ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 24 March 2017

மனித பிறப்பும் இறப்பும்

*🌹என்னை ஆச்சரியப்படுத்திய வசனங்கள்*🌹

*மனிதனே! *
*🔲🌹 நீ பிறக்கும்போது உன் தாயின் வயிற்றில் இருந்து உன்னை வெளியே கொண்டு வந்தவனை உனக்குத் தெரியாது.*

*🔳🌹 நீ இறக்கும்போது உன்னை கப்ருக்குள் கொண்டு போகிறவனையும் உனக்குத் தெரியாது.*

*மனிதனே!*
*🔲 🌹நீ பிறந்தபோது உன்னை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர்.*

*🔳 🌹நீ இறந்த பிறகும் உன்னை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள்.*

*மனிதனே!*
*🔲 🌹நீ பிறந்தபோது உன்னை வரவேற்று சந்தோஷம் அடைந்வர்களையும் உனக்குத் தெரியாது.*

*🔳 🌹நீ இறக்கும்போது உனக்காக கவலைப்பட்டு அழுபவர்களையும் உனக்குத் தெரியாது.*

*மனிதனே!*
*🔲 🌹நீ வாழ்ந்த உன் தாயின் கருவறையும் இருளானதாகவும் நெருக்கமானதாகவுமே இருந்தது.*

*🔳 🌹நீ வாழப்போகும் கப்ரறையும் இருளானதாகவும் நெருக்கமானதாகவுமே இருக்கும்.*

*மனிதனே!*
*🔲🌹 நீ பிறந்தபோது உன்னை துணியால்  சுற்றி மறைத்தனர்,*

*🔳🌹 நீ இறந்த பிறகும் உன்னை துணியால் சுற்றியே மறைப்பார்கள்.*

*மனிதனே!*
*🔲 🌹நீ பிறந்து பெரியவனான போது உன்னிடம் மக்கள் ஷஹாதத் கலிமா பற்றிக் கேட்டனர்.*

*🔳🌹 நீ மரணித்த பிறகு மலக்குகள் உன்னிடம் உனது நல்லமல்கள் பற்றி கேட்பார்கள்.*

*🔘🌹 உனது மறுஉலக வாழ்வுக்காக என்ன சேமிப்பு செய்திருக்கிறாய்?*

*☑🌹 அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்ற வார்த்தைகளைக் கொண்டு உன் ஆன்மாவிற்கு பயிற்சி கொடு.*

No comments:

Post a Comment