Sunday, 24 December 2017

இப்லீஸ் தோற்றுப்போகும் இடம்

இப்லீஸ் தோற்றுப்போகும் இடம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு மனிதர் ஸையுதுனா இமாம் அபூ ஹனீபா رحمه الله அவர்களிடம் வந்து, “என்னுடைய முக்கியமான சில ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன, அவற்றை எங்கே வைத்தேன் என்பதே மறந்துபோய்விட்டது” என்று முறைப்பட்டுக்கொண்டார்.

ஸையுதுனா இமாம் அபூ ஹனீபா رحمه الله அவர்கள் இது மார்க்கத்தின் சட்ட பிரச்சினை அல்ல, “எனினும் நான் ஒரு வழி சொல்கிறேன் அப்படியே செய்யுங்கள்” என்று அறிவுறுத்தி, அவருக்கு அன்றிரவெல்லாம் நின்று வணங்குமாறும் இன்ஷா அல்லாஹ் அந்த முக்கிய ஆவணங்களை தான் எங்கே வைத்தேன் என்பது அப்போது அவருக்கு ஞாபகத்துக்கு வரும் என்றும் கூறினார்கள்.

அடுத்தநாள் காலை அந்த மனிதர் ஸையுதுனா அபூ ஹனீபா رحمه الله அவர்களிடம் ஓடோடி வந்துக் கூறினார், “இமாம் அவர்களே, நான் இரண்டாவது ரக்காத்து தொழும்போதே அந்தக் கடதாசிகளை எங்கே வைத்தேன் என்பது எனக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது.”

இமாமவர்கள் رحمه الله  புன்னகைத்துக் கூறினார்கள், “முழு இரவும் அல்லாஹ்வை நீங்கள் நின்று வணங்குவதை இப்லீஸ் விரும்பமாட்டான் என்பதை நான் அறிவேன். அதனாலேயே அந்த ஆவணங்கள் இருக்கும் இடத்தை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்திவிட்டான்.”

#நல்லாரின்அடிச்சுவடுகள்
நன்றி: GUIDANCE HUB
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

A man came to Imam Abu Hanifa رحمه الله, complaining about forgetting where he put some important papers.

Imam Abu Hanifa رحمه الله said that it wasnt a fiqh issue, but he instructed the man to pray all night and In'sha'Allah he would remember where he put the important papers.

The next morning the man came running to Imam Abu Hanifa رحمه الله and said that he was in his second rakat of prayer when he remembered where he put the papers.

The Imam رحمه الله smiled and said, "I knew Iblis would not like you standing all night in prayer to Allāh, it’s why he made you remember.”

Tadhkirat-Al-Auliya.
#FootstepsOfTheRighteous
https://goo.gl/aQXnVC

No comments:

Post a Comment