ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 4 November 2022

பெண்ணடிமைத்தமும் காப்பியங்களும்

*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். | இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.* 
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. 
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். 
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். 
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*. 

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. 
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, 
ஆபாசமாக மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். 
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. 
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, 
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று, 
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். 

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது. 

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 

*சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. 
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. 

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது. 

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.

_நன்றி.  

         (படித்ததில் பிடித்தது )

Tuesday, 24 May 2022

நபிமகளார் ஜைனப்- அபுல்ஆஸ் (ரலி)

நெகிழ்வூட்டகூடிய அறிவுரை! 

மக்காவில் அபுல் ஆஸ் என்ற ஒரு மனிதர் இருந்தார். இவர் யார் என்றால் நபி ஸல் அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்களின் உடன்பிறந்த சகோதரியின் மகன் தான் இந்த அபுல்ஆஸ்.

ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, நம்மை நம்பக்கூடிய வர்களிடத்தில்  நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த வரலாறு ஒரு மிகப்பெரிய சான்று. 

கதீஜா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் 6 குழந்தைகள் பிறந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. காசிம், அப்துல்லாஹ் இரண்டும் பிறந்தவுடனே மரணித்து விட்டது .

நான்கு பெண் குழந்தைகள் பிறந்தது. ஸைனப்,ருகையா,
உம்மு குல்தும், பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு.

பாத்திமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கணவர் அலி (ரழி) அவர்கள். ருகையா,உம்மு குல்தும் இருவரின் கணவர் உஸ்மான் (ரழி) அவர்கள். ருகையா மரணித்தவுடன் உம்மு குல்துமை மணம் முடித்து கொடுத்தார்கள்.

இந்த ஸைனப் இருக்கிறார்கள் அல்லவா! அவர்கள் தான் நபிக்கு பிறந்த மூத்த பெண் குழந்தை. அப்படியே கதீஜா (ரழி) அவர்களை மாதிரியே இருப்பார்கள். தோற்றங்கள் பண்புகள் அப்படியே கதீஜா (ரழி) அவர்கள்தான் என்று சொல்லப்படும்.

 ஸைனப் (ரழி) அவர்களை 
 தான் நபி ஸல் அவர்கள் முதலில் திருமணம் முடிந்து கொடுத்தார்கள். இஸ்லாம் பரவுவதற்கு முன்னர் தான் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பே மணம் முடித்து கொடுத்து விட்டார்கள். 

ஸைனப் (ரழி) அவர்கள் திருமண வயதை அடைந்த போது,  கணவவனும் மனைவியும் ஆலோசனை செய்கின்றார்கள்.  கதீஜா (ரழி) அவர்கள் எடுத்த உடனேயே சொன்னார்கள்  என்னுடைய சகோதரியின் மகன்  அபுல் ஆஸ்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று. உடனே நபி அவர்களும் சம்மதிக்கிறார்கள்  .

ஸைனப் (ரழி) அவர்களுக்கும் அபுல் ஆஸ்கும் திருமணம் முடித்து கொடுக்கப்படுகிறது. இரண்டு பேரும் வாழ்கின்றார்கள். நபி அவர்கள் தன்னை நபியாக பிரகடனப்படுத்தி படுத்திய போது
ஆரம்பத்தில் ருகையா ,உம்மு குல்தும் இரண்டு பேருக்கும் அபூலஹப்பின் இரு மகன்களுக்கு மணம் முடித்து கொடுத்து இருந்தார்கள்.
நபி (ஸல்)அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு.

 "தப்பத்யதா" என்ற சூரா இறங்கியவுடன் அபூலஹப் தனது  இரண்டு மகன்களை கூப்பிட்டு "உன் மாமனார் என்னை சபித்து கொண்டு இருக்கிறார் வேதம் என்ற பெயரில் இப்படி என்னை சபித்து கொண்டு இருக்கிறார். அவர் வீட்டு பிள்ளைகளை நாம் வைத்து இருக்க கூடாது. இன்னைக்கே அந்த இரண்டு பிள்ளைகளையும் விவாகரத்து செய்து விடு" என்பதாக அபூலகப் சொல்லிவிட்டார். உடனே ருகையா, உம்மு குல்தும் இரண்டு பேரையும் விவாகரத்து செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
சின்ன பிள்ளைகள் திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களி நடந்தவை.

இப்போது ! அபுல் ஆஸ் இருக்கிறார். மூத்த மகளை திருமணம் முடித்தவர். அவரும் இறை மறுப்பாளர்களின் மிகப்பெரிய தலைவர். 

 இப்போது ஒட்டுமொத்த மக்காவாசிகளின் மிகப்பெரும் தலைவர்கள் அபுல் ஆஸ் அவர்களை சந்தித்து சொல்கிறார்கள் " இதோ பார் அபுல் ஆஸ்!  அபூலகப் எவ்வளவு அழகாக செயலை நகர்த்தி இருக்கின்றார் முஹம்மதுக்கு எதிராக. அபுல் ஆஸ் நீங்களும் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும்" என்று எல்லா மக்காவுடைய தலைவர்களும் சொல்கிறார்கள். 

அபுல் ஆஸ் சொன்னார் "என்னுடைய மனைவியை எந்த கொள்கைக்காகவும் பிரிய மாட்டேன். அவள் கொள்கை அவளோடு இருக்கட்டும். என் கொள்கை என்னோடு இருக்கட்டும்." ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் பாருங்கள்! அவர் இறை மறுப்பாளர். அவர் சொன்னார் "அவளினுடைய கொள்கை என்னோடு வாழ்வதற்கு தடையாக இல்லை.  ஒரு போதும் என் நேசமானவளை பிரிய மாட்டேன்" என்று. நபி அவர்களுக்கு இந்த செய்தியை சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி. காரணம் இரண்டு மகள்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ஸைனபும் வந்துவிட்டால் என்ன ஆகும் சூழல்.
பாத்திமா சின்ன பிள்ளை.

நபி ஸல் அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் கூட்டி கொண்டு சென்றார்கள். ஸைனப் இடம் வந்து கேட்ட போது நான் எனது கணவரோடு தான் இருப்பேன். வர மாட்டேன். என்று சொல்லி விட்டார்கள்.எப்படியாயினும் என் கணவரை நான் மீட்டு கொண்டு தான் வருவேன் என்றார்கள் . நபி ஸல் அவர்கள் ஸைனப் (ரழி) அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக அனுமதி கொடுத்தார்கள்.

 எவ்வளவு பாசம்! நாம் எத்தனை காதல் காவியங்களை  படித்து இருப்போம். வரலாற்றின் முடிவில் இதற்கு நிகரான ஒரு காதல் காவியத்தை எங்கும் பார்க்க முடியாது .

ஸைனப் அவர்களும் திருத்தி திருத்தி பார்க்கிறார்கள். அபுல் ஆஸிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வீரர், கதீஜா (ரழி) அவர்களின் வளர்ப்பு.  ரொம்ப நல்லவர். ஆனால் இஸ்லாத்தின் மீது நேசம் வந்ததே கிடையாது. எவ்வளவோ முயன்றும் பார்க்கிறார்கள் ஸைனப். அபுல் ஆஸ் சொல்கிறார். உன் கொள்கையில் நீ இரு.  என் கொள்கை நான் இருக்கிறேன் என்று.
மார்க்கமும் அன்று தடை செய்யவில்லை.

 மதீனாவிற்கு வந்த பிறகு தான் பத்ர் உடைய யுத்தத்திற்கு பிறகு தான் இறை நம்பிக்கையாளர் இறை மறுப்பாளரோடு சேர்ந்து வாழ்வது தடை செய்யப்பட்டது . பத்ர் யுத்தத்திற்கு முதல் வரை இறை மறுப்பாளரோடு சேர்ந்து வாழ்வது தடை செய்யப்பட்டவில்லை.

அப்துல் ரஹ்மான்பின் அவ்ப் (ரழி) அவர்களின் மனைவி இறை மறுப்பாளராக இருப்பாங்க.
 இன்னும் சில நபித்தோழர்களின் மனைவிமார்கள் இறை மறுப்பாளராக இருந்தார்கள்.

ஆரம்பத்தில் அல்லாஹ் தடை செய்யவில்லை. அதனால் ஸைனப் (ரழி) அவர்கள் சொல்லிட்டார்கள் நான் எனது கணவரோடு தான் இருப்பேன் என்பதாக. அவர் எங்க வாராரோ அங்கே தான்.
 இன்னும் எந்த அளவுக்கு என்றால்! வியாபாரம் செய்ய சென்றாலும் ஸைனப் (ரழி) அவர்களையும் கூட்டி கொண்டு செல்வார்களாம். அபுல் ஆஸை பிரியவே மாட்டார்களாம்.  அன்றைய அரபுகள் அனைவரும் பலதார திருமணம் முடித்தவர்கள் . 

ரஸூலுல்லாஹ், அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) எல்லாரும் பலதார திருமணம் அலி (ரழி) அவர்கள் உட்பட.... அனால் இறை மறுப்பாளராக இருக்ககூடிய நேரத்திலும் அபுல் ஆஸ் வேறு  திருமணம் முடித்தது கிடையாது . எல்லோரும் சென்று கேட்பார்களாம்.  ஸைனப் எனக்கான உலகம்.

 அன்றைய உன்னத கலாச்சாரம் பலதார திருமணம். ஆனாலும் அபுல் ஆஸ் ஸைனபை விட்டு விட்டு இனி ஒரு பெண்ணை மணந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

பத்ர் யுத்தம் நபி இந்த தரப்பு அபுல் ஆஸ் எதிர் தரப்பினரோடு  வாளோடு நின்று கொண்டு இருக்கிறார். மாமனார் முஸ்லிம்களின் தளபதி. மருமகன்  இறை மறுப்பாளர்களினுடைய கூட்டத்தில் நிற்கிறார். மக்காவில் பெரிய நிர்ப்பந்தம். பத்ர் யுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதாக சட்டம் போட்டுவிட்டார்கள்.  அபூஜஹில் கஃபாவில் எழுதி ஒட்டிவிட்டான்.  வேறு வழி இல்லாமல் அபுல் ஆஸும் வந்து விட்டார். யுத்தம் முடிவுக்கு வருகிறது. அபுல் ஆஸை கைதியாக சங்கிலியால் கட்டி ரஸூலுல்லாஹ்வுக்கு முன்னால் கொண்டு நிப்பாட்டியாச்சி. ஒரு மாமனாரால் எப்படி அதுவும் அபுல் ஆஸை போன்ற உன்னதமானவர்களை! ஆனாலும் சட்டம் என்பது சமமானது அல்லவா!  

ஒட்டுமொத்த கைதிகளும் சலுகை கொடுக்கப்படடது.  உங்களுடைய பிணை தொகையை கொடுத்து விட்டு விடுதலையாகி கொள்ளுங்கள் என்று. ஒரு தொகையை நபி அவர்கள் நிர்னைய செய்தார்கள்.

 அபுல் ஆஸ் இங்கு இருக்கின்றார். ஸைனப் அங்கு இருக்கிறார்.   உடனே தன் கணவரின் செய்தியை கேள்விப்பட்டு அவரை  மீட்பதற்காக ஸைனப் அவர்கள் தன் கழுத்தில் இருந்த வைர மாலையை  கழட்டி ஒருவர் கையில் கொடுத்து அனுப்பி எனது தந்தையிடம் கொடுத்து "என் கணவரை மீட்பதற்காக  ஸைனப் கொடுக்க கூடிய வைர மாலை இது" என்று சொல்லுங்கள் .

ஸைனப் அவர்கள் கொடுத்த மாலையை  நபி ஸல் அவர்களின் கையில் வந்தது தான் தாமதம். நபி (ஸல்) அவர்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள். தேம்பித்தேம்பி அழுகிறார்கள். மைதானத்தில் நின்று கொண்டு எல்லாரும் பார்க்கிறார்கள். எதிரிகளும் பார்க்கிறார்கள். எல்லாரும் பார்க்கிறார்கள். ஏன் ரஸூலுல்லாஹ் அழுகிறீர்கள் ? என்று கேட்டதற்கு " இந்த மாலை எனக்கு பிறந்த முதல் குழந்தை ஸைனபிற்கு முதல் இரவுக்காக எனது மனைவி அழகு படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது கதீஜா (ரழி) அவர்களின் தனது கழுத்தில் இருந்த மாலையை கலட்டி என்னுடைய மகளுக்காக போட்டார்கள். அவ்வளவு சீக்கிரம் அந்த மாலையை ஸைனப் கலட்டியது கிடையாது.  அந்த மாலை என்னுடைய கையில் இருக்கிறது. இந்த மாலைக்கு சொந்தக்காரி மண்ணுக்கு அடியில் அல்லவா வாழ்கின்றாள்.  மனைவியை நினைத்து அழுகிறாங்க. சமாதானமான பிறகு அபுல் ஆஸை போங்க உங்களிடம் இருந்து வாங்கிவிட்டோம் .

ரஸூலுல்லாஹ்விற்கு ஒரு ஆசை. நபித்தோழர்கள் எல்லோரையும் கூப்பிட்டு நீங்க சம்மதித்தால் இந்த மாலையை ஸைனபிடம் கொடுத்து விடுவதற்கு. நீங்க சம்மதிப்பீர்களா  என்று. நபி அவர்கள் தான் தளபதி. அவர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் சொன்னார்கள்  கொடுத்து அனுப்புங்கள் என்று. 

அபுல் ஆஸ் கையில் கொடுத்து விட்டு நபி சொன்னார்கள். இதற்கு பிறகு என் மகள் கூட நீங்கள் வாழ கூடாது. நீங்க மக்காவுக்கு சென்ற பிறகு நாங்கள் எங்கள் தோழர் ஒருவரை அனுப்பி வைப்போம்.  அவர் கூட என் மகள் ஸைனப் அவர்களை அனுப்பி வைத்தால் உங்களை நாங்கள் விடுதலை செய்வோம் என்று. சரி நான் போனவுடன் உங்களது மகளை நான் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல,  கூட ஒரு நபித்தோழரையும் நபி அனுப்பி வைத்தார்கள்.

மக்கா அன்றைக்கு கொதி நிலையில் இருக்கிறது. 70 தலைவர்களை பத்ரில் இழந்த துடிப்பில் மக்கா இருந்தது. முஸ்லிம்களை பார்த்தாலே கொலை செய்வார்கள். அபுல் ஆஸ் சொல்கிறார் நீங்க உள்ளே நுழைந்து தகவல் தெரிந்தால் உங்களை கொலை செய்து விடுவார்கள். இப்ப என் மனைவியை அனுப்பிவைத்தாலும் அவளையும் கொலை செய்வார்கள்.ஆகவே என் கூடவே நீங்கள் இருங்கள். கொஞ்சம் நாளைக்கு பிறகு மக்கா அமைதி அடையும். பிறகு எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றார்கள்.

அதுவரைக்கும் தனது வீட்டிலே அவரை தங்க வைத்து. சிறிது காலம் கழித்து மக்காவுடைய கொதி நிலை தனிந்த பிறகு.  முதல் முறையாக தனது மனைவியை  பிரிகிறார். ஸைனப் அவர்களிடம் உங்கள் வாப்பாவிடம் ஒரு வாக்குறுதி அளித்தேன் என்று எல்லாவற்றையும் சொல்ல ஸைனப் போக மாட்டேன் என்கிறார்கள். இல்லை வாப்பாவிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறேன்   போங்க நீங்கள் என்று அனுப்பி வைத்தார். அந்த நபித்தோழர் ஸைனப் அவர்களை கூட்டி கொண்டு வந்து விடுவார்கள் .

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று கொண்டு புகழ்வார்கள் தனது மருமகன் இறை மறுப்பாளராக  இருந்தாலும் வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய விஷயத்தில் அலியே எனது மருமகனை பாருங்கள்!!!என்று சொன்னார்கள்  நாம் எந்த வீட்டுக்கு மணம் முடித்து சென்றாலும் உதவி செய்யா விட்டாலும், துரோகம் செய்ய கூடாது. காயப்படுத்த கூடாது. நம்முடைய செயல்பாடுகள் அவ்வளவு மோசம். கட்டிய குடும்பத்தாரை  காயப்படுத்தி, கேட்பதற்கு யாரும் இல்லை என்பதற்காக கொடுமை படுத்துவது, வீட்டில் அத வேங்கி விட்டு வா, இத வேங்கி விட்டு வா என்று.

அபுல் ஆஸை பாருங்கள் நபி மிம்பரில் அலியை அழைத்து சொல்கிறார்கள் அவர் இறை மறுப்பாளர்தான் அவரின் வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற  விடயத்தில் அவரை எல்லோரும் பாருங்கள் பெருமையோடு அபுல் ஆஸை புகழ்து பேசினார்கள்.

ஸைனப் (ரழி) அவர்கள் ஐந்து வருடங்கள் கழிந்து விட்டது. மக்காவை  விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆசை  அபுல் ஆஸ் இறை மறுப்பாளராக இருக்கிறார். ஸைனப் முஸ்லிமாக இருக்கிறார்கள். 
எத்தனை நாளைக்கு தான் பிள்ளையை வீட்டில் வைத்துப் பார்க்க முடியும்.

 ரஸுலுல்லாஹ்வுக்கு ஆசை ருகையா, உம்மு குல்தும் இருவருக்கும் மணம் முடித்து கொடுத்து விட்டோம்உஸ்மான் (ரழி) அவர்களை. பாத்திமா (ரழி) கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஸைனப் (ரழி) அவர்கள் மட்டும் வீட்டில் ஐந்து வருடங்கள் இருக்கிறார். ரஸுலுல்லாஹ் ஒரு நாள் ஸைனப் (ரழி) அவர்களிடம் கேட்பார்கள் உங்களுக்கு யாராவது உங்களுக்கு பிடித்த மாப்பிள்ளையை  சொல்லுங்கள். நான் பார்த்து தரட்டுமா என்றார்கள். ஸைனப் அவர்களின் கண்கள் கண்ணீரை வடித்தது. அபுல் ஆஸை தவிர இனி ஒருவரை நினைத்து பார்பதற்கு எனக்கு சம்மதமே கிடையாது. அந்த வார்த்தையை ஸைனப் சொன்ன பிறகு நபி அவர்கள் ஸைனப் விஷயத்தில் தலையிடவே இல்லை இங்க மட்டும் இல்லை அங்கு அபுல் ஆஸும் அப்படி தான் இருக்கின்றார். யாரையும் மணம் முடிக்க வில்லை.  இரண்டு பேரும் இரண்டு திக்கில் இருக்கிறார்கள் .

 அன்றைய காலச்சூழலோடு இந்த வரலாற்றை பார்க் வேண்டும். "இல்லை அபுல் ஆஸ் நிச்சயமாக
வருவார் அல்லாஹ்வின் தூதரே" என்று ஸைனப் சொல்கிறார். அவருக்காக தான் இந்த உயிர், இந்த உடல், பாசத்தின் உடைய உச்சம் ஐந்து வருடங்கள் எந்த சந்திப்பும் இல்லை. 

பிறகு ஒரு பெரிய விபத்து சந்திக்க கூடிய நிகழ்வு ஏற்பட்டது .

அபுல் ஆஸிடம் இருக்கும் திறமை என்வென்றால் அவர் பெரிய வியாபாரி. கதீஜா (ரழி) அவர்களிடம் வளர்ந்தவர் அல்லவா!  மக்காவில் இருக்கக்கூடிய எல்லாரும் அபுல் ஆஸிடம் கொண்டு பணத்தை கொடுத்து விடுவார்கள். இவர் சிரியாவிற்கு போவார். சிரியாவில் வியாபாரம் செய்து விட்டு அந்த பொருட்களை எல்லாம் விற்பனை செய்து விட்டு வந்து இலாபத்தை பங்கிட்டுக் கொடுப்பார்.

நபி (ஸல்) அவர்களும் ஆரம்ப காலத்தில் இந்த தொழிலை தான் செய்தார்கள்.

 அபுல் ஆஸின் நம்பக தன்மை,  அந்த உறுதிப்பாடு, வாய்மையை அந்த மக்கள் பார்த்து இருந்தார்கள் . அதனால் அபுல் ஆஸிடம் பணத்தை ஒப்படைத்து விடுவார்கள் சிரியாவிற்கு செல்வார் வியாபாரதை முடித்து விட்டு நபி எப்படி வாய்மையாளராக இருந்தாரோ அதே போன்று வாய்மையாளராக இருப்பார்.  வியாபாரத்தை முடித்து விட்டு மதீனாவை தாண்டி தான் வர வேண்டும். மக்காவிற்கு சிரியாவில் இருந்து வரும் போது  நபித்தோழர்கள் பார்த்து  விட்டார்கள். எதிரி நாட்டு வியாபார கூட்டம்   அனுமதி பெற்று தான் வந்து இருக்க வேண்டும். அனுமதியே பெறவில்லை.
பெரிய தைரியத்தில் வந்துவிட்டார். அவருடைய வியாபார பொருட்களை கைது செய்துவிட்டார்கள். அவரையும் கைது செய்யலாம் என்று பிடிக்கும் பொழுது தட்டிவிட்டு .
மதீனாவிற்குள் ஓடிவிட்டார்.
 இரவு ஒருவரிடம் கேட்டார் "இங்கு ஸைனபின் வீடு எங்கே இருக்கிறது என்று?" ஸைனப் அவர்களின் வீடு காட்டப்பட்டது. பிறகு அதற்குள் சென்று ஒழிந்து கொண்டார்.

 நபித்தோழர்கள் அவர்கள் அவரின் வியாபார பொருட்களை எல்லாம் பிடித்து மதீனாவிற்கு கொண்டு வருவார்கள். பஜ்ர்  பொழுது நபி அவர்கள் தொழுகை நடத்தும் போது ஸைனப் (ரழி) அவர்கள் பெரிய சத்தம் வீட்டில் இருந்து போடுவார்கள்.

"என்னுடைய சிரிய தாயின் மகன் அபுல் ஆஸ் என் வீட்டில் இருக்கின்றார். நான் அவருக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறேன். நான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள்.  நீங்களும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று"
 நபி தொழுகை முடிந்ததும் கேட்பார்கள் "பேசினது கேட்டதா? என்ன செய்யலாம்" என்று.

ஸைனப் சொன்னது போல நடக்கட்டும் அல்லாஹ்வின் தூதரே.  ஸைனப் வீட்டில் அபுல் ஆஸ் பாதுகாப்பு அடைக்கலம் பெற்றவராக இருப்பார். 

அபுல் ஆஸ் ஸைனப் இடம் சொல்வார்.  அவர்களிடம் இருந்து எனக்கு நீ பாதுகாப்பு தந்துவிட்டாய்.  எனது வியாபாரம்பொருட்கள்  
 எதுவும் என்னுடைய பொருள்கள் இல்லை. என்மீது நம்பிக்கை வைத்து மக்காவாசிகள் தந்து இருக்கிறார்கள். தயவு செய்து உங்களுடைய வாப்பாவிடத்தில் பேசி அந்த வியாபார பொருட்களை வாங்கி தந்துவிடு. என் பொருள் எதுவும் இல்லை என்று.

மறு நாள் ஸைனப் (ரழி) அவர்கள் சத்தம் போடுகிறார்கள். அந்த வியாபார பொருட்களை அவரிடம் கொடுத்து விடுங்கள். அது அவருடையது அல்ல.  உங்களுக்கு தெரியும் அபுல் ஆஸ் வாய்மை  தவறாதவர் என்று. அது அவருடைய பொருட்கள் அல்ல. அதனை கொடுத்து விடுங்கள் என்பதாக.
கடைசியாக நபி பேசுகின்றார்கள் அவருடைய வியாபார பொருட்கள் கிடைத்து விட்டது.

 காலநிலை சரி இல்லை. ஸைனப் அவர்களின் வீட்டிலேயே இருக்கிறார். ரஸுலுல்லாஹ் சொல்லி விட்டார்கள்.  நீ அவருக்கு எல்லா பணிவிடையும் செய் . ஆனால் அவர் கூட மட்டும் கூடிவிட கூடாது.  காரணம் அவர் இறை மறுப்பாளர். நீ ஒரு முஸ்லிம். இரண்டு பேரும் சேர்ந்துவிட  கூடாது.  ஸைனப் சொல்வார்கள் நான் சேர வேண்டும் என்று நினைத்தாலும் கூட  அபுல் ஆஸ் தூய்மையானவர்.  விருப்பம் இல்லாமல் சேரமாட்டார்.  காலநிலை மதீனாவில் சரியாகின்றது.

உமர் (ரழி) அவர்கள் பேசுகிறார்கள். அபுல் ஆஸ் இடம்  நீங்கள் நபியின் மருமகன். எவ்வளவு அறிவாளி. நீங்கள் இஸ்லாத்தில் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீங்கள் இறைமறுப்பாளராக இருக்ககூடாது என்று. முடியாது என்று சொல்லி விடுவார். நான்  உங்கள் நாட்டிற்கு வந்து இருக்கிறேன் எனக்கு பாதுகாப்போடு வந்திருக்கிறேன்.

அபூபக்கர் (ரழி) அவர்கள் வந்து பேசுவார்கள். நீங்க இஸ்லாத்திற்கு வந்தால்  நபி (ஸல்) எவ்வளவு சந்தோஷம் படுவார்கள்  எந்த பதிலும் சொல்லவில்லை .

அவருக்கு இஸ்லாத்தில் இணைவதற்கு எந்த திட்டமும் கிடையாது. காலநிலை சரியாகிறது.  எல்லாரும் சென்று பேசினார்கள். கேட்கவே இல்லை. மனைவியும் சொல்கிறாள் கேட்க வில்லை.

அந்த வியாபாரத்தினுடைய  சொத்து எல்லாம் எடுத்துவிட்டு மக்காவிற்கு செல்கின்றார். மக்காவில் எல்லா இறை மறுப்பாளர்களையும் கூப்பிட்டு, எல்லா வியாபார பொருட்கள், சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டு அவர் கேட்ட வார்த்தை! அழகான வார்த்தை!  "உங்களுடைய சொத்து எல்லாம் உங்களிடம் வந்துவிட்டதா?"

 "வந்துவிட்டது."

 "லாபத்தை வைத்து தானே தந்தீர்கள் லாபத்தோடு கிடைத்ததுவிட்டதா உங்களுக்கு எல்லாம் திருப்பதி தானே?"

 "திருப்பதி தான்."

உங்களுக்கு எல்லாம் இப்போது சொல்கிறேன். "முஹம்மதினுடைய சன்மார்க்கத்தை ஏற்று கொண்டேன்.  நான் முஸ்லிமாக மதம் மாறிவிட்டேன்.

அந்த மக்காவில் உள்ள இறை மறுப்பாளராகள் கேட்டார்கள் "நீ இப்ப அங்கு இருந்து தானே வருகிறாய் " அதற்கு அவர் சொன்னார் "நீங்கள் என்மீது சுமத்திய அமானிதம், நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக இருந்தது. நான் மதீனாவிற்குள் நுழையும் போதே நினைத்து விட்டேன். நபியினுடைய வாழ்க்கையை நேரடியாக பார்த்துவிட்டேன். ஆனால் அந்த அமானிதத்தை ஒப்படைக்காமல் நான் மரணித்து விட்டால் அல்லது அமானிதத்தை ஒப்படைக்காமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால்  நீங்கள் என்னுடைய வியாபாரம் விஷயத்தில் சந்தேகம் பட கூடும். உங்கள் வாயில் இருந்தே வாக்குறுதியை பெற்றுவிட்டேன்.  நான் மோசடி செய்யவில்லை என்பதாக. இப்போது நான் முஸ்லிமாக மாறிவிட்டேன்.

அப்படியே மதீனாவிற்கு வருகின்றார். அல்லாஹ்வின் தூதரின் கரத்தை பிடித்து இஸ்லாத்தில் நுழைகிறார்.

  ஸைனப் (ரழி) அவர்களோடு வாழ்க்கை நடத்துகின்றார்.  ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்குள் ஸைனப் (ரழி) அவர்கள் மரணித்து விடுகின்றார்கள்.

ஸைனப் (ரழி) அவர்கள் மரணித்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அபுல் ஆஸ் (ரழி) அவர்களும் மரணித்து விடுகின்றார்கள் .

இந்த இரண்டு ஜீவன்களும் ஈமானில் பயணிப்பதற்காக உயிர் காத்து கிடந்தது.ஸைனப்பின் உயிர் அபுல் ஆஸிஇற்காக  காத்து கிடந்தது.

அது ஈமானின் இறக்கைகளை சுமந்ததற்கு பிறகு, ஸைனப் சுவனத்தை நோக்கி பறந்தாள். அபுல் ஆஸும் மீண்டும் பறந்துவிட்டார். தனது ஸைனபை நோக்கி. 

இந்த சம்பவத்தில் எவ்வளவு பெரும் படிப்பினை! என்ன என்றால் ஒரு பொழுதும் நம்மை நம்பியவர்களுக்கு த்ரோகம் செய்து விட கூடாது. நாம் உண்மையான நேசம் வைப்போம் என்று சொன்னால்
நாம் கட்டிய மனைவிக்கு, நாம் கட்டிய கனவருக்கு நம்முடைய வியாபாரம் செய்ய கூடியவர்களிடத்தில். நம்முடைய நண்பர்களிடத்திலாக இருக்கலாம் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்து விட கூடாது . காரணம் அபுல் ஆஸ் இணைவைப்பாளராக இருக்கும் நிலையிலும் எவ்வளவு நம்பிக்கையாளராக இருந்து இருக்கிறார்.  

 ஒரு இணைவைக்க கூடிய கூட்டம், ஒரு நம்பிக்கையாளரை உருவாக்கி இருக்கிறது. நாம் முஹம்மத் எனும் சுடரில் முளைத்த நாங்கள்  நாம் நம்பிக்கை துரோகியாக  மாறிவிட்டால் யார் நம்மை திருத்த முடியும்!

இந்த வரலாறு நமக்கு தரும் படிப்பினை இரண்டு .முதல் விஷயம் நம்மை நேசித்த வர்களுக்கு நாம்  துரோகம் செய்ய கூடாது. இரண்டாவது வாக்குறுதிகளை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கே அபுல் ஆஸிற்கு தடையாக இருந்தது. அமானிதம் என்ற அந்த பொருட்கள் இஸ்லாத்தில் வருவதற்கே அமானிதத்தை பயந்தார் என்றால் நாம் நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நெகிழ்வூட்டகூடிய  வரலாறு மிக பெரும் சான்றாக இருக்கும்.

 அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களையும் என்னையும் அபுல் ஆஸ் ஸைனபை போன்று நம்முடைய தலைமுறையையும் அபுல் ஆஸ் ஸைனபை போன்ற தலைமுறைகளாக அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக 🤲நெகிழ்வூட்டகூடிய அறிவுரை! 

 
 "

(மற்றோரு வரின் வரிகள்)

அல்லாஹ் படைப்பாளன்
அல்லாஹ் அறிந்தவன்
அல்லாஹ் பாதுகாவலன்
அல்லாஹ் மாலிக்

Thursday, 5 May 2022

குறைவான ஆயுள் உம்மத்

رأى نوح عليه السلام إمراة تبكي فسألها لماذا تبكين 
قالت  ياويلتي ابكي على وفاة ابني وهو صغير وفي عز شبابه 
سألها نوح عليه السلام وما هو عمر ابنك  
قالت : 300 سنة فقط

قال لها نوح بقصد التخفيف عن حزنها فماذا سوف تفعلين

 لو عشتي في أمة أعمارهم لا تتجاوز الستين عاماً
 
قالت أو هنالك من يعيش للستين عاماً فقط
قال؛ نعم 
قالت؛ وهل هناك منهم من يعصي الله في هذه المدة القصيرة
قال؛ أغلبهم عاصون لله 
قالت وهل يتهافتون على حب الدنيا وهيه مجرد أيام
قال؛ نعم همهم الوحيد حب الدنيا والقليل من يفكر بالآخرة  قالت؛ وهل يتجادلون فيما بينهم على أمور بسيطة 
قال؛ وبل يتقاتلون على أتفه الأمور قالت؛ وهل يبنون أكواخ لهم وأعمارهم بتلك الفتره القصيره قال؛ بل يعمرون القصور لمئات السنين ثم يتركوها ويرحلوا

قالت؛ ياوليتي لو كنت بدل تلك الأمة لقضيت عمري تحت ظل شجرة وبقيت عمري كله ساجدة لله عز وجل
اللهم صل على محمد وآله وصحبه أجمعين
#تتابعوووه_فضلا

Thursday, 3 February 2022

தயாள நன்கொடை தாராளமான நன்மை

தாராளமானவர்

 

لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ

 

வசதி உள்ளவர் தன்னுடைய வசதிக்கு ஏற்ப (தாராளமாகச்) செலவு செய்யட்டும். ஒருவருக்கு அவரின் வாழ்வாதாரம் (ரிஜ்க்) குறைந்த அளவில் வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு அல்லாஹ் வழங்கிய (அந்தக் குறைந்த) அளவில் அவர் செலவு செய்யட்டும்.    திருக்குர்ஆன்:- 65:7

 

தாராள மானப்பான்மை என்பது ஒருவரின் நற்குணத்திற்கான சான்றாகும். வீண்விரயத்திற்கு பெயர் தாராளமல்ல. மேலும், தனக்கோ தமது குடும்பத்தோருக்கோ ஒன்றுமில்லாமல் அனைத்தையும் வாரி வழங்குவதற்கு பெயரும் தாராளமல்ல. அது நம்மை சிரமத்திற்கு ஆளாக்கிவிடும். எந்த நற்காரியங்களுக்காக இருந்தாலும் நடுநிலையுடன், இறைப்பிரியத்தை எண்ணி செலவழிப்பதே தாராளமாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( وَأَنْفِقْ مِنْ طَوْلِكَ عَلَى أَهْلِكَ ) உனது குடும்பத்தாருக்கு உனது வசதிக்கேற்ப செலவளிப்பீராக! அறிவிப்பாளர்:- அபூ தர்தா (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-18

 

வறுமைக்கு அஞ்சாதவர்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்)  கேட்டார். அண்ணலார் அவற்றை கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, ( أَيْ قَوْمِ أَسْلِمُوا فَوَاللَّهِ إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ ) "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார். நூல்:- முஸ்லிம்-4630

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இந்த தாராள தர்மத்தால் அவர் மனம் கவரப்பட்டு முஸ்லிமாகிய பின்னர், அவரே தனியாக பரப்புரையாற்றி, தமது குலத்தார் அனைவரையும் முஸ்லிம்களாக்கினார்.

 

பயனுள்ளதைத் தருகிறேன்

 

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது.  ஒருமுறை அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்க என்னை அனுப்பினார்கள். நான் ஒரு நபித்தோழரிடம் சென்று சொத்துக்களை கணக்கிட்ட பிறகு, அவரிடம் ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகக் குட்டி ஸகாத்தாகக் கொடுங்கள்; அதுதான் நீங்கள் தரவேண்டிய ஸகாத்தாகும்" என்று கூறினேன்.

 

அதற்கு அவர், "இது பாலும் கொடுக்காது; இதில் சவாரியும் செய்யவும் முடியாது. (வேறு ஓர் ஒட்டகத்தைக் காட்டி) இது கொழுத்த பெரிய பலம் மிக்க வாலிப ஒட்டகம். இதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அப்போது நான், எனக்கு கட்டளையிடப்படாத ஒன்றை நான் எடுக்க மாட்டேன். இதோ அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு அருகில் தான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்ல விரும்புவதை அண்ணலாரிடம் சொல்லுங்கள்" என்றேன்.

 

அவர் அந்த ஒட்டகத்துடன் அண்ணலாரிடம் வந்து, நடந்தவற்றை விவரித்தார். உங்கள் தூதர் என்னிடமிருந்து வசூலிக்க மறுத்த அந்த ஒட்டகம் இதுதான். இதை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நாயகமே! (நீங்களாவது) இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

 

அப்போது அண்ணலார், ( ذَاكَ الَّذِي عَلَيْكَ فَإِنْ تَطَوَّعْتَ بِخَيْرٍ آجَرَكَ اللَّهُ فِيهِ وَقَبِلْنَاهُ مِنْكَ ) "உன் மீது கடமையானது ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகம் தான். இந்தச் சிறந்த ஒட்டகத்தைப் பிரியப்பட்டு, நீ அதிகப்படியாகக் கொடுத்தால் அல்லாஹ் அதற்குக் கூலி அதிகமாக உனக்குக் கொடுப்பான். உன்னிடமிருந்து இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு அதை பெற்றுக் கொள்ளும்படி எனக்கு கட்டளையிட்டு, அவரின் பொருளில் அருள் வளத்திற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-1350

 

ஏழைவரி எனும் ஸக்காத் என்பது நமது சொத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை நாற்பதில் ஒரு பாகத்தைத் தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும். இதில் கொஞ்சம் கூடுதலாகவும் தாராளமாகவும் வழங்கலாம். அதில் ஒன்றும் சிரமம் ஏற்படாது.

 

ஆயிரம் பொற்காசுகள்

 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களைப் பற்றி ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் விசாரித்தார்கள். அவர் தடிப்பமான ஆடைகளை அணிகிறார். கரடுமுரடான உணவுகளையே உட்கொள்கிறார் என்று உமர் (ரலி) அவர்களுக்குப் பதிலளிக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் (ஒரு தூதரின் மூலம்) ஆயிரம் பொற்காசுகளை அபூஉபைதாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தத் தூதுவரிடம், ( انْظُرْ مَا يَصْنَعُ بِهَا )  “இவற்றைப் பெற்றுக்கொண்டதும் அவர் என்ன செய்கிறார் என்று நீ கவனிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.

 

பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் மென்மையான ஆடைகளை (வாங்கி) அணிந்தார்கள். இதமான உணவுகளை உண்டார்கள்.

 

அதனைக் கவனித்த தூதர், உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து விவரத்தை அறிவித்தார். உமர் (ரலி) அவர்கள், ( رَحِمَهُ اللَّهُ ) “அபூஉபைதாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” (தலைப்பில் காணும்) திருக்குர்ஆன் வசனத்தின் அறிவுரைக்கு செயல் வடிவம் தந்துள்ளார்” என்றார்கள். அறிவிப்பாளர்:- அபூ ஸினான் (ரஹ்) அவர்கள் நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்

 

பிரதி உபகாரம்

 

(உங்களின்) உபகாரத்திற்கு உபகாரத்தைத் தவிர (வேறு) கூலி உண்டா? திருக்குர்ஆன்:- 55:60

 

ஒரு முறை ஹஸன் (ரலி), ஹுசைன் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) ஆகியோர் மூவரும் பயணத்தில் இருந்தபோது உணவு தீர்ந்து விட்டது. உடனே அருகிலிருந்த குடிசைக்கு சென்று அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம், "அம்மா! நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஆவோம். எங்கள் கட்டுச்சாதனங்கள் தீர்ந்து விட்டது. அதனால் எங்களுக்கு ஏதேனும் உணவு தர முடியுமா?" என்று வினவினார்கள். உடனே அம்மூதாட்டி, தம் வீட்டில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்து, அதனை சமைத்து விருந்து உபசாரம் செய்தாள்.

 

அன்று மாலை வீட்டுக்கு வந்த அம்மூதாட்டியின் கணவர், "நம்மிடமிருந்த அந்த ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினார். உடனே அவள், நடந்ததை  சொல்ல, அது கேட்ட கணவர் "நம்மிடம் இருந்தது அந்த ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் தான். அதையும் அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டாயே!" என்று கோபித்துக் கொண்டு, தனது மனைவியை திட்டித் தீர்த்துவிட்டார்.

 

சில நாட்களுக்குப் பிறகு அம்மூதாட்டியும் அவரது கணவரும் ஒரு காரியமாக மதீனாவுக்கு வந்தார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட ஹசன் (ரலி) அவர்கள் அவளுக்கு பிரதியுபகாரமாக 1000 ஆடுகளும், 1000 தங்கக் காசுகளும் கொடுத்து உபசரித்தார்கள். அப்போது அம்மூதாட்டி கணவரைப் பார்த்து, "இவர்களுக்கு ஒரு ஆட்டை உபகாரம் செய்ததற்கு இவர் நமக்கு எவ்வளவு பெரிய பிரதியுபகாரம் செய்துள்ளார்கள் பார்த்தீர்களா? என்று இடித்துரைத்து கூறினாள்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் அம்மூதாட்டியை அடையாளம் கண்டு அவளுக்கு 1000 ஆடுகளும், 1000 தங்கக் காசுகளும் பிரதியுபகாரமாக கொடுத்து உபசரித்தார்கள். அப்போதும் அம்மூதாட்டி கணவரிடம் மேற்கண்டது போன்று இடித்துரைத்து பேசினாள்.

 

மீண்டும் சிறிது நேரத்திற்கு பிறகு அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டியை அடையாளம் கண்டு அவளுக்கு 2000 ஆடுகளும், 2000 தங்கக் காசுகளும் பிரதியுபகாரமாக கொடுத்து உபசரித்தார். அப்போது அம்மூதாட்டி, "இன்னார் இருவரும் 1000 தந்தார்கள். நீங்கள் 2000 தருகிறீர்களே?" என்று வினவியபோது, அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், "ஆம்! அவ்விருவரும் அண்ணலாரின் நேரடி பேரர்கள். அவர்களுக்கு சமமான கூலியை நான் பெற வேண்டுமானால் நான் 2000 கொடுப்பது தானே சரியாகும்" என்றார்கள்.

 

வறுமை நிலையை மாற்று!

 

ஒரு முறை பேரறிஞர் இமாம் அபூ ஹனீஃபா அவர்களை சிலர் சந்திக்க வந்தனர். அவர்களில் ஒருவரின் ஆடை மிகவும் மோசமாக இருந்தது. வந்தவர்கள் புறப்பட்டபோது, இமாமவர்கள்  குறிப்பிட்ட அவரை மட்டும் இருக்கச் சொன்னார்கள். பிறகு அவரிடம் தொழுகை விரிப்பை அகற்றிப் பார்க்குமாறு சொன்னார்கள். அதன் கீழே ஆயிரம் வெள்ளிக் காசுகள் கொண்ட பணப்பை இருந்தது. இமாமவர்கள், ( خُذهَا وَاَصلِح بِهَا مِن شَأنِكَ )  "இந்த வெள்ளிக்காசுகளை எடுத்துக்கொண்டு அவற்றால் உனது வறுமை நிலையை மாற்றிக் கொள்! என்று அவரிடம் கூறினார்கள்.

 

அவர், "நான் செல்வமும் வசதியும் உள்ளவன் எனக்கு இது தேவையில்லை" என்றார். இமாமவர்கள், ( اِنَّ اللّٰهَ یُحِبُّ اَن یَرٰی اَثَرَ نِعمَتِهِ عَلَی عَبدِهِ ) "தனது அடியான் மீது பொழிந்த அருட்கொடைகளில் அடையாளம் தென்படுவதை அல்லாஹ் விரும்புகின்றான்" என்ற நபிமொழியை நீர் செவியுற்றதில்லையா?  எனவே, நம்மை மற்றவர்கள் தவறாக எண்ணிக் கொள்ளாதபடி நடந்து கொள்ளவேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- சீரத்தே நுஃமான் அல்லாமா ஷிப்லீ நுஃமானி, சுவரும் மின் ஹயாத்தித் தாபிஈன்

 

ஆடைகளில் அக்கறை

 

பெரும் வியாபாரியாக வாழ்ந்த சட்ட நிபுணர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள், "தனது ஆடைகளை குறித்து மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். மிகச் சிறந்தவற்றை தேர்ந்தெடுப்பார்கள். 30 வெள்ளிக்காசுகள் மதிப்புள்ள மேலங்கியை அணிந்து அழகாகக் தோன்றுவார்கள். அதிக அளவில் வாசனைத் திரவியத்தை பூசிக்கொள்வார்கள். அவர்கள் அணியும் செருப்பின் வார்களைக்கூட  அறுந்துவிடாதவாறு கவனித்துக் கொள்வார்கள்" என அவர்களின் மாணவரான அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நூல்:- தாரீகுல் மதாஹிபுல் இஸ்லாமிய்யா அபூஸஹ்ரா பக்கம்-347

 

ஒரு நாள் இமாம் அபுல் ஹசன் ஷாதலி (ரஹ்) அவர்கள் அழகிய ஆடை அணிந்து யமன் நாட்டில் நெய்யப்பட்ட உயர்தரமான தலைப்பாகை கட்டிக்கொண்டு இவ்வுலகின் இழிதன்மையையும், அதனை வெறுக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி தன்னுடைய மாணவர்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருந்தார்கள்

 

அப்போது அங்கு ஒரு ஏழை மனிதரும் இருந்தார். அவருக்கு அன்னாரின் பேச்சும் செயலும் முரண்பட்டதாக தெரிந்தது. "இவர்கள் உலகை விரும்பி உயரிய உடை உடுத்திக்கொண்டு இவ்விதம் பேசுகிறார்களே! நானல்லவா உலகை வெறுத்துத் துறவை மேற்கொண்டு, பழைய ஆடையை அணிந்து கொண்டுள்ளேன்" என்று தம் உள்ளத்தில் நினைத்தார். அடுத்த கணம் அன்னாருக்கு அல்லாஹுத்தஆலா இதனை அறிவித்துத் தந்தான். பிறகு அன்னார் அவரை நோக்கி! "ஏழை மனிதரே! நீர் ஏழ்மையின் சின்னமாக பழைய ஆடையை அணிந்து கொண்டு எவரும் புத்தாடை தர மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர். இதுவே உலக ஆசையாகும். ஆனால் நானோ, செல்வச் சீமான்கள் அணியும் ஆடை அணிந்து கொண்டுள்ளேன். இது எவரிடமிருந்தும் எதிர்பார்க்காத நிலையாகும். இதுவே உண்மையான துறவு ஆகும்" என்று கூறினார்கள்.

 

தகுதிக்கேற்ப வழங்க வேண்டும்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ وَالشُّحَّ، فَإِنَّهُ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ ) கஞ்சத்தனம் கொள்வதை விட்டும் நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் கஞ்சத்தனம் உங்களுக்கு முன்னிருந்தோரை அழித்துவிட்டது.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-470

 

ஷர்ஹபீல் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களுக்கு அரசவை விருந்தைப்  போன்று (தாராளமாக) விருந்தளிப்பார்கள். தாங்களோ வீட்டிற்குச் சென்று காய்ந்த ரொட்டியை ஸைத்தூன் எண்ணையுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

 

உஸ்மான் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் செல்வந்தராகவும் அதிக தர்ம சிந்தனை உள்ளவராகவும் இருந்தார்கள்.

 

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு நூறு வெள்ளிக்காசுகள் தேவைப்படுகிறது. கொஞ்சம் கொடுத்து உதவுங்கள்" என்று கேட்டார். அதற்கு அதீ (ரலி) அவர்கள், "இல்லை" என்று கூறிவிட்டார்கள். அவர், "(கொடை வள்ளலான) தாங்களே இல்லையென்று சொல்லலாமா?" என்று கேட்டார். அதீ (ரலி) அவர்கள், "என்னிடம் இப்படி அற்பமாகக் கேட்க கூடாது; கேட்பதாக இருந்தால் ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் தான் கேட்கவேண்டும்" என்று கூறிவிட்டு அவருக்கு கொடுத்தனுப்பினார்கள்.

 

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து தம் வீட்டில் உணவு சமைப்பதற்குப் பெரிய சட்டி (தேக்சா) தேவைப்படுகிறது. எனவே, கொஞ்சம் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டார்.

 

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள், "சரி நீங்கள் போகலாம். கொடுத்து அனுப்புகிறேன்" என்று கூறினார்கள். பிறகு சிறிதுநேரம் கழித்த பிறகு, சட்டி கேட்டவர் வீட்டிற்கு ஒரு பெரிய சட்டி நிறைய உணவு அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த அவர் அதீ (ரலி) அவர்களிடம் வந்து, "நான் சமைப்பதற்கு காலி சட்டியைத்தான் கேட்டேன்" என்றார். அதற்கு அதீ (ரலி) அவர்கள், "நீங்கள் காலி சட்டியை கேட்கலாம். ஆனால், காலி சட்டியை கொடுப்பது எங்கள் வழக்கமில்லை" என்று கூறினார்கள்.

 

அரபு உலகத்தின் கொடைத்தன்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர் ஹாத்திம் தாயீ. இவரின் மகனார் இந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள். அதீ (ரலி) அவர்களின் வள்ளல் தன்மைக்கு இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் சான்றாகும்.

 

இமாம் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, தன் கணவருக்கு உடல் நலமில்லை. எனவே, மருந்துக்காக இச்சிறிய கிண்ணத்தில் தேன் வேண்டுமென்று கேட்டு வந்தாள். அன்னார் தன் பணியாளரை அழைத்து, அந்த பெண்ணுக்கு வீட்டிலுள்ள தேன் ஜாடியையே கொண்டுவந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். அந்தப் பணியாளர், "பெருந்தகையே! அந்தப் பெண் கேட்பது கிண்ணத்தில் சிறிதளவு தேன் மட்டும்தானே!" என்று வினவினார். அன்னார், "அவள் தன் தேவைக்கேற்ப என்னிடம் கேட்கிறாள். அவளுக்கு நான் என் தகுதிக்கேற்ப வழங்க விரும்புகிறேன். எனவே,தேன் ஜாடியையே கொடுத்துவிடு!" என்று கூறினார்கள்.

 

இன்ப அதிர்ச்சி

 

பெரும் செல்வந்தரான மாமேதை அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு 700  வெள்ளிக்காசுகள் கடன் உள்ளது. அதற்கு உதவி செய்யுங்கள்" என்றார். உடனே அன்னார், ஒரு துண்டு சீட்டில் 7000 வெள்ளிக்காசுகள் கொடுக்கவும் என்று எழுதி அவரிடம் கொடுத்து, "இதை என் கணக்கரிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்கள்.

 

அவரும் அந்த துண்டுச்சீட்டை கொண்டுவந்து கணக்கரிடம் கொடுத்தபோது, அந்த கணக்கர் அவரிடம், "உனக்கு எவ்வளவு தேவை இருக்கிறது?" என்று கேட்டார். அவர், "எனக்கு 700 தேவை இருக்கிறது" என்றார். உடனே கணக்கர் அவரிடம், "700 என்பதற்கு 7000 என்று ஞாபக மறதியாக முதலாளி எழுதி விட்டார்கள் போலும், அதனால் நீ மீண்டும் முதலாளியிடம் சென்று இதைப்பற்றி விசாரித்து விட்டு வா!" என்றார். அவரும் அன்னாரிடம் சென்று விசாரித்தபோது, உடனே அன்னார், அந்தத் துண்டு சீட்டை வாங்கி 7000 என்பதை அழித்துவிட்டு 14,000 என்று எழுதிக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள்.

 

உடனே, இதைப் பற்றி விசாரிக்க கணக்கரே நேரடியாக வந்துவிட்டார். அப்போது அன்னார் அந்த கணக்கரிடம், ( وَأَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ سُرُورٌ تُدْخِلُهُ عَلَى مُسْلِمٍ ) "ஓர் முஸ்லிமுக்கு அவன் எதிர்பார்த்திராத மகிழ்ச்சியை ஏற்படுத்துவது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயலாகும்" (இப்னு அபீத்துன்யா) என்ற நபிமொழியை எடுத்துரைத்துவிட்டு, "என்னிடம் உதவி கேட்டு வந்தவருக்கு அவர் கேட்டதை விட அதிகம் கொடுத்து அவர் எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தவே 7000 என்று எழுதினேன். ஆனால், நீ அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, அவருடைய இன்ப அதிர்ச்சியைத் கெடுத்து விட்டாய். அதனால் தான் மீண்டும் 7000 என்பதை அழித்துவிட்டு 14,000 என்று எழுதி அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி நினைத்தேன். அதனால் அவருக்கு 14,000 வெள்ளிக் காசுகளைக் கொடுத்து அனுப்பி விடு" என்றார்கள்.

 

தேவையுடையவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத வகையில் நாம் உதவி செய்யும்போது அவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி நமது உள்ளத்திலும் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நாம் உணரலாம்.

 

உண்மையில் பிரதிபலனை எதிர்பாராமல் அல்லாஹ்விற்காக ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும்போது உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அனுபவித்தவர்களால் தான் உணர  முடியும்.

 

எனவே, நாம் நற்காரியங்களில் தாராள மனப்பான்மையுடன் செயலாற்றி இறையன்பைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

Thursday, 20 January 2022

தியாகப்பெண்மணிகள்

பெருக்கெடுத்து ஓடிய பேரருள்கள்!
===========================

மனைவி மரணித்தபோது உமர் முக்தார் அழுதார்.
மக்கள் கேட்டனர்: "ஏன் அழுகின்றீர்?"

அவர்: "இத்தாலியர்களுக்கு எதிரான போரில் இருந்து ஒவ்வொரு முறையும் கூடாரத்திற்கு நான் திரும்பி வரும்போதெல்லாம், கூடாரத்தின் வாயில் திரையை எனக்காக அவர் உயர்த்திப் பிடிப்பார். ஏன் இவ்வாறு செய்கின்றீர்? என்று நான் அவரிடம் கேட்டபோது: அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கு முன்பாகவும் எனது கணவரின் தலை குனியக் கூடாது. தலை நிமிர்ந்துதான் இருக்கவேண்டும் என்பதற்காக. ஆகவேதான் அழுகிறேன்".

கன்ஸா (ரலி). இஸ்லாத்திற்கு முன் சகோதரரின் மரணத்திற்காக இவர் அழுத அழுகை அரபுத் தீபகற்பத்தையே அதிர வைத்தது. இஸ்லாத்திற்குப் பின்.. அவரது நான்கு மகன்கள் ஒரே போரில் ஷஹீத் ஆகின்றார்கள். ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை. "இறை மார்க்கத்திற்காக அல்லவா எனது மகன்கள் உயிர் விட்டனர். அல்லாஹ் நற்கூலி தருவான். மறுமையில் அவர்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கின்றேன்" என்றார்.

உம்மு கல்லாத் (ரலி). போரில் கணவனும், பிள்ளைகளும் சகோதரனும் ஷஹீதாகின்றார்கள். ஆயினும் போர்க்களத்தில் இருந்து திரும்புவோரிடத்தில் அவர் கேட்ட கேள்வி: "அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கின்றார்கள்?" என்பதுதான். "அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள்" என்ற பதில் வந்தபோது. "அல்ஹம்து லில்லாஹ்! அது போதும். இனி எந்தத் துன்பம் வந்தாலும் எனக்கு அது தூசிதான்" என்றார்.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் கொலை செய்து உடலை சிதைத்துவிடுவான் என்ற பதட்டம் நிலவியபோது, தாயார் அஸ்மா (ரலி) அவர்களிடம், "என்ன செய்வது? என்று ஆலோசனை கேட்கிறார் மகன். அவர் கூறினார்: "அருமை மகனே! ஆட்டை அறுத்தபின் தோலை உரித்தால் அதற்கு வேதனைத் தெரியவாபோகிறது? ஹஜ்ஜாஜுக்கு எதிரான போரில் ஒருபோதும் நீ பின்வாங்காதே. அவன் உன்னைக் கொலை செய்தாலும் சரியே".

செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி). கணவருக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். கரத்தாலும் கருத்தாலும், உடலாலும் உடமையாலும் கணவருக்கு பெரும் உறுதுணையாக நின்றவர். அபூதாலிப் பள்ளத்தாக்கில் மூன்று வருட ஊர்விலக்கு. உணவு தடுக்கப்பட்டபோதும்.. இலைகளைத் தின்று உதடுகள் வெடித்தபோதும்.. ஊறப்போட்ட தோல்களைச் சாப்பிட்டு வயிறு புண்ணாகிப்போனபோதும்.. அதிருப்தியின் ரேகைகளே தென்படாமல் அனைத்தையும் புன்னகையால் எதிர்கொண்டவர். வரலாற்றில் மிகச் சிறந்த மனைவி. 

இஸ்லாம் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடையுமா என்று தெரியாத காலத்தில் இஸ்லாத்திற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த முதல் உயிர் தியாகி ஸுமைய்யா (ரலி).

ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெருக்கெடுத்து ஓடிய பேரருள்கள் இவர்கள். பெரும் முன்மாதிரிகள். 

இதுபோன்ற நாயகிகள் இன்று எவ்வளவு தேவைப்படுகின்றார்கள்..?

தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னால் தொலைந்துபோன நம் சகோதரிகளுக்கு இந்த  வரலாறுகளை யார் சொல்லிக்கொடுப்பது?