ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு
Sunday, 10 April 2016
உழைப்பே உயர்வு ஷகீகுல் பல்கி
ஒரு முறை சூபி ஞானி இமாம் ஷகீக் அல் - பல்கி அவர்கள் வியாபார நோக்கமாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். பயணிப்பதற்கு முன்னர் தனது நண்பர் இமாம் இப்ராஹிம் இப்னு அத்ஹமை கண்டு பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இவரது இந்த பயணம் நீண்ட நாள் பயணமாக அமைய இருந்தது. ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவர் ஊர் திரும்பினார். அவரை பள்ளியில் சந்தித்த இப்ராஹிம் இப்னு அத்ஹம் ஆச்சரியப்பட்டு, "என்ன நடந்தது? ஏன் அவசரமாக ஊர் திரும்பினீர்கள்?" என்று வினவினார். அதற்கு ஷகீக் அல் - பல்கி, "நான் எனது பயணத்தின் பொழுது இடையில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தேன். அது பாழடைந்த ஒரு இடமாக இருந்தது. அங்கே நான் குருடான, முடமான ஒரு பறவையை கண்டேன். கண் பார்வையற்ற, பறக்கவோ அசையவோ முடியாத அந்த பறவை இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் எப்படி உயிர் வாழ்கிறது, என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். சற்று நேரத்தின் பின் அங்கு மற்றொரு பறவை வந்தது. அது இந்த பறவைக்கு உணவை கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு ஒரு நாளைக்கு பல தடவைகள் அது இந்த பறவைக்கு போதுமான உணவை கொண்டு வந்து கொடுப்பதை நான் அவதானித்தேன். இதன் மூலம் இந்த இடத்தில் இந்த பறவைக்கு உணவளிக்க முடியுமாக இருப்பவன் எனக்கும் உணவளிக்கும் சக்தியை பெற்றிருக்கிறான் என்பதை நான் உணர்ந்தேன். எனவே உழைப்பை நோக்காக கொண்ட எனது பயணத்தை இடைநிறுத்தி உடனே வீடு திரும்பி விட்டேன் "என்றார். இதனை கேட்ட இப்ராஹிம் இப்னு அத்ஹம்," ஷகீகே, உமது இந்த நிலைப்பாடு எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பிறரின் தயவில் வாழ்கின்ற அந்த குருடான, முடமான பறவையாக நீர் இருக்க விரும்புகிறீரா? ஏன் தனக்காகவும் குருடர்களாகவும் முடவர்களாகவும் இருக்கும் பிறருக்காகவும் உழைக்கும் அடுத்த பறவையாக நீர் இருக்கக் கூடாது? (கொடுக்கும்) உயர்ந்த கரம் (வாங்கும்) தாழ்ந்த கரத்தை விட சிறந்தது என்பதை நீர் அறிய மாட்டீரா? "என்று வினவினார். இதனை கேட்ட ஷகீக், இப்ராஹிம் இப்னு அத்ஹமின் கரங்களில் முத்தமிட்டு," அபூஇஸ்ஹாக்கே நீர் எமது ஆசானல்லவா? "என்று கூறி விட்டு மீண்டும் தனது தொழிலை மேற்கொள்வதற்காக கிளம்பினார்சுவனத்தின் தலைவியான அன்னை..,, ஃபாத்திமா (ரலியல்லாஹூஅன்ஹா) அறிவிக்கின்றார்கள்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: "அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்." (பைஹகீ) ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள். அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்..பாருங்கள்! அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்: "படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:"வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?" பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:"உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்." (அஹ்மத்உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். புகாரி: 1470, 1471. நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி: 2071. ”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார். புகாரி: 2072, 2073. உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது ” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புகாரி: 1474, 1475.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment