Wednesday, 16 August 2017

இன்றைய பெண் சமுதாயம்

*_🌟இன்றைய பெண் சமுதாயம்.🌟_*

_👆🏻கத்தி முனையிலும் கலக்கம் சிறிதுமின்றி தீனுக்காய் முதன் முதலாய் கம்பீரமாய் ஷஹீதானார். வீரப் பெண் அன்னை சுமையா.!_

_👇🏿சமையலறையில் கத்தி லேசாய் கீறியதற்கே காது கிழியக் கத்துகிறாள் எதிர் வீட்டு சுமையா.!_

_👆🏻செல்வம் அத்தனையும் தீனுக்கே என கணவன் கைகளில் இறைத்துவிட்டு இறுதியில் முழுதாய்ப் போர்த்த நல்லதோர் போர்வையின்றியே கண்களை மூடினார் செல்வச் சீமாட்டி அன்னை கதீஜா.!_

_👇🏿மாதக் கடைசியில் கொஞ்சம் கையைக் கடிக்கவே பெருநாளைக்கு ஆடை வாங்கித் தரவில்லையென கணவனிடம் முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்கிறாள். நம் பக்கத்து வீட்டு கதீஜா.!_

_👆🏻மஹ்ரமில்லா ஆணின் உடல் அடக்கப்பட்டதுமே அதுவரை கணவனுடன் வாழ்ந்திருந்த வீட்டை விட்டே வெளியேறினார் அன்னை ஆயிஷா.!_

_👇🏿'மஹ்ரம்' என்றால் என்னவென்று அப்பாவியாய்க் கேட்கிறாள். பின் வீட்டு ஆயிஷா.!_

_👆🏻குர்ஆனை நூல் வடிவில் தொகுத்திட உதவி செய்து முழுமையாக மனனம் செய்து வைத்திருந்தார் அல்-ஹாபிஸா அன்னை ஹப்ஸா.!_

_👇🏿Degree முடிப்பதில் காலம் கடத்தியதில் குர்ஆன் முடிக்கவில்லை இந்த ஹப்ஸா.!_

_👆🏻கணவனின் கண்களுக்கு மட்டும் என்னை பேரழகியாகக் காட்டிடு என பிரார்தனை செய்தார். சுவனத் தலைவி அன்னை பாத்திமா.!_

_👇🏿சாயம் பூசிய உதடுகள் குவித்து கணவன் மட்டுமே காணவேண்டிய தன் அழகை Facebook இல் கடை விரிக்கிறாள். மாடி வீட்டு பாத்திமா.!_

_👆🏻இறை தியானத்தில் இவ்வுலகையே மறந்து. மணிக்கணக்காய் திளைத்திருந்தார் அன்னை ஜுவைரியா.!_

_👇🏿ஐ போன் games போரடிக்கவே Lumia விற்கு மாறும் ஐடியா வில் இருக்கிறாளாம். நம்ம ஜுவைரியா.!_

_👆🏻தாராளமாய் அள்ளி அள்ளிக் கொடுத்ததாலே நீண்ட கையுடயவர் ஆனார் அன்னை ஸைனப்.!_

_👇🏿Dinner முடித்து வரும்போது Restaurant வாசலில் கையேந்தும். அபலைக்கு ஐந்து ரூபா கொடுப்போமா.?ஆறு ரூபா கொடுப்போமா.? என அரை மணி நேரம் யோசிக்கிறார் பக்கத்து ஊர் சைனப்...!_

_👆🏻ஆணை இட்டால் அத்தனையும் அரை நொடியில் கிடைக்கும்.! கணவன் ஆனாலும் கயவனவன் மாளிகை தேவையில்லையென சுவர்க்கத்தில் மாளிகை கேட்டார். அன்னை ஆசியா.!_

_👇🏿மாடி வீட்டுக்கும் நாலு வீலுக்கும், ஆசைப்பட்டு தீனை விட்டே ஓடிப் போனாள். அடுத்த தெரு ஆசியா.!_

_👆🏻அழகும், அலங்காரமும் கணவனிடம் மட்டுமே என வெளியே செல்ல நேர்ந்தால், கண்ணியமாய் சென்ற எம் அன்னையர் சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்துக்கள்.!!!_

_👇🏿உடையவன் வீட்டிலிருக்கையில் அழுக்கு நைட்டியும், எண்ணை வடியும் முகமுமாய் இருந்து விட்டு வெளியேறுகையில் இருப்பதிலே அழகிய ஆடை தேர்ந்து யாருக்குக் காட்ட தெருக்களில் திரிகின்றன இந்த பெண் சமுதாயம்...?_

🤐🤐🤔🤔

*_சிரிக்கின்ற விஷயம் அல்ல சிந்திக்கின்ற விஷயம்._*

*_படியுங்கள் பகிருங்கள்._*

No comments:

Post a Comment