Thursday, 23 December 2021

இப்லீஸ் மனித ரத்த நாளங்களில்

நபிமார்கள் வரலாறு 24

( நம் இரத்த நாளங்களில் இப்லீஸ் எப்படி புகுந்தான் ? )

ஆதம் (அலை) அவர்கள் வெளியே சென்றிருந்த போது , தனியாக இருந்த ஹவ்வாவிடம் , இப்லீஸ் தன் சின்னஞ் சிறு மகன் ஹன்னாஸை ஒப்படைத்து விட்டு , " நான் முக்கியமான அலுவலின் காரணமாக வெளியே செல்ல வேண்டியதுள்ளது .எனவே நான் திரும்பி வரும் வரை என் மகனை உம்மோடு வைத்திரும் ! என்று கூறிவிட்டு சென்றான்,

வெளியே சென்றிருந்த ஆதம் (அலை) அவர்கள், தம் மனைவி ஹவ்வா யிடம் 

" யார் இது ...?" என்று கேட்க ,

"இப்லீஸின் மகன் ஹன்னாஸ் .தான் திரும்பி வந்து கூட்டிச் செல்வதாக கூறினான் " என்றார்கள் ஹவ்வா 

(குர்ஆனில் கடைசி சூரா الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏ 

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் (ஹன்னாஸ்) விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)
(அல்குர்ஆன் : 114:4-5)

"ஏன் சம்மதித்தாய் ? " என்று ஆதம்  மனைவியை கண்டித்து விட்டு  , ஹன்னாஸ் மீது பாய்ந்து அவனைக் கண்ட துண்டமாக வெட்டி மரக்கிளைகளில் தொங்க விட்டார்கள்

திரும்பி வந்த இப்லீஸ் , ஹவ்வாயிடம் 

" எங்கே என் மகன் ஹன்னாஸ் ?"

நடந்ததை கூறினார்கள் உடனே இப்லீஸ் 
" ஹன்னாஸ்....!  என்று ஒரு சப்தமிட்டான் .
ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த சதையும் , எலும்பும் ஒன்று சேர்ந்து ஹன்னாஸ் உருப்பெற்றான் .

அதன் பின் இப்லீஸ் ஹவ்வா யிடம், " "மீண்டும் எனக்கு அலுவல் இருப்பதால் , ஹன்னாஸை உம்முடன் சற்று நேரம் வைத்திரும் "என்று சொல்லிவிட்டு ஹவ்வா வின் பதிலை எதிர்ப்பார்க்காமல் மறைந்தான் .

சற்று நேரத்தில் ஆதம் (அலை) அவர்கள் வந்து விபரம் கேட்க , ஹவ்வா "என் பதிலைக் கூட கேட்காமல் இப்லீஸ் மகனை ஒப்படைத்து மறைந்தான் ." என்று கூற ...

ஹவ்வாவை வன்மையாக கண்டித்தார்கள் . பின் ஹன்னாஸை கொன்று அவனுடைய உடலை  எரித்துச் சாம்பலாக்கி பாதியை கடலில் கரைத்தும் மீதியை காற்றிலும் தூவி விட்டார்கள் .

சற்று நேரத்தில் இப்லீஸ் வந்து மகனை கேட்க ஹவ்வா விபரம் சொல்ல ... 

" ஹன்னாஸ் ..!" என்று கூப்பிட
மீண்டும் உருப்பெற்று ஹன்னாஸ் வந்தான் .
அதன் பின் ஹன்னாஸை செம்மறியாட்டின் உருவில் மாற்றி ஹவ்வா அவர்களிடம் பொய் சத்தியங்களெல்லாம் செய்து அவனை அவரிடம் ஒப்படைத்துச் சென்றான்.

இல்லம் மீண்ட ஆதம் (அலை) அவர்கள் செம்மறியாட்டின் உருவில் உள்ள ஹன்னாஸை கண்டதுண்டமாக வெட்டி , இனிமேல் மீண்டும் அவன் உயிர்ப் பெற்று வந்து விடக் கூடாதென்று கருதி , அச்செம்மறியாட்டின் இறைச்சிக் கறி வைத்து சமைத்து தாம் ஒரு பாதியையும் மற்றொரு பாதியைத் தம் மனைவியுமாக உண்டனர் .

இதனை அறிந்த இப்லீஸ் " நான் விரும்பியது நிகழ்ந்து விட்டது. ஆதம் ஹவ்வா இரத்தத்துடன் கலந்து இதயத்தில் நான் நிலையான இருப்பிடம் பெற்றுவிட்டேன் " என்று மகிழ்ச்சி பொங்க பகர்ந்தான் .

இப்படிதான் ஆதத்தின் தம்பதிகளின் இரத்த அணுக்களோடு அணுக்களாக கலந்து அவர்களின் வம்சவளிகளின் ஒவ்வொருவரின் இரத்த அணுக்களின் புகுந்து ஓட ஆரம்பித்து விட்டான் .
ஆதாரம் : திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

ஆதத்தின் மக்களின் இரத்த நாளங்களில் இரத்தத்தோடு இரத்தமாக இப்லீஸ் ஓடிக் கொண்டுள்ளான் என்று கருத்துப் பட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கதாகும்.
4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்).

#ரஹ்மத்ராஜகுமாரன்

Sunday, 5 December 2021

தர்மம் ஒன்றுக்கு 10 மடங்கு

கராமத் 6

( 1 : 10 )

ராபியத்துல் அதவிய்யா ( ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்களின் இல்லத்திற்கு 9 நபர்கள் வந்தார்கள். வந்தவர்கள் தங்களுக்கு ஹலாலான உணவினை கொடுக்கும்படி வேண்டினார்கள். அவர்களின் இல்லத்தில் அன்று இரண்டு ரொட்டிகள்தான் இருந்தன.

வந்த விருந்தினருக்கு அந்த இரு ரொட்டிகளை அவர்கள் முன்வைத்தார்கள். அது சமயம் வாசலில் ஒரு ஏழை பசிக்கு உணவு கேட்டு நின்றான். ராபியத்தில் பஸரிய்யா அவர்கள் விருந்தினர் முன் இருந்த அந்த இரு ரொட்டிகளை எடுத்து, ஏழைக்கு வழங்கி விட்டனர். விருந்தினருக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது.

சற்று நேரம் கழித்து, ஒரு பணிப்பெண் பாத்திரத்தில் 18 ரொட்டிகளை கொண்டு வந்து கொடுத்தாள். ராபியா அவர்கள் எண்ணிப்பார்க்க 18 ரொட்டிகள், 'இவை நமக்குள்ள உணவு இல்லை ' என்று திருப்பிக் கொடுத்தார்கள். 

மீண்டும் அவள் சென்று 20 ரொட்டிகளை கொண்டுவந்தாள். ரொட்டியை ராபியா அவர்கள் எண்ணிப்பார்க்க, 20 ரொட்டிகள் இருந்ததை கண்டு சந்தோஷத்துடன், விருந்தினர் முன் சமர்ப்பித்து  இதைப் புசியுங்கள் எனப்பணித்தார்கள். 

விருந்தினருக்கு ஒரே வியப்பாக இருந்தது. அது சமயம் ராபியா (ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் திருமறையில் :

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌  وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள் (அல்குர்ஆன் : 6:160)

ஒரு நன்மை தர்மம் செய்ய அல்லாஹ் பத்து மடங்கு நன்மை தானம் வழங்குவான் என்று கூறி இந்த ஆயத்தை ஓதி காண்பித்தார்கள். நான் இரு ரொட்டிகளை தர்மம் செய்தேன். முதலில் 18 ரொட்டிகள்தான் வந்தது. திருப்பிக் கொடுத்து விட்டேன். பின்பு அல்லாஹ் 20 ரொட்டிகளை வழங்கியுள்ளான். நான் பெற்றுக் கொண்டேன்" என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுவது பொய்யல்ல ! உண்மை என்றுரைத்தார்கள்.

......   x   ................ x ........... x ............... x ............. x ............ x........... x................ x.................... x....

இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் இல்லத்தில் ஒருநாள் ஏழை தம் பசியை கூறி முறையிட்டார். தன் மனைவியிடம் ஏதும் இருந்தால் கொடுத்து அனுப்புங்கள் என்று பணித்தார்கள் 

இமாம் அவர்கள் வீட்டில் எந்த உணவும் அன்று இல்லை. இரண்டு நல்ல முட்டையும் ஒரு கூமுட்டையும்தான் இருந்தது. அதை அந்த ஏழைக்கு அறமாக வழங்கி விட்டார்கள் .

சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்தாள் . அவள் கூடை நிறைய முட்டைகளை வைத்து இமாம் அவர்களிடம் கொடுத்தாள் . அவள் கோழிப்பண்ணை வைத்திருக்கலாம் . இமாம் அவர்கள  முட்டைக் கூடையை பெற்று , தன் மனைவியிடம் கொடுத்தார்கள் .

அந்த பெண் கொடுத்த  கூடையில் உள்ள முட்டைகளை எண்ணிப் பார்க்க  30 முட்டைகள் இருந்தது. அதை பரிசோதித்ததில் 20 நல்ல முட்டையும் பத்து கூமுட்டையும் இருக்கிறதே... என்று மனைவி தன் கணவரிடம் முறையிட,

" நீ கொடுத்த ரெண்டு முட்டையில் ஒன்றுக்கு கூமுட்டைதானே.. நீ வழங்கியது போன்று அல்லாஹ் உனக்கு 1க்கு 10 வீதம் கொடுத்துள்ளான் என்று கூறி,

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌  وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

 (அல்குர்ஆன் : 6:160) 

என்கின்ற இந்த வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

அவுலியாக்கள் தங்களுக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். குர்ஆன் அல்லாஹ் தஅலாவின் வார்த்தையல்லவா ...

ரஹ்மத் ராஜகுமாரன் .

Monday, 29 November 2021

பறவைகள் அதிசயம்

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? 

ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!
படைத்த இறைவன் நமக்கு  வாழ்வாதாரம் கிடைக்க போதுமானவன்

Thursday, 18 November 2021

குர்ஆனின் அத்தாட்சிகள் சில

#அல்குர்ஆன்_இறைவேதம்_என்பதை_உறுதி_செய்ய_சில_அத்தாட்சிகள்...

📓உலகை மையம் நடுவில் கஃபா🕋 ஆலயம் அமைந்துள்ளது.

📓கடல்கள் ஒன்றை ஒன்று சேராது.

📓 பிர் அவ்ன் உடல் உலக அழிவு நாள் வரை மக்களுக்கு படிப்பினையாக பாதுகாப்போம்.

📓நபி ஹூத் அலை அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஆது சமுதாயம் மலைகளை குடைந்து மாளிகைகள் அமைத்து வாழ்ந்த இடங்கள்.

📓நபி ஸாலிஹ் அலை அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸமூது கூட்டாத்தார்கள் வாழ்ந்த குகைகள்.

📓நபி லூத் அலை அவர்கள் சமுதாயம் வாழ்ந்த ஊரு தலை கீழாக பிரட்டி அடிக்கப்பட்டது. சவக்கடல். 

📓நபி இஸ்மாயீல் அலை அவர்கள் காலத்தில் பாலை வனத்தில் உருவான ஸம் ஸம் கிணறு. உலக அழிவு வரை வற்றாத நீர்.

📓நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை நேரில் சந்தித்து பார்க்க சென்ற தூர்சீன மலை.

📓 பிர் அவ்ன் நபி மூஸா அலை அவர்கள் சமூகத்தார்களை துரத்தி வரும் போது கடல்களும் மலைகளும் பிளந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்துக்கு வழி கொடுத்த இடம் அந்த மலைகள் இன்றும் பிலந்தே காணப்படுகின்றது.

📓உலகில் இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதில் அக்ஸா பள்ளிவாசல்.

📓நாம் சுவாசிக்கும்  காற்று மீண்டும் உலகை சுற்றி வந்து நம்மிடம் சேர எடுக்கும் நாட்கள் இரண்டு மாதங்கள் என்ற வசனம்.
https://m.facebook.com/story.php?story_fbid=3803487729747594&id=2131838973579153

📓அபூ லஹப் மீது சாபமிட்ட வசனம். அந்த வசனங்கள் இறங்கப்பட்ட பின்னும் அபூ லஹப் 12 அவன் மனைவி  ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். அவர்களுடன் இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அபூ லஹபுக்கும் அவன் மனைவிக்கும் இஸ்லாத்தை ஏற்றுக மனம் வரவில்லை அப்படி வந்து இருந்தால் அல்குர்ஆன் வசனங்கள் பொய்யாக ஆகி இருக்கும். அல்குர்ஆன் வசனத்தை மாற்றி அமைக்க வேண்டி வந்திருக்கும். இந்த வசனத்தை வைத்தும் அபூ லஹப் வாழ்கையை வைத்து ஆராய்ந்த மாபெரும் கிறிஸ்தவ பாதிரியார் ஒரு விஞ்ஞானி அவர் இஸ்லாத்தில் பிழை கண்டு பிடிக்க தேடிய வசனத்தில் அவருக்கு கிடைத்த திருப்பு முனையாக அமைந்தது இந்த சூரா இதை வைத்து அந்த விஞ்ஞானி இது சத்தியமாக இறை வேதம் என்று சாட்சி கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பார்த்தீர்களா அல்லாஹ் ஒருவருக்கு அருள் ஹிதாயத் வழங்க வேண்டும் என்று நாடினால் எப்படி வழங்கி இருக்கின்றான் என்று. அந்த விஞ்ஞானி சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த முஸ்லீம்களே திகைத்து நின்றார்கள். முஸ்லீம்களுக்கு கூட அப்படி ஆராய சிந்திக்க யோசனை வரவில்லை. அல்லாஹூ அக்பர்.

📓அதே போல் கருவில் குழந்தை உருவாவது.
வானில் கோல்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமல் அதற்குரிய பாதையில் சென்று கொண்டிருப்பது. வானம் பூமி கடல் இவைகளை பற்றி அல்குர்ஆன் வசனங்கள் கூறியதை அராச்சி  செய்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். நிச்சியமாக இது நபி முஹம்மத் (ஸல்) அவர்களாலோ அல்லது வேறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட வசனங்கள் இல்ல. நிச்சியமாக இது இறைவனால் நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த செய்திகள் என்று ஏற்றுக் கொண்டார்கள். சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் அவர்களின் உலக வாழ்க்கை பதவி அந்தஸ்து அதற்காக இஸ்லாத்தை ஏற்காமல்  நின்று விட்டார்கள்.

📓1400 ஆண்டுகள் ஆகியும் மாறாது மாற்றப் படாத அல்குர்ஆன் வசனங்கள்.

📓அல்லாஹூ அக்பர் இப்படி எல்லாம் இன்னும் நிறைய உண்டு. அல்குர்ஆன் உண்மை வேதம் என்று சாட்சி கூறியது. நீங்களும் அல்குர்ஆன் வசனங்கள் படித்து அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹூ அக்பர்.

📓அல்லாஹ்வே போதுமானவன் அல்லாவே படைத்தவன் பரிபாலிப்பவன். அவனே பெரியவன். அவனே அரசன். அவனே அருளாளன் அன்பாலன்.

📓ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[அல்குர்ஆன் 55:13]

வரகவி காஸிம் புலவர் அப்ப வலியுல்லாஹ்

*தாஹா நபி (ஸல்) பேசிய தமிழ் வார்த்தை..*
~~~~~~~~~~~~     ~~~~~~~~~~~

இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் நோயினால் அவதிப்பட்ட போது நபிகள் நாயகத்தின் மீது தாம் கொண்டிருந்த காதலை, பேரன்பினை  பாமாலையாகச் சூட்டி மகிழ்ந்ததே  "கஸீதத்துல் புர்தா" என்கிற அழகிய காவியம் . பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் இமாம் பூஸிரி (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி அவர்களின் உடலைத் தம் திருக்கரங்களால் தொட்டுத் தடவ அந்த ஆன்மிக உணர்வால் இமாம் பூஸிரி (ரஹ்) அவர்களின்  நோய் பரிபூரண குணமடைந்தது. மேலும் நபி பெருமானார் (ஸல்) தம் போர்வையை தனக்கு போர்த்திய காட்சியையும் இமாம் பூஸரி(ரஹ்) அவர்கள் கனவில் கண்டுகளித்து பேருவகை கொண்டார்கள் .. என்பது நாம் அறிந்த உலகப் புகழ்பெற்ற வரலாறு.

அதேபோல் நம் தமிழகத்தில் அண்ணலாரின் மீது அழகிய கவிபாடி அண்ணலாரின் அருள் பெற்ற "தமிழக பூஸரி" இமாமின் வாழ்க்கை வரலாறு ஒன்றையும் இந்த சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.

 தமிழகத்தில் புகழ் பெற்ற புலவர் அருணகிரிநாதர் . அவர் கடவுளான முருகனைச் சிறப்பித்துப் பாடிய திருப்புகழை தன் பாட வகுப்பில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் திருவடிக் கவிராயர் அடிக்கடி பாடி மகிழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய மாணவர்களும் அதை ஆர்வத்தோடு கேட்பார்கள்.

ஒருநாள் தன் பாட வகுப்பில் “இந்த புகழ் பெற்ற திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. உங்களால் இதுபோன்ற ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா"..? என்று இறுமாப்புடன் மாணவர்களை பார்த்து கேட்டார். “முடியும்!” என்று முன்வந்தார் மாணவர் காஸிம். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று மறுத்தார் ஆசிரியர்.

"உன்னால் முடிந்தால் ஒரு திருப்புகழை இயற்று பார்ப்போம் ” என்று கூறினார் திருவடிக் கவிராயர். 

இது கதையல்ல.. முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம்.
சிறுவயதிலேயே சிறந்த ஒழுக்கமும், இறை ஞானமும் நிறைந்து விளங்கிய காஸிம் அவர்கள் திருப்புகழுக்கு மறுபுகழ் எழுத முடிவு செய்தார்.
 அதுவும் அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களின் பேரில் திருப்புகழைப் படைக்க முடிவு செய்தார் காஸிம் .  ஆனாலும் அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனையும் , கவலையும் அவர்களுக்கு  ஏற்பட்டது. 

 தான் எழுதப் போவது அகிலத்தின் தூதர் அண்ணலாரைப்பற்றி.. அதற்கு அல்லாஹ்வின் அருளும் அண்ணல் நபியின் அருளாசியும் வேண்டுமல்லவா..? 
தினந்தோறும் காயல்பட்டணம் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று அதிகப்படியாக தொழுவார். பின்பு அண்ணலாரின் மீது அதிகம் ஸலவாத்தை ஓதுவார். 
முடிவில்..
“நபிகள் நாயகமே! உங்கள் புகழ் போற்றும் திருப்புகழை நான் இயற்ற வேண்டும். அதன் தொடக்க வாசகத்தைத் தாங்களே எனக்குச் சொல்லித்தர வேண்டும். அன்புகூர்ந்து ஆரம்பச் சொல்லை எனக்கு அறிவித்து தாருங்கள் அண்ணலே!” என்று மனமுருகி கேட்டுக்கொண்டே இருப்பார். 

காலம் கடந்து கொண்டே இருந்தது. ஒருநாள் கவலையில் கண்ணயர்ந்த காஸிம்  அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்சி தந்து "பகரும்" என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கூறினார்கள்.
 
அவ்வளவுதான்.. அண்ணலார் ஆரம்பித்து வைத்த அந்த ஒற்றை வார்த்தையை இவர் உச்சரிக்க தொடங்கியபோது கவிதை கொட்டத் தொடங்கியது.
அளவற்ற மகிழ்ச்சியடைந்த காஸிம் அவர்கள் நபிகள் நாயகத்தின் மீது திருப்புகழை வரிசையாக உச்சரிக்க தொடங்கினார்.

“பகரும்.. உருவிலி யருவிலி வெருவிலி சிறிதும் ஒருதலை பயிலிலி துயிலிலி பருவிணுனர்விலி துணையிலி யிணையிலி விரிவான பழைய சதுமறை முழுவது முணர்பவர் பசிய தமிழ்வளர் துறவற முளரெவரு பரவ வரிதரி தொரு பொருடிருவுள - வருளாலே”

இப்படியே அவர் பாடல் தொடர்ந்தது.
இடையில் நபிகளார் பிறந்த மக்கா நகரைக் குறிப்பிடும் ‘மக்கப் பதிக்கும்.. மக்கப் பதிக்கும்’.. என்ற சொல்லை மட்டுமே திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தது அவருடைய நாவு. அவருடைய சிந்தனை இன்னும் சிறப்பாக நபிகளை புகழ வார்த்தையை தேடியது. 
அப்போதும் கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தோன்றி "முயர் சொர்க்கப்பதிக்கும்".. என்று கூற "மக்கப் பதிக்குமுயர் சொர்க்கப் பதிக்கும் இரசூலே" என்று தன் பாடலை தொடர்ந்து எழுதி முடித்தார்கள்.

மொத்தம் 141 பாடல்களுடன் திருப் புகழை நிறைவு செய்தார் காஸிம் என்கிற அந்த மாணவர்.

ஆசிரியர் திருவடிக் கவிராயரிடம் அண்ணல் நபி பற்றி எழுதிய தன் திருப் புகழை ஒப்படைத்தார் அவர்.
 திரும்பத் திரும்ப அந்த சந்தக் கவிகளைப் பாடிப் பரவசமடைந்தார் அந்த ஆசிரியர். தனது மாணவரின் சிறப்பைப் பாராட்டி சாற்றுக்கவியும் பாடினார்.
 “விண்மேல் கொடிகட்டித் தாவுநல் காசிம்புலவர் கொழுங்கவியே” என்று புகழ்ந்தார் .

நபிகள் நாயகத்தின் தமிழ்க் குரலைக் கேட்கும் பாக்கியத்தை பெற்ற அந்த காஸிம் என்கிற மாணவர்தான் இன்றைக்கும் வரலாற்றில் அண்ணலாரின் மீது மிகச்சிறந்த பாமாலை எழுதிய "காயல்பட்டினம்  வரகவி, அருள்கவி காஸிம் புலவர் அப்பா ரலியல்லாஹூ அன்ஹு" என்று போற்றப்படுகிறார்கள்.

தன் வாழ்நாளின் பல நேரங்களில் அண்ணல் நபிகளாரை கண்ணுற்று இன்பம் கண்டவர்கள் "தன் வாழ்நாளின் இறுதியிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணவேண்டும். அதன்பின் வேறு எதையும் தான் உலகில் காண விரும்பவில்லை" எனவும் இறைவனிடம் துஆ கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இறைவனும் அவர்களது துஆவை கபூல் செய்தான்.
அண்ணல் நபிகளாரை கண்டபின் அவர்களின் கண்கள் மரணம்வரை திறக்கவே இல்லை.

"வரகவி காஸிம் புலவர் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹு" அவர்கள் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில் அடங்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களது வாரிசான ஏழு தலைமுறையினரும் சிறந்த கவிஞர்களாக திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணல் நபிகளார் ஆரம்பித்துக் கொடுத்த கவிதை வரிகளைக் கொண்டு தன் திருப்புகழை தொடங்கிய காஸிம் புலவரின் வாரிசுகள் கவிஞர்களாக  புகழ்பெற்று இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே..?

ஸல்லல்லாஹூ அலா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.

*செய்யது அஹமது அலி. பாகவி*

Saturday, 13 November 2021

ஆண்டகை என ஏன் அழைக்கிறோம்

*"ஆண்டகை_ஆண்டவர்" என்று அவ்லியாக்களின் அரசரை குறிப்பிடுவது ஏன்..?* 

*இறைத்தூதரை குறிப்பிட நாயகம்_ பெருமானார் ஆகிய இரு சொற்களை கையாண்ட தமிழ் முஸ்லிம்கள் இறைநேசரைக் குறிப்பிட ஆண்டகை என்ற தமிழ்ச் சொல்லைக் கையாண்ட னர்.* 

*சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் பேரகராதியின் பதிப்பாசிரியரும், தமிழ் பேராசிரியருமான திரு. எஸ். அனவரத விநாயகம் பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்து வெளியிட்ட கழகத் தமிழ்
கையகராதி ஆண்டகை எனும் சொல்லுக்கு *ஆண்மை தன்மை_யுடையோன் சிறந்தோன் ஆகிய பொருட்களை தருகின்றன....*

*தமிழ் இலக்கணத்திலுள்ள புணர்ச்சி விதி (அரபியில் இத்காம் என்பர்) யின் படி ஆண்தகை என்பது தான் ஆண்டகை என்றாயிற்று.. எனவே ஆண்டகை எனும் சொல்லைப் பதம் பிரிக்கும் போது ஆண்தகை என்று அமையும்...* 

*ஆண்டகை என்றால் ஆண்களிலேயே தகுதி மிக்கவர் என்பது பொருளாகும்..* 

*ஆன்மீகச் சொல் வழக்கில் இறை நேசர்களை அல்லாஹ்வின் ஆண்கள் (வீரச் சிங்கங்கள்) எனும் பொருளில் ரிஜாலுல்லாஹ் என்று குறிப்பிடுவது உண்டு. எனவே தான் மேற்கண்ட உயர்ந்த பொருட்களின் அடிப்படையில் இறைநேசச் செல்வர்களின் 
இணையற்ற தலைவரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை முஹ்யித்தீன் ஆண்டகை என்று தமிழ் முஸ்லிம்கள் குறிப்பிட்டு வருகின்றனர்...* 

*ஆண்டகை என்பதைப் போல ஆண்டவர் என்றும் இறைநேசச் செல்வர்கள் அழைக்கப்படுவதுண்டு. இந்தச் சொல் இறைநேசச் செல்வர்களுக்கு ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்? என்று சிலர் கேட்கின்றனர்..* 

*ஆண்டவர் என்றால் ஆட்சி செய்தவர் என்று பொருள்.*

*இறைநேசச் செல்வர்கள் ஆண்டவர்களானால் அவர்கள் மண்ணை ஆண்டவர்களா? இல்லை மனத்தை ஆண்டவர்கள்..* 

*கவ்து நாயகம் ரலியல்லாஹு நினைவுக் கவியரங்கம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற போது அதில் சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை சாஹிப் குறிப்பிட்டது போல்...* 

*மண்ணை ஆண்டவர்கள், மன்னாதி மன்னர்கள்..* 

*மண்ணுக்குள் மறைந்த பின்னர் மக்களும் மறந்தனர்.* 

*தன்னை ஆண்டவர்கள் தவஞான மேதைகள்.* 

*இன்னும் வாழ்கின்றனர் ஈமானோர் நெஞ்சுகளில்.* 

*என்ற உண்மையை எவராலும் மறக்கவியலாது.* 

*ஆம்!* 

*பாரசீக நாட்டை ஆண்ட ஹாரூன் ரஷீத், மாமூன் ரஷீத், முஃதஸிம் பில்லாஹ், முக்தஃபி அம்ரில்லா போன்ற மன்னர்களை இந்நாளில் யாரேனும் எண்ணிப் பார்த்து நினைவு விழா எடுக்கிறார்களா?*

     *இல்லை!* 

*பாரசீகத்தில் பாதுஷாவாக பகட்டுடன் வாழ்ந்த இவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்காத இதயத்தில் பதிக்காத இவ்வுலகம் அதே பாரசீகத்தில் பக்கீர்ஷாவாக பக்திப் பெருக்குடன் வாழ்ந்த ஏந்தல் முஹ்யித்தீன் ஆண்டகையை எண்ணிப் பார்த்து விழா எடுக்கிறது என்றால் என்ன காரணம்?* 

*அவர்களெல்லாம் மண்ணை ஆண்டவர்கள். இவர்கள் தன்னை ஆண்டவர்கள்.
தன் மனத்தை ஆண்டவர்கள்.
அவர்கள் மனத்திற்கு அடிமையானார்கள்.
இவர்கள் மனத்தை அடிமையாக்கினார்கள். அவர்கள் படைப்புகளை மனத்தில் நிறைத்தார்கள். இவர்களோ படைத்தவனையே 
தன் மனத்தில் நிறைத்தார்கள்..* 

*மண்ணை ஆண்டவர்களை விட மனத்தை ஆண்டவர்கள் மாண்பு பெற்றிடக் காரணம் மனத்தை ஆளுவதற்கு மாபெரும் வலிமை வேண்டும். ஆற்றல் வேண்டும். வானத்தை வில்லாக  வளைப்பதை விட, கடலினை கடுகுக்குள் நுழைப்பதை விட, மலைகளை பந்தாக உருட்டுவதை விட, பூமியை பாயாக சுருட்டுவதை விட, மனத்தை ஆளுவதும், அடக்குவதும் மாபெரும் வலிமை மிக்கதாகும்... இத்தகைய வலிமை மண்ணை ஆளுவதற்கு தேவையில்லை. யார் வேண்டுமானாலும் மண்ணை ஆளலாம்.மண்ணை ஆளுவதற்குரியவர்களை நாம் தேர்ந்தெடுக்கும். 

*தேர்தலில்
சுட்டுவிரலில் தொட்டுவைக்கும்
கரும்புள்ளி..*
வெறும் புள்ளிகளையும்
பெறும்புள்ளிகள் ஆக்கும்
கரும்புள்ளி! 
பெரும்புள்ளி களையும்
வெறும்புள்ளிகள் ஆக்குவதும்
இந்தக் கரும்புள்ளியே!! 

*என்று அகவிகடக் கவிஞர் தி. மு. அப்துல் காதர் அவர்கள் சுட்டிக் காட்டுவது நினைவு கூரத் தக்கதாகும்...* 

*எனவே தான் தன் இதயத்தை ஆண்டதால்_ஆண்டவராகிய_அருள்ஞான வேந்தர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அவர்கள் நற்றமிழ் இலக்கியங்களில் இலங்குவது போல் நமது இதயங்களிலும் இலங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...* 

*தகவல்: M. #சிராஜுத்தீன்அஹ்ஸனி.*

*மஹ்ழரா 150_வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலரில்...* 

*#தேங்கை_ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ஹஸ்ரத் அவர்கள் எழுதிய கட்டுரை.....*

Monday, 11 October 2021

الاحتفال بمولد النبي

أول من احتفل بمولد سيدنا رسول الله ليس الشيعة
#ولكن
١- أول من احتفل بمولد النبي هو سيدنا رسول الله .. 
٢- ثم احتفل الصحابة الكرام بسيدنا رسول الله..
٣- ثم أفراد علماء الإسلام تأليف الكتب في مولده..
٤- ثم أظهر الإحتفال بالمولد وتوسع فيه.
الملك المظفر حاكم أربيل في عهد صلاح الدين الأيوبي.

#الدليل : أن أول من احتفل بمولد النبي هو رسول الله.

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رضي الله عنه أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ؟ قَالَ: «إِنَّ ذَلِكَ الْيَوْمَ الَّذِي وُلِدْتُ فِيهِ، وَأُنْزِلَ عَلَيَّ فِيهِ» (صحيح)
# هذا الحديث أصل في الاحتفال والاهتمام بالمولد النبوي الشريف، حيث إنه صلى الله عليه وآله وسلم نص على أن يوم ولادته له مزية على بقية الأيام، وللمؤمن أن يطمع في تعظيم أجره بموافقته ليوم فيه بركة، وتفضيل العمل بمصادفته لأوقات الامتنان الإِلهي معلوم قطعا من الشريعة، ولذا يكون الاحتفال بذلك اليوم، وشكر الله على نعمته علينا بولادة النبي، ووجوده بين أظهرنا، وهدايتنا لشريعته، مما تقره الأصول.

#الدليل : أن الصحابة احتفلوا بسيدنا رسول الله.

قال سيدنا معاوية رضي الله عنه : خرج رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ على حَلْقةٍ يعني من أصحابِهِ فقالَ ما أجلسَكم قالوا : جلَسنا ندعوا اللَّهَ ونحمَدُهُ ، على ما هدانا لدينِهِ
((ومنَّ علينا بِكَ)) قالَ آللَّهُ ما أجلسَكم إلَّا ذلِكَ قالوا آللَّهُ ما أجلسنا إلَّا ذلِكَ قالَ أما إنِّي لَم أستحلِفْكم تُهمةً لَكم وإنَّما أتاني جبريلُ عليْهِ السَّلامُ فأخبرَني أنَّ اللَّهَ عزَّ وجلَّ يُباهي بِكمُ الملائِكةَ.
# واِجْتِمَاعُ الصحابة وجلوسهم يشكرون الله على مامن عليهم برسول الله وذكرهم ذلك للنبي ورسول الله لم ينكر عليهم دليل على جواز الاجتماع والإحتفال بمولده الشريف.
# وكان يمدحه حسان في المسجد وكما مدحه كعب بن زهير في بردته ( بانت سعاد ) 

#الدليل: أن علماء الإسلام أفردوا تأليف الكتب في مولده.

١- الإمام الواقدي المتوفى 207هـ... 
٢-الإمام ابن أبي عاصم النبيل المتوفى 287هـ.. 
٣-الحافظ أبي العباس العزَفي المتوفى 603هـ... 
٤-الحافظ ابن دحية الأندلسي المتوفى 633هـ.. 
٥-الحافظ ابن كثير المتوفى 744هـ.. 
٦-الحافظ العراقي المتوفى 806هـ.. 
٧-الحافظ ابن الجزري المتوفى 833هـ،له كتابان في المولد، ٨-الحافظ ابن ناصر الدين الدمشقي المتوفى 842هـ، 
٩-الحافظ السيوطي المتوفى 911هـ، 
١٠-الحافظ ابن حجر الهيتمي المتوفى 974هـ. 
١١-تاج العارفين المناوي المتوفى: 1031هـ. 
غيرهم من علماء الأمة وكبار محدثيها قديمًا وحديثًا ممن 
وغيرهم الكثير والكثير،وتوجد مئات الكتب المؤلفه في مولد سيدنا رسول الله عبر التاريخ.

#الدليل : أن أول من أظهر الإحتفال بالمولد وتوسع فيه.
الملك المظفر حاكم أربيل في عهد صلاح الدين الأيوبي.

١- قال الإمام السيوطي أن أول من احتفل بالمولد بشكل كبير ومنظم هو حاكم أربيل (في شمال العراق حاليًا) الملك المظفر أبو سعيد كوكبري بن زين الدين علي بن بكتكين[15]، والذي وثقه علماء السنة بأقوالهم:

٢- قال الإمامان السيوطي وابن كثير: أنه أحد الملوك الأمجاد والكبراء الأجواد، وكان له آثار حسنة، وهو الذي عمر الجامع المظفري بسفح قاسيون.

٣- وقال عنه الإمام ابن خلِّكان في (وفيات الأعيان ) بعد أن وصف ما كان يفعله في يوم المولد: "وكان كريم الأخلاق، كثير التواضع، حسن العقيدة، سالم البطانة، شديد الميل إلى أهل السنة والجماعة، لا ينفق عنده من أرباب العلوم سوى الفقهاء والمحدثين، ومن عداهما لا يعطيه شيئًا إلا تكلُّفًا ...".
ثم أطال ابن خلِّكان في ترجمته ثم قال: "وليعذر الواقف على هذه الترجمة ففيها تطويل، ولم يكن سببه إلا ما له علينا من الحقوق التي لا نقدر على القيام بشكر بعضها، ولو عملنا مهما عملناه، وشكر المنعم واجب، فجزاه الله عنا أحسن الجزاء، فكم له علينا من الأيادي، ولأسلافه على أسلافنا من الإنعام، والإنسان صنيعة الإحسان، ومع الاعتراف بجميله فلم أذكر عنه شيئًا على سبيل المبالغة، بل كل ما ذكرته عن مشاهدة وعيان، وربما حذفت بعضه طلبًا للإيجاز.

٤- قال الحافظ الذهبي: "وأما احتفاله بالمولد، فيقصر التعبير عنه؛ كان الخلق يقصدونه من العراق والجزيرة، وتنصب قباب خشب له ولأمرائه وتزين، وفيها جوق المغاني واللعب، وينزل كل يوم العصر، فيقف على كل قبة ويتفرج، ويعمل ذلك أيامًا، ويخرج من البقر والإبل والغنم شيئًا كثيرًا، فتنحر، وتطبخ الألوان، ويعمل عدة خلع للصوفية، ويتكلم الوعاظ في الميدان، فينفق أموالًا جزيلة، وقد جمع له ابن دحية: (كتاب المولد)، فأعطاه ألف دينار.

ثم يقول الحافظ الذهبي في صفة هذا الحاكم: "وكان متواضعًا، خيِّرًا، سنيًّا، يحب الفقهاء والمحدِّثين، وربما أعطى الشعراء، وما نُقِلَ أنه انهزم في حرب". سير أعلام النبلاء (22/ 336).

٥- قال ابن كثير : «كان الملك المظفر يعمل المولد الشريف في ربيع الأول ويحتفل به احتفالاً هائلاً، وكان مع ذلك شهمًا شجاعًا بطلاً عاقلاً عالمًا عادلاً»

وقال أيضاً: ( ما من بيت، أو محلّ، أو مسجد قُرِئ فيه مولد النبيّ صلّى الله عليه وآله وصحبه وسلّم، إلا حفّت الملائكة أهل ذلك المكان, وعمهم الله تعالى بالرحمة والرضوان) الوسائل في شرح المسائل للسّيوطي.

#الشاهد_مما_سبق
١-الشيعة ليسوا هم أول من احتفلوا بميلاد سيد الخلق سيدنا محمد، وأن هذا القول باطل، وقد بينا ذلك بالأدلة. 
٢- أول من احتفل بمولد النبي هو سيدنا رسول الله .. 
٣- ثم احتفل الصحابة الكرام بسيدنا رسول الله..
٤- ثم أفراد علماء الإسلام تأليف الكتب في مولده..
٥- ثم أظهر الإحتفال بالمولد وتوسع فيه.
الملك المظفر حاكم أربيل في عهد صلاح الدين الأيوبي.

أحمد عبد الكريم الأزهري

Sunday, 10 October 2021

ஸலவாத் ஓர் அற்புத கேடயம்



ஷெய்க் முஹம்மது நிம்ர் அல்-காதிப் (1918 - 2010) அன்னவர்கள் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த சூஃபி குடும்பத்தை சார்ந்த சிறந்த மார்க்க அறிஞர். 

ஷெய்க் நிம்ர் அல்-காதிப் அன்னவர்கள் பாலஸ்தீனத்தில் ஒருமுறை காரில் இருந்த போது,  எதிரிகள் திடீரென அவரது காரின் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தினர்.  அத்தாக்குதலில் காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் பயனிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஷெய்க் நிம்ர் அவர்கள் மட்டும் பாதுகாப்பாக உயிர் தப்பினார்கள் !

ஷெய்க் அவர்கள் இந்நிகழ்வை குறித்து  சத்தியமிட்டு கூறுகிறார்கள்: 

அந்த துப்பாக்கி தாக்குதல் முடிந்த போது, எனது சட்டையை எடுத்து பார்த்தேன், அதில் 30 புல்லட்கள் எனது சட்டையை துளைத்து ஓட்டை  போட்டிருந்தன.  ஆனாலும் என் உள்ளே எந்த குண்டுகளும் பாயவில்லை! 

இவ்வற்புதம் எவ்வாறெனில், நான் ஒவ்வொரு நாள் காலையிலும் புர்தா ஷரிஃபில் வரும் ஒரு வரியை அனுதினமும் ஓதி வரும் வழக்கம் கொண்டிருந்தேன். 

*وَمَنْ تَـكُنْ بِرَسُـولِ اللهِ نُصْرَتُـهُ*
*إِنْ تَلْقَهُ الْأُسْـدُ فِي آجَــامِهَا تَجِمِ*

*யார்_ஒருவர்_அல்லாஹ்வின்_ரசூலின் ﷺ  உதவியை நாடி, ரசூல் நாயகத்தின் உதவியை பெற்றிருப்பாரோ,  அவர் சிங்கத்தின் குகைக்குள்ளேயே இருந்தாலும் சிங்கமே அவரை கண்டு பயந்து நிற்கும்!*
(புர்தா ஷரிஃப்)

(அண்ண லாரி னுதவியை
    அண்டி நின்ற வர்களுக்
கண்ணு மரியும் புலியெலாம்
    அஞ்சி நிற்கு முண்மையே.

அண்ண லாரி னருளினை
    அடைந்த வர்த மக்கெலாம்
உண்ணுந் தீரச் சீயமும்
    கண்டொ துங்கி நிற்குமாம்.)
(அற்புத அகில நாதர்)

என்ற புர்தா வரிகளையும்,  ஸலவாத்துக்களையும் நான் அதிகம் ஓதி வந்ததால் நான் குண்டு துளைக்காமல் பாதுகாக்கப்பட்டேன் என்றார்கள் !

ஷெய்க் நிம்ர் அல்-காதிப் அவர்கள் பின்னாட்களில் மதீனா ஷரிஃபில் மறைந்து அல்- பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் ! 

இதைப்போன்றே, நக்ஷபந்தியா தரீக்கா வை சேர்ந்த ராணுவ தலைவர் ஷெய்க் இமாம் ஷாமில் (1797 - 1871) அவர்களின் ரஷ்ய வல்லரசுக்கு எதிரான வெற்றியின் ரகசியமும் ஸலவாத்தே ஆகும். 

இமாம் ஷாமில் அவர்களை எதிர்த்து ரஷ்யர்கள் 20 வருடங்களுக்கு மேலாக போர் புரிந்தும் அன்னவர்கள் வாளால் குத்தப்பட்டும் அவர்களை அது ஒன்றும் செய்யவில்லை. இறுதியில் இமாம் ஷாமில் அவர்கள் மதீனா வந்தடைந்து ரசூல் நாயகம் ﷺ அவர்கள் வாழும் புனித பூமியில் அடக்கம் செய்யப்பட்டார்கள் !

சத்திய சஹாபாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் தூதரை, உயிருக்கு மேலாக போற்றி, அருமை நாயகம் ﷺ பயன்படுத்திய புனித பொருட்களை வஸீலாவாக கொண்டு உதவியையும் வலிமையையும்  தேடினார்களோ. அதைப்போல் நாமும் ரசூலுல்லாஹ் நாயகம் ﷺ மீது அதிகமதிகம் ஸலவாத்து ஓதி அவர்களின் உதவியை பெறுவோமாக !

Courtesy: Shaykh Mohammed Aslam (UK)
தமிழில்: 
ஜமால் முஹம்மது

Wednesday, 29 September 2021

ابو بكرٍ الباقلاني

இறைவனாக இருப்பவர் எப்படி சிலுவையில் அறையப்பட்டார்?

இமாம் அபுபக்கர் அல் பாக்கில்லானி ரஹ்...  அவர்கள் விவாதம் செய்வதில் புகழ்பெற்றவர்.
அவர் ஒரு கிறித்தவ பாதிரியாரை சந்தித்தார் அந்தப் பாதிரியார், முஸ்லிம்களாகிய நீங்கள் இனவெறி பிடித்தவர்கள் என்றார்.
ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்று பாக்கில்லானி கேட்டார்

யூத கிறித்தவ பெண்களை திருமணம் முடிக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்; ஆனால் உங்களுடைய பெண்களை மற்றவர்கள் மணமுடிக்க அனுமதிப்பதில்லை ஏன்? என்று கேட்டார்.

பாக்கில்லானி கூறினார்:  நாங்கள் யூதப் பெண்களை மணமுடிக்க காரணம், யூதர்களின் திருத்தூதர் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாங்கள் நபியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதேபோன்று கிறிஸ்தவர்களையும் நாங்கள் மணமுடிக்கிறோம், காரணம் அவர்களின் தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் நாங்கள் நபியாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் எப்போது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக ஏற்றுக்கொள்கிறீர்களோ அப்பொழுது எங்களது பெண்களை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறோம் என்றார்.

கேட்ட பாதிரியார் பதில் சொல்ல தடுமாறினார்.

இன்னொரு சம்பவம்:
ஹிஜிரி 371  இல் நடந்தது.
அப்போதைய ஈராக் மன்னர் இமாம் அவர்களை அழைத்து கான்ஸ்டான்டினோபிளில் உள்ள கிறிஸ்தவர்களுடன் விவாதிக்க அனுப்பினார்.

ரோமானிய மன்னர், அபூபக்கர் அல்-பாக்கில்லானியின் வருகையைப் பற்றி கேள்விப்பட்டபோது, கதவின் உயரத்தை குறைக்கும்படி தனது ஊழியர்களுக்கு கட்டளையிட்டார், 

இதனால் இமாம் நுழைந்ததும், தலையையும் உடலையும் மண்டியிடுவது போலக் குனிய வேண்டிய கட்டாயம் ஏற்படும், அதனால் அவர் ரோமானிய மன்னருக்கும் அவரது ஆட்சிமன்றத்திற்கும் முன்பாக அவமானப்படுவார், என்பது மன்னரின் நோக்கம்.

இமாம் வந்தபோது, கதவின் உயரம் குறைக்கப்பட்ட சூழ்ச்சியை புரிந்து கொண்டார்; எனவே கதவை நோக்கி முதுகு தெரியுமாறு நின்று கொண்டு முன்னோக்கி குனிந்து அவரது பின்புறம் கதவு வழியாக அரசருக்கு தெரியும் விதமாக உள்ளே நுழைந்தார்.  

அதைப் பார்த்த மன்னர் இமாமின் புத்தி சாதுர்யத்தை புரிந்துகொண்டார்.

உள்ளே நுழைந்த பாக்கில்லானி அவர்கள் அங்கிருந்த மூத்த பாதிரியார்களை நோக்கி, நலம் விசாரித்தார்: எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய மனைவி மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டார்.

மன்னருக்கு கோபம் ஏற்பட்டது. எங்களது பாதிரியார்கள் மண முடிக்க மாட்டார்கள், குழந்தைகளைப் பெற்று எடுக்க மாட்டார்கள், என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்.

அதற்கு பாக்கில்லானி அவர்கள்: அல்லாஹ் மிகப் பெரியவன்; உங்களுடைய பாதிரியார்களை மனைவி மக்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று புனிதப்படுத்துகிறீர்கள்; ஆனால் உங்களுடைய இறைவன், மர்யம் அவர்களை மணமுடித்து ஈஸாவை பெற்றெடுத்தான் என்று கூறுகிறீர்கள், இது என்ன நியாயம் ?என்று கேட்டார்.

மன்னரின் கோபம் அதிகமானது. ஆவேசமாக கேட்டார்: ஆயிஷா பற்றி உம்முடைய கருத்து என்ன? என்று கேட்டார்.
அதற்கு பாக்கில்லானி: ஆயிஷா அவர்கள் மீது நயவஞ்சகர்கள் அவதூறு கிளப்பினார்கள், அதேபோன்று மரியம் அவர்கள் மீது யூதர்கள் அவதூறு கிளப்பினார்கள்; ஆனால் இருவருமே தூய்மையானவர்கள்; எனினும் ஆயிஷா மணமுடித்தார், குழந்தை பெறவில்லை; மரியம் அவர்களோ குழந்தை பெற்றெடுத்தார், ஆனால் மணம் முடிக்கவில்லை; 

இந்நிலையில் யதார்த்தமாக அவதூறு சொல்வதற்கு யார் தகுதியானவர்? ஆனால் இருவருமே தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் கூறி இருக்கிறான். என்றாலும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்? என்று கேட்டார்.

மன்னருக்கு பதில் சொல்ல முடியாமல் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

தொடர்ந்து கேட்டார் மன்னர்: உம்முடைய தூதர் போரிட்டிருக்கிறாரா?
ஆம்;
அவர் போரை முன்னின்று வழி நடத்தி இருக்கிறாரா?
ஆம்;
அவர் வெற்றி பெற்றிருக்கிறாரா?
ஆம்; 
அவர் தோல்வியுற்றிருக்கிறாரா ?
ஆம்;
ஆச்சரியமாக இருக்கிறது, இறைத்தூதர் தோல்வியை எப்படி தழுவினார்?  என்று கேட்டார், மன்னர்.
உடனே பாக்கில்லானி அவர்கள் கேட்டார்கள்: இறைவனாக இருப்பவர், எப்படி சிலுவையில் அறையப்பட்டார் ? என்று.

ரோமானிய மன்னன் வாயடைத்துப் போனான்.
(தாரீஹு பஃதாத்)

(அபூ பக்ர் முஹம்மது அல்-பாக்கில்லானி:  பிரபலமான இறையியலாளர், நீதிபதி, பன்னூல் ஆசிரியர், விவாதத் திறமை பெற்றவர். அவரது காலத்தில் பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக போராடி வெற்றி பெற்றவர்.
பிறப்பு: கி.பி 950, பாஸ்ரா, ஈராக்
இறந்தது: 5 ஜூன் 1013, பாக்தாத், ஈராக், 
அடக்கம் செய்யப்பட்ட இடம்: பாபுஸ் ஸாகிர், டமாஸ்கஸ், சிரியா)

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.
இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"
முதல் தளத்துல அறிக்கை பலகைல,
"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா
இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.
நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.
ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..
ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது