மாவீரன் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) (கி.பி. 1137-1193)
கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி ஹஜ்ரத் காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கி சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்கலும் சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்ல... இரண்டல்ல.... சுமார் 450 ஆண்டுகள் கடந்தன..!
11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்பை பயன்படுத்திய அவர்கள் தங்களுடைய 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவை போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழிந்தனர். சரியாக 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தை சரியாக பேணாததின் விழைவின் காரணாமாக 1095 ஆம் ஆண்டு நமது (முஸ்லிகளின்) முதல் கிப்லா அவர்களின் கைக்கு சென்றது.
முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமுகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர். இராக்கின் “சதாம் ஹுசைன்” பிறந்த அதே ஊரில் சரியாக கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்த்து அத்துடன் சீரியாவின் உயர்தரமான மதரஸாவில் மார்க்கக் கல்வியோடு, வரலாறு, சட்டம், மானுடவியல், அரபு மொழி என பல துறையில் அறிவோடு விளங்கியதன் விளைவாக சாதாரண வீரன் என்ற நிலையிலிருந்து இராணுவ தளபதி என்ற நிலைக்கு உயந்தியது. ஜெருசலேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வீரமும், விவேகமும், பொறுமையும் இவரை மீண்டும் தளபதியிலிருந்து எகிப்தின் கவர்னராக பதவி உயர்த்தியது. யார் அந்த மாவீரன்? “சுல்தான் சலாவுதீன் அய்யூபி”
பொறுப்புக்கு வந்த உடன் சூடான், ஈராக், எகிப்து, சிரியா உள்ளிட்ட பகுதிகளை ஒருக்கிணைத்து முஸ்லிகளை உச்சகட்டப் போருக்கு ஆயத்தம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்துடன் தங்கி இராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, ஜெருசலத்தின் வரலாறு, ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை மற்றும் ஷஹிதால் கிடைக்கும் அந்தஸ்தை பற்றியும் சொல்லி ஒரு வலுவான இராணுவ வீரர்களை உருவாக்கினார். சலாவுதீன் அவர்கள் மிகப் பெரிய போருக்கு தயாராகிறார் என்பதை தெரித்து கொண்ட ஜெருசலமின் அரசன் “லுசிக்ணன்” என்பவன் முந்திக் கொண்டு சிரியா மீது தாக்குதல் கொடுக்க தயாரானான்.
கி.பி. 1187 ஜுலை மாதம் 4ஆம் தேதி “டைபரியாஸ்” என்ற பகுதியில் இஸ்லாமிய இராணுவமும் லுசிக்ணன் இராணுவமும் மோதின. அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரன் சலாவுதீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. இச்செய்தி ஐரோப்பிய உலகை உலுக்கியது, போப் அர்பன் III என்ற மத பீடத்தின் தலைவர் உட்பட பலர் மாரடைப்பால் மாண்டனர். கி.பி 1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்கலுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாவுதீன் அய்யுபே செலுத்தி விட்டார். அது மட்டுமா அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நர்செயல்கள் தான் இவரை மாவீரன் சுல்தான் சலாவுதீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.
ஆனால் நன்றிகெட்ட ஐரோப்பா மீண்டும் படை திரட்டியது. பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் II தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது, வருகின்ற வழியில் வாழ்ந்த 3 ஆயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு சலாவுதீன் படையும் பதிலடி கொடுந்தது முன் வரிசையில் வந்த சிலுவை படையினர் தூக்கிலிடபட்டனர். இரண்டு படைகளும் கி.பி 1191 செப்டம்பரில் மோதிக்கொண்டுனர். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள். போரின் இறுதியாக ரிச்சர்டின் சிலுவை யுத்த படை பின்வாங்கி சென்றது. ஜெருசலமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் முழுவதுமாக முஸ்லிம்களின் கைக்குள் வந்தது.
ரீச்சர் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர், குதிரை இல்லாமல் இருக்கிறாரா என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார். இப்படி பட்ட உயரிய பண்புகள் கொண்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் கி.பி. 1193 ஆம் ஆண்டு மரணமடைதார். அந்நிலையில் அவர்விட்டு சென்ற அவருடைய சொத்து, 1 தங்க நாணயமும், 47 வெள்ளி நானயமும் தான்.
மீண்டும் ஜெருசலத்தை கைபற்ற வேண்டும் என்று சிலுவை யுத்தகாரர்களின் வாரிசுகள் காத்துகடன்தனர். ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள். 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர் இதனை பயன்படுத்து ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றிவிட்டனர்.
கி.பி. 1917 இல் சிரியா சென்ற பிரிட்டிஸ் படை தளபதி எட்மன்ட் ஆலன் நேராக சுல்தான் சலாவுதீன் அய்யூபி அடக்கஸ்தலம் சென்று: “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned, My Presence Here Consecrate The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்த என்னுடைய வருகையின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது.
யா அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்! பைத்துல் முகத்தஸ் மீட்கபட்டு இஸ்லாத்தின் மடியில் தவழ வேண்டும்.. இன்ஷாஅல்லாஹ் ...! ஆமின்...
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் சுல்தான் சலாஹுத்தீன் அய்யுபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அண்ணவர்களின் தந்தையின் ஆத்மீக குருவாக திகழ்ந்தவர்கள் கௌஸுல் ஆலம் அண்ணவர்கள்...
தாம் சிறுவயதில் கௌஸுல் ஆலம் அண்ணவர்களிடத்தில் தந்தையவர்கள் அழைத்துச்சென்ற போது கௌஸ் நாயகம் சுல்தான் சலாஹுத்தீன் அய்யுபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அண்ணவர்களின் கழுத்து பகுதியில் முத்தமிட்டார்கள்...
அதன் பிறகு வரலாறுகளை புரட்டினால் தெரியும் ஒரு முறைகூட எதிரிகளின் வாள் அய்யுபி அண்ணவர்களின் கழுத்தை தீண்டியது இல்லை...
#யா_கௌஸ்...
*அல்மதத் யா ஷைகு முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ ஷைஅன் லில்லாஹ்!*சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மரணிக்கும் போது, ஒருவர் அவரிடத்தில் வந்து,
"நீங்கள் இஸ்லாத்துக்காக எத்துனையோ #போர்களில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஆனால், ஒரு யுத்தத்திலாவது ஷஹீதாவில்லையே!" என்று கூறினார்கள். அதற்கு சுல்தான் அவர்கள்,
"நான் எனது வாழ்க்கை முழுவதும் ஷஹீதாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், எனது எதிரியின் வாள் எனது #கழுத்தை தொடுவதில்லை" என்றார். காரணம் வினவிய போது சுல்தான் அவர்கள்,
"எனது தந்தை சிறுவயதில் என்னை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (குத்திஸ ஸிர்ருஹ்) அவர்களிடத்தில் கொண்டு சென்றார்கள். அப்போது குதுபு நாயகம் தனது #கைகளை எனது கழுத்தில் வைத்தார்கள். குதுபு நாயகத்தின் முபாரக்கான கரங்கள் பட்ட எனது கழுத்தில் எப்படி எதிரியின் வாள் படும்?" என்று கூறினார்கள்.
அல் மதத் யா ஷெய்ஹனா...
எகிப்தில் காதிரிய்யா தரீக்கத்தின் ஸாவியாக்களை முதலில் நிறுவியவர் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்,
''ஷைஅன் லில்லாஹ் யா ஷைஹ் அப்துல் காதிர் ஜீலானி'' என்று தனது ஷெய்ஹான கௌதுல் அஃழத்தின் நாமத்தை தனது வாளில் பதித்திருந்தார்கள் அந்த #வாள் இன்றும் Topkapi நூதனசாலையில் உள்ளது.
(https://seekerofthesacredknowledge.wordpress.com/2013/04/24/sultan-salahuddin-al-ayubi-a-miracle-of-shaykh-abdul-qadir-al-jilani-from-baghdad/
🌹ஹள்ரத் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆன்மீக சீடர் பைத்துல் முகத்திஸை கிறிஸ்தவர்களிடமிருந்து வென்றெடுத்த மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹிமஹுல்லாஹு பற்றிய முக்கிய தகவல்கள் அடங்கிய இந்த லிங்க்கை பார்க்கவும்.)
No comments:
Post a Comment