ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 11 November 2017

மத்ஹப் என்றால்..

கேள்வி :

*மத்ஹப் என்றால் என்ன?*

மத்ஹப் என்ற அரபி வார்த்தைக்கு செல்லும் இடம் ,பாதை என்று பொருள்.

பின்னர் நம்பிக்கை எனும் பெயரில் உபயோகிக்கப் பட்டது.

இஸ்லாமிய ஷரீஅத்தில ஒருவர் இஜ்திஹாத் செய்து எடுக்கும் முடிவுக்கு அவரின் மத்ஹப் என்பார்கள்.

மத்ஹப் எப்பொழுது தோன்றியது?

*நபித்தோழர்கள் காலத்திலேயே மத்ஹப்கள் தோன்றிவிட்டன*

நபித்தோழர்கள் ஒரே விஷயத்தில் இஜ்திஹாத் அடிப்படையில் கருத்து வேற்றுமை கொண்டார்கள்

ஸஹாபாக்களில் சிலர் தங்களுக்கு பிடித்தமான ஸஹாபியை பின்பற்றினார்கள்.

எனவே அக்காலத்தில் பல மத்ஹப்கள் இருந்தன.

ஃபிக்ஹ் நூல்களில் இது இப்னு உமர்(ரலி)அவர்களின் மத்ஹப்,

இது இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் மத்ஹப் எனக் குறிப்பிடப்படுகின்றன.

நபித் தோழர்களை தொடர்நது தாபிஈன்கள் காலத்திலும் பின் தபஉ தாபிஈன்கள் காலத்திலும் மத்ஹப்கள் தொடர்ந்தன.

மத்ஹப்கள் தோன்றக் காரணம் என்ன?

குர்ஆனிலோ ஹதீஸிலோ ஒரு சட்டம் தெளிவாக பின்பற்றதக்க அளவு கூறப்பட்டு இருந்தால் அங்கே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

உதாரணமாக அகாயித் என்று சொல்லப்படும் கொள்கைகளில் எந்த இமாம்களிடமும் கருத்து வேற்றுமை இல்லை

தொழுகை , நோன்பு ,ஜகாத் , ஹஜ் போன்றவைகளில் குர் ஆனில் கடமையாக்கப்பட்ட சட்டங்களில் வேற்றுமை ஏற்படவில்லை.

ஒரு சட்டம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ தெளிவாக கூறப்படாமல் இரு வேறு கருத்துகள் ஏற்பட வாய்ப்பிருந்தால் கருத்து வேற்றுமை தோன்றுவதன் காரணமாக மத்ஹப்கள் உண்டாகின்றன.

இதற்கு நாம் பல உதாரணங்கள் கூற முடியும் என்றாலும் இங்கே சுருக்கமாக ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம்.

கணவனை இழந்த கைப்பெண் எத்தனை மாதம் இத்தா இருக்க வேண்டும் என்றால்

وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ يَّضَعْنَ حَمْلَهُنَّ ‌ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا‏ 
கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையில் இருக்கின்றது.
எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகின்றான்.

(அல்குர்ஆன் : 65:4)

وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ‌‌ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும்.

(இதற்கு "மரண இத்தா" என்று பெயர்.)
ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை.

நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்த வனாகவே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:234)

நான்கு மாதம் பத்து நாட்கள் என்பதில் எந்த இமாம்களிடமும் கருத்து வேற்றுமை இல்லை.

ஏனென்றால் கணவனை இழந்த கைப்பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் எத்தனை காலம் இத்தா இருக்க வேண்டும் என்பதில் இமாம்களிடையே கருத்து வேற்றுமை இருக்கிறது.

இமாம் அபூஹனிஃபா(ரஹ்) அவர்கள் மூன்று மாதவிடாய் காலங்கள் இருக்க வேண்டும் என்றும்,

இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் மாத விடாய்க்கு பின் வரும் மூன்று சுத்தமான காலத்தை கணக்கிட்டு இத்தா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த கருத்து வேற்றுமை ஏற்பட காரணம் குர்ஆனில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுடைய இத்தா காலத்தை  ثلاثة قروء
மூன்று குர்உ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ‌

தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று குரூஃ வரை பொறுத்திருக்க வேண்டும்

(அல்குர்ஆன் : 2:228)

குர்உ என்ற அரபி வார்த்தை மாதவிடாய் காலத்தையும்,மாதவிடாய் முடிந்த பின்வரும் சுத்தமான காலத்தையும் குறிப்பிடுவதால்.
இந்த கருத்து வேற்றுமை .

குர்ஆனில் தெளிவாக குறிப்பிடப்படாத காரணத்தால் இமாம்களிடம் கருத்து வேற்றுமை தோன்றியுள்ளது.
இதே போன்று ஹதீஸ்களிலும் இரண்டு கருத்துகள் ஏற்படக்கூடிய வார்த்தைகள் இருப்பதால் இமாம்களிடையே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன

மத்ஹப் என்றால் என்ன?

பார்க்க 👇

http://kayalpatnamislam.blogspot.in/2010/03/blog-post_330.html?m=1

மத்ஹப்களை பின்பற்றலாமா?

பார்க்க 👇

http://www.mailofislam.com/tm_article_-_madhab_imamgalai_pinpatralama.html

மத்ஹப்களின் அவசியம் 👇

மௌலானா மௌலவி நிஜாமுத்தீன் யூஸுஃபீ ஹழ்ரத் அவர்களின் பதிப்பு

இதில் ஸஹாபா காலத்தில் இருந்த மத்ஹப்களைப்பற்றிய விளக்கங்கள் உண்டு

பார்க்க👇

http://nizamudden-yousufi.blogspot.in/2014/03/blog-post_20.html?m=1

*والله اعلم بالصواب ✍*

No comments:

Post a Comment