Thursday, 23 December 2021

இப்லீஸ் மனித ரத்த நாளங்களில்

நபிமார்கள் வரலாறு 24

( நம் இரத்த நாளங்களில் இப்லீஸ் எப்படி புகுந்தான் ? )

ஆதம் (அலை) அவர்கள் வெளியே சென்றிருந்த போது , தனியாக இருந்த ஹவ்வாவிடம் , இப்லீஸ் தன் சின்னஞ் சிறு மகன் ஹன்னாஸை ஒப்படைத்து விட்டு , " நான் முக்கியமான அலுவலின் காரணமாக வெளியே செல்ல வேண்டியதுள்ளது .எனவே நான் திரும்பி வரும் வரை என் மகனை உம்மோடு வைத்திரும் ! என்று கூறிவிட்டு சென்றான்,

வெளியே சென்றிருந்த ஆதம் (அலை) அவர்கள், தம் மனைவி ஹவ்வா யிடம் 

" யார் இது ...?" என்று கேட்க ,

"இப்லீஸின் மகன் ஹன்னாஸ் .தான் திரும்பி வந்து கூட்டிச் செல்வதாக கூறினான் " என்றார்கள் ஹவ்வா 

(குர்ஆனில் கடைசி சூரா الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏ 

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் (ஹன்னாஸ்) விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)
(அல்குர்ஆன் : 114:4-5)

"ஏன் சம்மதித்தாய் ? " என்று ஆதம்  மனைவியை கண்டித்து விட்டு  , ஹன்னாஸ் மீது பாய்ந்து அவனைக் கண்ட துண்டமாக வெட்டி மரக்கிளைகளில் தொங்க விட்டார்கள்

திரும்பி வந்த இப்லீஸ் , ஹவ்வாயிடம் 

" எங்கே என் மகன் ஹன்னாஸ் ?"

நடந்ததை கூறினார்கள் உடனே இப்லீஸ் 
" ஹன்னாஸ்....!  என்று ஒரு சப்தமிட்டான் .
ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த சதையும் , எலும்பும் ஒன்று சேர்ந்து ஹன்னாஸ் உருப்பெற்றான் .

அதன் பின் இப்லீஸ் ஹவ்வா யிடம், " "மீண்டும் எனக்கு அலுவல் இருப்பதால் , ஹன்னாஸை உம்முடன் சற்று நேரம் வைத்திரும் "என்று சொல்லிவிட்டு ஹவ்வா வின் பதிலை எதிர்ப்பார்க்காமல் மறைந்தான் .

சற்று நேரத்தில் ஆதம் (அலை) அவர்கள் வந்து விபரம் கேட்க , ஹவ்வா "என் பதிலைக் கூட கேட்காமல் இப்லீஸ் மகனை ஒப்படைத்து மறைந்தான் ." என்று கூற ...

ஹவ்வாவை வன்மையாக கண்டித்தார்கள் . பின் ஹன்னாஸை கொன்று அவனுடைய உடலை  எரித்துச் சாம்பலாக்கி பாதியை கடலில் கரைத்தும் மீதியை காற்றிலும் தூவி விட்டார்கள் .

சற்று நேரத்தில் இப்லீஸ் வந்து மகனை கேட்க ஹவ்வா விபரம் சொல்ல ... 

" ஹன்னாஸ் ..!" என்று கூப்பிட
மீண்டும் உருப்பெற்று ஹன்னாஸ் வந்தான் .
அதன் பின் ஹன்னாஸை செம்மறியாட்டின் உருவில் மாற்றி ஹவ்வா அவர்களிடம் பொய் சத்தியங்களெல்லாம் செய்து அவனை அவரிடம் ஒப்படைத்துச் சென்றான்.

இல்லம் மீண்ட ஆதம் (அலை) அவர்கள் செம்மறியாட்டின் உருவில் உள்ள ஹன்னாஸை கண்டதுண்டமாக வெட்டி , இனிமேல் மீண்டும் அவன் உயிர்ப் பெற்று வந்து விடக் கூடாதென்று கருதி , அச்செம்மறியாட்டின் இறைச்சிக் கறி வைத்து சமைத்து தாம் ஒரு பாதியையும் மற்றொரு பாதியைத் தம் மனைவியுமாக உண்டனர் .

இதனை அறிந்த இப்லீஸ் " நான் விரும்பியது நிகழ்ந்து விட்டது. ஆதம் ஹவ்வா இரத்தத்துடன் கலந்து இதயத்தில் நான் நிலையான இருப்பிடம் பெற்றுவிட்டேன் " என்று மகிழ்ச்சி பொங்க பகர்ந்தான் .

இப்படிதான் ஆதத்தின் தம்பதிகளின் இரத்த அணுக்களோடு அணுக்களாக கலந்து அவர்களின் வம்சவளிகளின் ஒவ்வொருவரின் இரத்த அணுக்களின் புகுந்து ஓட ஆரம்பித்து விட்டான் .
ஆதாரம் : திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

ஆதத்தின் மக்களின் இரத்த நாளங்களில் இரத்தத்தோடு இரத்தமாக இப்லீஸ் ஓடிக் கொண்டுள்ளான் என்று கருத்துப் பட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கதாகும்.
4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்).

#ரஹ்மத்ராஜகுமாரன்

Sunday, 5 December 2021

தர்மம் ஒன்றுக்கு 10 மடங்கு

கராமத் 6

( 1 : 10 )

ராபியத்துல் அதவிய்யா ( ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்களின் இல்லத்திற்கு 9 நபர்கள் வந்தார்கள். வந்தவர்கள் தங்களுக்கு ஹலாலான உணவினை கொடுக்கும்படி வேண்டினார்கள். அவர்களின் இல்லத்தில் அன்று இரண்டு ரொட்டிகள்தான் இருந்தன.

வந்த விருந்தினருக்கு அந்த இரு ரொட்டிகளை அவர்கள் முன்வைத்தார்கள். அது சமயம் வாசலில் ஒரு ஏழை பசிக்கு உணவு கேட்டு நின்றான். ராபியத்தில் பஸரிய்யா அவர்கள் விருந்தினர் முன் இருந்த அந்த இரு ரொட்டிகளை எடுத்து, ஏழைக்கு வழங்கி விட்டனர். விருந்தினருக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது.

சற்று நேரம் கழித்து, ஒரு பணிப்பெண் பாத்திரத்தில் 18 ரொட்டிகளை கொண்டு வந்து கொடுத்தாள். ராபியா அவர்கள் எண்ணிப்பார்க்க 18 ரொட்டிகள், 'இவை நமக்குள்ள உணவு இல்லை ' என்று திருப்பிக் கொடுத்தார்கள். 

மீண்டும் அவள் சென்று 20 ரொட்டிகளை கொண்டுவந்தாள். ரொட்டியை ராபியா அவர்கள் எண்ணிப்பார்க்க, 20 ரொட்டிகள் இருந்ததை கண்டு சந்தோஷத்துடன், விருந்தினர் முன் சமர்ப்பித்து  இதைப் புசியுங்கள் எனப்பணித்தார்கள். 

விருந்தினருக்கு ஒரே வியப்பாக இருந்தது. அது சமயம் ராபியா (ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் திருமறையில் :

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌  وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள் (அல்குர்ஆன் : 6:160)

ஒரு நன்மை தர்மம் செய்ய அல்லாஹ் பத்து மடங்கு நன்மை தானம் வழங்குவான் என்று கூறி இந்த ஆயத்தை ஓதி காண்பித்தார்கள். நான் இரு ரொட்டிகளை தர்மம் செய்தேன். முதலில் 18 ரொட்டிகள்தான் வந்தது. திருப்பிக் கொடுத்து விட்டேன். பின்பு அல்லாஹ் 20 ரொட்டிகளை வழங்கியுள்ளான். நான் பெற்றுக் கொண்டேன்" என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுவது பொய்யல்ல ! உண்மை என்றுரைத்தார்கள்.

......   x   ................ x ........... x ............... x ............. x ............ x........... x................ x.................... x....

இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் இல்லத்தில் ஒருநாள் ஏழை தம் பசியை கூறி முறையிட்டார். தன் மனைவியிடம் ஏதும் இருந்தால் கொடுத்து அனுப்புங்கள் என்று பணித்தார்கள் 

இமாம் அவர்கள் வீட்டில் எந்த உணவும் அன்று இல்லை. இரண்டு நல்ல முட்டையும் ஒரு கூமுட்டையும்தான் இருந்தது. அதை அந்த ஏழைக்கு அறமாக வழங்கி விட்டார்கள் .

சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்தாள் . அவள் கூடை நிறைய முட்டைகளை வைத்து இமாம் அவர்களிடம் கொடுத்தாள் . அவள் கோழிப்பண்ணை வைத்திருக்கலாம் . இமாம் அவர்கள  முட்டைக் கூடையை பெற்று , தன் மனைவியிடம் கொடுத்தார்கள் .

அந்த பெண் கொடுத்த  கூடையில் உள்ள முட்டைகளை எண்ணிப் பார்க்க  30 முட்டைகள் இருந்தது. அதை பரிசோதித்ததில் 20 நல்ல முட்டையும் பத்து கூமுட்டையும் இருக்கிறதே... என்று மனைவி தன் கணவரிடம் முறையிட,

" நீ கொடுத்த ரெண்டு முட்டையில் ஒன்றுக்கு கூமுட்டைதானே.. நீ வழங்கியது போன்று அல்லாஹ் உனக்கு 1க்கு 10 வீதம் கொடுத்துள்ளான் என்று கூறி,

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌  وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

 (அல்குர்ஆன் : 6:160) 

என்கின்ற இந்த வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

அவுலியாக்கள் தங்களுக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். குர்ஆன் அல்லாஹ் தஅலாவின் வார்த்தையல்லவா ...

ரஹ்மத் ராஜகுமாரன் .