உள்ஹிய்யா அதன் சட்டங்களும்….
சிறப்புகளும்…
உள்ஹிய்யா அதன் சட்டங்களும்…. சிறப்புகளும்…
ஸைய்யிதினா இப்ராஹீம் (அலை) அவர்களின்
தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் அமைந்த ஓர்
உயரிய இபாதத்தே உள்ஹிய்யா எனும் குர்பானி ஆகும்.
என் வாழ்க்கையில் இறை உவப்பைப்
பெறுவதற்காக எந்த ஒருதருணத்திலும், எதையும்
அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன்.. அது என்
உயிராக, உடமையாக, என் உணர்வாக, எதுவாக
இருந்தாலும் சரியே! என இறையின் முன்பாக
உறுதியான ஓர் ஒப்பந்தத்தை ஆத்மார்த்த ரீதியாக
வழங்கும் சாட்சியம் ஆகும்.
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள்
தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி
அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது
நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
ﻗﺎﻝ ﺍﻟﻨّﻮﻭﻱ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ ﻓﻲ " ﺍﻟﻤﺠﻤﻮﻉ " ( 8/382 ) ": ﻗﻴﻞ
ﺳﻤّﻴﺖ ﺑﺬﻟﻚ ﻷﻧّﻬﺎ ﺗُﻔﻌﻞ ﻓﻲ ﺍﻟﻀّﺤﻰ، ﻭﻫﻮ ﺍﺭﺗﻔﺎﻉ ﺍﻟﻨّﻬﺎﺭ ".
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் “லுஹா உடைய
நேரத்தில் அறுக்கப்படுவதால் அதற்கு உள்ஹிய்யா
என்று பெயர் வந்தது” என கூறுகின்றார்கள்.
ﺍﻹﻣﺎﻡ ﺃﺑﻲ ﺣﻨﻴﻔﺔ ﺃﻧّﻬﺎ ﻭﺍﺟﺒﺔ ﻋﻠﻰ ﺍﻟﻘﺎﺩﺭ .
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் உள்ஹிய்யா
கொடுப்பது வாஜிப் என்று கூறுகிறார்கள். பின்
வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு.
ﻣﺎ ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ﻭﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ﻭﻏﻴﺮﻫﻤﺎ ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻨﻪ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲّ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﻗﺎﻝ : )) ﻣَﻦْ ﻭَﺟَﺪَ ﺳَﻌَﺔً
ﻓَﻠَﻢْ ﻳُﻀَﺢِّ، ﻓَﻼَ ﻳَﻘْﺮَﺑَﻦَّ ﻣُﺼَﻼّﻧَﺎ (( [ ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ] .
ﻗﺎﻝ ﺍﻟﺴّﻨﺪﻱ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ ": ﻟﻴﺲ ﺍﻟﻤﺮﺍﺩ ﺃﻥّ ﺻﺤﺔ ﺍﻟﺼﻼﺓ
ﺗﺘﻮﻗّﻒ ﻋﻠﻰ ﺍﻷﺿﺤﻴﺔ، ﺑﻞ ﻫﻮ ﻋﻘﻮﺑﺔ ﻟﻪ ﺑﺎﻟﻄّﺮﺩ ﻋﻦ ﻣﺠﺎﻟﺲ
ﺍﻷﺧﻴﺎﺭ، ﻭﻫﺬﺍ ﻳﻔﻴﺪ ﺍﻟﻮﺟﻮﺏ، ﻭﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺃﻋﻠﻢ ."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற
அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும்
உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம்
தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: அஹ்மத், இப்னு
மாஜா )
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ
(ரஹ்) அவர்கள் “உள்ஹிய்யா கொடுப்பவரின் தொழுகை
தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை
அணுகாமல் உள்ஹிய்யா கொடுப்பவர்களோடு இவர்கள்
கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும்
என்ற பொருளிலேயே இதை அணுக வேண்டும்.
மேலும், இது ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பது
போலவும் அமைந்திருக்கின்றது, மேலும், இந்த
ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா
வாஜிப் எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்” என்று
கூறுகின்றார்கள்.
இதற்கு ஆதாரமாக இன்னொரு ஹதீஸையும்
மேற்கோள் காட்டுகின்றனர்.
ﻣﺎ ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻋﻦ ﻣﺨﻨﻒ ﺑﻦ ﺳﻠﻴﻢ ﺃﻥّ ﺍﻟﻨﺒﻲّ ﺻﻠّﻰ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﻗﺎﻝ : )) ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ، ﺇِﻥَّ ﻋَﻠَﻰ ﺃَﻫْﻞِ ﻛُﻞِّ ﺑَﻴْﺖٍ
ﺃُﺿْﺤِﻴَﺔُ ﻛُﻞَّ ﻋَﺎﻡٍ .((
மஃக்னஃப் இப்னு ஸுலைம் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “மக்களே! உங்களில் (சொந்தமாக)
வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும்
உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத் )
ﻭﻫﻮ ﻗﻮﻝ ﺍﻹﻣﺎﻡ ﺃﺑﻲ ﺣﻨﻴﻔﺔ، ﻭﺭﻭﺍﻳﺔ ﻋﻦ ﻣﺎﻟﻚ
ﻭﺃﺣﻤﺪ، ﻭﺍﻟﺜّﻮﺭﻱ، ﻭﺍﻷﻭﺯﺍﻋﻲ، ﻭﺭﺑﻴﻌﺔ، ﻭﺍﻟﻠﻴﺚ، ﻭﻫﻮ ﺍﻟﻈّﺎﻫﺮ
ﻟﻸﺩﻟّﺔ
அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் இந்த
கருத்தையே, மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக்
கொண்டு இமாம் மாலிக், இமாம் அஹ்மத், இமாம்
ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ, இமாம் அவ்ஜாயீ, இமாம் ரபீஆ, இமாம்
லைஸ் (ரஹ் அலைஹிம் ) ஆகியோரும்
கொண்டிருக்கின்றனர்.
ﻟﻠﺠﻤﻬﻮﺭ ﺃﻧّﻬﺎ ﺳﻨّـﺔ ﻣﺆﻛّﺪﺓ، ﻗﺎﻝ ﺍﺑﻦ ﻗﺪﺍﻣﺔ ﻓﻲ
" ﺍﻟﻤﻐﻨﻲ)" 9/345 ) :
" ﺭﻭﻱ ﺫﻟﻚ ﻋﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻭﻋﻤﺮ، ﻭﺑﻼﻝ، ﻭﺃﺑﻲ ﻣﺴﻌﻮﺩ ﺍﻟﺒﺪﺭﻱ
ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ .
ﻭﺑﻪ ﻗﺎﻝ ﺳﻮﻳﺪ ﺑﻦ ﻏﻔﻠﺔ، ﻭﺳﻌﻴﺪ ﺑﻦ ﺍﻟﻤﺴﻴﺐ،
ﻭﻋﻠﻘﻤﺔ، ﻭﺍﻷﺳﻮﺩ، ﻭﻋﻄﺎﺀ، ﻭﺍﻟﺸﺎﻓﻌﻲ، ﻭﺇﺳﺤﺎﻕ، ﻭﺃﺑﻮ ﺛﻮﺭ،
ﻭﺍﺑﻦ ﺍﻟﻤﻨﺬﺭ " ﺍﻫـ
ஆனால், ஜும்ஹூர் – பெரும்பாலான அறிஞர்கள்
இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப், இமாம் அல்கமா, இமாம்
ஸுவைத் இப்னு ஃகஃப்லா, இமாம் அதாஃ இப்னு அபீ
ரபாஹ், இமாம் ஷாஃபீயீ, இமாம் இஸ்ஹாக், இமாம் அபூ
ஸவ்ர், இமாம் இப்னுல் முந்திர் (ரஹ் – அலைஹிம்)
ஆகியோர் அபூபக்ர், உமர், பிலால், அபீ மஸ்வூத் அல்பத்ரீ
(ரலி – அன்ஹும்) ஆகியோர் பதிவு செய்திருக்கிற
ஹதீஸ்களை மேற்கோள் காட்டி ஸுன்னத் முஅக்கதா
வலியுறுத்தப்பட்ட ஸுன்னத் என்று கூறுகின்றார்கள்
என்பதாக இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்.
( நூல்: அல்முஃனீ லி இமாமி இப்னு
குதாமா, பாகம்:9, பக்கம்: 345 )
உள்ஹிய்யா கொடுப்பவர் என்ன செய்ய
வேண்டும்?
1. அவர் அல்லாஹ்வுக்காக கொடுக்கின்றேன் என
உளத்தூய்மையோடு நிய்யத் வைக்க வேண்டும்.
ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் உள்ஹிய்யா கொடுப்பவர்
பிராணியை பலியிட்டதும் அல்லாஹ்விடம் ﺍﻟﻠﻬﻢّ ﻫﺬﺍ
ﻣﻨﻚ ﻭﻟﻚ “யாஅல்லாஹ்! இது உன்புறத்தில் இருந்து
எனக்கு வழங்கப்பட்ட பெரும் பேறாகும். இதை நான்
உனக்காகவே செய்திருக்கின்றேன்” என்று துஆ செய்ய
வேண்டும் என நவின்றார்கள்.
ﻣﺎ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ ﻋﻦ ﺃﻡّ ﺳﻠﻤﺔ ﺃﻥّ ﺍﻟﻨﺒﻲّ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠّﻢ ﻗﺎﻝ : )) ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻟَﻪُ ﺫِﺑْﺢٌ ﻳَﺬْﺑَﺤُﻪُ، ﻓَﺈِﺫَﺍ ﺃُﻫِﻞَّ ﻫِﻠَﺎﻝُ ﺫِﻱ
ﺍﻟْﺤِﺠَّﺔِ ﻓَﻠَﺎ ﻳَﺄْﺧُﺬَﻥَّ ﻣِﻦْ ﺷَﻌْﺮِﻩِ ﻭَﻟَﺎ ﻣِﻦْ ﺃَﻇْﻔَﺎﺭِﻩِ ﺷَﻴْﺌًﺎ ﺣَﺘَّﻰ
ﻳُﻀَﺤِّﻲَ (( .
2. துல்ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா
கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும்
நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி
(ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
எவைகளை உள்ஹிய்யா கொடுக்க
வேண்டும்?..
ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : )) ﻟَﺎ ﺗَﺬْﺑَﺤُﻮﺍ ﺇِﻟَّﺎ ﻣُﺴِﻨَّﺔً، ﺇِﻟَّﺎ ﺃَﻥْ ﻳَﻌْﺴُﺮَ
ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻓَﺘَﺬْﺑَﺤُﻮﺍ ﺟَﺬَﻋَﺔً ﻣِﻦْ ﺍﻟﻀَّﺄْﻥِ .((
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில்
ஒட்டகத்திற்கு ஐந்து வயதும் , ஆடு , மாடுகளுக்கு
இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க
வேண்டும். " முஸின்னா " வைத் தவிர வேறு
எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க
வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்!”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ﺍﻟﺜّﻨﻲ ﻣﻦ ﺍﻹﺑﻞ : ﻫﻮ ﻣﺎ ﺃﻛﻤﻞ ﺧﻤﺲ ﺳﻨﻮﺍﺕ، ﻭﺩﺧﻞ ﻓﻲ
ﺍﻟﺴّﺎﺩﺳﺔ .
ﻭﺍﻟﺜّﻨﻲ ﻣﻦ ﺍﻟﺒﻘﺮ ﻭﺍﻟﻤﻌﺰ : ﻫﻮ ﻣﺎ ﺃﻛﻤﻞ ﺳﻨﺘﻴﻦ ﻭﺩﺧﻞ ﻓﻲ
ﺍﻟﺜّﺎﻟﺜﺔ .
ﺃﻣّﺎ ﺍﻟﻀّـﺄﻥ [ ﺍﻟﻜﺒﺶ ﻭﺍﻟﻨّﻌﺠﺔ ] ﻓﻴﺠﺰﺉ ﻓﻴﻬﺎ ﺍﻟﺠَﺬَﻉ : ﻭﻫﻮ ﻣﺎ
ﺍﺳﺘﻜﻤﻞ ﺳﻨﺔً ﻋﻠﻰ ﺍﻟﺼّﺤﻴﺢ
இந்த ஹதீஸில் கூறப்பட்ட முஸின்னா என்ற
வார்த்தை ஆடு, மாடு ஆகியவற்றில் இரண்டு வயதை
பூர்த்தியடைந்து மூன்றாவது வயதில் நுழைந்த
வைகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது.
ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும் , ஆடு,
மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள்
வருவதால் , ஒட்டகம் ஐந்து வயது , ஆடு, மாடு இரண்டு
வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக்
கூறப்படுகின்றது.
முஸின்னா கிடைக்காவிட்டால் ஆறுமாதக்
குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில்
அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னொரு ஹதீஸின்
மூலம் அது ஒரு நபித்தோழருக்கு மாத்திரம்
வழங்கப்பட்ட சலுகை என்பதைப் தெரிந்து கொள்ள
முடிகின்றது.
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺴَﺪَّﺩٌ ﻗَﺎﻝَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺍﻷَﺣْﻮَﺹِ ﻗَﺎﻝَ ﺣَﺪَّﺛَﻨَﺎ
ﻣَﻨْﺼُﻮﺭُ ﺑْﻦُ ﺍﻟْﻤُﻌْﺘَﻤِﺮِ ﻋَﻦِ ﺍﻟﺸَّﻌْﺒِﻰِّ ﻋَﻦِ ﺍﻟْﺒَﺮَﺍﺀِ ﺑْﻦِ ﻋَﺎﺯِﺏٍ ﻗَﺎﻝَ
ﺧَﻄَﺒَﻨَﺎ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳَﻮْﻡَ ﺍﻟﻨَّﺤْﺮِ ﺑَﻌْﺪَ
ﺍﻟﺼَّﻼَﺓِ ﻓَﻘَﺎﻝَ « ﻣَﻦْ ﺻَﻠَّﻰ ﺻَﻼَﺗَﻨَﺎ ﻭَﻧَﺴَﻚَ ﻧُﺴْﻜَﻨَﺎ ﻓَﻘَﺪْ ﺃَﺻَﺎﺏَ
ﺍﻟﻨُّﺴُﻚَ ، ﻭَﻣَﻦْ ﻧَﺴَﻚَ ﻗَﺒْﻞَ ﺍﻟﺼَّﻼَﺓِ ﻓَﺘِﻠْﻚَ ﺷَﺎﺓُ ﻟَﺤْﻢٍ » . ﻓَﻘَﺎﻡَ
ﺃَﺑُﻮ ﺑُﺮْﺩَﺓَ ﺑْﻦُ ﻧِﻴَﺎﺭٍ ﻓَﻘَﺎﻝَ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟﻠَّﻪِ ﻟَﻘَﺪْ ﻧَﺴَﻜْﺖُ ﻗَﺒْﻞَ
ﺃَﻥْ ﺃَﺧْﺮُﺝَ ﺇِﻟَﻰ ﺍﻟﺼَّﻼَﺓِ ، ﻭَﻋَﺮَﻓْﺖُ ﺃَﻥَّ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻳَﻮْﻡُ ﺃَﻛْﻞٍ ﻭَﺷُﺮْﺏٍ
ﻓَﺘَﻌَﺠَّﻠْﺖُ ﻭَﺃَﻛَﻠْﺖُ ﻭَﺃَﻃْﻌَﻤْﺖُ ﺃَﻫْﻠِﻰ ﻭَﺟِﻴﺮَﺍﻧِﻰ . ﻓَﻘَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
- ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - « ﺗِﻠْﻚَ ﺷَﺎﺓُ ﻟَﺤْﻢٍ » . ﻗَﺎﻝَ ﻓَﺈِﻥَّ
ﻋِﻨْﺪِﻯ ﻋَﻨَﺎﻕَ ﺟَﺬَﻋَﺔٍ ، ﻫِﻰَ ﺧَﻴْﺮٌ ﻣِﻦْ ﺷَﺎﺗَﻰْ ﻟَﺤْﻢٍ ، ﻓَﻬَﻞْ ﺗَﺠْﺰِﻯ
ﻋَﻨِّﻰ ﻗَﺎﻝَ « ﻧَﻌَﻢْ ، ﻭَﻟَﻦْ ﺗَﺠْﺰِﻯَ ﻋَﻦْ ﺃَﺣَﺪٍ ﺑَﻌْﺪَﻙَ » .
பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: " இன்றைய நாளில் நாம்
முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம்
(வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி
கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர்
நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்)
அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக
மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு
குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா
இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்)
அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்)
என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக்
குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா)
என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக
(அறுப்பீராக). எனினும் , உமக்குப் பிறகு வேறு
எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) செய்ய
அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
( நூல்: புகாரி )
கூட்டு குர்பானி.....
உள்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும்
பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு
நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும்.
என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ( ﻧَﺤَﺮْﻧَﺎ ﻣَﻊَ ﺭَﺳُﻮﻝِ
ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻋَﺎﻡَ ﺍﻟْﺤُﺪَﻳْﺒِﻴَﺔِ ﺍﻟْﺒَﺪَﻧَﺔَ ﻋَﻦْ ﺳَﺒْﻌَﺔٍ،
ﻭَﺍﻟْﺒَﻘَﺮَﺓَ ﻋَﻦْ ﺳَﺒْﻌَﺔٍ ) .
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
" ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன்
ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும் , ஏழு பேர்
சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப்
பலியிட்டோம்" ( நூல்: முஸ்லிம் )
எந்த நாளில் அறுக்க வேண்டும்?
ﻭﻗﺖ ﺍﻟﺬّﺑﺢ : ﻭﻫﻮ ﺑﻌﺪ ﺻﻼﺓ ﺍﻟﻌﻴﺪ ﻳﻮﻡ ﺍﻷﺿﺤﻰ ﺇﻟﻰ ﺁﺧﺮ
ﻳﻮﻡ ﻣﻦ ﺃﻳّﺎﻡ ﺍﻟﺘﺸﺮﻳﻖ . ﻭﺃﻳّﺎﻡ ﺍﻟﺘﺸﺮﻳﻖ : ﺛﻼﺛﺔ ﺑﻌﺪ ﻳﻮﻡ ﺍﻟﻌﻴﺪ،
ﻓﺘﻜﻮﻥ ﺃﻳّﺎﻡ ﺍﻟﺬّﺑﺢ ﺃﺭﺑﻌﺔ، ﻭﻳﺠﺰﺉ ﺍﻟﺬّﺑﺢ ﻟﻴﻼ، ﻭﺍﻟﺬﺑﺢ ﻓﻲ
ﺍﻟﻨﻬﺎﺭ ﺃﻓﻀﻞ، ﻭﺃﻓﻀﻠﻪ ﻳﻮﻡ ﺍﻟﻌﻴﺪ، ﺛﻢ ﻣﺎ ﺑﻌﺪﻩ ﻋﻠﻰ ﺍﻟﺘّﻮﺍﻟﻲ .
ஈதுல் அள்ஹா தொழுகைக்குப் பின்னர்
கொடுப்பது மிகச் சிறந்ததாகும். மேலும், அய்யாமுத்
தஷ்ரீக் உடைய நாட்கள் வரை எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் அறுக்கலாம். எனினும் பகல்
நேரத்தில் அறுப்பது சிறந்ததாகும்.
துல்ஹஜ் பிறை 13 சூரியன் மறையும் முன்பு
வரை உள்ஹிய்யா கொடுக்கலாம். ( ஷாஃபியீ )
துல்ஹஜ் பிறை 12 சூரியன் மறையும் முன்பு
வரை கொடுக்க வேண்டும். ( ஹனஃபீ )
உள்ஹிய்யாவிற்கான கால் நடைகளில்
கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது …..
ﻣﺎ ﺭﻭﺍﻩ ﺍﻹﻣﺎﻡ ﻣﺎﻟﻚ ﻓﻲ " ﺍﻟﻤﻮﻃﺄ " ﻋﻦ ﺍﻟﺒﺮﺍﺀ ﺑﻦ
ﻋﺎﺯﺏ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ
ﺳُﺌِﻞَ : ﻣَﺎﺫَﺍ ﻳُـﺘَّﻘَﻰ ﻣِﻦْ ﺍﻟﻀَّﺤَﺎﻳَﺎ ؟ ﻓﺄﺷﺎﺭ ﺑﻴﺪﻩ ﻭﻗﺎﻝ :
))ﺃَﺭْﺑَﻌًﺎ : ﺍﻟْﻌَﺮْﺟَﺎﺀُ ﺍﻟْﺒَﻴِّﻦُ ﻇَﻠْﻌُﻬَﺎ، ﻭَﺍﻟْﻌَﻮْﺭَﺍﺀُ ﺍﻟْﺒَﻴِّﻦُ ﻋَﻮَﺭُﻫَﺎ ،
ﻭَﺍﻟْﻤَﺮِﻳﻀَﺔُ ﺍﻟْﺒَﻴِّﻦُ ﻣَﺮَﺿُﻬَﺎ ، ﻭَﺍﻟْﻌَﺠْﻔَﺎﺀُ ﺍﻟَّﺘِﻲ ﻟَﺎ ﺗُﻨْﻘِﻲ
1. தெளிவாகத் தெரியும் கண் குறுடு
2. கடுமையான நோயானவை
3. மிகவும் மெலிந்தவை
4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
( நூல்: முஅத்தா )
அறுப்பதன் ஒழுங்குகள்…
குர்பானி பிராணியை கிப்லா திசையை
முன்னோக்கி வைத்து அறுக்க வேண்டும்...
ﻳﻮﺟّﻪ ﻭﺟﻪ ﺍﻷُﺿﺤﻴﺔ ﺇﻟﻰ ﺍﻟﻘﺒﻠﺔ، ﻛﻤﺎ ﻳﺸﻴﺮ ﺇﻟﻴﻪ
ﺣﺪﻳﺚ ﺟﺎﺑﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻋﻨﺪ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ ﺣﻴﻦ ﻗﺎﻝ ": ﻛَﺎﻥَ
ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﺇِﺫَﺍ ﺃَﺭَﺍﺩَ ﺃَﻥْ ﻳَﺬْﺑَﺢَ ﺫَﺑِﻴﺤَﺘَﻪُ ﻭَﺟَّﻬَﻬَﺎ
"... ﺃﻱ : ﺇﻟﻰ ﺍﻟﻘﺒﻠﺔ .
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி
{ஸல்} அவர்கள் பலிப்பிராணியை கிப்லா திசையை
முன்னோக்கி வைத்து அறுப்பவர்களாக
இருந்தார்கள்”. ( நூல்:
அபூதாவூத் )
அறுக்கும் போது....
ﻓﻴﻘﻮﻝ ﻋﻨﺪ ﺍﻟﺬّﺑﺢ ": ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ، ﻭﺍﻟﻠﻪ ﺃﻛﺒﺮ، ﺍﻟﻠﻬﻢّ ﻫﺬﺍ ﻣﻨﻚ
ﻭﻟﻚ، ﺍﻟﻠﻬﻢّ ﺗﻘﺒّﻞ ﻣﻨّﻲ ."
”மிகப் பெரியவனான அல்லாஹ்வின் பெயர்
கொண்டு அறுக்கின்றேன், இறைவா! இது உன்
புறத்தில் இருந்து எனக்கு வழங்கப்பட்ட அருளாகும்.
இதை உனக்காகவே நிறைவேற்றுகின்றேன்,
என்னிடத்தில் இருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக!” என்று
கூறி அறுக்க வேண்டும்.
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻗُﺘَﻴْﺒَﺔُ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻋَﻮَﺍﻧَﺔَ ﻋَﻦْ ﻗَﺘَﺎﺩَﺓَ ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ
ﻗَﺎﻝَ ﺿَﺤَّﻰ ﺍﻟﻨَّﺒِﻰُّ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺑِﻜَﺒْﺸَﻴْﻦِ ﺃَﻣْﻠَﺤَﻴْﻦِ
ﺃَﻗْﺮَﻧَﻴْﻦِ ، ﺫَﺑَﺤَﻬُﻤَﺎ ﺑِﻴَﺪِﻩِ ، ﻭَﺳَﻤَّﻰ ﻭَﻛَﺒَّﺮَ ﻭَﻭَﺿَﻊَ ﺭِﺟْﻠَﻪُ ﻋَﻠَﻰ
ﺻِﻔَﺎﺣِﻬِﻤَﺎ .
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி
{ஸல்} அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை
செம்மறி ஆட்டுக்கடாக்களை குர்பானி கொடுத்தார்கள்.
அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்)
கூறினார்கள். தக்பீரும் (அல்லாஹு அக்பர்)
சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின்
பக்கவாட்டில் வைத்து அறுத்தார்கள்”. ( நூல்:
புகாரி )
அறுத்த பின்பு....
ﻭﻻ ﻳﺠﻮﺯ ﺃﻥ ﻳﺸﺮﻉ ﻓﻲ ﺳﻠﺨﻬﺎ ﻭﻛﺴﺮ ﻋﻈﻤﻬﺎ ﻗﺒﻞ ﺧﺮﻭﺝ
ﺭﻭﺣﻬﺎ، ﻗﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄّﺎﺏ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ": ﻻَ ﺗَﻌْﺠَﻠُﻮﺍ
ﺍﻷَﻧْﻔُﺲَ ﺣَﺘَّﻰ ﺗُﺰْﻫَﻖَ " [ ﺍﻧﻈﺮ " ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ )" 9/526 [( .
"சட்டெனெ தோலை உரித்து இறைச்சிகளை
எடுத்து விடக் கூடாது, மாறாக, உயிரும், உடல்
அசைவும் அடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆன்மா
அடங்கும் வரை காத்திருங்கள்; அவசரப்பட்டு விடாதீர்கள்”.
உள்ஹிய்யா பிராணிகளை வதைக்காமல்
அறுப்பது….
ﻋَﻦْ ﺷَﺪَّﺍﺩِ ﺑْﻦِ ﺃَﻭْﺱٍ ﻗَﺎﻝَ ﺛِﻨْﺘَﺎﻥِ ﺣَﻔِﻈْﺘُﻬُﻤَﺎ ﻋَﻦْ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ
ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻛَﺘَﺐَ ﺍﻟْﺈِﺣْﺴَﺎﻥَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻓَﺈِﺫَﺍ
ﻗَﺘَﻠْﺘُﻢْ ﻓَﺄَﺣْﺴِﻨُﻮﺍ ﺍﻟْﻘِﺘْﻠَﺔَ ﻭَﺇِﺫَﺍ ﺫَﺑَﺤْﺘُﻢْ ﻓَﺄَﺣْﺴِﻨُﻮﺍ ﺍﻟﺬَّﺑْﺢَ ﻭَﻟْﻴُﺤِﺪَّ
ﺃَﺣَﺪُﻛُﻢْ ﺷَﻔْﺮَﺗَﻪُ ﻓَﻠْﻴُﺮِﺡْ ﺫَﺑِﻴﺤَﺘَﻪُ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “நான் இரண்டு விஷயங்களை
அண்ணலாரிடம் இருந்து கற்று இது வரை அதைப்
பேணி வருகின்றேன்.
"எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில்
நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
1. நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது)
கொலை செய்தால் அழகிய முறையில் கொலை
செய்யுங்கள்.
2. நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய
முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள்
கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக)
அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )
" ﻣَﺮَّ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﺑِﺮَﺟُﻞٍ ﻳَﺸْﺤَﺬُ ﺳِﻜِّﻴﻨَﻪُ
ﺃَﻣَﺎﻡَ ﺍﻷُﺿْﺤِﻴَﺔِ، ﻓَﻘَﺎﻝَ )) : ﺃَﻓَﻼَ ﻗَﺒْﻞَ ﻫَﺬَﺍ ؟ ﺃَﺗُﺮِﻳﺪُ ﺃَﻥْ ﺗُﻤِﻴﺘَﻬَﺎ
ﻣَﻮْﺗَـَﺘﻴْﻦِ، ﻫَﻼَّ ﺣَﺪَﺩْﺕَ ﺷَﻔْﺮَﺗَﻚَ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﺗُﻀْﺠِﻌَﻬَﺎ
நபி {ஸல்} அவர்கள் ”உள்ஹிய்யா பிராணியை
அறுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஒரு
மனிதரை கடந்து சென்றார்கள். அவர் உள்ஹிய்யா
பிராணிக்கு முன் கத்தியை தீட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது நபி {ஸல்} அவர்கள், சற்று முன்பாக இதை நீர்
செய்திருக்க வேண்டாமா? அதற்கு இரண்டு மரணத்தை
ஏன் கொடுக்கிறீர்?” என கண்டித்தார்கள்.
உள்ஹிய்யா கொடுப்பதன் சிறப்புகள்….
ﻗﺎﻝ ﺍﺑﻦ ﺍﻟﻌﺮﺑﻲ ﻓﻲ ﻋﺎﺭﺿﺔ ﺍﻻﺣﻮﺫﻱ
ﻟﻴﺲ ﻓﻲ ﻓﻀﻞ ﺍﻷﺿﺤﻴﺔ ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﻭ ﻗﺪ ﺭﻭﻯ ﺍﻟﻨﺎﺱ
ﻓﻴﻬﺎ ﻋﺠﺎﺋﺐ ﻟﻢ ﺗﺼﺢ
உள்ஹிய்யா கொடுப்பதன் சிறப்புகள் பற்றி
வருகிற ஹதீஸ்களில் சிலது ளயீஃப் –
பலஹீனமானவைகளாகவும், சிலது மவ்ளூவு –
இட்டுக்கட்டப் பட்டவைகளாகவும், சிலது முன்கர் –
மறுக்கப்பட்டவைகளாகவும் இருப்பதால் பேணுதல்
அடிப்படையில் அவைகளை சொல்லாமல் தவிர்ப்பது
நல்லது.
அல்லாமா இப்னுல் அரபீ (ரஹ்) தங்களுடைய
“ஆரிளத்துல் அஹ்வதீ” எனுல் நூலில் குறிப்பிடும்
போது “உள்ஹிய்யாவின் சிறப்புகள் பற்றி
ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. எனினும்
மக்களில் சிலர் ஆதாரமில்லாத ஆச்சர்யத்தக்க
வகையிலான செய்திகளை நபிமொழிகளாக கூறிக்
கொண்டிருக்கின்றனர்.
அவைகளில் சிலதை உங்களின் மேலான
பார்வைக்கு தருகின்றேன்.
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻷﻭﻝ )) : ﻣﺎ ﻋﻤﻞ ﺍﺑﻦ ﺁﺩﻡ ﻳﻮﻡ ﺍﻟﻨﺤﺮ ﻋﻤﻼ ﺃﺣﺐ ﺇﻟﻰ
ﺍﻟﻠﻪ ﻋﺰﻭﺟﻞ ﻣﻦ ﺇﻫﺮﺍﻕ ﺍﻟﺪﻡ ﻭ ﺇﻧﻬﺎ ﻟﺘﺄﺗﻲ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﺑﻘﺮﻭﻧﻬﺎ
ﻭ ﺃﺷﻌﺎﺭﻫﺎ ﻭ ﺃﻇﻼﻓﻬﺎ ﻭ ﺃﻥ ﺍﻟﺪﻡ ﻟﻴﻘﻊ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﺑﻤﻜﺎﻥ ﻗﺒﻞ ﺃﻥ
ﻳﻘﻊ ﻣﻦ ﺍﻷﺭﺽ ﻓﻄﻴﺒﻮﺍ ﺑﻬﺎ ﻧﻔﺴﺎ (( ﺣﺪﻳﺚ ﺿﻌﻴﻒ .
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஆதமுடைய மகன் நஹ்ருடைய நாளில் செய்யும்
செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது
உள்ஹிய்யா பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான்.
நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும்.
(அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன்
சதைகளோடும் வரும்) திண்ணமாக, இந்தப் பூமியில்
அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது
போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய
மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ளயீஃப் என இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்)
தங்களின் அல் இலலுல் முந்தாஹிய்யாவிலும், திர்மிதீ
(ரஹ்) தங்களின் கிதாபுல் இலலிலும், இப்னு ஹிப்பான்
(ரஹ்) அவர்கள் தங்களின் கிதாபுல் மஜ்ரூஹீனிலும்
பதிவு செய்திருக்கின்றனர்.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﺍﻟﻌﻠﻞ ﺍﻟﻤﻨﺘﺎﻫﻴﺔ ﻻﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ ( 2 / 569 ) ﺣﺪﻳﺚ
ﺭﻗﻢ ( 936 ) ﻭ ﻛﺘﺎﺏ ﻋﻠﻞ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻠﺘﺮﻣﺬﻱ ( 2 /
638 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺍﻟﻤﺠﺮﻭﺣﻴﻦ ﻻﺑﻦ ﺣﺒﺎﻥ ( 3 / 851 ) ، ﻭ
ﻛﺘﺎﺏ ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻟﻠﺤﺎﻛﻢ ( 4 / 221 ) ﺃﻧﻈﺮ ﺗﻌﻠﻴﻖ ﺍﻟﺬﻫﺒﻲ . ﻭ
ﻛﺘﺎﺏ ﺳﻠﺴﻠﺔ ﺍﻷﺣﺎﺩﻳﺚ ﺍﻟﻀﻌﻴﻔﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ
( 526 ) .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺜﺎﻧﻲ )) : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻲ ﻭﺳﻠﻢ ﻣﺎ
ﻫﺬﻩ ﺍﻷﺿﺎﺣﻲ ﻗﺎﻝ ﺳﻨﺔ ﺃﺑﻴﻜﻢ ﺇﺑﺮﺍﻫﻴﻢ
ﻗﺎﻟﻮﺍ ﻓﻤﺎ ﻟﻨﺎ ﻓﻴﻬﺎ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ ﺑﻜﻞ ﺷﻌﺮﺓ ﺣﺴﻨﺔ ﻗﺎﻟﻮﺍ
ﻓﺎﻟﺼﻮﻑ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ ﺑﻜﻞ ﺷﻌﺮﺓ ﻣﻦ ﺍﻟﺼﻮﻑ ﺣﺴﻨﺔ ((
ﺣﺪﻳﺚ ﻣﻮﺿﻮﻉ
”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம்
இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன்
தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி
{ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம்
(அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த
உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப்
பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி
{ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மவ்ளூவு இட்டுக்கட்டப்பட்ட வகையைச்
சார்ந்ததாகும்.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﺫﺧﻴﺮﺓ ﺍﻟﺤﻔﺎﻅ ﻟﻠﻘﻴﺴﺮﺍﻧﻲ ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ ( 3835 ) ،
ﻛﺘﺎﺏ ﺍﻟﻀﻌﻔﺎﺀ ﻻﺑﻦ ﺣﺒﺎﻥ ( 3 / 55 ) ، ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺼﺒﺎﺡ
ﺍﻟﺰﺟﺎﺟﺔ ﻟﻠﺒﻮﺻﻴﺮﻱ ( 3 / 223 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺳﻠﺴﻠﺔ ﺍﻷﺣﺎﺩﻳﺚ
ﺍﻟﻀﻌﻴﻔﺔ ﻭﺍﻟﻤﻮﺿﻮﻋﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ ( 527 ) .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺜﺎﻟﺚ : )) ﻳﺎ ﻓﺎﻃﻤﺔ ﻗﻮﻣﻲ ﺇﻟﻰ ﺃﺿﺤﻴﺘﻚ ﻓﺎﺷﻬﺪﻳﻬﺎ
ﻓﺈﻥ ﻟﻚ ﺑﻜﻞ ﻗﻄﺮﺓ ﺗﻘﻄﺮ ﻣﻦ ﺩﻣﻬﺎ ﺃﻥ ﻳﻐﻔﺮ ﻟﻚ ﻣﺎ ﺳﻠﻒ ﻣﻦ
ﺫﻧﻮﺑﻚ ﻗﺎﻟﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺃﻟﻨﺎ ﺧﺎﺻﺔ ﺁﻝ ﺍﻟﺒﻴﺖ ﺃﻭ ﻟﻨﺎ ﻭ
ﻟﻠﻤﺴﻠﻤﻴﻦ ﻗﺎﻝ ﺑﻞ ﻟﻨﺎ ﻭ ﻟﻠﻤﺴﻠﻤﻴﻦ (( ﺣﺪﻳﺚ ﻣﻨﻜﺮ .
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “உள்ஹிய்யா தினத்தன்று அண்ணல்
நபி {ஸல்} அவர்கள் தமது அருமை மகளாரிடம்
ஃபாத்திமாவே! எழுவீராக! உம்முடைய
பிராணியிடத்தில் ஆஜராகுவீராக!
மேலும், நிச்சயமாக, எனது தொழுகையும்,
என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும்
என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான
அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும்
இணையில்லை. இவ்வாறே எனக்கு
கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்கு
கீழ்ப்படிவோரில் முதன்மையானவன்” என்று நீர்
கூறுவீராக!
ஏனெனில் குர்பானிப் பிராணியின்
முதலாவது சொட்டு இரத்தம் விழும்போதே உனது
அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.
மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில்
இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு
கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய
மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கு மட்டும்
உரியதா? அல்லது எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதா?
எனக் கேட்டார்கள்.
அப்போது நபி {ஸல்} அவர்கள் ”இது
முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா
முஸ்லிம்களுக்கும் பொதுவானதுதான்” என
பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் முன்கர் வகையைச் சார்ந்ததாகும்.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﺍﻟﻌﻠﻞ ﻷﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺗﻢ ( 2 / 38 ــ 39 ) ﻭ ﻛﺘﺎﺏ
ﻣﺠﻤﻊ ﺍﻟﺰﻭﺍﺋﺪ ﻟﻠﻬﻴﺜﻤﻲ ( 4 / 17 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺍﻟﺘﺮﻏﻴﺐ ﻭ
ﺍﻟﺘﺮﻫﻴﺐ ﻟﻠﻤﻨﺬﺭﻱ ( 2 / 99 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺍﻟﻀﻌﻔﺎﺀ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻠﻌﻘﻴﻠﻲ
( 2 / 38 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺳﻠﺴﻠﺔ ﺍﻷﺣﺎﺩﻳﺚ ﺍﻟﻀﻌﻴﻔﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ
ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ ( 528 ) .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺮﺍﺑﻊ )) : ﻋﻈﻤﻮﺍ ﺿﺤﺎﻳﺎﻛﻢ ﻓﺈﻧﻬﺎ ﻋﻠﻰ ﺍﻟﺼﺮﺍﻁ
ﻣﻄﺎﻳﺎﻛﻢ (( ﺣﺪﻳﺚ ﺿﻌﻴﻒ ﺟﺪﺍ .
”குர்பானிப் பிராணிகளில் மிகச்
சிறப்பானதைக் கொடுங்கள். ஏனெனில் அது தான்
மறுமையில் உங்களின் வாகனம்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
இது முற்றிலும் ளயீஃப் ஆன ஹதீஸ் ஆகும்.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﺍﻟﺸﺬﺭﺓ ﻓﻲ ﺍﻷﺣﺎﺩﻳﺚ ﺍﻟﻤﺸﺘﻬﺮﺓ ﻻﺑﻦ
ﻃﻮﻟﻮﻥ ( 1 / 96 ) ، ﻭ ﻛﺘﺎﺏ ﺍﻟﻤﺸﺘﻬﺮ ﻣﻦ ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﻤﻮﺿﻮﻉ
ﻭﺍﻟﻀﻌﻴﻒ ﻟﻠﺠﺒﺮﻱ ( 1 / 197 ) ، ﻭ ﻛﺘﺎﺏ ﺳﻠﺴﻠﺔ ﺍﻷﺣﺎﺩﻳﺚ
ﺍﻟﻀﻌﻴﻔﺔ ﻭﺍﻟﻤﻮﺿﻮﻋﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ ( 1 / 173 ) ، ﻭ ﻛﺘﺎﺏ ﻛﺸﻒ
ﺍﻟﺨﻔﺎﺀ ﻟﻠﻌﺠﻠﻮﻧﻲ ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ ( 1794 ( .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺨﺎﻣﺲ )) : ﻣﻦ ﺿﺤﻰ ﻃﻴﺒﺔ ﺑﻬﺎ ﻧﻔﺴﻪ ﻣﺤﺘﺴﺒﺎ
ﻹﺿﺤﻴﺘﻪ ﻛﺎﻧﺖ ﻟﻪ ﺣﺠﺎﺑﺎ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ (( ﻣﻮﺿﻮﻉ
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “யார் தூய மனதோடும், நன்மையை
எதிர்பார்த்தும் உள்ஹிய்யா கொடுக்கின்றார்களோ
அந்த உள்ஹிய்யா அவருக்கு நரகின் திரையாகி
விடும்”.
இதுவும் மவ்ளூவு இட்டுக்கட்டப்பட்ட வகை
ஹதீஸாகும்.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﻣﺠﻤﻊ ﺍﻟﺰﻭﺍﺋﺪ ﻟﻠﻬﻴﺜﻤﻲ ( 4 / 17 ) ﻭ ﻛﺘﺎﺏ
ﺧﻼﺻﺔ ﺍﻟﺒﺪﺭ ﺍﻟﻤﻨﻴﺮ ﻻﺑﻦ ﺍﻟﻤﻠﻘﻦ ( 2 / 386 ) ﻭ ﻛﺘﺎﺏ ﻧﻴﻞ
ﺍﻷﻭﻃﺎﺭ ﻟﻠﺸﻮﻛﺎﻧﻲ ( 5 / 196 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺳﻠﺴﺔ ﺍﻷﺣﺎﺩﻳﺚ
ﺍﻟﻀﻌﻴﻔﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ ( 529 ) .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺨﺎﻣﺲ )) : ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻳﻌﺘﻖ ﺑﻜﻞ ﻋﻀﻮ ﻣﻦ ﺍﻟﻀﺤﻴﺔ
ﻋﻀﻮﺍ ﻣﻦ ﺍﻟﻤﻀﺤﻲ (( ﺣﺪﻳﺚ ﻻ ﺃﺻﻞ ﻟﻪ .
”அல்லாஹ் உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு
உறுப்புக்குப் பகரமாக உள்ஹிய்யா கொடுப்பவரின்
ஒவ்வொரு உறுப்பையும் நரகிலிருந்து விடுவித்து
விடுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும்
இல்லை.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﺗﻠﺨﻴﺺ ﺍﻟﺤﺒﻴﺮ ﻟﻠﺤﺎﻓﻆ ﺍﺑﻦ ﺣﺠﺮ ( 4 / 252 ) ﻭ
ﻛﺘﺎﺏ ﺧﻼﺻﺔ ﺍﻟﺒﺪﺭ ﺍﻟﻤﻨﻴﺮ ﻻﺑﻦ ﺍﻟﻤﻠﻘﻦ ( 2 / 386 ) .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺴﺎﺩﺱ )) : ﻳﺎ ﺃﻳﻬﺎ ﺍﻟﻨﺎﺱ ﺿﺤﻮﺍ ﻭ ﺍﺣﺘﺴﺒﻮﺍ ﺑﺪﻣﺎﺋﻬﺎ
ﻓﺈﻥ ﺍﻟﺪﻡ ﻭ ﺇﻥ ﻭﻗﻊ ﻓﻲ ﺍﻷﺭﺽ ﻓﺈﻧﻪ ﻳﻘﻊ ﻓﻲ ﺣﺮﺯ ﺍﻟﻠﻪ ((
ﺣﺪﻳﺚ ﻣﻮﺿﻮﻉ .
“மக்களே! நன்மையை எதிர்பார்த்து உள்ஹிய்யா
கொடுங்கள். ஏனெனில், உள்ஹிய்யா பிராணியின்
உதிரம் இப்பூமியில் விழுமுன் அல்லாஹ்வின்
சந்நிதானத்தின் முன் விழுந்துவிடுகின்றது” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸும் மவ்ளூவு வகையைச்
சார்ந்ததாகும்.
ﺍﻧﻈﺮ ﻛﺘﺎﺏ ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻷﻭﺳﻂ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ ( 8 / 176 ) ﻭ ﻛﺘﺎﺏ
ﻣﻴﺰﺍﻥ ﺍﻻﻋﺘﺪﺍﻝ ﻟﻠﺬﻫﺒﻲ ( 4 / 205 ) ﻭ ﻛﺘﺎﺏ ﺳﻠﺴﻠﺔ
ﺍﻷﺣﺎﺩﻳﺚ ﺍﻟﻀﻌﻴﻔﺔ ﻟﻸﻟﺒﺎﻧﻲ ﺣﺪﻳﺚ ﺭﻗﻢ ( 530 ) .
ﺍﻟﺤﺪﻳﺚ ﺍﻟﺴﺎﺑﻊ )) : ﻣﺎ ﺃﻧﻔﻘﺖ ﺍﻟﻮﺭﻕ ﻓﻲ ﺷﻲﺀ ﺃﻓﻀﻞ ﻣﻦ
ﻧﺤﻴﺮﺓ ﻓﻲ ﻳﻮﻡ ﺍﻟﻌﻴﺪ (( ﺣﺪﻳﺚ ﺿﻌﻴﻒ ﺟﺪﺍ .
”நஹ்ருடைய நாளன்று செய்யப்படும்
செலவினங்களை விடச் சிறந்த செலவினங்கள்
வேறெதுவும் கிடையாது” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள்.
இந்த ஹதீஸும் ளயீஃப் ஆகும்.
( நூல்: ஆரிளத்துல் அஹ்வதீ லி இமாமி
இப்னுல் அரபீ (ரஹ்).. )
ஆகவே, உள்ஹிய்யா கொடுப்பவர்களையும்,
கொடுக்க இருப்பவர்களையும் ஆர்வமூட்ட இது போன்ற
ஹதீஸ்களை பயன்படுத்துவதிலிருந்து நாம் ஒதுங்கி
இருப்பது தான் நல்லதாகும்.
உள்ஹிய்யாவின் மூலம் அல்லாஹ்
இறையச்சத்தை எதிர்பார்ப்பதாக கூறுவதால்,
இறையச்சத்தோடு ஒருவர் உள்ஹிய்யா கொடுப்பதால்
எண்ணற்ற பல சிறப்புகளுக்கும், சோபனத்திற்கும்
சொந்தமாகின்றார்.
மேலும், அந்த இறையச்சம் உள்ஹிய்யாவையும்
தாண்டி வாழ்வின் எல்லா நிலைகளிலும், எல்லா
இபாதத்களிலும் தொடருமானால் வாழ்க்கை
முழுவதும் வசந்தமாக அமையும் என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.
இறையச்சமுடையோருக்கு அல்லாஹ்
வழங்கும் சிறப்புகளும், சோபனங்களும்…
1. அல்லாஹ்வையே கூலியாகப் பெறுதல்.
( அல்குர்ஆன்: நஹ்ல், 128 )
ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻣَﻊَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺍﺗَّﻘَﻮْﺍ
2. இறுதி முடிவு நலமாக அமைதல்.
( அல்குர்ஆன்: ஹூத், 49 )
ﺇِﻥَّ ﺍﻟْﻌَﺎﻗِﺒَﺔَ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ
3. அல்லாஹ் நண்பனாகுதல். ( அல்குர்ஆன்:
ஜாஸியா, 19 )
ﻭَﺍﻟﻠَّﻪُ ﻭَﻟِﻲُّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ
4. வெற்றியின் பாதையில் செல்லுதல்.
( அல்குர்ஆன்: பகரா, 189 )
ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
5. உயர் அந்தஸ்தைப் பெறுதல். ( அல்குர்ஆன்:
துஃகான், 51 )
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﻣَﻘَﺎﻡٍ ﺃَﻣِﻴﻦٍ
6. மகத்தான கூலியைப் பெறுதல். ( அல்குர்ஆன்:
ஆலு இம்ரான், 172 )
ﻭَﺍﺗَّﻘَﻮْﺍ ﺃَﺟْﺮٌ ﻋَﻈِﻴﻢٌ
7. பயன் தருகிற கல்வியைப் பெறுதல்.
( அல்குர்ஆன்: பகரா, 282 )
ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻳُﻌَﻠِّﻤُﻜُﻢُ ﺍﻟﻠَّﻪُ
8. உண்மையிலும், சத்தியத்திலும் நீடித்தல்.
( அல்குர்ஆன்: அன்ஃபால், 29 )
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺇِﻥْ ﺗَﺘَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞْ ﻟَﻜُﻢْ ﻓُﺮْﻗَﺎﻧًﺎ
9. சோதனைகளில் விடுதலை பெறுதல்.
( அல்குர்ஆன்: தலாக், 2 )
ﻭَﻣَﻦْ ﻳَﺘَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞْ ﻟَﻪُ ﻣَﺨْﺮَﺟًﺎ
10. வாழ்வாதாரம் செழிப்பாகுதல். ( அல்குர்ஆன்:
தலாக், 2 )
ﻭَﻳَﺮْﺯُﻗْﻪُ ﻣِﻦْ ﺣَﻴْﺚُ ﻟَﺎ ﻳَﺤْﺘَﺴِﺐُ
11. சுவனமே சோபனமாகுதல். ( அல்குர்ஆன்:
தாரியாத், 15 )
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻋُﻴُﻮﻥٍ
12. நரகிலிருந்து ஈடேற்றம் பெறுதல்.
( அல்குர்ஆன்: லைல், 17 )
ﻭَﺳَﻴُﺠَﻨَّﺒُﻬَﺎ ﺍﻟْﺄَﺗْﻘَﻰ
13. வானம், பூமி ஆகியவற்றின் வளங்களைப்
பெறுதல். ( அல்குர்ஆன்: 7: 96 )
ﻭَﺍﺗَّﻘَﻮْﺍ ﻟَﻔَﺘَﺤْﻨَﺎ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﺑَﺮَﻛَﺎﺕٍ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ
இன்னும் ஏராளமான சிறப்புகளும்,
சோபனங்களும் அருள்மறை வசனங்களிலும், திருநபி
மொழிகளிலும் காணக்கிடைக்கின்றன, விரிவை
அஞ்சி சுருக்கித் தந்திருக்கின்றேன்.
உள்ஹிய்யாவில் செய்யக்கூடாதவைகள்...
ﺍﻋﻠﻢ ﺃﻧّﻪ ﻳﺤﺮُﻡ ﻋﻠﻰ ﺍﻟﻤﺴﻠﻢ ﺃﻥ ﻳﺒﻴﻊ ﺷﻴﺌﺎ ﻣﻦ ﺃُﺿﺤﻴﺘﻪ، ﻭﻫﻮ
ﻣﺬﻫﺐ ﻋﻄﺎﺀ، ﻭﺍﻟﻨّﺨﻌﻲ، ﻭﺍﻹﻣﺎﻡ ﻣﺎﻟﻚ، ﻭﺇﺳﺤﺎﻕ،
ﻭﺍﻟﺸّﺎﻓﻌﻴّﺔ .
உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட
பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ
மாமிசங்களையோ விற்கவோ, அல்லது அறுத்தவருக்கு
கூலியாகவோ கொடுக்கக்கூடாது என அறிஞர்
பெருமக்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு
கூறுகின்றார்கள்.
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ : )) ﻣَﻦْ ﺑَﺎﻉَ ﺟِﻠْﺪَ ﺃُﺿْﺤِﻴَﺘِﻪِ ﻓَﻼَ ﺃُﺿْﺤِﻴَﺔَ
ﻟَﻪُ .((
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: “எவர் உள்ஹிய்யா பிராணியின்
எந்த ஒன்றையாவது விற்கிறாரோ அவர் உள்ஹிய்யா
கொடுத்தவராக கருதப்பட மாட்டார்” என நபி {ஸல்} அவர்கள்
கூறினார்கள். ( நூல்: ஹாகிம் )
ﻓﻘﺪ ﺭﻭﻯ ﺍﻟﺸّﻴﺨﺎﻥ ﻋﻦ ﻋﻠﻲّ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ
ﻗﺎﻝ ": ﺃَﻣَﺮَﻧِﻲ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﺃَﻥْ ﻻَ ﺃُﻋْﻄِﻲَ
ﺍﻟﺠَﺎﺯِﺭَ ﻣِﻨْﻬَﺎ ﺷَﻴْﺌﺎً ”
குர்பானி பிராணியை மேற்பார்வையிடும்
பணியில் என்னை நபி {ஸல்} அவர்கள் நியமித்து,
அவைகளின் எந்த ஒரு பகுதியையும் அறுப்பவருக்கு
கூலியாகக் கொடுக்கக் கூடாது” என நபி {ஸல்}
கண்டிப்பாக கூறினார்கள். ( நூல்: புகாரி )
இறைச்சியைப் பங்கிடல்…
ﻟِﻴَﺸْﻬَﺪُﻭﺍ ﻣَﻨَﺎﻓِﻊَ ﻟَﻬُﻢْ ﻭَﻳَﺬْﻛُﺮُﻭﺍ ﺍﺳْﻢَ ﺍﻟﻠَّﻪِ ﻓِﻲ ﺃَﻳَّﺎﻡٍ
ﻣَّﻌْﻠُﻮﻣَﺎﺕٍ ﻋَﻠَﻰ ﻣَﺎ ﺭَﺯَﻗَﻬُﻢ ﻣِّﻦ ﺑَﻬِﻴﻤَﺔِ ﺍﻟْﺄَﻧْﻌَﺎﻡِ ﻓَﻜُﻠُﻮﺍ ﻣِﻨْﻬَﺎ ﻭَﺃَﻃْﻌِﻤُﻮﺍ
ﺍﻟْﺒَﺎﺋِﺲَ ﺍﻟْﻔَﻘِﻴﺮَ
”தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும் ;
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு
அளித்துள்ள (ஆடு, மாடு , ஒட்டகம் போன்ற) பிராணிகள்
மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பானி
கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்) ; எனவே
அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள் ; கஷ்டப்படும்
ஏழைகளுக்கும் உண்ணக்
கொடுங்கள்”. ( அல்குர்ஆன்:
22:28 )
ﻭﻣﻦ ﺍﻟﺴﻨّﺔ ﺃﻥ ﻻ ﻳﺄﻛﻞ ﺍﻟﻤﻀﺤﻲ ﺷﻴﺌﺎ ﻳﻮﻡ ﺍﻟﻨﺤﺮ ﺣﺘﻰ
ﻳﻀﺤﻲ ﻓﻴﺄﻛﻞ ﻣﻦ ﺃﺿﺤﻴﺘﻪ ، ﻓﻘﺪ ﺭﻭﻯ
ﺍﻟﺪّﺍﺭﻣﻲ ﻋﻦ ﺃَﺑِﻲ ﻣﻮﺳﻰ ﺍﻷﺷﻌﺮﻱّ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥّ ﺍﻟﻨﺒﻲّ
ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﻛﺎﻥ ﻳﻔﻌﻞ .
உள்ஹிய்யா கொடுப்பவர் தான் கொடுத்த
உள்ஹிய்யாவிலிருந்து அன்றைய முதல் உணவை
உட்கொள்வது தனித்த சுன்னத் ஆகும். ஏனெனில், நபி
{ஸல்} அவர்கள் அவ்வாறே சாப்பிட்டு இருப்பதாக
அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்
தாரமீ (ரஹ்) தங்களது தாரமீயிலே ஒரு ஹதீஸை
பதிவிட்டு இருக்கின்றார்கள்.
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻋَﺎﺻِﻢٍ ﻋَﻦْ ﻳَﺰِﻳﺪَ ﺑْﻦِ ﺃَﺑِﻰ ﻋُﺒَﻴْﺪٍ ﻋَﻦْ ﺳَﻠَﻤَﺔَ ﺑْﻦِ
ﺍﻷَﻛْﻮَﻉِ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻰُّ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - « ﻣَﻦْ
ﺿَﺤَّﻰ ﻣِﻨْﻜُﻢْ ﻓَﻼَ ﻳُﺼْﺒِﺤَﻦَّ ﺑَﻌْﺪَ ﺛَﺎﻟِﺜَﺔٍ ﻭَﻓِﻰ ﺑَﻴْﺘِﻪِ ﻣِﻨْﻪُ ﺷَﻰْﺀٌ » .
ﻓَﻠَﻤَّﺎ ﻛَﺎﻥَ ﺍﻟْﻌَﺎﻡُ ﺍﻟْﻤُﻘْﺒِﻞُ ﻗَﺎﻟُﻮﺍ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻧَﻔْﻌَﻞُ ﻛَﻤَﺎ ﻓَﻌَﻠْﻨَﺎ
ﻋَﺎﻡَ ﺍﻟْﻤَﺎﺿِﻰ ﻗَﺎﻝَ « ﻛُﻠُﻮﺍ ﻭَﺃَﻃْﻌِﻤُﻮﺍ ﻭَﺍﺩَّﺧِﺮُﻭﺍ ﻓَﺈِﻥَّ ﺫَﻟِﻚَ ﺍﻟْﻌَﺎﻡَ
ﻛَﺎﻥَ ﺑِﺎﻟﻨَّﺎﺱِ ﺟَﻬْﺪٌ ﻓَﺄَﺭَﺩْﺕُ ﺃَﻥْ ﺗُﻌِﻴﻨُﻮﺍ ﻓِﻴﻬَﺎ »
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்)
அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை
அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று
நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின்
வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப்
பொழுதை அடைய வேண்டாம் ' என்று கூறினார்கள்.
அடுத்த ஆண்டு வந்தபோது , மக்கள்
'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப்
போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?'
என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து
உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள்.
சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் , கடந்த
ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம்
ஏற்பட்டிருந்தது. எனவே , நீங்கள் அந்தச் சிரமத்தைப்
போக்க ( அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று
விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
( நூல்: புகாரி )
ﻣﻦ ﺃﺟﻞ ﺫﻟﻚ ﺍﺳﺘﺤﺐّ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﺃﻥ ﺗﻘﺴّﻢ ﺍﻻﺿﺤﻴﺔ ﺛﻼﺛﺔ
ﺃﺛﻼﺙ : ﺛﻠﺚ ﻳﺄﻛﻞ ﻣﻨﻪ ﺃﻫﻞ ﺍﻟﺒﻴﺖ، ﻭﺛﻠﺚ ﻳُﺘَﺼﺪّﻕ ﺑﻪ، ﻭﺛﻠﺚ
ﻳﻄﻌﻢ ﺑﻪ ﺍﻷﺿﻴﺎﻑ ﻭﺍﻟﺠﻴﺮﺍﻥ .
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே
உள்ஹிய்யா பிராணியின் இறைச்சியை மூன்றாகப்
பங்கு வைப்பதை முஸ்தஹப் என்கிறார்கள்.
1. தனக்கு ஒரு பங்கும், 2. ஏழை, எளியவர்களுக்கு
தர்மமாக ஒரு பங்கும், 3. உறவினர்கள், அண்டை அயலார்,
நண்பர்கள், விருந்தாளிகள் ஆகியோருக்கு ஒரு பங்கும்
வைப்பதாகும்.
மாற்று மதத்தவர்களுக்கு உள்ஹிய்யா
இறைச்சியை கொடுக்கலாமா?...
ﻭﻋَﻦْ ﻣُﺠَﺎﻫِﺪٍ : " ﺃَﻥَّ ﻋَﺒْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦَ ﻋَﻤْﺮٍﻭ ﺫُﺑِﺤَﺖْ ﻟَﻪُ ﺷَﺎﺓٌ
ﻓِﻲ ﺃَﻫْﻠِﻪِ ، ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎﺀَ ﻗَﺎﻝَ : ﺃَﻫْﺪَﻳْﺘُﻢْ ﻟِﺠَﺎﺭِﻧَﺎ ﺍﻟْﻴَﻬُﻮﺩِﻱِّ ؟ ، ﺃَﻫْﺪَﻳْﺘُﻢْ
ﻟِﺠَﺎﺭِﻧَﺎ ﺍﻟْﻴَﻬُﻮﺩِﻱِّ ، ﺳَﻤِﻌْﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ
ﻳَﻘُﻮﻝُ : ( ﻣَﺎ ﺯَﺍﻝَ ﺟِﺒْﺮِﻳﻞُ ﻳُﻮﺻِﻴﻨِﻲ ﺑِﺎﻟْﺠَﺎﺭِ ﺣَﺘَّﻰ ﻇَﻨَﻨْﺖُ ﺃَﻧَّﻪُ
ﺳَﻴُﻮَﺭِّﺛُﻪُ ) ﺭﻭﺍﻩ ﺍﻟﺘﺮﻣﺬﻱ (1943 ) ﻭﺻﺤﺤﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ .
ﻗﺎﻝ ﺍﺑﻦ ﻗﺪﺍﻣﺔ : " ﻭَﻳَﺠُﻮﺯُ ﺃَﻥْ ﻳُﻄْﻌِﻢَ ﻣِﻨْﻬَﺎ ﻛَﺎﻓِﺮًﺍ ، ... ؛ ﻟِﺄَﻧَّﻪُ
ﺻَﺪَﻗَﺔُ ﺗَﻄَﻮُّﻉٍ ، ﻓَﺠَﺎﺯَ ﺇﻃْﻌَﺎﻣُﻬَﺎ ﺍﻟﺬِّﻣِّﻲَّ ﻭَﺍﻟْﺄَﺳِﻴﺮَ، ﻛَﺴَﺎﺋِﺮِ ﺻَﺪَﻗَﺔِ
ﺍﻟﺘَّﻄَﻮُّﻉِ ." ﺍﻧﺘﻬﻰ ﻣﻦ "ﺍﻟﻤﻐﻨﻲ " ( 9/450 ) .
ﻭﻓﻲ ﻓﺘﺎﻭﻯ ﺍﻟﻠﺠﻨﺔ ﺍﻟﺪﺍﺋﻤﺔ (11/424)
" ﻳﺠﻮﺯ ﻟﻨﺎ ﺃﻥ ﻧﻄﻌﻢ ﺍﻟﻜﺎﻓﺮ ﺍﻟﻤﻌﺎﻫﺪ ، ﻭﺍﻷﺳﻴﺮ ﻣﻦ ﻟﺤﻢ
ﺍﻷﺿﺤﻴﺔ ، ﻭﻳﺠﻮﺯ ﺇﻋﻄﺎﺅﻩ ﻣﻨﻬﺎ ﻟﻔﻘﺮﻩ ، ﺃﻭ ﻗﺮﺍﺑﺘﻪ ، ﺃﻭ ﺟﻮﺍﺭﻩ ،
ﺃﻭ ﺗﺄﻟﻴﻒ ﻗﻠﺒﻪ ...؛ ﻟﻌﻤﻮﻡ ﻗﻮﻟﻪ ﺗﻌﺎﻟﻰ
( ﻟَﺎ ﻳَﻨْﻬَﺎﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻦِ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻟَﻢْ ﻳُﻘَﺎﺗِﻠُﻮﻛُﻢْ ﻓِﻲ ﺍﻟﺪِّﻳﻦِ ﻭَﻟَﻢْ
ﻳُﺨْﺮِﺟُﻮﻛُﻢْ ﻣِﻦْ ﺩِﻳَﺎﺭِﻛُﻢْ ﺃَﻥْ ﺗَﺒَﺮُّﻭﻫُﻢْ ﻭَﺗُﻘْﺴِﻄُﻮﺍ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ
ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﻘْﺴِﻄِﻴﻦَ ) ، ﻭﻷﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻣﺮ
ﺃﺳﻤﺎﺀ ﺑﻨﺖ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﺃﻥ ﺗﺼﻞ ﺃﻣﻬﺎ ﺑﺎﻟﻤﺎﻝ ﻭﻫﻲ
ﻣﺸﺮﻛﺔ ﻓﻲ ﻭﻗﺖ ﺍﻟﻬﺪﻧﺔ " . ﺍﻧﺘﻬﻰ
இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் மூலமாக
திர்மிதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸை
திர்மிதீயிலே பதிவு செய்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் ஒரு
ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வெளியில் சென்று
விட்டு வீட்டுக்குள் வந்ததும் தமது வீட்டாரிடம் நமது
அண்டை வீட்டாரான யஹூதியின் வீட்டிற்கு
கொடுத்தனுப்புனீர்களா? என மூன்று முறை கேட்டு
விட்டு நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான்
கேட்டிருக்கின்றேன் “என்னிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
வந்து அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து
சொல்லிய வண்ணம் இருந்தார். எங்கே அண்டை
வீட்டாருக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள் என்று
கூறிவிடுவார்களோ எனும் எண்ணுமளவிற்கு”
என்று. ( நூல்: திர்மிதீ )
இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்: “மாற்று மதத்தவர்களுக்கும்,
திம்மீக்களுக்கும், கைதிகளுக்கும் உள்ஹிய்யா
இறைச்சியிலிருந்து உண்ணக்கொடுப்பது
ஆகுமாகும். மேலும், அது ஸதக்கா ததவ்வுஃ
உபரியான தர்ம வகையைச் சார்ந்ததாகும்.
( நூல்: அல் முஃக்னீ லி இமாமி இப்னு குதாமா,
பாகம்: 9, பக்கம்: 450 )
லஜ்னத் அத்தாயிமா எனும் ஃபத்வா நூலில்….
ﻟَﺎ ﻳَﻨْﻬَﺎﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻦِ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻟَﻢْ ﻳُﻘَﺎﺗِﻠُﻮﻛُﻢْ ﻓِﻲ ﺍﻟﺪِّﻳﻦِ ﻭَﻟَﻢْ
ﻳُﺨْﺮِﺟُﻮﻛُﻢْ ﻣِﻦْ ﺩِﻳَﺎﺭِﻛُﻢْ ﺃَﻥْ ﺗَﺒَﺮُّﻭﻫُﻢْ ﻭَﺗُﻘْﺴِﻄُﻮﺍ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ
ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﻘْﺴِﻄِﻴﻦَ (8 )
“தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில்
எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ –
உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற
வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும்,
நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத்
தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி
செலுத்துவோரை நேசிக்கின்றான்”. ( அல்குர்ஆன்:
60:8 )
அஸ்மா (ரலி) அவர்களின் தங்களது தாயார்
இணைவைப்பராய் இருக்கும் நிலையில் அவருக்கு
தாம் உதவியாய் இருக்கலாமா? என அண்ணலார் {ஸல்}
அவர்களிடம் வினவிய போது, நபி {ஸல்} அவர்கள் உலக
விவகாரங்களில் அவர்களோடு தாராளமாக நடந்து
கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
மேற்கூறிய இந்த இறைவசனத்தையும்,
நபிமொழியையும் ஆதாரமாக வைத்து,
மாற்றுமதத்தவர்கள் தம் அண்டை வீட்டுக்காரராகவோ,
ஏழையாகவோ, சொந்தமாகவோ இருந்தால்
அவர்களுக்கு வழங்கலாம். மேலும், அவர்களின் இதயம்
இந்த தீனின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்ற ஆதரவுடன்
உள்ஹிய்யா இறைச்சியை வழங்கலாம்” எனக்
கூறப்பட்டுள்ளது.
( நூல்: ஃபதாவா லஜ்னத் அத்தாயிமா, பாகம்:
11, பக்கம்: 424 )
குர்பானி தோலின் சட்டம் என்ன?
குர்பானி தோலை பதனிட்டு தானே
பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு
அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அல்லது ஏழைகளுக்கு
சதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது. அப்படி
விற்பனை செய்து விட்டால் அக்கிரயத்தை
ஏழைகளுக்கு சதகா செய்துவிடுவது கடமையாகும்.
அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக் கூடாது.
தோலை யாருக்கு கொடுப்பது கூடாது?
மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்து
பணிகளுக்காகவும், 2. அறுத்து உறிப்பவர், உதவியாளர்
ஆகியோருக்கு ஊதியமாகவும், 3. முஅத்தின், இமாம்
ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப்பது கூடாது.
மதரஸாவின் கட்டுமானப்பணி,
மராமத்துப்பணிக்கோ கொடுக்காமல் அங்கு பயிலும்
மாணவர்களுக்காக கொடுக்கலாம். பள்ளிவாசலில்
பைத்துல்மால் எனும் அமைப்பு இருந்து அதன் மூலம்
ஏழை, எளியவருக்கு உதவிகள் கொடுக்கப்படும்
என்றிருந்தால் கொடுக்கலாம்.
உள்ஹிய்யாவின் மூலம் அல்லாஹ்
எதிர்பார்ப்பது என்ன?
.
ﻟَﻦْ ﻳَﻨَﺎﻝَ ﺍﻟﻠَّﻪَ ﻟُﺤُﻮﻣُﻬَﺎ ﻭَﻟَﺎ ﺩِﻣَﺎﺅُﻫَﺎ ﻭَﻟَﻜِﻦْ ﻳَﻨَﺎﻟُﻪُ ﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻛَﺬَﻟِﻚَ
ﺳَﺨَّﺮَﻫَﺎ ﻟَﻜُﻢْ ﻟِﺘُﻜَﺒِّﺮُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻋَﻠَﻰ ﻣَﺎ ﻫَﺪَﺍﻛُﻢْ ﻭَﺑَﺸِّﺮِ ﺍﻟْﻤُﺤْﺴِﻨِﻴﻦَ
”குர்பானிப் பிராணியின் மாமிசங்களோ அதன்
உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை
என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை
அடையும்
”. (
அல்குர்ஆன்: 22:37 )
அல்லாஹ்வின் அச்சத்தோடும் அவனுக்காகவே
செய்யும் தூய உள்ளத்தோடும் உள்ஹிய்யா (குர்பானி)
கொடுக்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனம்
நமக்கு உணர்த்துகின்றது.
நம் வாழ்வில் எல்லா காரியங்களிலும்
இறையச்சத்தோடும், உளத்தூய்மையோடும் நடக்க
அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் பாளிப்பானாக!
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
நன்றி www.vellimedaiplus.blogspot.com
No comments:
Post a Comment