இன்றைய சிந்தனை அபூ அமீன்: 🕌🌟🕌🌟🕌🌟🕌🌟🕌🌟🕌🌟🕌 அஸ்ஸலாமு அலைக்கும் 225/7/2016 🔹 திங்கள் فكرة اليوم 🔸இன்றைய சிந்தனை இஸ்லாமிய அறிவகம் ................................................................ ➡1⃣8⃣1⃣⬅ 【விட்டுப் பிடிக்கும் இறைவன்】 عن محمد بن كعب القرظي ، قال : لما قال فرعون لقومه : ما علمت لكم من إله غيري (القصص-٣٨) نشر جبريل أجنحة العذاب غضبا لله عز وجل . فأوحى الله عز وجل إليه أن يا جبريل ، إنما يعجل بالعقوبة من يخاف الفوت . قال : فأمهله عز وجل بعد هذه المقالة أربعين عاما ، حتى قال : أنا ربكم الأعلى(النازعات -٢٤) فذلك قوله عز وجل : فأخذه الله نكال الآخرة والأولى (النازعات؟- ٢٥) : قوله الأول ، وقوله الآخر . ثم أغرقه الله عز وجل وجنوده . (الكتاب: موسوعة ابن ابي الدنيا الجزء الرابع صفحة -١٨٢) முஹம்மது பின் கஅப் அல்குரழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : பிர்அவ்ன் பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறொரு இறைவன் இருப்பதாக நான் அறியவில்லை.(அல்கஸஸ் வசனம் -38) என்று கூறியபோது ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) கண்ணியமும் ,மேன்மையும் மிக்க அல்லாஹ்விற்காக கோபமடைந்து தண்டிக்கும் இறக்கைகளை விரித்தார்கள். உடனே அல்லாஹ் ஜிப்ரீல் அவர்களுக்கு வஹீ (பின்வருமாறு) அறிவித்தான் " ஜிப்ரீலே எவர் ( தண்டிக்கும் )வாய்ப்பு தவறிவிடுவதை அஞ்சுவாரோ அவர் தான் தண்டிப்பதற்கு அவசரம் காட்டுவார். முஹம்மது பின் கஅப் அல்குரழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : இந்த வார்த்தையை பிர்அவ்ன் கூறியபின் நாற்பது ஆண்டுகள் அல்லாஹ் அவனை விட்டு வைத்தான். இறுதியில் பிர்அவ்ன் "நானே உங்களின் மாபெரும் ரப்பாகும் "( சூரா- அந்நாஜிஆத் வசனம்: 24) என்று கூறினான். (பின்பு அல்லாஹ் அவனை தண்டித்தான்) அது தான் ( பின் வரும்) அல்லாஹ்வின் இந்த வார்த்தையாகும். فأخذه الله نكال الآخرة والاولى ( சூரா- அந்நாஜிஆத் வசனம் : 25) முன்பும், பின்பும் (செய்த குற்றத்திற்கு) தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான். முன்பு செய்த குற்றம் முதலில் அவன் கூறிய (என்னை அன்றி கடவுள் இல்லை என்ற) வார்த்தையாகும். பின்பு செய்த குற்றம் (நானே மாபெரும் ரப்பு) என்ற வார்த்தையாகும். பிறகு கண்ணியமும், மேன்மையும் மிக்க அல்லாஹ் அவனையும் அவனுடைய படையினரையும் மூழ்கடித்தான். ................................................... இன்றைய சிந்தனை முதல் பாகம் வெளியாகிவிட்டது விலை 20₹ தொடர்புக்கு - 9487733497 .................................................... தங்கள் துஆவை நாடி... மௌளவி அபூஅமீன். நீடூர் 🕌🌟🕌🌟🕌🌟🕌🌟🕌🌟🕌🌟🕌
No comments:
Post a Comment