வலிமார்கள் வாழ்வினிலே
யூனியா என்ற ஊரில் ஷைகு இஸ்மாயில் என்கிற செல்வந்தர் இருந்தார்அவரிடம் அழகிய பூங்கா ஒன்று இருந்தது அதை விலைக்கு வாங்க எண்ணி விலைக்கு கேட்டார் கத்தீபூ ஜமாலுத்தீன் என்கின்றவர்.
ஒரு தடவையல்ல பல தடவைகள் அவர் அந்த பூங்காவை ஷைகு இஸ்மாயில் அவர்களிடம் கேட்க ஆனால் ஷைகு இஸ்மாயில் அவர்கள் அதை தான் விற்பதற்கு இல்லை என்று கூறி விட்டார்கள்
அந்த பூங்காவை நாம் எவ்வாறு வாங்கிவிட வேண்டுமென்று தன்னுடைய ஆன்மீக ஆசானான அந்த பெருந்தகையிடம் இடம் சென்று தன்னுடைய கூறினார்கள்
அந்தப் பெருந்தகை சொன்னார் நானே உன்னுடன் வந்து இஸ்மாயிலிடம் பேசி உமக்கு அந்தப் பூங்காவை வாங்கி தருகிறேன் என்று சொன்னார்கள்
சரி என்று அந்த பெருந்தகையும் கத்தீபு ஜமாலுதீன் அவர்கள் இஸ்மாயில் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள் இல்லம் வந்த பெருந்தகையை பார்த்து ஷைகு இஸ்மாயில் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை தந்தது இருவரையும் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்த இஸ்மாயில் அவர்கள் பெருந்தகையே என்னை தேடி வந்த அலுவல் என்ன என்று கேட்டார்கள்
பெருந்தகை சொன்னார்கள் உங்களுடைய பூங்காவை விற்பதாக இருந்தால் அதனை எனக்குத் தாரும் அதற்கு தகுந்த வேலையை நான் தருகிறேன் என்று கூறினால்
அது கேட்டு முகம் வாடிய இஸ்மாயில் அவர்கள் நான் அதனை பெரிதும் நேசிக்கிறேன் அதை நான விற்க விரும்பவில்லை என்று கூறினார்கள்
அப்பொழுது ஆண்டகை அவர்கள் அதற்கு என்ன விலை கேட்டாலும் நான் தருகிறேன் என்று கூறினால் அவர்கள்
பெருந்தகையே என்னை மன்னியுங்கள் என்று அழாக் குறையாக கூறினார்கள ஷைகு இஸ்மாயில் அவர்கள்
இப்பொழுது பெருந்தகைக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை நாம் கத்திபு ஜமாலுதீனுக்கு அந்த பூங்காவை விலைக்கு வாங்கி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி செய்துவிட்டோமே என்ன செய்வது என்று கவலையுற்று சற்று தலையை கவிழ்ந்து அமர்ந்திருக்க
அது கண்டு பெரிதும் திடுக்குற்ற ஷைகு இஸ்மாயில் அவர்கள் பெருந்தகை தம் மீதுதான் வருத்தமுற்று இருக்கிறார்களோ என்று எண்ணி மிகவும் வருந்தி பெருந்தகையே என்னுடைய பூங்காவை உங்களுக்கு நான் தருகிறேன் அதற்கு நான் கேட்கும் விலையை நீங்கள் தர வேண்டும் என்று கேட்டார் எது கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னார்கள் பெருந்தகை திட்டமாக
அப்பொழுது இஸ்மாயில் அவர்கள் என்னுடைய பூங்காவிற்கு பிரதியாக சுவன பூங்காவின் நடுவில் அமைந்த ஓர் உயரமான மாளிகை எனக்கு தர வேண்டும் என்று கூறினார்கள்
உலகப் பொருளுக்கு பிரதியாக வானத்து பொருளை கேட்காதீர்கள் அதற்குப் பிரதியாக இங்குள்ள எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினார் ஆனால் ஷைகு இஸ்மாயில் அவர்கள் தாம் கேட்டதே வேண்டும் என்று அடம் பிடித்தார்கள்
பெருந்தகை அவர்கள் சற்று நேரம் தலைகவிழ்ந்து வீற்றிருந்தார்கள் அதன்பின் தன் தலையை உயர்த்திய பெருந்தகை அப்போது அவர்களின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக தோற்றம் அளித்தது அவர்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது அவர்கள் ஷைகு இஸ்மாயில் நோக்கி நல்லது உன்னுடைய பூங்காவிற்கு பகரமாக சுவன பூங்காவில் நடுவே அமைந்த ஓர் மாளிகை உமக்கு தரப்படும் என்று கூறினார்கள் அது கேட்டு பெரிதும் மகிழ்ந்த இஸ்மாயில் அவர்கள் அதற்கான கிரைய பத்திரம் எழுதித் தாருங்கள் என்று வினயமாக வேண்டினார்
உடனே பெருந்தகை மையும் தாளையும் கொண்டுவரச்செய்து பின்வருமாறு எழுதினார்கள்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் அல்லாஹ்வின் அடிமையும் அபுல் ஹசன் அலியின் மகனான அஹமது அப்துல் முனியின் மகன் இஸ்மாயிலுக்கு எழுதிக்கொடுத்த கிரையப்பத்திரம் மேலே குறிப்பிட்டுள்ள இஸ்மாயிலுக்கு சொந்தமாக யூனியாவில் இருக்கும் பூங்காவிற்கு பகரமாக அல்லாஹ்வின் பேரருளால் கீழே கண்ட சொர்க்கத்து தோட்டத்தை கல்யாணம் பண்ணி கொடுக்கப்பட்டது
ஜன்னத்துல் அதன் ஜன்னத்துல் குல்த் ஜன்னத்துல் மஃவா ஜன்னத்துல் பிர்தௌஸ் ஆகிய நான்கு சுவனை எல்லைகளுக்குட்பட்ட தோட்டமும் அதன் நடுவில் உள்ள மாளிகையும் அங்குள்ள மலைகள் ஆறுகள் ஹூருல் ஈன் என்னும கண்ணழகிகள் வில்தான் என்னும் ஊழிய சிறுவர்கள் முதலியவையாகும் இவற்றை இஸ்மாயில் என்றென்றும் ஆண்டு அனுபவித்துக் கொள்வாராக இதற்கு சாட்சி அல்லாஹுத்தஆலா என்று எழுதி அடியில் தம்முடைய கையெழுத்தை பதித்தார் அந்தப் பெருந்தகை இஸ்மாயில் அகமகிழ்ந்தார்,
யூனியாவில் உள்ள தோட்டத்தை பெற்று கத்திபு ஜமாலுதீன் மகிழ்ச்சி அடைந்தார்
ஆண்டகை அவர்கள் மகிழ்ச்சியுற்று தம் தவசாலை திரும்பினார்கள்
ஷேக் இஸ்மாயில் மரணப் படுக்கையில் இருக்கும்பொழுது தம் இல்லத்தார் இடம் கூறினார்கள் நான் மௌத்தாகி அடக்கம் செய்யப்படும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் தம்முடன் வைத்து தம்மை நல்லடக்கம் செய்யுமாறு சொன்னார்கள் அவ்வாறே அவர் இறந்ததும் அவருடைய மக்கள் செய்தார்கள்
அடுத்த நாள் அவருடைய அவருடைய அடக்கஸ தலத்தின் மேல் “ கத் வஜதனா மா வ அதனா ரப்பனா ஹக்கா” நமக்கு நம்முடைய இறைவன் வாக்களித்ததை நாம் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம் என்ற திருமறை வசனம் பொறிக்கப்பட்டிருந்ததை மக்கள் கண்டு அவர்கள் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை
உலக பூங்காவிற்கு பகரமாக சுவனப் பூங்காவையும் தம் துவாவின் பரக்கத்தால் பெற்றுத் தந்த அந்த பெருந்தகை
மாபெரும் இறைநேசர் ஹழ்ரத் மஹபூபே சுபஹானி முஹையத்தீன்்அப்துல் காதர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மருமகர் சுல்தானுல் ஆரிபீன் செய்யது அஹமது கபீர் ரிபாயி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆவார்
தொடரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment