Thursday, 5 October 2017

ஷத்தாத்தும்....

சபிக்கப்பட்ட சமுதாயங்கள் 16

(பூலோகத்தில் சொர்க்கம் கட்டிய ஷத்தாத்தும் அவனது கமூகமும் )

இப் பதிவு படிக்கும் முன் முதல் பதிவான "ஆது'' சமூகத்தைப் பற்றி தெரிந்து கொண்டால், இப் பதிவுக்கு தேவையான முதல் 3 பாராக்களை எழுத வேண்டியது இருக்காது .

முதல் பதிவை படித்து விட்டீர்களா ?

ஆது மக்களின் அரசனாக ஷத்தாத் முடிசூடிக் கொண்டான்  . உருவச்சிலைகளை வணங்கும். அவனிடம் ஹூத் (அலை)  ஏகத்துவத்தை போதித்தார்கள் .

"உங்களது உருவமற்ற இறைவனை வணங்கினால் என்ன கிடைக்கும் ? "

"சொர்க்கம் "

"எப்படி இருக்கும் சொர்க்கம் ?"

"தங்கத்தாலும் மணி முத்துக்களாலும்  வைர வைடூரியங்களாலும் உருவாக்கப்பட்டது."

"அந்த சொர்க்கத்தை பூலோகத்திலேயே நானே உருவாக்கிக் கொள்கிறேன்" என்று தன் கீழ் உள்ள சிற்றரசர்கள் அத்தனை பேரிடமும் மேற்கண்ட தங்கம் போன்றவற்றை உடனடியாக கொண்டு வரச் சொன்னான் .

பூலோக சொர்க்கம் தன்னுடைய 600 வயதில் உருவாக்கப்பட்டு 900 வயதில் கட்டி முடிக்கப்பட்டது . இதற்கு
"இறமதாத்தில் இமாத்" என்ற பெயரும் சூட்டப்பட்டது.

இறைவன் கூட " இதைப் போன்று ஒரு நகரம் இம்மண்ணில் உருவாக்கப்படவே இல்லை" என்று குர்ஆனில் (89 :  8 ) குறிப்பிடுகிறான் .

திறப்பு விழா . தன் சமூக மக்கள் புடை சூழ ஷத்தாத் அங்கு வந்தான் . அந்த இடத்தில் பொன் நிற  மான் ஒன்று
மேயக் கண்டான். ஏற்கனவே மயில்கள் குயில்கள் அன்னப்பறவைகள் முயல்கள் போன்றவற்றை கொண்டு அழகுப்படுத்தப்பட்ட பூலோக சொர்க்கத்தில் பொன் மான் மேய்ந்தால் இன்னும் அழகாக இருககுமே...

பொன்மானை பிடிக்க விரட்டினான் ஷத்தாத் , கூடவே அவன் சமூகமும் விரட்டியது . அது இறக்கை கொண்டு பறக்க ஆரம்பித்தது . அந்த இடத்தில் பார்க்க அச்சமுற தோற்றத்தில்  ஒரு ஆள்,

"பூலோகத்தில் சொர்க்கம் கட்டினால் இறப்பு வராது என்ற நினைப்போ ? "

"நீ யார் ?"

"இஸ்ராயீல் "

" இங்கு என்ன செய்ய வந்தீர் ?"

"உயிரை வாங்க "

ஒரே ஒரு சப்தம் ஷத்தாத் உட்பட அத்தனை பேரும் மாண்டனர் ... இப்படி ஒரு வரலாறு பேசுகிறது

இறமதாத்தில் இமாத் என்ற பூலோக சொர்க்த்தை திறக்க அதன் தலைவாயிலுக்கு ஷத்தாத் வலது காலை முன்வைத்து இடது காலை தூக்கும் அந்த இடவெளி நேரத்தில் அவன் உயிர் வாங்கப்பட்டது. இப்படி ஒரு வரலாறும் பேசுகிறது.

காலச் சக்கரம் சுழன்றது .

இறைவன் . "இஸ்ராயீலே  , நீர் எப்போதாவது எவர் மீதாவது இரக்கம் கொண்டிருக்கிறீரா ?"

"ஆம் இறை பெரியோனே ....ஒரு தடவை நடுக் கடலில் கப்பல் ஒன்று புயல் காற்றில் அலைக்கழித்து கவிழ்ந்து அத்தனை பேரின் உயிரும் வாங்கப்பட்டது. அத்தருணத்தில் ,ஒரு கர்ப்பிணி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து மிதக்கும் சிறிய மரத்துண்டில் வைத்து நீந்தினாள் . அந்த சமயம் அவள் உயிரையும் வாங்க ஒரு மீன் அவளை கடித்து குதறி விழுங்கியது .இந்த நிகழ்வு என்னை இரக்கப்பட வைத்தது " என்றார் இஸ்ராயீல் (அலை) அவர்கள்.

"அடுத்து ?" என்று கேட்டான் இறைவன்

ஷத்தாத், பூலோக சொர்க்கத்தை சுகிச்சு சுகிச்சி கட்டினான் . அத்தனை வருடம் கட்டிய சொர்க்கத்தை ஒரு தடவையாவது அவன் முழுமையாக பார்ப்பதற்குள் அவன் உயிர் வாங்கியது எனக்கு ரொம்பவும் இரக்கமாக இருந்தது " என்றார் இஸ்ராயீல் (அலை) அவர்கள் .

"தாயில்லாமல் அன்று கடலில் தத்தளித்த அந்த ஆண் குழந்தைதான்
இந்த ஷத்தாத் " - என்றான் இறைவன்

உயிர் வாங்கும் இஸ்ராயீல் (அலை) அதிர்ந்து விட்டார்கள் .

No comments:

Post a Comment