கத்தி முனையிலும்
கலக்கம் சிறிதுமின்றி
தீனுக்காய் முதன் முதலாய்
கம்பீரமாய் ஷஹீதானார் வீரப்பெண்
அன்னை #சுமையா...!
சமையலறையில்
கத்தி லேசாய் கீறியதற்கே
காது கிழியக் கத்துகிறாள்
எதிர் வீட்டு சுமையா...!
<3
செல்வம் அத்தனையும் தீனுக்கே
என கணவன் கைகளில் இறைத்துவிட்டு
இறுதியில் முழுதாய்ப் போர்த்த
நல்லதோர் போர்வையின்றியே
கண்களை மூடினார்
செல்வச் சீமாட்டி அன்னை #கதீஜா...!
மாதக் கடைசியில் கொஞ்சம்
கையைக் கடிக்கவே
பெருநாளைக்கு லெஹங்கா
வாங்கித் தரவில்லையென கணவனிடம்
முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்கிறாள்
நம் பக்கத்து வீட்டு கதீஜா...!
<3
மஹ்ரமில்லா ஆணின் உடல்
அடக்கப்பட்டதுமே
அதுவரை கணவனுடன்
வாழ்ந்திருந்த வீட்டை விட்டே
வெளியேறினார்
அன்னை #ஆயிஷா...!
'மஹ்ரம்' என்றால் என்னவென்று
அப்பாவியாய்க் கேட்கிறாள்
பின் வீட்டு ஆயிஷா...!
<3
குர்ஆனை நூல் வடிவில்
தொகுத்திட உதவி செய்து
முழுமையாக மனனம் செய்தும்
வைத்திருந்தார் அல்-ஹாபிஸா
அன்னை #ஹப்ஸா...!
Degree முடிப்பதில்
காலம் கடத்தியதில்
குர்ஆன் முடிக்கவில்லை
இந்த ஹப்ஸா...!
<3
கணவனின் கண்களுக்கு மட்டும்
என்னை பேரழகியாகக் காட்டிடு
என பிரார்தனை செய்தார்
சுவனத் தலைவி
அன்னை #பாத்திமா...!
சாயம் பூசிய உதடுகள் குவித்து
கணவன் மட்டுமே
காணவேண்டிய தன் அழகை
Facebook,whats ap status இல் கடை விரிக்கிறாள்
மாடி வீட்டு பாத்திமா...!
<3
இறை தியானத்தில்
இவ்வுலகையே மறந்து
மணிக்கணக்காய் திளைத்திருந்தார்
அன்னை #ஜுவைரியா...!
ஐ போன் games போரடிக்கவே
Lumia விற்கு மாறும்
ஐடியா வில் இருக்கிறாளாம்
நம்ம பிஸி ஜுவைரியா...!
<3
தாராளமாய்
அள்ளி அள்ளிக் கொடுத்ததாலே
நீண்ட கையுடயவர் ஆனார்
அன்னை #ஸைனப்...!
Dinner முடித்து வரும்போது
Restaurant வாசலில்
கையேந்தும் அபலைக்கு
ஐந்து ரூபா கொடுப்போமா
ஆறு ரூபா கொடுப்போமா என
அரை மணி நேரம் யோசிக்கிறார்
சைனப்...!
<3
ஆணை இட்டால் அத்தனையும்
அரை நொடியில் கிடைக்கும்!
கணவன் ஆனாலும்
கயவனவன் மாளிகை தேவையில்லையென
சுவர்க்கத்தில் மாளிகை கேட்டார்
அன்னை #ஆசியா...!
மாடி வீட்டுக்கும்
நாலு வீலுக்கும் ஆசைப்பட்டு
தீனை விட்டே ஓடிப் போனாள்
அடுத்த தெரு ஆசியா...!
<3
அழகும் அலங்காரமும்
கணவனிடம் மட்டுமே என
வெளியே செல்ல நேர்ந்தால்,
கண்ணியமாய் சென்ற
எம் அன்னையர்
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்துக்கள்!!!
உடையவன் வீட்டிலிருக்கையில்
அழுக்கு நைட்டியும்
எண்ணை வடியும் முகமுமாய்
இருந்துவிட்டு வெளியேறுகையில்
இருப்பதிலே அழகிய ஆடை தேர்ந்து
யாருக்குக் காட்ட
தெருக்களில் திரிகின்றன
இந்தக் கூழாங்கற்கள் ...?
#Anonymous
No comments:
Post a Comment