கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள்
உடனடியாக மறுக்கவும் முடியாமல்,
ஆமோதிக்கவும் முடியாமல்
தடுமாறிக்கொண்டிருந்தனர்.
அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை. அப்போது
உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின்
உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின்
உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது
பெற்றோரை அழைத்து, வந்திருப்பவர்
அல்லாஹ்வின் தூதர் صلي الله عليه و سلم  அவர்களே
எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள்
எப்படி எனக்காக மாப்பிள்ளை
பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு
அக்கறையோடு தான் மா நபி صلي الله عليه و سلم அவர்கள்
எனக்கான மணாளனை
தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பா
ர்கள்.என்று கூறிவிட்டு
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு
செய்துவிட்டால் பிறகு அந்த
விவகாரத்தில் மாற்று முடிவு
எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை
கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை
நம்பிக்கை கொண்டுள்ள எந்தப்
பெண்ணுக்கும் கிடையாது.” எனும்
இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக்
காண்பித்துவிட்டு என் விஷயத்தில்
நபிகளாரின் முடிவையே நான்
திருப்தி அடைகிறேன். ஜுலைபீப்
அவர்களை என் மணாளராக்க
மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்.
என்று
கூறினார்கள்.
நபி صلى الله عليه و سلم  அவர்களின் முன்னே அமர்ந்து
அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை
நிகழ்வினையும் ஜுலைபீப் رضي الله عنه
விவரித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப்
பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை
கேட்ட மாநபி صلى الله عليه و سلم  அவர்கள்
இறைவா! அப்பெண்மணியின்
வாழ்க்கையில் அனைத்து வகையான
நலவுகளையும் கொட்டுவாயாக!
கேடுகளும்,
சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே! என்று அகம் மகிழ துஆ செய்தார்கள். இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா رضي الله عنه
அவர்கள் ”மதீனாவிலேயே,
அன்ஸாரிப்  பெண்களிலேயே இந்தப்
பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை”.என்
று கூறுகின்றார்கள்
பின்னர் ஜுலைபீப் رضي الله عنه  அவர்களை
திருமணம் செய்து கொண்டு
மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிரு ந்தார்கள் அப் பெண்மணி.
பெருமானார் صلي الله عليه و سلم  அவர்களோடு ஒரு
போரில் கலந்து கொள்ள ஜுலைபீப்
அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள். அந்தப்
போரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு
வெற்றியை நல்கினான். இறுதியாக
ஷஹீதானவர்களை கணக்கிடும் பணியில்
நபிகளாரும்,தோழர்களும்
ஈடுபட்டிருந்தனர்.
எவரையாவது விட்டு விட்டீர்களா?என
நபியவர்கள் வினவ,ஆம் இன்னின்னாரை
விட்டு விட்டோம். என தோழர்கள்
கூறினார்கள்.மீண்டும் நபியவர்கள்
வினவ, முன்பு போலவே தோழர்கள்
பதில் கூறினர். மூன்றாம் முறையும்
நபியவர்கள் கேட்டுவிட்டு ஜுலைபீபை
காணவில்லையே? சென்று போர்க்களம்
முழுவதும் நன்றாக தேடுங்கள்
என்றார்கள்.
ஓரிடத்தில் ஜுலைபீப் ஷஹீதாக்கப்பட்டு
கிடப்பதாக நபியிடத்தில் வந்து
தோழர்கள் கூறினார்கள்.உடனடியாக
கிளம்பி அந்த இடத்திற்கு வந்த நபி صلي الله عليه و سلم
அவர்கள் அங்கே ஜுலைபீபை சுற்றி ஏழு இறை மறுப்பாளர்கள் கொல்லப்பட்டுக் கிடந்ததை பார்த்தார்கள். நபி صلى الله عليه و سلم  அவர்கள்
கூறினார்கள்:”இதோ இங்கு ஷஹீதான
ஜுலைபீப் ஏழு காஃபிர்களுடன்
கடுமையாக போரிட்டு பின்னர்
அவர்களை கொன்றுவிட்டு பிறகு அவர்
ஷஹீதாகி இருக்கிறார். “அறிந்து
கொள்ளுங்கள்! ஜுலைபீப் என்னைச்
சார்ந்தவர், நான் அவரைச் சார்ந்தவர்! என்றும மூன்று  முறை கூறினார்கள். பின்னர் அவரை தம் இரு கைகளாலும் வாரி அனைத்து  தூக்கிச் சென்று தாமே கப்ரில் அடக்கம் செய்தார்கள் மா நபி صلي الله عليه و سلم
அவர்கள்.
நூல்:இப்னு ஹிப்பான்,பாகம்:
9,பக்கம்:334,இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156,
முஸ்னத் அஹ்மத்,பாகம்:4,பக்கம்:422.

அல்லாஹ் நமது பெண்மக்களை
கல்வியில் ஆயிஷா رضي الله عنها அவர்களை
போன்றும்...  ஒழுக்கத்தில் பாத்திமா رضي الله عنها அவர்களைப் போன்றும் திருமணத்தை
தேர்வு செய்வதில் உம்மு சுலைம் رضي الله عنه  அவர்களைப்போன்றும்,  இஸ்லாமிய
பற்றில் அன்னை கதிஜா رضي الله عنها
அவர்களைப்போன்றும்,  இன்னும் எல்லா
நிலைகளிலும் நபி தோழியர்களை பின்
பற்றி வாழச் செய்வானாக!

ஆமீன்…

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

No comments:

Post a Comment