*******************************************
உம் இறைவனை எந்த ஆண்டு கண்டுபிடித்தீர் என
நாத்திகவாதிகள் இமாம் அபூஹனீபா (ரஹ்)அவர்களிடம் கேட்டார்கள்
"அல்லாஹ் காலம்,நேரங்களைக் கடந்தவன் அவனுக்கு முன் எதுவுமில்லை”என்றார்கள் இமாம்.
அதெப்படி? எனக்கேட்டார்கள் நாத்திகவாதிகள்
இமாம் ;நான்கிற்கு முன் எது?
அவர்கள்: மூன்று
இமாம் : மூன்றுக்கு முன்?
அவர்கள்: இரண்டு
இமாம் இரண்டிற்கு முன்
அவர்கள்: ஒன்று
இமாம் : ஒன்றாம் எண்ணுக்கு முன்?
அவர்கள்: எதுவுமில்லை
இமாம்: கணிதவியலில் உருவாக்கப்பட்ட ஒன்றுக்கு முன் ஒன்றுமில்லை எனும் போது ஏகனான அல்லாஹ் ஒருவனுக்கு முன்னும் எதுவுமில்லை.
அவர்கள்: இறைவன் எந்த திசையை முன்னோக்குகிறான்?
இமாம்: இருளடைந்த அறையில் நீங்கள் ஒரு விளக்கை ஏற்றினால் ஒளி எந்த திசையை நோக்கி இருக்கும் ?
அவர்கள் : எல்லாதிசையிலும் அந்த ஒளி பரவும்
இமாம்: செயற்கை ஒளிக்கே திசை இல்லையெனும் போது அல்லாஹ், வானங்களுக்கும்,பூமிக்கும் ஒளியாவான் அவனுக்கேது திசை?
அவர்கள் : உங்கள இறைவனை வர்ணியுங்கள்
இரும்பு போன்ற திடப்பொருளா?,நீர் போல திரவப்பொருளா?
அல்லது புகை போன்று வாயுவா?
இமாம் :மரணப்படுக்கையில் இருப்பவர் அருகே இருந்ததுண்டா ?
அவர்கள் :ஆம்
இமாம் :உடலை அசைத்துக்கொண்டும், மூச்சுவிடடவண்ணம் இருந்தாரா?
அவர்கள் :ஆம் இருந்தார்.
இமாம் :திடீரென மூச்சுநின்றுவிட்டதா?
அவர்கள் : ஆம் நின்று விட்டது?
இமாம் :ஏன்?
அவர்கள் : அவர் உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டது.
இமாம் : வெளியேறிய உயிரை பற்றி எனக்கு விவரியுங்களேன். அதெப்படி இருந்தது??
இரும்பு போன்று திடப்பொருளா?,நீர் போல திரவப்பொருளா?
அல்லது புகை போன்று வாயுவா?
அவர்கள் : அதை பற்றி ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லை.
இமாம் : படைக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் ஒரு அடிப்படை தன்மையே நமக்கு புலப்படவில்லை என்றால் படைக்கப்படாத முதலும் முடிவுமாக இருக்கின்ற இறைவனைப் பற்றி என்னால் எப்படி வர்ணிக்கமுடியும்?
நாத்திகர்கள் வாய் அடைத்து நின்றார்கள்.
அரபியிலிருந்து தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ
No comments:
Post a Comment