*இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹிமஹுல்லாஹ் அவர்களும், நாத்திகனும்.*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*நாத்திகன் : பரக்கத் என்று ஒன்றுமே இல்லை.*
*இப்றாஹீம் : நீர் நாயையும் ஆடுகளையும் பார்ததுண்டோ.*
*நாத்திகன் : ஆம் !*
*இப்றாஹீம் : அதிகம் குட்டி ஈன்பது எது ?*
*நாத்திகன் :நாய்நாய்7/8 குட்டிகளைப் போடும், ஆடுகள் கூடினால் 3 போடும்.*
*இப்ராஹீம் : உன்னைச் சுற்றி எவை கூடுதலாக உள்ளன ?*
*நாத்திகன் : ஆடுகளே !*
*இப்றாஹீம் : விருந்துபசரிக்க, உழ்ஹியா இவற்றிற்கு இதைத் தானே உபயோகிக்கிறோம்.?*
*நாத்திகன் : ஆம் !*
*இப்றாஹீம் : இதற்குத் தான் "பரகத்" என்பது.*
*நாத்திகன் : ஏன் நாய்களுக்கு இல்லாமல், ஆடுகளுக்கு மட்டும் பரகத்.?*
*இப்றாஹீம் : ஏனெனில், ஆடுகள் இரவின் ஆரம்பத்திலே உறங்கி, பஜ்ருக்கு முன் எழுந்து , றஹ்மத்துடைய நேரத்தை அடைவதால் , அதன் மீது பரகத் இறங்குகிறது.*
*ஆனால்...*
*நாய்கள் இரவு முழுவதும் குரைத்து விட்டு, பஜ்ர் நேரத்தை அடையும் போது கலைத்து தூங்கி , றஹ்மத்துடைய நேரம் தப்பிப்போவதால் , பரகத்தை இழந்து விடுகிறது.*
➖➖➖➖➖➖➖➖➖
*நாம் நமது களியாட்டங்கள் வைபவங்களில் இரவு விழித்து விட்டு, பஜ்ருடைய பரகத்தை அடையாமல் இருப்பதே பரகத் இன்மைக்கு காரணம்!*
No comments:
Post a Comment