பாதுகாப்பு வேண்டுமா ? ஹஜ்ரத் கஅப் (ரலி) கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் கண்களிலிருந்து தன்னை மறைத்து கொள்ள பின்வரும் மூன்று ஆயத்துகளை ஓதுவார்கள். إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا (سورة الكهف 57) أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ (سورة النحل 108) أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً (سورة الجاثية 23) இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேலே கூறப்பட்ட மூன்று ஆயத்களுடன் சேர்த்து சூரா யாசீனின் ஆரம்ப ஒன்பது ஆயத்களையும் ஓத வேண்டும், ஏனெனில் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய நாடிய போது தன் வீட்டை சூழ்ந்திருந்த எதிரிகளிடமிருந்து மறைய சூரா யாசீனின் ஆரம்ப ஒன்பது ஆயத்துகளை ஓதினார்கள். எதிரிகளின் தலையில் மண்ணை அள்ளி போட்டவர்களாக அவர்களுக்கு மத்தியிலிருந்தே வெளியேறினார்கள். يس (1) وَالْقُرْآنِ الْحَكِيمِ (2) إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ (3) عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (4) تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ (5) لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ (6) لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ (7) إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ (8) وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ (9) (எனவே 3 + 9 மொத்தம் இந்த 12 ஆயத்துகளை ஓதிக் கொள்ள வேண்டும், மனனம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்) ஆதாரம் : தப்ஸீருல் குர்துபியில் وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا (நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களுக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம். (அல்குர்ஆன் : 17:45) என்ற வசனத்தின் விளக்கவுரையை பார்க்கவும்.
No comments:
Post a Comment