ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 13 August 2016

மரணம்-ஒரு இழப்பல்ல

!  قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ  நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர் களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும். (அல் குர்ஆன் 62:8)  இன்பங்களை முறித்துவிடும்,உறவுகளை பிரித்து விடும்,ஆசைகளை அறுத்துவிடும்.  மாளிகைகள் இதற்கு தடையில்லை.மன்னர்களும் இதற்கு தடையில்லை.மருத்துவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.  யாருக்கு முன்னும் மண்டியிட்டு பழக்கமில்லை,  உலக வரலாற்றில் கருத்துவேறுபாடுகளை தாண்டி ஒரு விஷயம் இருக்குமானால் அது மரணத்திற்கு மட்டும் சொந்தமானது.ஏனெனில் இறைவனை மறுக்கும் மதங்கள் உண்டு,மறுமையை மறுக்கும் மதங்களும் உண்டு,ஆனால் மரணத்தை மறுத்துப் பேசும் தைரியம் இதுவரை யாருக்கும் கிடையாது.  உலகின் எல்லா ஆராய்ச்சிக்களும் தோற்றுப்போகும் இடமாகும்.  மரணத்தின் சூட்சுமத்தை அறிந்துகொள்ளவேண்டுமானால் மனிதனுக்கு மரணத்தை தருகிற ரூஹின் இரகசியத்தை தெரிந்தாக வேண்டும்.  மரணம் என்றால் என்ன?  خروج الروح من الجسدஉடலை விட்டும் ரூஹ் வெளியேறுவது தான் மரணமாகும்.  அப்படியானால் அழிவு உடலுக்குத்தானே தவிர ரூஹுக்கு அல்ல.                                                          ஆன்மாவைப்பற்றிய அறிவையும் ஆராய்ச்சியையும் நம் நலன் கருதி இஸ்லாம் மறைத்துவைத்திருக்கிறது.  وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا  (நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. (அல் குர்ஆன் 17:85)  ரூஹை பற்றி எத்தனையோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.இன்னும் தீர்வு எட்டவில்லை.கிடைக்க போவது மில்லை.  மனித உடலில் இன்ப துன்பங்களை அனுபவிப்பது அந்த ரூஹ் தான்.உடலில் ரூஹ் இருக்கும் வரை தான் அப்துல் காதிர்,அப்துர் ரஹ்மான்.அது பிரிந்து விட்டால் மைய்யித்து தான்.ரூஹை பிரிந்த உடல் வெற்றுடலாகிப்போகிறது.  உடலுக்கு அழிவு உண்டு,ஆனால் ரூஹுக்கு அழிவில்லை.  கப்ரில் உடல் அழியலாம்,நரகில் உடல் அழியலாம்.ஆன்மா அழியாது.இது பற்றி அல்குர்ஆன் -  كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ  அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்.என்று கூறுகிறது. (அல் குர்ஆன் 4:57) தோள்களும் சதைகளும் மாற்றப்படலாம்,ரூஹ் மாற்றப்படாது.ஏனென்றால் ரூஹுக்கு அழிவு கிடையாது.  எட்டு பொருட்களுக்கு அழிவு கிடையாது என்று இமாம் சுயூதி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்  المخلّدات أو المخلوقات التي لا تفنى بمشيئة الله طبعا , فهي التي نظمها الإمام جلال الدّين السَّيوطي فقال ثمانية حُكْمُ البقاء يعُمُّها ********* من الخلق والباقون في حيِّز العدمْ هي العرش والكرسي نار وجنة *** وعجب وأرواح كذا اللوح والقلم  1.அர்ஷ் 2.குர்ஸ் 3.நரகம் 4.சொர்க்கம் 5.முதுகுஎழும்பு 6.ஆன்மாக்கள் 7.விதி ஏடு 8.கலம்  இதை இமாம் நவவி ரஹ் அவர்களும் உறுதிபடுத்துகிறார்கள். يقول النووي : ثمانية حكم البقاء يعمها من الخلق والباقون في حيز العدم هي العرش والكرسي نار وجنة وعجب وأرواح كذا اللوح والقلم وهذه الأشياء باقية بإبقاء الله لها شرح كتاب السنة  படைப்பாளனின் பலத்தையும்,படைப்புக்களின் பலகீனத்  தையும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் மரணத்தை நினைவு கூர்வது  ஈமானை வலுப்படுத்தும்.  ஒரு முஸ்லிமை பொருத்தவரையில் மவ்த் இழப்பல்ல,அது அல்லாஹ்வை சந்திப்பதற்கான வழித்தடமாகும். وكتب خالد بن الوليد رَضِيَ اللَّهُ عَنْهُ إلى أهل فارس : والذي لا إله غيره لأبعثنَّ إليكم قوماً يحبُّون الموت كما تحبُّون أنتم الحياة   ذكر ابن جرير الطبري في تاريخه وابن كثير في البداية والنهاية  படைத்தளபதி காலித் இப்னு வலீத் ரலி அவர்கள் பாரசீகர்களுக்கு எழுதிய கடிதத்தில்-நீங்கள் வாழ்வை நேசிப்பது போல மரணத்தி நேசிக்கும் ஒரு கூட்டத்தை அனுப்பி வைக்கிறேன் என்று எழுதினார்கள். ஒரு முஸ்லிமிடம் மட்டும் தான் தன்னை பற்றிய தெளிவான பயோடேட்டா உண்டு.  நான் யார்?நான் எங்கிருந்து வந்தேன்?எங்கு செல்வேன்?நான் என்ன செய்ய வேண்டும்? மரணம் வரை எல்லா மதங்களும் பேசுகிறது,அதை தாண்டி என்ன நடக்கும்?மொளனமே பதிலாக கிடைக்கிறது.  மரணம் மிகச்சிறந்த உபதேசி.அத்துமீறி செல்லும் மனித வாழ்கைக்கான கடிவாளமாகும். வாழும் காலங்கள் தான் வாழ்வின் முடிவை தீர்மானிக்கிறது. வாழ்கையின் முடிவே அல்லாஹ்விடம் அங்கீகாரத்தை பெற்றுத்தருகிறது. நல்ல மரணத்தின் அடையாளங்கள்.  .அல்லாஹ்வின் தொடர்பில் இருக்கும் நிலையில் மரணம் வருவது.  عن أنس بن مالك رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا أراد الله بعبده خيراً استعمله ) قالوا : كيف يستعمله ؟ قال : ( يوفقه لعمل صالح قبل موته ) رواه الإمام أحمد (11625) والترمذي (2142) وصححه الألباني في السلسلة الصحيحة 1334. அல்லாஹுத்தஆலா ஒரு அடியானுக்கு நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான் –என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.  அப்போது ஸஹாபாக்கள்-அல்லாஹ் எப்படி பயன் படுத்து வான்?-என்று விளக்கம் கேட்டபோது,அவரின் மரணத்திற்கு முன் நல்லமல் செய்யும் பாக்கியத்தை வழங்குவான் –என்று பதில் கூறினார்கள். .மரண நேரத்தில் கலிமா சொல்லும் வாய்ப்பு அமைதல்.  من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة) رواه أبو داوود 3116 ، وصححه الألباني في صحيح أبي داوود 2673 .  எவரின் இறுதி வார்த்தை கலிமாவாகுமோ அவர் சுவனத்தில் நுழைவார் –என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.  و يروى عن عبد الله بن شبرمة رحمه الله أنه قال : دخلت مع عامر الشعبي على مريض نعوده فوجدناه لماً ، و رجل يلقنه الشهادة ويقول له : لا إله إلا الله , وهو يكثر عليه , فقال له الشعبي . ارفق به ، فكلم المريض , وقال : إن تلقني أو لا تلقني . فإني لا أدعها , ثم قرأ قوله تعالى  وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها  இமாம் ஷுஃபி ரஹ் அவர்கள் வபாத் நேரத்தில் அருகில் இருந்த ஒருவர் அவருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து கொண்டே இருந்தார் – அப்போது இமாம் ஷுஃபி அவர்கள் –தோழரே!நோயாளியிடம் மிருதுவாக சொல்லிக்கொடுங்கள்.நீங்கள் சொல்லிக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அந்த கலிமாவை நான் விடமாட்டேன்.-என்று கூறி, وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள்.(அல் குர்ஆன் 48:36) என்ற வசனத்தை ஓதினார்கள். .அல்லாஹ்வப்பற்றிய நல்ல எண்ணத்துடன் மரணமடைதல்.  أخرج الامام مسلم وبخاري رحمهما الله عن جابر بن عبدالله رضي الله عنهما أنه قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول قبل وفاته بثلاثة أيام : لا يموتن أحدكم إلا و هو يحسن الظن بالله  உங்களில் யாரும் அல்லாஹ்வைப்பற்றி நல்ல எண்ணம் இல்லாமல் மரணமாக வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் தங்களின் வபாத்திற்கு மூன்று நாள் முன்பு கூறினார்கள் என நபித்தோழர் ஜாபிர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.  அல்லாஹ்வின் சவால்:  قُلْ فَادْرَءُوا عَنْ أَنفُسِكُمُ الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ  (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று)  கூறுகிறான். (அல் குர்ஆன் 3:168)  மரணம் –தடுக்கமுடியாது-தள்ளிப்போடவும் முடியாது-ஒரு முஸ்லிம் அதை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.      அல்லாஹ் கபூல் செய்வானாக!

No comments:

Post a Comment