#இஸ்லாமிய வரலாறு போற்றும் வீர ஸஹாபா பெண்மணிகள்.
#அஃப்ரா பின்த் உபைத் ரலியல்லாஹு அன்ஹா*
#மதீனாவைச் சேர்ந்தவர்கள் மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தின் நஜ்ஜார் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாரித் இப்னு ரிஃபாஆ என்பவருடன் இவருக்கு முதல் திருமணம் நிகழ்வுற்றது.
#இந்தத்_தம்பதியருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர் - முஆத், முஅவ்வித், அவ்ஃப். இந்த மூன்று சகோதரர்களுமே முஆத் இப்னு அஃப்ரா, முஅவ்வித் இப்னு அஃப்ரா, அவ்ஃப் இப்னு அஃப்ரா என்றே தாயின் பேறு ('குன்னியத்') பெயரால் அறியப்பட்டிருக்கிறார்கள்.
#பின்னர் அல்-ஹாரிதிடம் மணவிலக்குப் பெற்ற அஃப்ரா அம்மையார் மதீனாவிலிருந்து கிளம்பி மக்காவுக்குச் சென்றுவிட்டார். அங்கு மக்காவைச் சேர்ந்த அல்-புகைர் இப்னு அப்து யாலீல் அல்லைதீ என்பவருடன் மறுமணம் நிகழ்ந்திருக்கிறது...!!
#இருவருக்கும் நான்கு மகன்கள் பிறந்தனர் - ஆகில், காலித், இயாஸ், ஆமிர். மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சிப்பெற்று ரகசியமாய்ப் பரவிக் கொண்டிருந்த ஆரம்பத் தருணங்களிலேயே இந்நால்வரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்...!!!
#அதனால் முதல் முஸ்லிம்கள் என்று ஏற்பட்டுப்போன சிறப்பு ஒருபுற மிருக்க, பதின்மூன்று ஆண்டுகள் கழித்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன்களில் இவர்களும் இணைந்துகொள்ள, அவர்களோடு இணைந்து கொண்டது ‘ஹிஜ்ரத்’ சிறப்பும்..*
இஸ்லாமிய வரலாற்றின் முதல் முக்கியப் போரான பத்ருப் போர். முந்நூற்று பதின்மூன்று பேர் கொண்ட முஸ்லிம் படை பத்ரு நோக்கிச் சென்றது. அந்தப் படையில் அஃப்ரா அம்மையாரின் அனைத்து மகன்களும் ஆஜர்!
#தாய்ப்பாலுடன், வீரத்தைக் கலக்கி ஊட்டியிருந்திருக்கிறார் அஃப்ரா ரலியல்லாஹு அன்ஹா.
#பத்ருக் களத்தில் ஒருபுறம் ஆயிரத்துக்கும் மேலான போர் வீரர்களுடன் வலிமை வாய்ந்த, வெறிகொண்ட குரைஷிப் படை. மறுபுறம் மிகச் சொற்ப வீரர்களுடன்,
#போதுமான போர்த்தளவாட வசதிகூட இல்லாமல் முஸ்லிம்களின் எளிய படை. ஆனால் அவர்களின் நெஞ்சம் மட்டும் ஈமானிலும் வீரத்திலும் புடைத்திருந்தது...!!
#இறை நாட்டப்படி
பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில் பரவிக் கிடந்தன.
#குரைஷியர்களில் இறந்தவர்கள், சிறைபிடிக்கப் பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் ஓடிப் போயிருந்தார்கள்..!!!!
#கொடியவன் அபூஜஹ்லு என்ன ஆனான் என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்கள்,,, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...!!
“#அபூஜஹ்லு என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?”
உடனே கிளம்பி ஓடினார்கள்,?? அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.,,, சடலங்களுக்கு இடையே தேட, குற்றுயிராகக் கிடந்தான் அபூஜஹ்லு.,,,,
அவன் மேல் ஏறி அமர்ந்த இப்னு மஸ்ஊத், அவன் தலையைக் கொய்ய, அவனது கதைக்கு பெரியதொரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது....!!!
அபூஜஹ்லின் மரணம் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான செய்தி. அவர்களுக்குள் உற்சாகம் தொற்ற வைத்த நிகழ்வு. குரைஷித் தலைவர்களில் ஒருவனான, வலிமையான, அபூஜஹ்லை அந்தப் போரில் வீழ்த்திச் சாய்த்து, உருக்குலைத்தது யார் என்று முஸ்லிம்கள் விசாரிக்க,,,,,
“இரண்டு இளைஞர்களாம்;
சகோதரர்களாம்”
என்று விவரம் தெரியவந்தது.
“யார் அவர்கள்?”
“முஆத், முஅவ்வித். அஃப்ராவின் மகன்களுள் இருவர்.”
முஆத், முஅவ்வித் மட்டுமின்றி அந்தச் சகோதரர்கள் அனைவருமே அவர்களின் தாயார் அஃப்ராவின் பெயரால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது இங்கு ஒரு சுவையான தகவல்.
இன்னாரின் மகன் இன்னார் என்று தந்தையின் பெயரைக்கொண்டே அமைவது அரபு குல வழக்கம். இந்தச் சகோதரர்களுக்கு மட்டும் விலக்காய் அந்தச் சிறப்பு அமைந்தது,
‘எப்பேறு பெற்றாள் இத்தாய்’ !
நபியவர்களிடம் அஃப்ரா ரலியல்லாஹூ அன்ஹா கேட்ட ஒற்றைக்கேள்வி அப்படித்தான்
குரைஷிகளில் எழுபதுபேர் கொல்லப்பட்டு, எழுபதுபேர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர்....
முஸ்லிம்களின் தரப்பில் இழப்பு, பதினான்கு தோழர்கள். பதினான்கில் மூன்று பேர் அஃப்ராவின் மகன்கள் - முஆத், முஅவ்வித், அஃகீல்.
“நம் சமுதாயத்தின் பிர்அவ்னைக் கொல்வதற்குப் பங்காற்றிய அஃப்ராவின் இரு மகன்களின் மீதும் அல்லாஹ் தன் கருணையைப் பொழிவானாக” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள்.
அவனைக் கொல்வதில் வேறு யார் யார் பங்காற்றினார்கள் என்று கேட்கப்பட்டபோது,
“வானவர்களும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும்.”
மூன்று மகன்களை இழந்த சோகத்தில் இருக்கும் அஃப்ராவின் இல்லத்துக்கு நபியவர்களின் மனைவி அன்னை ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹா சென்று ஆறுதல் கூறி உதவியிருக்கிறார்.
ஆனால், உயிர்த் தியாகிகளுக்கான ஒப்பற்ற மறுமை வாழ்வைப்பற்றி கேட்டு உறுதி பூண்டிருந்த அஃப்ரா ரலியல்லாஹு அன்ஹாவுக்கு இந்த இழப்பு அளித்த தாக்கத்தைவிட,
தம் மூன்று புதல்வர்கள் உயிர்த் தியாகிகளாகிப் போனது ஆறுதலாகவும் பெரும் ஆனந்தமாகவுமே இருந்திருக்கிறது.
அவரது கவலையெல்லாம் போரிலிருந்து உயிருடன் திரும்பிவிட்ட மற்ற மகன்களைப் பற்றி என்பதுதான் பேராச்சரியம்....!
நபியவர்களைச் சந்தித்த அஃப்ரா ரலியல்லாஹு வினவினார். ஒற்றைக் கேள்வி.,,
“அல்லாஹ்வின் தூதரே! உயிருடன் இருக்கும் என் மகன்கள் இறந்துபோன என் மகன்களைவிட தாழ்ந்தவர்களா?”
“இல்லை” என்றார்கள் நபியவர்கள்.
அந்த ஒற்றை பதிலில் நிம்மதி அடைந்தது அந்தத் தாயின் நெஞ்சு!
மகன்கள் பட்டம் பெறவேண்டும்; பெரும் பதவி அடைய வேண்டும்; செல்வந்தனாக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை...!!!
இறைவனுக்காகவும் அவன் தூதருக்காகவும் தம் உடல், பொருள், உயிர், என்பதெல்லாம் மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளையும் அணிவகுத்து அனுப்பி மகிழ்ந்திருக்கிறார்கள் அந்த அன்னையர்.!!
*பிள்ளைகளின் மனத்திலும் உடலிலும் வீரத்தைப் பூசிப்பூசி உரமேற்றியிருக்கிறார்கள்*
அதனால்தான் இறந்துபோன மகன்களை நினைத்துப் பெருமிதமும், உயிருடன் மீந்து நிற்கும் மகன்களை நினைத்து வருத்தமும் அடைந்திருக்கிறார் தியாகிகளின் வீரத்தாய் அஃப்ரா பின்த் உபைத் ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்...!!
பிற்காலத்தில் யமாமா, மஊனாக் கிணறு போர்களில் மற்ற நான்கு மகன்களும்கூட வீரமரணம் எய்தியாகக் குறிப்புகள் அறிவிக்கின்றன.
‘எப்பேறு பெற்றார்கள் இத்தாய்’! ரலியல்லாஹு அன்ஹா!
(ஸஹாபாக்களின் சரிதை)
இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்க சோலைகளாகும்... அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.
அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.
அல்குர்ஆன் 98:8,9
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்
ஸித்றத்துல் முன்தஹா
No comments:
Post a Comment